Quantcast

srirangam backstabber.jpg
sri rangam ranganathswamy pillar detail2.JPG

நாம் முன்பு பார்த்த இரண்டாம் ஸ்ரீரங்கம் தூண் சிற்பம்…அதில் உள்ள காட்சி என்ன வென்று ஆராயலாம். முதுகில் (சரி) பின்னால் இருந்து தாக்கும் பழக்கம் தமிழனுக்கு இல்லை … படங்களை பாருங்கள்….

 

 

srirangam tamil couple.jpg

முன்னால் இருப்பவன் தமிழ் வீரன் - குடுமி, இடுப்பில் வேட்டி, நெற்றியில் திலகம், கழுத்தில் சங்கிலி, ஆரம் - காதில் குண்டலம், இரு கால்களிலும் சிலம்பு - எல்லாவற்றையும் விட தமிழனுக்கே உரிய முறுக்கிய மீசை ….அந்த முகத்தில் தான் என்ன ஒரு கம்பீரம் மேலிருக்கும் பெண்மணியோ அதைவிட அழகு.. கட்டை விரலில் கூட மோதிரம் அணிந்து, கழுத்தில் ரெட்டை வட சங்கிலி, மாலை, ஆரம் -கையில் வளையல், காலில் முறுக்கிய சிலம்பு, தலையில் ராக்கடி ….. அப்பப்ப்பா ஒரு நடமாடும் நகை கடை - அதைவிட முகத்தில் மயக்கும் மந்தகாச புன்னகை.. பின்னால் இருப்பவர்கள் அன்னியர்கள் - அவர்கள் உடையை சற்று பாருங்கள் - மேல் சட்டை, முழு கால் குழாய் …..தலையில் குல்லா மற்றும் மீசையை பார்த்தல் - இது ஒருவேளை மாலிக் கபூர் அரங்கத்தை சூறை ஆடிய கதை போல உள்ளது.

sri rangam ranganathswamy pillar detail111.JPG
srirangam backstabber detail.jpg
srirangam backstabber.jpg

எனினும் அந்த அம்மணி குடையாய் பிடித்திருப்பது என்னவென்று விளங்கவில்லை - அதே கோவிலின் இன்னொரு தூணில் இதே போல் ( அதே அம்மணி ) தலைக்கு மேல் தூக்கி பிடித்து இருக்கும் சிற்பம் பாருங்கள்….முதல் சிற்பத்தில் இரு புறத்திலும் அழகிய கிளிகள் உள்ளன… அவற்றை வைத்து அவள் ஒரு குறத்தி என்று பல இடங்களில் அடையாளம் கொள்கின்றனர்…

srirangam pillion rider canopy left.jpg
srirangam pillion rider canopy right.jpg
srirangam tamil couple.jpg
canopy sans parrots.jpg

குறத்தி … ஊசி பாசி மணி என்று இருப்பால் - அப்போது இந்த சிலையில் இருக்கும் ஆபரங்கள அனைத்தும் …. !!!! இல்லையேல் அந்த நாளில் குறத்தி ஆட்டத்திற்கு வசூல் அதிகமோ ??

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 31st, 2008 அன்று 11:23 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.

இதுவரை 2 மறுமொழிகள்

rhoda alex
  1  

oh yes..pillars do speak a lot…nice observation on the moustaches…the down-turned one and the upturned one!
Kattabomban had an upturned one in real life..however the movie depiction by Shivaji is a down-turned one!! Why ?
the canopy - was it the umbrella of those times? easily fold-able? interesting!

மே 18th, 2010 at 10:00
Pradeep Chakravarthy
  2  

usual theory is of a Kuravan capturing a princess and a Kurathi a prince…

பெப்ரவரி 7th, 2011 at 12:54

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி