Quantcast

mahendra cave maangadapattu.JPG

கல்யாண சாப்பாடு என்றாலே நமக்கு நினைவில் வரும் பாட்டு ….மாயா பஜார் …ரங்கா ராவ் அருமையான நடிப்பில் …கல்யாண சமையல் சாதம் பாட்டு …அதில் அவருடைய கதை …..கதை என்றவுடன்…பீமன், துரியோதனன் மற்றும் யமதர்மனின் கதைகளும் நினைவுக்கு வரும்..பல படங்களில் பார்த்துள்ளோம். அப்போதெல்லாம் இவ்வளவு பெரிய கதை உண்மையிலே இருக்குமா , அதை ஒருவனால் எடுத்து சுயற்ற முடுயுமோ …இல்லை இவை கற்பனையோ என்று வியந்ததுண்டு… இதற்க்கு சிற்பத்தில் விடை காண முற்பட்டபோது சென்னை நண்பர், புகை பட வல்லுநர் அசோக் கிருஷ்ணசாமி அவர்கள் நேற்று அனுப்பிய மாங்காடபத்து குடவரை கோவில் படங்கள் உதவின…இது விசித்ர சித்தன் என்ற பெயர் கொண்ட மஹேந்திர பல்லவனின் வேலை….

 

maangadapattu door guardian.JPG

பார்ப்பதற்கு தண்டால் எடுக்கும் கட்டை போல இருக்கும் இவை அப்பப்பா… இதில் ஒரு போடு போட்டால் கபால மோட்சம் தான் ……இந்த அசுர கதையை அசால்டாக ( assaulta ) மன்னிக்கவும் அலட்சியமாக கொண்டு, வாய் பிளந்து பார்க்கும் நம்மை கண்டு ‘"போடி பயலே" என்று சிரிக்கும் இவ்விரு மஹா வீரர்கள் என்ன கம்பிரமாக நிற்கின்றனர் 

 

 

the mace.jpg

.அந்த கதையை ஒரு படம் எடுக்கும் நாகம் வேறு சுற்றயுள்ளது…. இவர்கள் இப்போது எங்கே போனார்கள்… இப்போது இருந்தால் ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் கண்டிப்பாக தங்கம் இவர்களுக்கே….. ( திரு திவாகர் சார் …. அவர் எழுதிய விசித்திரச் சித்தன் சரித்திர புதினம்…அருமை…அவர் இந்த படத்தை பார்த்தவுடன் எழுதிய குறிப்பு. .. விசித்திரச் சித்தன் பாறையைக் குடைந்து மும்மூர்த்திகளுக்கான சிவ-விஷ்ணு-ப்ரம்மாவுக்காக எழுப்பப்பட்ட கோயில் இது. அற்புதமான கலைப் படைப்பு. பல்லவ அரசனின் கல்வெட்டு சமுஸ்கிருதத்தில், பல்லவ கிரந்த எழுத்தில் ‘பிரம்ம,ஈஸ்வர விஷ்ணுவுக்காக செங்கல். மரம், உலோகம், சுதையில்லாமல் நிமாணிக்கப்பட்ட லக்ஷிதாயனம்’ என்று சொல்கிறது. தனக்குட்பட்ட பல்லவ சாம்ராஜ்ஜியத்தில் மேற்கண்ட பொருள்களை பயன்படுத்தாமல் வெறும் மலைப் பாறையும், கற்றுளியை மட்டுமே நம்பி கட்டப்பட்ட கோயில் இது. இந்தப் புதுமையைத் தான் செய்ததற்காகவே மகேந்திரபல்லவன் தன்னை விசித்திரசித்தனாக எதிர்கால உலகுக்கு அடையாளம் காட்டிக் கொண்ட கோயில் இது. விழுப்புரம் செஞ்சி சாலையில், விழுப்புரத்தில் இருந்து 20 கி.மீ. துர்ரத்தில் பிரியும் மண்சாலையில் ஒரு கி.மீ. சென்றால் இந்த குகைக் கோயிலை அடையலாம். நான் இரண்டு வருடங்கள் முன் சென்றபோது வழி சரியில்லை. )

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 31st, 2008 அன்று 7:46 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.

இதுவரை 10 மறுமொழிகள்

தமிழ்த்தேனீ
  1  

அந்தக்காலத்தில் மஹாராஜாக்கள் அவர்கள் உபயோகித்த ஆயுதங்கள் அனைத்துமே
இப்போது பார்த்தால் அவைகளை எப்படி அவர்கள் தூக்கி அதைச் சுழற்றி போர் புறிந்தார்கள் என்று நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது
மஹா ராஜாக்கள் காலத்திலேயே இப்படி என்றால் கடோத்கஜன் காலத்திலே அவர்கள் எப்படிப்பட்ட பலவானாக இருந்திருப்பார்கள்

கல்லும் _கதை சொல்லும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அக்டோபர் 23rd, 2008 at 18:37
Kathie Brobeck
  2  

I’ve been wanting to see this Dvarapalaka in
a photo taken up close. Directions on how to
find it are welcome, too. Thank you!

அக்டோபர் 24th, 2008 at 18:15
  3  

Hi kathie,

am sending you the closeups vide sep mail, meantime the directions are mentioned towards the end of the post. sengi or gingee fort..

rgds
vj

அக்டோபர் 25th, 2008 at 8:14
Narasimhan Srinivasan
  4  

Nice article containing very valuable pieces of information dear VJ. May be you could make very small changes like mentioning the name of this invaluable site i.e. Maangadapattu or Maangadapettu in the title as well as text of the article. The name can be added in the text where you mention that it is around 20 kms. from Villupuram. I almost said oh, what a miss by me!!! because this year (as I told you also) I did visit the Thirukoilur temple near Villupuram where I did miss the Anantasyayi temple located close to that temple, and as I realize now, I missed this temple also. Sadly either at Villupuram station or at the Villupuram bus stand there were no indications of these places being located very close to that town.

அக்டோபர் 29th, 2008 at 13:47
  5  

Thanks Cheenu, Have amended. Missed out while translating, thanks for pointing out

rgds
vj

அக்டோபர் 29th, 2008 at 15:12
Kathie B.
  6  

it’s interesting that in western art there’s
something called ‘Mannerist’ style, coming after the high Renaissance. This Door Guardian is definitely in ‘mannerist’ style — also sort of
‘cartoony’ I think. [that's not a criticism --
I love it!]

ஏப்ரல் 22nd, 2009 at 8:29
  7  

hi kathie

This time we went to Mandagapattu and is coming up next ..or rather after dhalavanur ( shatrumalleswaram). We took some delightful captures of the door guardians in mandagapattu - one particular fav was the fold on the waist ( iduppu madippu in tamil), however compared to the pillar styles which are primitive mahendra type, teh door guardians are bit advanced ( and left incomplete) that some versions say it could be a much later addition.

rgds
vj

ஏப்ரல் 22nd, 2009 at 19:31
  8  

I like the bit abt Vivian Richards…awesome place..it was a great trip with arvind last week

ஜூலை 18th, 2010 at 11:34
mahendran
  9  

brother you work is awesome,and every day
there will be a pat on your back and that will be mine
this blog should be read by all students
to understand how rich our ancestor were in crafts

பெப்ரவரி 15th, 2011 at 20:58
  10  

thanks mahendran. keep visiting

rgds
vj

பெப்ரவரி 16th, 2011 at 7:46

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி