Quantcast

அடுத்த முறை இவிடங்கலுக்கு செல்லும் போது இவற்றை மனதில் கொண்டு செல்லுங்கள். சென்னையிலும் அதனை அடுத்த இடங்களிலும் பல அறிய கோவில்கள் உள்ளன. அவற்றை வெறும் தெய்வ வழிபாடு இடங்களாக மட்டும் கருதாமல், கலை வளர்க்கும் பெட்டகங்களாகவே அந்நாளில் தமிழ்ர்கள் கருதினார். இதற்க்கு சான்றுகள் பல உண்டு. அவற்றை வரும் வாரங்களில் பார்போம். தமிழகத்தில் கோவில் கலை தோற்றத்தில் மிக முக்கிய இடம் பிடிக்கும் மல்லைக்கு இப்போது செல்வோம். மல்லை ஒரு புரியாத புதிர். அவற்றை பட்டியலிட்டால் ஒரு புத்தகமாக வெளியிடலாம் - பல விவாதங்கள் இன்னுமும் நடை பெற்றுக்கொண்டு உள்ளன. மல்லை யின் சிற்பியின் ( அமரர் கல்கி உருவாக்கிய சிவகாமியின் சபதம் போற்றும் ஆயனர் நினைவுக்கு வருகிறார்) அறிவுக் கூர்மை மற்றும் சிற்ப கலை நுட்பத்தை விளக்கும் சிற்பங்கள் ஏராளம். அதற்க்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. பஞ்ச பாண்டவ ரதம் என்று இன்று பெயர் பெற்றுள்ள ரதங்களை சென்னைவாசிகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம்.

 

another long shot.jpg
Elephant in Ratha complex.jpg

இங்கே நிற்கும் யானை சிற்பம் மிகவும் அழகு. தொலைவில் இருந்து பார்க்கும் போது நிஜ யானை நிற்பது போல மிகவும் தத்ருபமாக செதுக்கி உள்ள அழகு அருமை.ஆனால் எதற்காக அந்த யானை அங்கு செதுக்க பட்டுள்ளது. ?

சரி படங்களை பாருங்கள்…

a long shot.jpg

 

முதலில் தொலைவில் இருந்து.. சரி தனித்தனியே பார்போம்…..

Seen in isolation.jpg
seen in isolation from the back.jpg

 

now can you visualise.jpg
Mamallapuram%20-%20Five%20Rathas_06.jpg

இந்த பக்கம்…

சரி அந்த பக்கம்……

 

 

 

கொஞ்சம் அருகில் சென்று

front view.jpg
lets see the two together.jpg

இதை விளக்க அதனை ஒட்டி உள்ள சகாதேவ ரதத்தினை பாருங்கள்.

compare the two.jpg
ok we go nearer.jpg
rear view compare.jpg
the beauty.jpg

சகாதேவ ரதம் கஜ ப்ரிஷ்டம் என்னும் வடிவம் பெற்றது. ( கஜ - யானை , ப்ரிஷ்டம் - முதுகு) இப்போது இணைத்துள்ள படங்களை பாருங்கள். ரதத்தின் மேல் பாகமும் யானையின் முதுகும் ஒத்து இருப்பதை உணரலாம். இதனை காண்போருக்கு உணர்த்தவே யானை சிற்பம் அங்கு உள்ளது … இங்கே இருக்கும் இன்னும் இரண்டு பிராணிகளின் சிற்பம்…ஒன்று சிங்கம் மற்றொன்று காளை…இவற்றை பின்னர் பார்போம்…

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 31st, 2008 அன்று 11:01 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.

இதுவரை 2 மறுமொழிகள்

Venkatesh
  1  

Wow Vijay,

Great one!! I have see this twice. And ofcourse, was one of those who took a photo with that elephant on my side. Now with your explanation, I will also point this out to all others when I go with them again, and………… “Lift My Collars Up, when they look upon me, awestruck” :-) :-)

Thanks Vijay!!!!

செப்டம்பர் 4th, 2008 at 11:01
திரையன்
  2  

அருமையான விளக்கம். தொடரட்டும் உம பணி.
வாழ்த்துக்கள்.

மே 6th, 2011 at 11:44

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி