Quantcast

முந்தய பதிவுகள், மாதங்களில்: செப்டம்பர், 2008


மல்லை ஓலக்கநெஸ்வர கோயில்

Okkaneshwara long shot.jpg
okkaneshwara location.jpg
not many looking at the temple.jpg

நாம் இன்றைக்கு மல்லையில் ஒரு அபூர்வமான இடம் செல்கிறோம். பலரும் தொலைவில் இருந்து பார்த்து விட்டு சென்றுவிடும் இடம். அங்கு செல்லும் சிலரும் அங்கு இருந்து தெரியும் அற்புத இயற்கை எழிலை மட்டுமே காண்கின்றனர். சிலர் புதிய கலங்கரை விளக்கத்தை ( அதுவே 1887 வில் நிறுவியது ) படம் எடுக்க இங்கே வருவர்.

மல்லை ஓலக்கநெஸ்வர கோயில் - இதை ஏன் அபூர்வம் என்று சொல்கிறோம். இது குடவரை கோயில் அல்ல, கல் கொண்டு கட்டப்பட்ட கோயில் , அதுவும் ஒரு சிறு மலையின் மேல். பல காலம் இதை ஆங்கிலேயர் கலங்கரை விளக்கமாக உபயோகித்தனர் !!( padangalukku nanri British Library)

An antique snap ( early 1900's) thanks to british library.jpg
a rare plate showing the oldlighthouse.jpg
2316667358_516fa4c7cb.jpg
a rare antique plate - notice the broken pillar.jpg
an even earlier painting.jpg

படங்களில் இருந்து இது இருக்கும் இடம் விளங்கும், மகிஷாசுரமர்தினி குகையை அடுத்து உள்ள குறுகிய படிகளில் ஏறி மேலே செல்ல வேண்டும்.

the splendor of okkaneshwara.JPG
The amazing panels.JPG

எனினும் இந்த கோயில் மிகவும் அருமையாக உள்ளது - காற்று மழை, கரி , மனிதன் என்று அனைத்தையும் தாண்டி தன் அருமையான சிற்பங்களுடன் உள்ளது - ராஜ சிம்ஹன் அவனது அழகிய சிங்க தூண்கள், நமக்கு மிகவும் பிடித்த குள்ள பூத கணங்கள், அருமை.

faithful ganas watcing over passing ships.jpg
old overlooking the new, the rajasimha stamp.jpg
our freind again.jpg
amazing view.jpg
like children waiting for their dad.jpg

நான், திரு சுவாமிநாதன் ஐயா அவர்களின் மல்லை ( விரைவில் புத்தகமாக வெளி வருகிறது ) படித்தபோது- மேலும் அறிந்தேன்.

only the door guardians remain.jpg
our two friends again.jpg

பெயர் காரணம் - வீட்டுக்கு ஒரு உழக்கு எண்ணெய் சேகரித்து, இந்த கோவிலில் அணையா விளக்கு எரியுமாம். அதனால் அதற்கு உழக்கு எண்ணெய் ஈஸ்வரர் கோயில் என்ற பெயர் மழுவி ஓலக்கநெஸ்வர என்று வந்துள்ளது.

our two friends again.jpg
amazing door guardian.jpg
shiva dancing over demon.jpg
rajasimha lions and door guardian.jpg

இங்கே மூன்று அபாரமான சிற்பங்கள் உண்டு - ஒன்று தட்சிணாமூர்த்தி, ஆனந்த கூத்தாடும் கோலம் (இதே போல சிற்பம் காஞ்சி கைலாச நாதர் கோவிலும் உண்டு ) மற்றும் கைலாசத்தை அசைக்க முயலும் ராவணனை அடிபணிய வைக்கும் காட்சி. ( நாம் முன்னர் கம்போடியா , எல்லோரா இதே சிற்பம் பார்த்தோம் ) மிக அருமையான சிற்பம் - ஈசனின் தலையில் பிறை , ராவணன் வலியால் வாய் விட்டு இறைவது.

check.jpg
ravana screaming.jpg
shiva as the amazing dancer.jpg

பார்க்கும் போதே நெஞ்சம் வெடிக்கிறது

நவீன அரசர்கள் தங்கள் ஆசை நாயகிகளுடன் செய்யும் லீலைகளை ஆயிரம் ஆண்டு சிற்பம் என்றும் பாராமல் கல்வெட்டாக கிறுக்கிய கிறுக்கர்கள், இவர்களுக்கு தங்கள் காதலை வெளிப்படுத்த வேறு இடம் கிடைக்கவில்லையா.

ravana anugraha murthy.jpg
ravana okkaneshwarasadly disfigured by grafetti.jpg
ravana screaming.jpg

ராவணனின் தலைஎழுத்தை மாற்ற இவர்கள் கைங்கர்யம்.

Ravana close up.jpg

கலையின் உச்சிக்கு எடுத்து சென்ற பல்லவனின் கலை பெட்டகம் - தமிழன் தலை நிமிர செய்யும் சிற்பம், கலை திறனை கண்டு தலை வணங்கும் வேலைப்பாடு - இதை பார்க்கும் பொது வெட்கி தலை …..

( நன்றி திரு சுவாமிநாதன் - எங்கள் பொன்னியின் செல்வன் குழும நண்பர்களை மல்லை பயணத்தில் கூட்டி சென்றதற்கு, படங்கள் - திரு ஸ்ரீராம், திரு பிளாஸ்டிக் சந்திரா , திரு விஞ்சாமூர் வெங்கடேஷ் )

மறுமொழி அளிக்கவும் »

இதுவரை நாம் பெரும்பாலும் கற்சிலைகளையே பார்த்தோம். ஒரு மாறுதலுக்காக இன்று வெண்கல சிலை, அதுவும் உலகெங்கும் புகழ் பெரும் சோழ வெண்கல சிலையை பார்ப்போம். சோழ வெண்கல சிலை - உலோக கலைக்கு ஒரு முகவரி.

தொலை காட்சி பேட்டியில் ஒரு விளம்பரம் கண்டு சிங்கப்பூர் அருங்காட்சியகம் சென்ற ஜூன் மாதம் சென்றோம். வெளியில் விளம்பர பலகையில் பதினோராம் நூற்றாண்டு சோழ சிலை - உமா பரமேஸ்வரி சிலை ( என் மகன் பிருத்வி அதனுடன் ) ஆர்வத்தை தூண்டியது.

The welcome cutouts.jpg

வெளி அறைகளில் பல சோழ வெண்கல சிலைகள் இருந்தன. அழகிய ஆடும் சம்பந்தர் சிலை, சோழர் கால கற்சிலை - சுப்ரமணியர்.

chola bronze sambandar.jpg
chola subramanya.jpg
close up of facial detailing of subramanya.jpg
the museum desciption.jpg

வெளியில் உமையை கண்டவுடனே அந்த சிலை என்னை ஈர்த்து - ஓட்டமும் நடையுமாய் முக்கிய அறைக்கு விரைந்தோம். சிறப்பு காட்சி. உமை

தொலைவில் இருந்து பார்த்தவுடன் காந்தம் போல என்னை அதனிடம் ஈர்த்தது - கடைசி பத்து அடி எப்படி சென்றேன் என்று நினைவில்லை, ஆனால் அருகில் எப்படியோ வந்து விட்டேன். பல வெண்கல மற்றும் பஞ்ச லோக சிலைகள் இதுவரை கண்டதுண்டு, நம் கோயில்களில் இருக்கும் உற்சவர் சிலைகள் நன்கு துடைத்து பளிச்சென இருக்கும்.

ஆனால் இதுவோ, ஆயிரம் ஆண்டுகள் கண்ட சிலை, எங்கும் ஒரு பச்சை நிற போர்வை அணிவித்தாற்போல மயக்கும் சிலை. ஒவ்வொரு சிலையும் ஒரு புது படைப்பு - ஏனெனில், இவை லாஸ்ட் வாக்ஸ் முறையில் வார்த்த சிலை.

வண்டு மெழுகு கொண்டு முதலில் சிற்பி சிலையை வடித்து, அதன் மேல் வண்டல் மண் ( களிமண்) கொண்டு மொழுகி, பின்னர் சுளையில் வைத்து சுட்டு, அப்போது மெழுகு உருகிவிடும், அதனால் ஏற்படும் கூடினுள் உருக்கிய வெண்கலத்தை ஊற்றி, பின்னர் நன்கு ஆறிய பின்னர், கூடை உடைத்தால் உன்னத சிலை பிறக்கும். ஆனால் அது பிறந்த கருவறை அழியும், எனவே ஒவ்வொரு சிலையும் புதிதாக செய்யவேண்டும். (unique)

Bronze_of_Uma_Parameshvari.jpg

இரண்டு அடி உயரம் தான், ஆனால் அதில் என்ன ஒரு அழகு, நுணுக்கமான வேலைப்பாடு , முகத்தில் என்ன ஒரு பக்தி பரவசம் மிகுந்த அமைதி,கயல் போல விழியை இன்னும் அழகு பெற வானவில் போல வளைந்த புருவம் , அந்த புன்னகையில் தான் என்ன ஒரு அன்பு,கன கச்சிதமான நாசி , கூந்தல் வளைந்து நெளிந்து தோள்களின் மீது படர்ந்து, அநத கச்சிதமான கழுத்தினை அழகே எடுத்துக்காட்டும் அணிகலன், அவள் நிற்கும் நளினம், கொடி இடையின் வளைவு, அதில் விளையாடும் அவள் பட்டாடை, அநத கைகளின் பாவம் , விரல்களின் உயிரோட்டம் - கலை அழகு தேய்வீகத்துடன் இணையும் உன்னதம்.

கடின உழைப்பின் விளைவு, மரகத வண்ணம் பூசி நம்மை ஆயிரம் ஆண்டுகள் ஒரு நொடியில் பயணித்த சிலை, பத்து நிமிடம் பேச்சு வரவில்லை.

அந்த அழகு , கலை , தெய்வீகம் என்னை மெய் சிலிர்க்க வைத்து. எனது அனைத்து புலன்களும் அடங்கி, கண் முன் நிற்கும் உயிர் சிலையின் தாக்கத்தில் நான் சிலை ஆனேன் - அவள் உயிர் பெற்றாள்.

இதுதான் சோழ சிலையின் சக்தி.

http://www.acm.org.sg/exhibitions/eventdetail.asp?eventID=184

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 16  1  2  3  4  5 » ...  Last »