Quantcast

தொகுப்புக்காக செப்டம்பர் 4th, 2008

திருவியலூர் கோவிலிலும் நுண்ணியமான, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடு - ( நரசிம்ம வடிவம் முன் இருக்கும் பேனாவை வைத்து ஒப்பிடுங்கள் )

narasimhar.jpg

படத்தை பாருங்கள்- ஒரு அறிய சிற்பம் - இதில் இருப்பது ஒரு சிவ
லிங்கம், கரம் கூப்பி நிற்கும் குரங்கு, அடுத்து வரும் உருவம் யார் ? பல
தலைகள் - இரு பக்கத்திலும் பத்து கைகள் ….ஆஹா இலங்கை அரசன். ஆனால் அவன்
கட்டுண்டு கிடப்பது போல அல்லவா உள்ளது.

ravanacaughtbyvaali.jpg

அதே கதை தான் - பாத்திரங்கள் இப்போது புரிகின்றன - சிவ லிங்கம், வணங்கும்
வாலி - வாலியின் வாலில் கட்டுண்டு கிடக்கும் இராவணன். … விளங்க
வில்லையா ?

வாலி உலகிலேயே மிகவும் உடல் வலிமை பெற்றவன். அதனுடன் அவனுக்கு ஒரு வரம் உண்டு - அவனை எதிர்த்து போர்செயவோரின் பாதி பலம் அவனுக்கு கூடும்.. வாலி மகா சிவ பக்தன். தினமும் நான்கு திக்குகளுக்கும் சென்று ஈசனை வழிபடுவான். அவ்வாறு அவனை ஒருநாள் இராவணன் தனது புஷ்பக விமானத்தில் இருந்து பார்க்கிறான் , என்னடா ஒரு குரங்கு ஈசனை வணங்குகிறதே என்று அதை சீண்ட - ஓசை இடாமல் கீழ் இறங்கி அதன் வாலை பிடிக்க எத்தனிக்கிறான். அப்போது வால் அவனை கட்டுகிறது - இது வாலிக்கு தெரியகூட இல்லை - அவனுக்கு அவ்வளவு வலிமை - அவன் வாலில் சிக்கி இருக்கும் இலங்கை அரசனை உணராமல்
நான்கு திக்குகள் தாவி பூஜையை முடிக்கிறான். அப்புறம் தான் பின்னால் ஏதோ
முனகல் கேட்க …… இராவணன் வாலியிடம் மன்னிப்பு கேட்டு நண்பனாக விடை
பெறுகிறான்.

சிற்பியின் திறன் பாருங்கள் - வாலி இராவணனை இதிற் கொல்லவில்லை - அதனால் அவன் தனது வரத்தின் வலிமை பெறாமலேயே லன்கேஷ்வரனை விட வலிமை பெற்றவன் என்பதை உணர்த்துகிறான்.

எனினும் இருவரும் ஒரே வில்லுக்கு இறை ஆனார்கள்…

thanks ( check out many more such images)
http://www.kumbakonam.info/kumbakonam/tiviyalur/info/phogal.htm

மறுமொழி அளிக்கவும் »

நாளிதழ்களில் அவ்வப்போது சிலை திருட்டு பற்றி படித்துள்ளேன். ஆனால் இந்த படங்களை பார்த்த பின்னர் நானே சிதைந்து போனேன்.

beforetheft.jpg

புகழ் பெற்ற இந்த இடம் கம்போடியாவில் உள்ள கபால் சிபியான் என்ற இடம். இங்கே ஆயிரம் லிங்கம் உள்ள அருவி உண்டு… ஜல சயன பெருமாள் சிற்பம். என்ன அருமையான வேலைப்பாடு - ஒரு காட்டின் நடுவில் ரம்மியமான சௌந்தர்யத்தில் இயற்கை எழில் கொஞ்ச கொட்டும் அருவியின் தாளத்தில் பல நூற்றாண்டுகள் நித்திரையில் இருந்த கோலம்…நாபியில் இருந்து பிரம்மன், காலருகில் லெட்சுமி ….மூன்று மண்டபங்கள் - தனி தாமரைஆசனத்தில் மீண்டும் பிரம்மன் …அனைத்தும் கலைக்க பட்டு…சிலை திருட்டு>>>>>>

lakshmi stolen other angle.jpg
lakshmistolen.jpg
laksmi stolen.jpg

முதலில் லக்ஷ்மி முகம் …அப்படியே பெயர்த்து எடுக்க எப்படி தான் மனம் வந்ததோ ? ஐயோ ..நெஞ்சம் வெடிக்கிறது…இதை படம் எடுத்து அதிகாரிகளுக்கெல்லாம் அனுப்பி உள்ளனர்…அப்போதும் எதுவும் நடக்கவில்லை…அதாவது நல்லது நடக்க வில்லை…அத்துடன் நின்றார்களா மாபாதகர்கள் …அடுத்து பெருமாளையும் பெயர்த்து எடுத்து விட்டனர்…

both stolen.jpg

இப்போது எதோ ஒரு நல்ல உள்ளம் அதை செப்பனிட்டு உள்ளது…எனினும் அந்த புராதானமான சிலை …..

redone.jpg

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 4  1  2  3  4 »