Quantcast

திருவியலூர் கோவிலிலும் நுண்ணியமான, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடு - ( நரசிம்ம வடிவம் முன் இருக்கும் பேனாவை வைத்து ஒப்பிடுங்கள் )

narasimhar.jpg

படத்தை பாருங்கள்- ஒரு அறிய சிற்பம் - இதில் இருப்பது ஒரு சிவ
லிங்கம், கரம் கூப்பி நிற்கும் குரங்கு, அடுத்து வரும் உருவம் யார் ? பல
தலைகள் - இரு பக்கத்திலும் பத்து கைகள் ….ஆஹா இலங்கை அரசன். ஆனால் அவன்
கட்டுண்டு கிடப்பது போல அல்லவா உள்ளது.

ravanacaughtbyvaali.jpg

அதே கதை தான் - பாத்திரங்கள் இப்போது புரிகின்றன - சிவ லிங்கம், வணங்கும்
வாலி - வாலியின் வாலில் கட்டுண்டு கிடக்கும் இராவணன். … விளங்க
வில்லையா ?

வாலி உலகிலேயே மிகவும் உடல் வலிமை பெற்றவன். அதனுடன் அவனுக்கு ஒரு வரம் உண்டு - அவனை எதிர்த்து போர்செயவோரின் பாதி பலம் அவனுக்கு கூடும்.. வாலி மகா சிவ பக்தன். தினமும் நான்கு திக்குகளுக்கும் சென்று ஈசனை வழிபடுவான். அவ்வாறு அவனை ஒருநாள் இராவணன் தனது புஷ்பக விமானத்தில் இருந்து பார்க்கிறான் , என்னடா ஒரு குரங்கு ஈசனை வணங்குகிறதே என்று அதை சீண்ட - ஓசை இடாமல் கீழ் இறங்கி அதன் வாலை பிடிக்க எத்தனிக்கிறான். அப்போது வால் அவனை கட்டுகிறது - இது வாலிக்கு தெரியகூட இல்லை - அவனுக்கு அவ்வளவு வலிமை - அவன் வாலில் சிக்கி இருக்கும் இலங்கை அரசனை உணராமல்
நான்கு திக்குகள் தாவி பூஜையை முடிக்கிறான். அப்புறம் தான் பின்னால் ஏதோ
முனகல் கேட்க …… இராவணன் வாலியிடம் மன்னிப்பு கேட்டு நண்பனாக விடை
பெறுகிறான்.

சிற்பியின் திறன் பாருங்கள் - வாலி இராவணனை இதிற் கொல்லவில்லை - அதனால் அவன் தனது வரத்தின் வலிமை பெறாமலேயே லன்கேஷ்வரனை விட வலிமை பெற்றவன் என்பதை உணர்த்துகிறான்.

எனினும் இருவரும் ஒரே வில்லுக்கு இறை ஆனார்கள்…

thanks ( check out many more such images)
http://www.kumbakonam.info/kumbakonam/tiviyalur/info/phogal.htm

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், செப்டம்பர் 4th, 2008 அன்று 16:54 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி