Quantcast


மல்லை சாளுவன் குப்பம் ஒரு கலைபெட்டகம். நாம் முன்பு புலி குகை பார்த்தோம். அப்போது அங்கு இன்னும் இரெண்டு பொக்கிஷங்கள் உண்டு என்று கூறினேன்.

அவை, சிறு சிற்பம் என்றாலும் மிக அழகிய மகிஷாசுரமர்தினி மற்றும் அதன் அருகில் இருக்கும் குடவரை கோவில் (அதிரணசண்ட மண்டபம் -அதில் உள்ள ராஜ சிம்ஹன் கல்வெட்டு. அதை பிறகு பார்போம்.)

அந்த குடவரைக்கு முன் ஒரு சிறு கல் இருப்பதை பலரும் பார்ப்பதில்லை.

view from atiranchanda madabam.jpg

அங்கு சென்று கல்லின் பின்புறம் பார்த்தல் ஒரு சிறு அற்புத மகிஷாசுரமர்தினி சிலைகோர்ப்பு இருப்பதை காணலாம்.

atiranachanda + mahishasuramardhini saluvankuppam 2.jpg
atiranachanda + mahishasuramardhini saluvankuppam.jpg

இதன் விநோதம் என்னவென்றால் - மல்லையில் இருக்கும் புகழ் பெற்ற இதே கதையின் ( மகிஷாசுரமர்தினி ) அடுத்த நிகழ்ச்சியை குறிக்குமாறு செதுக்கி உள்ளனர்.

saluvankuppam mahishasuramardhini.jpg

உற்று பாருங்கள் - மல்லை சிலையில் - மகிஷன் கையில் கதையுடன் சிங்கவாகனத்தின் மேல் இருக்கும் அன்னையை எதிர்கொள்ளும் கோலம்.

mallai mahisha.jpg
mallaimahisa.jpg

இங்கோ துவம்ச யுத்தத்தின் பின் சோர்வடைந்து கிழே விழுந்து இருக்கும் மகிஷன் ( சிறு வடிவமாக இருப்பினும் சோர்வில் அசுரனின் நாசி விரிந்து பெருமூசிடுமாறு உள்ளது ) - யுத்தத்தில் வெற்றி கொண்ட தேவி தனது வாகனத்தில் இருந்து இறங்கி வரும் கோலம்
மல்லை துர்கைக்கு எட்டு கைகள் - சாளுவன் குப்பம் துர்கைக்கு ஆறு கரங்கள்தான் உள்ளன.

devi mallai 2.jpg
devi mallai.jpg
devi saluvankuppam.jpg
mahinsan mallai.JPG
mahisan saluvankuppam.jpg

- அபாரம்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 5th, 2008 அன்று 15:03 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.

ஒரு மறுமொழி

  1  

Hi

Great post..I have seen these and taken pics as well..your posts help me understand the significance better

செப்டம்பர் 9th, 2008 at 8:49

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி