சென்ற மடலில் யானைகள் மற்றும் மற்ற பிராணிகள் அனைத்தும் தங்கள் முதுகில் தூக்கி நிறுத்தி பிடித்திருப்பது என்ன ? என்று வினவினோம் அல்லவா. அதற்கு விடை..
முதலில் அந்த படங்களை இன்னொரு முறை பார்போம்.
அங்கிருந்து சற்று மேல்நோக்கி பார்வையை செலுத்துவோம் …
இப்போது புரிகிறதா ? அந்த குடவரை அனைத்தையும் தங்கள் முதுகில் சுமப்பது போல செதுக்கி உள்ளனர்.
சரி அந்த குடவரை எவ்வளவு பெரியது, அதன் முழு வேலைபாடு என்ன - இதை வி்ளக்க எனக்கு நா வரவில்லை - என்ன வார்த்தை இட்டாலும் இதற்கு இணை செய்யா இயலவில்லை - படங்களையே பேச விடுகிறேன்
சற்று நிதானத்துடன் பார்த்து பரவசம் அடையுங்கள்…ஆயிரம் ஆண்டு, அப்போது இருந்த தொழில் நுட்பம் - ஒரு மலையின் பாகத்தை குடைந்து அமைக்கப்பட்ட குடவரை - மேல் இருந்து கீழ் செதுக்க வேண்டும். அனைத்தும் ஒரே மலை - ஒரே கல்.
கடை சிற்பத்தில் ஒரு காவியத்தின் கதை செதுக்க பட்டுள்ளது - அதை பின்பு பார்போம்.
மறுமொழி அளிக்கவும் »
முன்பு நாம் எல்லோரா கோவில் ஒரு தொலைவு பார்வை பார்த்தோம். அப்போது ஒரு மலையை எவ்வாறு அருமையாக குடைந்தார்கள் என்பதை கண்டோம். இப்போது சற்று அருகில் சென்று அந்த உன்னத வேலைபாடின் அருமையை முழுவதுமாய் உணர பயணிப்போம். அதற்க்கு முன் சற்று உங்கள் பணிகளை சிறிது நேரம் விட்டு விடுங்கள் - முடிந்தால் உங்கள் இருக்கையில் சரியாக அமருங்கள் ( நீங்கள் பார்க்க போகும் படங்கள் உங்களை அப்படியே மயங்கி சொக்கி விழ செய்யாலம் )
நீங்கள் இங்கே பார்க்கும் அழகிய யானை - அதன் மண்டையின் பிளவுகள் மற்றும் துதிக்கை, அதன் வளைவு - அது என்ன இயற்கையாய் சில கொடிகளை சுயற்றி பிடித்திருக்கும் கோலம் ..அதன் காதுகள் , சற்றே வளைந்து மடிந்த காது மடல்.
சற்று, பின்னால் செல்வோமா - ஆஹா, இன்னும் ஒரு யானை, ஆனால் இயற்கையின் சீற்றத்தால் உடைந்து உள்ளது…
சரி இன்னும் பின்னால் செல்வோமா- அடே அப்பா - இது என்ன யானைகளின் அழகிய அணிவகுப்பு.
இன்னும் பின்னால் செல்வோம் - அப்பாடா இதன் உண்மையான அளவு அருகில் செல்லும் மனிதனின் உயரத்தை வைத்து கணக்கிட முடிகிறது. இப்போது புரிகிறதா இந்த கலை நுட்பத்தின் அபாரத்தை.
சரி, மற்ற இடங்களில் யானைகளுடன் சிங்கங்கள் மற்றும் யாழிகளும் உள்ளன. பொழுது போகவில்லை என்று யானையுடன் சிங்கம் சண்டை போடுகிறது போல.
சரி, இவை அனைத்தும் தங்கள் முதுகில் தூக்கி நிறுத்தி பிடித்திருப்பது என்ன ?? தொடரும்
மறுமொழி அளிக்கவும் »
அண்மைய மறுமொழிகள்