Quantcast

தொகுப்புக்காக செப்டம்பர் 14th, 2008

இதுவரை பல குடைவரைகளை நாம் பார்த்தோம். இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க, அதில் உள்ள கலை நுட்பத்தை மட்டும் அல்லாமல் தொழில் நுட்பத்தையும் அறிய வேண்டும். ஒரு பொருளின் மதிப்பு அதனுள் செல்லும் உழைப்பு, கலை திறன் சேர்த்து வரும் கலவை - அவற்றை அறிந்தால் தானே அவற்றின் அருமை முழுவதுமாக வெளிப்படும்.

இதை அறிய மல்லைக்கு மீண்டும் பயணிப்போம். இங்கே இருக்கும் அற்புத குடவரைகளை வெறும் பாறைகளில் கற்பனை செய்தது மட்டும் அல்லாமல் கருங்கல்லில் எவ்வாறு செதுக்கினான் நம் சிற்பி . அப்போது அவர்களிடம் இருந்த கருவிகள் என்ன. நமக்கு இது புரிய வேண்டும் என்பதற்காகவே அங்கே சில தடயங்களை விட்டு சென்றுள்ளனர் பல்லவ சிற்பிகள்.

மல்லையில் இங்கும் அங்கும் வேலை பாதியிலேயே நின்றுள்ளது ( இது எதனால் என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் - மல்லையை நிறுவிய மன்னன் யார் என்ற கேள்விக்கும் விடை வெளி வரலாம் - வேலை நடுவில் நிற்க்க காரணம் என்ன, எதிரி நாட்டு படை எடுப்பா ?) - இதில் நமக்கு ஒரு நல்லது - பாதியில் வேலை நின்றதனால் ஆங்காங்கே நமக்கு பல தடயங்கள் தெரிகின்றன.

கல்லில் உளி கொண்டு நேர் கொடு போல சிறு துவாரங்களை செதுக்கி, அதனுள் மர கட்டை கொண்டு அழுத்தி ( ஆப்பு ) - அதில் நீர் விட்டனர். கட்டை நீரை உரிந்து உடல் பெருக்கும் - அனைத்து ஆப்புகளும் ஒரே சீராய் பெருக்க, பாறை விரிய முயலும், பிறகு பிளக்கும்.

chiseled holes.JPG
neat row of chiselled holes.jpg
Mallai two types of working with rock.jpg
breaking a boulder.jpg
broken boulder.jpg

சரி, பாறையை பிளக்க இது உதவும். பாறையினுள் குடைந்து குடவரை எப்படி - அதற்கும் சான்றுகள் / தடயங்கள் உள்ளன.

carving into rockface via grids.jpg
hmm wip again.jpg
just started 2.jpg
just started.jpg
was work in progress.jpg
wip.jpg
work that was in progress.jpg

பாறை முகத்தில் சதுரம் சதுரமாக பிரித்து, அதை இன்னும் சிறு சதுரங்களாக செதுக்கி - முடிவில் சிறு கற்கள் போல பாறை சிதறும். அப்பா, என்ன கடினமான வேலை - கை ஓடியும், வியர்வை , உதிரம் இரண்டும் சொட்ட செய்த கலை.

2164300155_2373f0c42a.jpg
P81601610.JPG
early cave kodikkal.jpg
mahisa suramardhini cave  pillar.jpg

இப்போது அதன் வெளிப்பாடு - கடின உழைப்பு, கல்லில் செய்ததனால் ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் நம் கண்முன்னே நின்று பண்டைய கலை திறன் மற்றும் தொழில் நுட்பத்தின் அழியா சின்னங்களாய் திகழ்கின்றன.

the early end product.jpg

மறுமொழி அளிக்கவும் »

சரி, முந்தைய மடலில் பெரிய கோவில் ஒரே ஒரு படம் மட்டுமே பார்த்தோம். பொன்னியின் செல்வரான அருள்மொழி வர்மரின் தாக்கத்தில் சற்று நிறைய எழுதி விட்டேன்.

the big temple at a distance towering.jpg

தொலைவில் இருந்து பார்த்தோம். இப்போது நெருங்கி செல்வோம், ஆனால் ஒரு மாற்றம். உங்கள் கண்களை கட்டி, அழைத்து போகிறோம். முதல் வாயில் - இது சோழர் காலத்தில் கட்ட பட்டது அல்ல - அடுத்து காந்தளூர் சாலையில் ராஜ ராஜன் பெற்ற வெற்றியை குறிக்கும் கோபுரம் - கேரளாந்தகன் வாயில் - அதையும் இப்போதைக்கு தாண்டி செல்வோம். அடுத்து அரசனாக பதவி ஏற்கும் பொது அவன் சூடிக்கொண்ட பெயரால் விளங்கும் வாயில் - ராஜ ராஜன் வாயில் - இங்கே உங்கள் கண் கட்டை சற்று அவிழ்த்து விடுகிறோம்.

a bottom upview of the right door guardian.jpg

இது என்ன - வாயில் காப்போன் - ( த்வார பாலகன் ) - கோரைப் பல்,பிதுங்கும் கண்களுடன் உங்களை எதிர் கொல்லும்.

door guardian left.jpg
door guardian right.jpg
doorguardian left.jpg
doorguardian right.jpg
doorguardian.jpg
doorguardian1.JPG
the right door guardian.jpg

நான்கு கரங்கள்,காலை உயர்த்தி,அது என்ன காலின் அடியில்,ஒரு சிங்கம்,சரி இது என்ன ஒரு பாம்பு,சரி பாம்பின் வாயில் என்ன,ஆஹா ஒரு யானை, பின்புறமாக
யானையை முழுங்கும் பாம்பு,யானை எவ்வளவு பெரியது, அதை முழுங்கும்
பாம்பு (anai kolran…anaconda ??),அது எவ்வளவு பெரியது,இப்போது
வருகிறது பாடல்.எப்படி கொர்கிறான் பாருங்கள் சிற்பி.

doorguardian detail.JPG
righthandbehold.JPG
snakeswallowinganelephant.jpg
inside.JPG
vismaya astonishment.JPG

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=1068&padhi=068&startLimit=2&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.68.2

புரிகொள்சடையர் அடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்க இருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே.

பெரிய களிற்று யானையை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள் மிக்க கயிலை
மலையில் விடம் உண்ட கரிய கண்ட ராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும்
இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர்.
கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமை மங்கையைப் பலருக்கும் தெரியுமாறு ஒரு
பாகமாகக் கொண்டு மகிழ்ந்த தேவர் தலைவராவார்.

doorguardian.jpg

இப்போது மேலிருக்கும் துவரபாலகன் கைகளை கவனியுங்கள்,கீழே பார்,யானையை முழுங்கும் பாம்பு,அதை விட நான் எவ்வளவு பெரியவன், ஜாக்கிரதை,உள்ளே இருப்பவரோ,விஸ்மயம் ( சொல்ல நாவில்லை என்று அந்த கற் சிலை தனது கையால் விளக்கும் அழகு )

பெரிய கோவில் துவாரபாலகர்கள் ( வாயிற்காப்போன்) அல்லவா, இதை எப்படி உங்களுக்கு உணர்த்துவது - சரி படத்தில் ஒரு ஆளை, இல்லை ஒரு யானையை கொண்டு வருவோம் - இப்போது புரிகிறதா - பதினெட்டு அடி உயரம் உள்ள இவர்கள்.

how is this for size n see the sculpture panels.jpg
how is this for size.jpg
Door guardians Rajarajan gopuram.JPG
rajaraja gopuram with door guardians closer view.jpg
rajarajan gopuram with door guardians.jpg
rajarajan gopuram majestic.jpg

ராஜ ராஜன் நிறுவிய தஞ்சை பெரிய கோவில், ராஜ ராஜெஷ்வரம், பெருவுடையார்
கோவில் என்று அவனே அழைத்த, பிருகதீஸ்வரர் ஆலயம்.

அவன் இதனை தக்ஷின மேரு என்று கண்டான், தக்ஷின கைலாசம்,இதனாலேயே
இங்கு விமானம் கோபுரத்தை விட உயரமாக உள்ளது ( மற்ற ஆலயங்களில்
கோபுரம் விமானத்தை விட உயரமாக இருக்கும் )

விமானத்தை கைலாயம் என்று உணர்த்துகிறான் பார்த்தீர்களா….( திரு
K. பாலு ஐயா அவர்கள் இதனை எனக்கு மிக அழகாக விளக்கினார்)

எப்படி ஒரு சிறு சிலை வடிவம் - ஒரு பெரும் தத்துவத்தை விளக்குகிறது பாருங்கள்..

சரி இப்போது மற்ற படங்களை பாருங்கள்

முதல் கோபுரம்

closer view of the first gopuram ( not chola built).jpg
the first entrance not built by RRC.jpg
the first gopuram ( not chola built).jpg

இரேண்டம் கோபுரம் - கேரளாந்தகன் வாயில்

Keralantagan gopuram.jpg
Kerelantagan gopuram.jpg

மூன்றாம் கோபுரம் - ராஜ ராஜன் வாயில்

the two gopurams - pciture courtesy flickr ravages.jpg
the two gopurams from vimanam side.JPG

முடிவில் மகா மேரு விமானம் - விமானத்தை பற்றி பல தகவல் உண்டு - அவற்றை விளக்க நாம் மீண்டும் அங்கே செல்வோம். அதுவரை படங்களை பாருங்கள் - அவ்வப்போது படங்களுள் வரும் மனிதர்களை வைத்து இந்த கோவிலின் பெயர் ஏன் பெரிய கோவில் என்று வந்தது என்பது உங்களுக்கு புரியும்.

a centered front view.JPG
The two gopurams with vimanam in the background.jpg
another view of thanjavore temple.JPG
Please check the people who are walking in front to compare the size of the temple
dakshina meru.jpg
dakshina meru2.jpg
frontView.jpg
rearView.jpg
still another view..thanjavore.JPG
the dakshina meru - south kailash vimanam.jpg
the impact when your peer up at the vimaana.jpg
the maha meru - vimaanam.JPG
the main complex.jpg
the pinnacle of chola temple architecture.jpg
towering into the clouds.jpg
watch the seated people - u get an idea of the size.jpg

(படங்கள் தந்து உதவிய நண்பர்கள் மற்றும் திரு ரோகன் ராவ் அவர்களுக்கு நன்றி
http://rohanrrao.wordpress.com/ )

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 2  1  2 »