Quantcast

தொகுப்புக்காக செப்டம்பர் 19th, 2008



கடல் கடந்தும் தன் ஈர்ப்பை செலுத்தும் கலை - நாரத்த மலை

என்னை பற்றி படிக்கையில் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் அதனை இன்றும் தினமும் அலசும் எங்கள் யாஹூ குழுமம் பற்றி பார்த்தீர்கள் ( www,ponniyinselvan.in). அந்த குழுமத்தில் எனக்கு கிடைத்த அரிய நட்பு - தமிழ்சரித்திர புதினத்தில் எழும் விவாதங்களில் திடீரென காதேரின் ப்ரோபெக் ( Ms. Katherine Brobeck) என்று ஒரு மடலை இட்ட பெண்மணி யார் என்று தனி மடல் எழுதினேன் - அசந்து போனேன்.

அமெரிக்க பெண்மணியான இவர் பல்லவர், சோழர் , சாளுக்யர் என்று பல அறிய இடங்களை இருபது வருடங்களுக்கும் மேலாக இந்தியாவிருக்கு வருடா வருடம் பயணித்து, நம் கலையை ரசிக்கிறார் என்று அறிந்தேன்.இந்த துறையில் அவர் அறிந்துள்ள விசயங்களை கண்டு வியந்தேன் ! தமிழ் கலையின் மேல் அப்படி ஒரு அலாதி பிரியம் அவருக்கு - தன்னை சிவ தாசி என்று புனை பெயர் சூட்டும் அளவிற்கு சென்றுவிட்டது அவரது பற்று.

அவரை இங்கே ஒரு மடல் எழுத அழைத்தேன் - அவரும் இசைந்து சரித்திர புகழ் பெற்ற நாரத்த மலை - அவர்களது சொந்த பயணத்தின் இடுகை. ( அவருக்கு தமிழ் தெரியாது - அதனால் அவரது ஆங்கில இடுகையை நான் மொழி பெயர்கிறேன் )

J.C.Harle’s “Art & Architecture of the Indian Subcontinent”, புத்தகம் படித்தவுடனே அங்கே செல்லவேண்டும் என்று எனக்கு ஆவல் வந்தது - நாரத்த மலை. புராண கதைகளில் அனுமன் சஞ்சீவனி மலையை இலங்கைக்கு தூக்கி செல்லும் பொது ஒரு பகுதி இங்கே விழுந்ததாகவும் அதனால் இங்கே மூலிகை செடிகள் அதிகம் என்று வழங்கி வருகிறது.

1995 அங்கே முதல் முறை சென்றேன். திருச்சியிலிருந்து ஒரு வண்டி பிடித்து புதுக்கோட்டைக்கு விரைந்தோம், கோயிலை தேடி கண்டுபிடிக்க வேண்டுமே. பெரிய மலையை கண்டு திகைத்தோம், அதற்க்கு அடியில் அழகிய குளம், கோயில் கண்ணுக்கு தென்படவில்லை. தேடி சென்ற பொது அந்த பக்கம் நீரின் மறுபக்கத்தில் ஒரு அய்யனார் கோவில் கண்டோம்.

1 Ayyannar.jpg

திடீரென, மரங்களின் நடுவில் இருந்து அற்புதமாக தோன்றியது - விஜயால சோழீஸ்வரம். அருமையான விமானம். தொலைவில் இருந்து பார்கையில் கோயிலின் வடிவமைப்பு உள்ளத்தை கொள்ளை கொண்டது.

2 through the trees.jpg

முத்தரையர் காலத்தில் ( சோழர்களின் ஆட்சியில் குறிநில மன்னர்கள் ) கட்டப்பட்ட கோயில் (866 CE ) - சிற்பிகள் கட்டுமானம் , சிற்பம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர் என்று நன்கு விளக்கும் இடம் இது. கோபுர சிற்பங்கள் சற்று சிதைந்து இருந்தாலும் எனக்கு தமிழ் கோயில்களில் மிகவும் பிடித்த கோவில் இது.

3 Koil from NW.jpg

இங்கே இருக்கும் த்வார பாலகர்கள் மிகவும் அருமை. எங்கும் வரிசை வரிசையாய் யாழி - விளையாடும் யானை மற்றும் யாழிகள் - ஒன்று மனித முகம் கொண்ட யாழி. அங்கும் இங்கும் சிதைந்த சிற்பங்கள் எங்கும் இருந்தன

4 Dvarapalaka.jpg
human face yazhi.jpg

கோவில் பின்னால் இரண்டு குகைகள் - ஒன்று சேமிப்பு குகையாக உபயோகம் செய்துவருகின்றனர் - மற்றொன்று சமணர் குகை - முதலில் சமணர் குகை, அதன் பின்னர் அதில் அழகிய விஷ்ணு வடிவங்கள் - வரிசையாக எனினும் ஒன்றுக்கொன்று சற்றே மாறுபட்டு இருந்தன. அற்புதமான சிற்பங்கள்.

6 Samanar vishnus.jpg
row of vishnus.jpg

கோயிலை சுற்றி ரம்மியமான இயற்கை அழகு, ரசித்தேன். சற்று நேரம் என்னை மறந்தேன்.

7 guard & sibs, view.jpg
8 Paola meditates.jpg

கிழே இறங்கும் பொது இன்னொரு அய்யனார் கோவில் எங்கும் குதிரை உருவங்கள் கண்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்தேன்.

9 ayyannar steeds.jpg

காதி ப்ரோபெக்

மறுமொழி அளிக்கவும் »



சிற்பக்கலை எவ்வாறு நம்மை தாக்குகிறது என்று பல இடுகைகளில் பார்த்தோம். ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், கால வேகத்தை தாண்டி அந்த கலைஞனின் கலை தாக்கம் அவனது ஜீவனில் இருந்து கல்லினுள் பாய்ந்து , கல்லினுள் இருந்து நமக்குள் பாய்கிறது.

Tanjore+laxmi+is+this+stone+sculpture
splendor+in+stone

இதை பலரும் உணர்தாலும் சிலருக்கே - அந்த அபூர்வ சக்தி படைத்த ஒரு சிலருக்கே, அந்த உணர்வை வெளி கொணர முடியும். மற்றவருக்கு நம் கண் முன்னே அழகை கண்டவுடன் ரசித்து , நம் அகக்கண் அதை படம் பிடித்து , உள்ளுணர்வை தூண்டி எழுப்பும், ஒரு வித வெளியீட்டை அது தேடும். என் நண்பர் முரளி போன்று கலை திறன் படைத்தவராய் இருந்தீர்கள் என்றால், அந்த உணர்வு, அந்த தாக்கம் , நீங்கள் கண்ட காட்சிக்கு - அழகுக்கு அழகு சேர்க்கும் - சிற்பகலைக்கு மகுடம் சூட்டும் ஓவியம் . பலருக்கு இந்த பாகியம் கிடைப்பதில்லை, எனினும் ரசிக்கும் கண்கள் உள்ளனவே. இரு கலைஞர்களுக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், உயர்ந்த கலைக்கு என்றும் அழிவில்லை என்று உணர்த்தும் உயிர் சிலை -உயிர் ஓவியம். தஞ்சை பெரிய கோயில் லக்ஷ்மி சிற்பம். ( இதை முதலில் ஞான சரஸ்வதி என்று தவாறாக இட்டு இருந்தேன். பிறகு மேலும் படிக்கையில் இரு கரங்களுடன் இருப்பதால் இது லக்ஷ்மி என்றும், அதே ஆலயத்தில் இருக்கும் நான்கு கரம் கொண்ட சரஸ்வதி சிற்பமும் கண்டு பிழையை சரி செய்துள்ளேன்

சிற்பத்தில் என்ன ஒரு உணர்வு, காலை அழகே மடித்து ஒரு கால் மீது மற்றொன்றை இட்டு அமர்ந்திருக்கும் வண்ணம், அந்த கருணை சொட்டும் கனிவு முகம், வானவில்லை போல வளைத்த புருவம், மந்தகாச புன்னகை, மணி மகுடம், விதவிதமான ஆபரணங்கள், ஆடை அலங்காரம், இதை செதுக்கிய சோழ சிற்பி தன் வாழ்வின் பயனை இந்த படைப்பில் பேற்றான் என்றால் அது நிகை அல்ல. கல்லுக்குள் தன் உயிரை இட்டு அதை உயிர் பித்து என்றும் அழியா வரம் தந்து நம்மை இன்றும் மயக்கும் அவன் கலை திறன் வாழ்க.

murali+sketch
what+divine+grace

வண்ணப்படம் பலவிருந்தும் கருப்பு வெள்ளைக்கு ஒரு தனி மௌசு, படத்தினுள் நம்மை எடுத்து செல்லும் தன்மை.

black+n+white+best

இதை தன் விரல்களால் வரைந்த ஓவியனுக்கு, பொறாமையாக உள்ளது, இது ஒரு தெய்வீக கலை என்பதை மீண்டும் உணர்த்தி விட்டீர்கள் முரளி. வாழ்க உமது கலை, இது போல இன்னும் பல ஓவியங்கள் தீட்ட எங்கள் நல் ஆசிகள்

முரளி அவர்களின் மற்ற ஓவியங்களை இங்கே காணலாம்.

http://www.flickr.com/photos/murali-art/297087048/in/set-72157594304340655/

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 1  1