Quantcast

இந்த தூணில் இருக்கும் அரிய சிற்பம் ( ஸ்ரீரங்கம் கோயில் தூண் ) நான் இதுவரை வேறு எங்கும் கண்டதில்லை - இதை விளக்க நாம் ராமயாணதினுள் செல்ல வேண்டும்.

இராவணனின் மகனான மாயை அனைத்தும் அறிந்த இந்த்ரஜித் ஏவிய பானத்தில் வீழ்ந்த இலக்குமணன் உயிர் பிழைக்க சஞ்சிவினி தேவை என்று மருத்துவர் கூற - ஹனுமான் சென்று பர்வதத்தை பெயர்த்து கொணர்ந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அவன் அங்கு செல்லும் காரியம் நிறைவேறாமல் இருக்க ராவணன் தனது மாமன் காலமேணி என்கிற அசுரனை அங்கு அனுப்புகிறான். அவன் அங்கு ஒரு ரிஷி வேடம் பூண்டு, ஹனுமான் வரும் போது அவனை ஆசி புரியும் பாணியில் அருகில் இருக்கும் குளத்தில் நீறாடி விட்டு வருமாறு கூற, அனுமனும் அவ்வாறே அங்கு செல்கிறான் - குளத்தில் கால் வைத்துமே ஒரு பெரிய முதலை அவனை விழுங்கியது - ஹனுமான் அதன் வயிற்றை கிழித்து வெளி வந்தான். அப்போது முதலை மடிந்து ஒரு தேவதை உரு பெற்றது - தக்ஷன் சாபத்தினால் தான் முதலை வடிவம் பெற்றதாகவும் - தன் இயற் பெயர் தண்யமாலி என்றும் - விமோசனம் தந்த ஹனுமனை வணங்கி ஆசிபெற்றால் - உள்ளே இருப்பது ரிஷி அல்ல அசுரன் என்ற உண்மையை அறிந்த ஹனுமான், தன் தலையாய பணி தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்து , அசுரனின் காலை பிடித்து தலைக்கு மேல் சுற்றி விசினான் - அசுரன் அங்கிருந்த இலங்கை ராவணனின் சபையில் வந்து விழுந்து மாண்டான்.

hanuman croc srirangam.jpg

இந்த கதையை தான் இந்த தூண் சிற்பம் விளக்குகிறது - உற்று கவனியுங்கள் - படத்தின் வலது புறம் மேல் பாதி - முனிவர் வேடத்தில் அசுரன் விரல் நீட்டி குளத்தை காட்டும் காட்சி, இடது புறத்தில் ஹனுமான் முதலை வயிற்றை கிழித்து வெளி வரும் காட்சி, அதே காட்சியில் தேவதை ரூபம், வலது புறம் கீழே - பொலி சாமியாரை உதைக்கும் ஹனுமான்..

False rishi and Hanuman.JPG
hanuman srirangam.jpg
take this - hanuman.JPG

என்ன அருமையான வேலைப்பாடு, முதலையின் உடம்பின் அமைப்பு, அதில் இருந்து வெளிவரும் அனுமனின் கம்பீர தோரணை - இவை நாம் முன்னர் ஸ்ரீரங்கம் அலசிய குதிரை சவாரி தூண்களில் பின்புறம் என்பதை மனதில் கொண்டு பாருங்கள் (குதிரையின் பின்னங்கால் தெரிகிறது )

இதே போல முதலை வாயில் இருந்த மீண்ட இன்னும் ஒரு கதை உண்டு - அதற்கும் சிற்பம் இருக்கிறது, அவற்றை வரும் மடல்களில் பார்போம்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, செப்டம்பர் 22nd, 2008 அன்று 7:59 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 8 மறுமொழிகள்

  1  

I have a question…
do these artist follow these myth from any manual or they use any myth randomly…
I am asking this because usually performers in india tend have manual based on which the artist uses their own creativity and make subtle changes to it….

செப்டம்பர் 23rd, 2008 at 8:58
  2  

Dear Vairam,

Interesting question - does art follow literature or vice versa. I firmly believe that sculpture followed a strict regimen which led through a long apprenticeship - wherein they learnt the scriptures, nature, human anatomy etc etc. This should have happened something during the late pallava period, because the early pallava, pandya ( post 7th C CE) sculptures are true expressions of pure artistic beauty. The later pallava Rajasimha shows some character, legends and repetitive forms coming in. We will see them shortly.

There is another stream of thought based on the legendary varAhamihira’s encylopediaic work - which included among others a kind of guide for representing hindu gods. The dating of this work is unclear and as you rightly pointed out the artist did add his ‘touches’

rgds
vj

செப்டம்பர் 23rd, 2008 at 9:28
  3  

Hmm. Good post.

நவம்பர் 3rd, 2008 at 5:00
  4  

Thanks a lot for this post

நவம்பர் 5th, 2008 at 22:11
  5  

ஆஹா, கடைசியில் இந்தக் கதையா அது??? :( முதல்லேயே தோணலையே? :( வாழ்த்துகள் விஜய், தேடித் தேடிப் போடும் உங்கள் உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்.

ஏப்ரல் 13th, 2010 at 16:28
  6  

I get to hear as well as see many stories thru you.

Good

ஏப்ரல் 14th, 2010 at 13:05
  7  

hi virutcham

thanks - our land is the land of epics - n short stories intervined with those epics. not necessarily fm the same author or source but no less entertaining.

anbudan
vj

ஏப்ரல் 15th, 2010 at 5:21
  8  

Brilliant and simply amazing work, nice to know about this legend as I was not very much aware of this. These simple simple tales helps a lot in our iconography and identification of stories carved into these stones.

மே 28th, 2010 at 16:12

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி