Quantcast

ஹனுமான் முதலையின் வயிற்றில் இருந்து வெளி வந்ததை முன்னர் பார்த்தோம். இப்பொது அதேபோல இன்னொன்று.

தாராசுரம் கோவில் சிற்பம் - பெரியபுராண கதைகளில் ஒன்று - அவினாஷியில் சுந்தரர் முதலையால் விழுங்க பட்ட சிறுவனை உயிர் பித்த கதை,

Darasuram sundarar croc panel.jpg

சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலை உண்ட பாலகனை அவினாசி சிவபிரானை வேண்டிப் பதிகம் பாடி மீட்டுத்தந்த அற்புதம் - சிற்பத்தில்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70920&padhi=092&startLimit=4&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

7.92.4

உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.

உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவுமானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள, ` அவினாசி ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.

அவர் பாடிய திருப்பதிகத்தில், `கரைக்கால் முதலையை பிள்ளைதரச் சொல்லு காலனையே` என வேண்டிப்பாடுவதைக் காணலாம்.

முதலையுண்ட வரலாறு: ஐந்து வயது நிரம்பப் பெற்ற அந்தணச் சிறுவர் இருவர், இங்குள்ள நீர் நிலையில் குளித்தபோது ஒரு சிறுவனை முதலை விழுங்கிற்று. மற்றொருவன் அதன்வாயில் அகப்படாது பிழைத்துத் தம் இல்லம் சேர்ந்து, நிகழ்ந்ததை அச்சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்தான். அவனின் பெற்றோர் மிக்க துயருற்றனர். இது நிகழ்ந்து சில ஆண்டுகளான நிலையில் உயிர் பிழைத்த அந்தணச் சிறுவனுக்கு அவனுடைய பெற்றோர் உபநயனச் சடங்கு நடத்தினர். அவனது இல்லத்தில் மங்கல ஒலி கேட்ட அளவில் முதலையுண்ட சிறுவனின் பெற்றோர் இன்று நம் மகன் நம்முடன் இருந்தால் அவனுக்கும் உபநயனம் செய்வித்து மகிழலாமே என மனங் கவன்றனர். அவர்களின் நற்காலம் சுந்தரர் அத்தலத்துக்கு எழுந்தருளினார்.

சுந்தரர் திருவாரூரிலிருந்து சேரமான் பெருமாள் நாயனாரின் அழைப்பினை ஏற்று, அவரைச் சந்திக்கத் திருவுளம் கொண்டு சோழநாடு கடந்து, கொங்கு நாட்டை அடைந்தார். அவிநாசி என்னும் இத்தலத்திற்கு வந்தபோது, ஒருவீதியில் ஒருவீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்பதை அறிந்து இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார்.

நிகழ்ந்ததை அவ்வூர் வேதியர்கள் உரைத்தனர். அவ்வேளையில் சுந்தரர் தம் ஊருக்கு எழுந்தருளி வந்துள்ளார் என்பதைக் கேட்டு, மகனை இழந்து வருந்திய அந்தணர் அழுகை நீங்கி, மலர்ந்த முகத்துடன் அவரை வரவேற்று வணங்கினார். சிறந்த சிவபக்தராகிய இவ்வந்தணரின் மகனை முதலையிடமிருந்து மீட்டுத் தந்த பின்னரே, திருக்கோயில் வழிபாடு செய்ய வேண்டுமெனச் சுந்தரர் முடிவு செய்து, முதலை வாழ்ந்த நீர்நிலையை அடைந்து, அவிநாசி இறைவனை வேண்டி `எற்றான் மறக்கேன்` என்னும் திருப்பதிகத்தைப் பாடினார்.

அம்முதலை, தான் உண்ட மதலையைக் கரையின் கண் உமிழ்ந்து மீண்டது.அவனது பெற்றோரும் மற்றவரும் இவ்வற்புதத்தைக் கண்டு அதிசயித்தார்.

Darasuram Sundarar Croc panel closeup.jpg
darsasuram sundarar croc.jpg

http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=213

Thanks to Mr. V. Subramanian, for his valuable guidance with regard to the verse references.
http://www.geocities.com/nayanmars

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 23rd, 2008 அன்று 9:42 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 5 மறுமொழிகள்

திவாகர்
  1  

விஜய்,
‘சென்றதினி மீளாது’ என்பது வேதாந்தக் கருத்து. (பாரதி பாடல் கூட உண்டு)

ஆனால் அதிசயங்கள் என்று ஏற்படும்போது அதை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் நம் சிந்தனைக்கு நல்லது என்று நினைக்கிறேன். ஏன், எப்படி என்ற ஆராய்ச்சி மேலும் மேலும் நம்மைக் குழப்பவே செய்யும்.

அப்பர் சுவாமிகள் அப்பூதி அடிகளின் மகனை உயிர்ப்பித்த விதம் பெரிய புராணத்தில் மிக அழகாக விவரணை செய்யப்பட்டுள்ளது. (அப்பர் சுவாமிகளே கொடிய பாம்பின் விஷத்திலிருந்து மீண்டவர் என்பது சரித்திரம் கண்டது). அதே போல மயிலை பூம்பாவை இறந்தபின் அந்தக் குருத்தின் சாம்பல்களைப் பாதுகாத்து வைத்து சம்பந்தர் பாடல் மூலம் உயிர்ப்பித்த கதையையும் நாம் அறிவோம். அதே போல சுந்தரர் எப்போதோ முதலையால் கொல்லப்பட்ட அந்த அந்தணச் சிறுவனை முதலை வாயில் இருந்து சில வருடங்கள் கழித்து மீட்ட கதை.

இவை மந்திரம், மாயம் அல்ல. மூவருமே இறைவனை செந்தமிழில் பாடி ‘சென்றதினி மீளாது’ என்ற கருத்தை மறுத்து வரம் பெற்றவர்கள். தமிழ்மந்திரப் பாடல்கள் இந்த அற்புதத்தை செய்திருக்கின்றன. அதிலும் சுந்தரர் பாடிய பாடல்கள் படித்தோமானால், அவர் இறைவனை செல்லமாக அதட்டிக் கேட்பதையும் ரசிக்க வேண்டும். ‘உயிரை முதலை மூலம் பறித்த காலனை இந்தக் ‘கரைக்கு
கொண்டு தரச் சொல்லு’ என்று கேட்பார்..

‘கேட்பார் கேட்டால் எதுவும் கிடைக்கும்’

திவாகர்.

செப்டம்பர் 23rd, 2008 at 10:42
  2  

must create an entire blog on darasuram stories..what say ?

செப்டம்பர் 24th, 2008 at 9:02
K Raghunathan
  3  

It is amazing work that you are posting. Pls keep up the great work. Allows people like us not knowledgeable to enjoy reading these posts.

அக்டோபர் 2nd, 2008 at 15:13
  4  

Hi Raghunathan,

We all started as not knowledgeable, its an amazing learning journey. I am sure next time you go to temple, you will look for the finer sculptures and appreciate the greatness of the sculptor.

rgds
vj

அக்டோபர் 3rd, 2008 at 10:16
Narasimhan Srinivasan
  5  

Oh yes, the sculptures at Darasuram are a class by themselves. Well, certainly they mark continuation of the great, unsurpassed and unmatched tradition of building and architectural tradition of the Cholas but even then this particular temple is so, so different from the Big temple of Tanjore as well as the GKC temple. Well this year in July (I feel very sad now after seeing these wonderful pics which refreshed my memory thoroughly), I had taken Rockfort Express to Kumbakonam and was heading for Thirukkannapuram and Thirukkanangudi through that city. At that time I did enquire from one or two people about the location of the fourth great Chola temple which is Tribhuvanam Kampahareswarar temple built by either Kulothunga II or Kulothunga III. Even that temple from pics on the net appears to be a masterpiece. To that extent my coverage of the great Chola temples is still incomplete. Of course there is a fifth temple, the Thiruvanaikoil at Tiruchy, which is one massive Chola temple with good contributions from first the Pandiyans and then some gopurams and prakarams built by the Vijayanagara kings. These temples really take one to heaven and do not fail in giving at least temporary bliss to the utterly needy like us sinners.

அக்டோபர் 15th, 2008 at 13:08

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி