Quantcast
kannapanayanar.jpg

தாராசுரம் ஐராவதேசுவர கோவிலில் மிக அழகிய கண்ணப்பநாயனார் சிலை இருக்கிறது. தோள்களில் வில்லுடன்,இரு கைகளையும் கூப்பி முகத்தில் பக்தி பரவசத்துடன் இருக்கும் மிக அழகிய சிலை - ஆனால் சற்று அவர் காலில் பாருங்கள் - அழகிய காலணிகள்.

பொதுவாக கோவில்களில் நாம் காலணி அணிந்து செல்வதில்லை - அதே போல உள்ளே இருக்கும் சிற்பங்களும் பெரும்பாலும் காலணிகளுடன் இருப்பதில்லை - -இதற்கு இரு சிற்பங்கள் விதி விலக்கு - ஒன்று சிவ பிட்சாடண உருவம். மற்றொன்று கண்ணப்ப நாயனார்.

slippers.jpg

காலணிகளுடன் கண்ணப்பநாயனார் சிலையை சிற்பி ஏன் செதுக்கினான் ? மீண்டும் திருமுறையில் விடை காண்போம் ( நன்றி திரு V. சுப்பிரமணியன் )

நான்காம் திருமுறை

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=40490&padhi=049&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

காப்பதோர் வில்லு மம்புங் கையதோ ரிறைச்சிப் பாரம்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலச மாட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்ட னாரே

Darasuram Kannapar.jpg

காவல் செய்வதற்குரிய வில்லும் அம்பும் ஒரு கையிலும், நிவேதனத்திற்குரிய இறைச்சிச் சுமை மற்றொரு கையிலும் பொருந்த, காலில் தோலாலாகிய பெரிய செருப்பினை அணிந்து, தூயவாயினில் நீரைக்கொணடு கலசநீரால் அபிடேகிப்பது போல எம் பெருமானை அபிடேகித்து, அப்பெருமானுடைய ஒளிவீசும் பெரிய கண்களில் இரத்தம் பெருகி ஒழுகத் தன் கண் ஒன்றனைப் பெயர்த்து முதலில் ஒரு கண்ணில் அப்பிப்பின் மற்றொரு கண்ணைப் பெயர்க்க அதன்கண் அம்பினைச் செலுத்திய அளவில் அத்திண்ணனுடைய கையைப் பற்றிக்கொண்டார் குறுக்கை வீரட்டனார்.

சிற்பி தான் செதுக்கும் சிற்பத்தை பற்றி எந்த அளவிற்கு ஆராய்கிறான் பாருங்கள்

படங்களுக்கு நன்றி
http://www.kumbakonam.info/kumbakonam/darsuam/

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, செப்டம்பர் 24th, 2008 அன்று 12:08 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 2 மறுமொழிகள்

  1  

Hi Vijay, I visited last wek the Thiruvaleeswaram near Alwarkurichi and Ambasamudram, a place very close to Brahmadesam. This temple is well maintained by ASI and on the top tover (vimanam) facing the front, I was stunned to see the sculpture of Kannappar in action! Suits more to this article as an addendum. I will send pic by email
Regards
Chandra

செப்டம்பர் 24th, 2008 at 23:12
  2  

hi chandra

Great, can’t wait to see the pictures. Am working on another Kannapar freeze from big temple. will post shortly

rgds
vj

செப்டம்பர் 25th, 2008 at 15:30

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி