Quantcast



சென்ற வாரம் நண்பர் லக்ஷ்மி சரத் அவர்கள் தனது தளத்தில், ஒரு இடுகை இடும்படி கேட்டார்.

பல விஷயங்களில் தலையை நுழைத்து வழி தெரியாமல் திரிந்த எனக்கு சிற்ப கலை ஒரு அதீத மன அமைதியை தந்தது - கல்லின் மேல் ஏற்பட்ட காதல், இந்த அழியும் கலையின் மேல் ஏற்பட்ட மோகம், ஆடாமல் நின்று நம்மை நெகிழ்விக்கும் இந்த சிற்பங்கள் - அவற்றின் மொழி என்னை அவற்றின் வசம் இழுத்து ,ஆயுள் கைதி ஆக்கி விட்டது.

லக்ஷ்மி அவர்களின் தளம் மிக அருமையான நம் பழைய நினைவுகளை தூண்டும் தளம். அதனால் சிற்பகலை மற்றும் சுற்றுலா இரண்டும் சேருமாறு ஒரு இடுகை தயார் செய்தேன் - அதுவே மஸ்ரூர்.

http://backpakker.blogspot.com/2008/09/post-from-guest-blogger-was-this.html

சில மாதங்களுக்கு முன் மல்லை சோதனை சிற்பம் சார்ந்த புகை படம் தேடும் பொது, எனது சிறு வயது நண்பர் திரு ஆல்பர்ட் கண்ணில் பட்டர்,பழங்கதை பேசிவிட்டு அவ்வப்போது தொடர்பில் இருந்தோம். சில வாரங்கள் கழிந்த பின்னர், . அவர் ஹிமாச்சல பிரதேசம் சென்று அங்கு உள்ள மஸ்ரூர் ( himachal pradesh - masroor rock cut caves) குடவரை சென்றதாகவும், அங்கு எடுத்த படங்களை எனக்கு அனுப்பி வைத்தார். படங்களை பார்த்தவுடன் திகைத்து போனேன் !

masroor charming.JPG
masroor long shot.jpg
masroor maybe muruga.jpg

வட இந்தியாவில் இருக்கும் குடவரை, அதுவும் மலையின் உச்சியில் இருப்பவை, எட்டாம் நூற்றாண்டு, சிவன் கோயில், ( தர்மசால அருகில் ). இதுவரை பல குடைவரைகள் நம் பார்த்தோம் - தென் இந்தியா , தெற்கு இந்தியா என்று - எனினும் ஹிமாச்சல பிரதேசத்தில் இப்படி ஒரு குடவரையா என்று திகைத்தேன்.

intricate carvings masroor.jpg
masroor intricately carved lintel.jpg

பார்ப்பதற்கு அங்கோர் வாட் போலவே உள்ளன. அங்கோர் நிறுவியது பதினோராம் நூற்றாண்டு , மஸ்ரூரோ எட்டாம் நூற்றாண்டு. இரண்டு படங்களையும் பாருங்கள், என்ன ஒரு ஒற்றுமை , முன்னால் இருக்கும் குளத்து நீரில் கோபுரத்தின் அழகு பிரதிபலிக்கிறது.

angko.jpg
masroor.jpg

http://news.nationalgeographic.com/news/2007/08/photogalleries/Angkor-pictures/

காலத்தினால் மிகவும் சிதைந்தாலும் மஸ்ரூர் இன்றும் அழகு தான். அங்க்கொரின் அழகும் அதன் சிதைவினால் தானே. ஒருவேளை மஸ்ரூர் அங்க்கொரின் முன்னோடியா ?

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், செப்டம்பர் 25th, 2008 அன்று 10:54 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 2 மறுமொழிகள்

Madan U S
  1  

Hi Vijay,

Mount meru was the inspiration for Angkor Wat… it could have been the same for Masroor too. I do not know of any contact between north-india and the combodians - did any link exist? If not it could be just coincidence that two different people undertook two efforts based on Mount mahameru.

Could you comment about the period of angkor wat and masroor please?

செப்டம்பர் 25th, 2008 at 12:43
  2  

Hi sir,

Angkor late 11th C CE, Masroor 8th C

I am yet to get more information on the Dynasty that is credited with masroor, but understand the similarities between Angkor and Masroor are currently being researched by a team from Univ of Pennsylvania. If i can get more information, i will share with you.

rgds
vj

செப்டம்பர் 25th, 2008 at 12:54

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி