Quantcast

இதுவரை நாம் பெரும்பாலும் கற்சிலைகளையே பார்த்தோம். ஒரு மாறுதலுக்காக இன்று வெண்கல சிலை, அதுவும் உலகெங்கும் புகழ் பெரும் சோழ வெண்கல சிலையை பார்ப்போம். சோழ வெண்கல சிலை - உலோக கலைக்கு ஒரு முகவரி.

தொலை காட்சி பேட்டியில் ஒரு விளம்பரம் கண்டு சிங்கப்பூர் அருங்காட்சியகம் சென்ற ஜூன் மாதம் சென்றோம். வெளியில் விளம்பர பலகையில் பதினோராம் நூற்றாண்டு சோழ சிலை - உமா பரமேஸ்வரி சிலை ( என் மகன் பிருத்வி அதனுடன் ) ஆர்வத்தை தூண்டியது.

The welcome cutouts.jpg

வெளி அறைகளில் பல சோழ வெண்கல சிலைகள் இருந்தன. அழகிய ஆடும் சம்பந்தர் சிலை, சோழர் கால கற்சிலை - சுப்ரமணியர்.

chola bronze sambandar.jpg
chola subramanya.jpg
close up of facial detailing of subramanya.jpg
the museum desciption.jpg

வெளியில் உமையை கண்டவுடனே அந்த சிலை என்னை ஈர்த்து - ஓட்டமும் நடையுமாய் முக்கிய அறைக்கு விரைந்தோம். சிறப்பு காட்சி. உமை

தொலைவில் இருந்து பார்த்தவுடன் காந்தம் போல என்னை அதனிடம் ஈர்த்தது - கடைசி பத்து அடி எப்படி சென்றேன் என்று நினைவில்லை, ஆனால் அருகில் எப்படியோ வந்து விட்டேன். பல வெண்கல மற்றும் பஞ்ச லோக சிலைகள் இதுவரை கண்டதுண்டு, நம் கோயில்களில் இருக்கும் உற்சவர் சிலைகள் நன்கு துடைத்து பளிச்சென இருக்கும்.

ஆனால் இதுவோ, ஆயிரம் ஆண்டுகள் கண்ட சிலை, எங்கும் ஒரு பச்சை நிற போர்வை அணிவித்தாற்போல மயக்கும் சிலை. ஒவ்வொரு சிலையும் ஒரு புது படைப்பு - ஏனெனில், இவை லாஸ்ட் வாக்ஸ் முறையில் வார்த்த சிலை.

வண்டு மெழுகு கொண்டு முதலில் சிற்பி சிலையை வடித்து, அதன் மேல் வண்டல் மண் ( களிமண்) கொண்டு மொழுகி, பின்னர் சுளையில் வைத்து சுட்டு, அப்போது மெழுகு உருகிவிடும், அதனால் ஏற்படும் கூடினுள் உருக்கிய வெண்கலத்தை ஊற்றி, பின்னர் நன்கு ஆறிய பின்னர், கூடை உடைத்தால் உன்னத சிலை பிறக்கும். ஆனால் அது பிறந்த கருவறை அழியும், எனவே ஒவ்வொரு சிலையும் புதிதாக செய்யவேண்டும். (unique)

Bronze_of_Uma_Parameshvari.jpg

இரண்டு அடி உயரம் தான், ஆனால் அதில் என்ன ஒரு அழகு, நுணுக்கமான வேலைப்பாடு , முகத்தில் என்ன ஒரு பக்தி பரவசம் மிகுந்த அமைதி,கயல் போல விழியை இன்னும் அழகு பெற வானவில் போல வளைந்த புருவம் , அந்த புன்னகையில் தான் என்ன ஒரு அன்பு,கன கச்சிதமான நாசி , கூந்தல் வளைந்து நெளிந்து தோள்களின் மீது படர்ந்து, அநத கச்சிதமான கழுத்தினை அழகே எடுத்துக்காட்டும் அணிகலன், அவள் நிற்கும் நளினம், கொடி இடையின் வளைவு, அதில் விளையாடும் அவள் பட்டாடை, அநத கைகளின் பாவம் , விரல்களின் உயிரோட்டம் - கலை அழகு தேய்வீகத்துடன் இணையும் உன்னதம்.

கடின உழைப்பின் விளைவு, மரகத வண்ணம் பூசி நம்மை ஆயிரம் ஆண்டுகள் ஒரு நொடியில் பயணித்த சிலை, பத்து நிமிடம் பேச்சு வரவில்லை.

அந்த அழகு , கலை , தெய்வீகம் என்னை மெய் சிலிர்க்க வைத்து. எனது அனைத்து புலன்களும் அடங்கி, கண் முன் நிற்கும் உயிர் சிலையின் தாக்கத்தில் நான் சிலை ஆனேன் - அவள் உயிர் பெற்றாள்.

இதுதான் சோழ சிலையின் சக்தி.

http://www.acm.org.sg/exhibitions/eventdetail.asp?eventID=184

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, செப்டம்பர் 29th, 2008 அன்று 12:18 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் மற்றதை விடுத்து இறுதிக்குச் சென்று ஒரு பதிலிடலாம். பிங் செய்வது தற்போது தடை செய்ய்ப்பட்டிருக்கிறது.

இதுவரை 16 மறுமொழிகள்

  1  

விஜய் நீங்கள் ஒரு சிறந்த கவிஞ்ஞராகி விட்டீர்’
உங்கள் வர்ணனை சிற்பங்களை விட ப்ரமாதமாய் இருக்கிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ

செப்டம்பர் 29th, 2008 at 14:27
Thirunavukkarasu
  2  

Were these sculptures excavated from Singapore or in and aroud the area ?

My intention of the question is to find the nativity of these statues. Whether the statues were made in singapore are exported from TamilNadu during chola period or later ?

How these statues get their berth in Singapore museum ?

Pleae clarify.

செப்டம்பர் 29th, 2008 at 15:16
  3  

Hi,

This was a special feature exhibition titled beauty in Asia. Bulk of the exhibits are permanent features in the museum, but the Uma Parameshwari was a special exhibit. Exhibitions do loan exhibits ( recently the sacred relics of Buddha were exhibited on loan from India).

Quoting from their promotional material ”

This exhibition will bring forth the many facets of beauty across Asian cultures, time and space. It is hoped that visitors will be exposed to the different notions of what is beautiful and that the experience they encounter from visiting the gallery will help them find both the outer and inner beauty of the people and things they encounter.”

செப்டம்பர் 29th, 2008 at 15:29
Kathie Brobeck
  4  

She certainly is a beauty! Do you know the
period? ca 11th or 12th century?

செப்டம்பர் 29th, 2008 at 19:05
  5  

திரு. விஜய்,
அற்புதம்!! ஆனால் இந்த சிலைகள் எவ்விதம் சிங்கப்பூர் சென்றன??

செப்டம்பர் 29th, 2008 at 19:49
  6  

Hi kathie

The Uma bronze was 11th C

rgds
vj

செப்டம்பர் 30th, 2008 at 6:55
  7  

Dear Satheesh,

Apart from the permanent exhibits in the museum, they do have regular events/ highlight programs, for which they arrange special exhibits on loan from various museums across the world.

rgds
vj

செப்டம்பர் 30th, 2008 at 6:59
Raju Rajendran
  8  

ஈர்க்கு இடை போகாத …. என்று புலவர்கள் பாடுவார்கள். இங்கே புரிநூல் இடை போகுதே?(::

செப்டம்பர் 30th, 2008 at 22:12
Sivaram Kannan
  9  

Wow..That is a beauty and that is a fantastic post. It was poetic.

டிசம்பர் 26th, 2008 at 7:50
Ashok Krishnaswamy
  10  

I am stoned!!

டிசம்பர் 27th, 2008 at 12:42
  11  

Thanks Ashok - reminds me - to do a detailed post on the bronze. will do so shortly. Be ready to be stoned more

rgds
vj

டிசம்பர் 27th, 2008 at 21:50
S.RAMESH
  12  

Sri Mr. Vijay

Through out the world Tamil Valar Tamil Makalin Vazhuthukal

மார்ச் 6th, 2009 at 10:54
  13  

arumaiyana rasanai

நவம்பர் 16th, 2009 at 14:36
saiprabha
  14  

First and foremost, thank you so much for giving us this feast…. I came across your website couple of days ago in my quest to read about raja raja chola and his inscriptions. I am reading Ponniyin selvan for the 6th time. But this time I have a amazing resource in my hand, that is the web, to look at the places, and pictures ….

I came across you website and haven’t stopped reading …. My heartfelt thanks to you for showing and explaining these invaluable treasure trove.

Thank you.

மார்ச் 15th, 2012 at 23:14
  15  

Thanks Saiprabha and nice to meet a fellow PS ethusiast. Keep visiting

rgds
vj

மார்ச் 16th, 2012 at 8:19
தர்மபுரி நவீன்
  16  

Nice web……

மார்ச் 20th, 2012 at 17:49

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி