Quantcast

முந்தய பதிவுகள், மாதங்களில்: செப்டம்பர், 2008


எங்களை பற்றி என்ற மடலில் நாங்கள் இட்ட படத்தை பற்றி விமர்சனங்கள் பல வந்துள்ளன…இங்கே இதை விட சிற்ப கலையை போற்றும் படம் இட்டு இருக்கலாம் என்று, எனினும் அந்த படம் இட்டதின் நோக்கம் அறிய பொக்கிஷங்களை அவற்றின் மதிப்பை அறியாமல் உள்ளோம் என்பதை உணர்த்தவே.

பின்னால் இருக்கும் மல்லை தவம் ….சரி அதற்கு ஈடு கட்ட ஒரு முழு தொடரையும் அற்பனிக்கிறோம்

இதோ மல்லை தவம் - ஒரு முதல் பார்வை.

பல்லவ சிற்பிகளின் சிந்தனை சிறகடித்து பறக்க, அவர்கள் கண்ட இந்த மலை அவர்களின் கைவண்ணத்தின் கீழ், நூறு அடி நீளம் நாற்பது அடி உயரமும் உள்ள கற்பாறை கலை பாறையாக மாறி , தமிழக சிற்பக்கலையின் விஸ்வரூபமாக உருபெற்று அதன் மனிமகுடாமாக திகழ்வதை பாருங்கள். இதை போல, இந்த அளவில், அதுவரை எவரும் சிந்தித்ததில்லை, அதன் பின்னரும் எத்தநித்ததில்லை. ஆயிரத்தி முன்னூறு ஆண்டுகள் கழிந்தும் நம்மை அசரவைக்கும் படைப்பு

முனிவரின் சாபத்தினால் சாம்பலான தனது முன்னோர்கள் உயிர் பிக்க கடுந்தவம் புரிந்து, விண்ணகர கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகிரதனின் உன்னத முயற்சி. இதை சித்தரிக்க இயற்கையாகவே பிளந்த பாறையை தேர்தெடுத்த சிற்பி, அதில் விண்ணவர், நாகர், பூலோகவாசிகள் , மிருகங்கள் என்று ஒரு உலகத்தையே செதுக்கி (அனைத்தையும் விளக்க இதை ஒரு தொடராக இட வேண்டும் ) …அதில் பல புதிர்களை வைத்து …முதல் புதிர் அர்ஜுனன் ஈசனின் பசுபத அஸ்திரத்தை தவம் செய்து பெரும் காட்சியை பிணைத்து ( இதை விளக்க அடுத்து வரும் சோதனை தவம் மடல் படியுங்கள் ) அதில் பூனை, எலி , யானை, வேடன் , சிவா பூதகனத்தின் வயிற்றில் புலி முகம் என்று பல சுவாரசியமான சிற்பங்களையும் உலவ விட்ட கற்பனை அருமை.

முதல் காணல் என்பதால் - நிறைய விளக்கம் இல்லை - நீங்கள் பார்க்கும் பிளவு முன்காலங்களில் மழை பெய்யும் பொது அருவி போல மழை நீர் கங்கை இறங்கும் கோலத்தை நடித்து காட்டும் வண்ணம் செதுக்க பட்டுள்ளது. கங்கையின் வலது புறம் ஒரு காடு .. இடது புறம் விண்ணவர்கள் இந்த அறிய காட்சியை காண விரைகின்றனர். வரம் அளிக்கும் ஈசனின் அதிகார தோரணை, மற்றும் வரம் பெறுபவரின் கடுந்தவத்தினால் எலும்பும் தோலுமாய் காட்சி ( அணு ஆயுதம் பெற தவம் …இப்போது இந்தியாவின் நிலை ??)

தொடரும்

மறுமொழி அளிக்கவும் »

 Page 16 of 16  « First  ... « 12  13  14  15  16