Quantcast

நண்பர் ஒருவர் பல சிவ பிட்சாண்டவன் சிற்பங்கள் இருக்க, ஒரு சில சிற்பங்களையே ஏன் இடுகிறீர்கள் என்று கேட்டார் . மிகவும் நல்ல கேள்வி. திரு திவாகர் அவர்களின் தமிழும் அதனுள் இருந்த பல கருத்துகளும் சரி வர சென்றடையவே - அவர்களது மடலில் இட்ட சிற்பங்களை பற்றி மேலும் எழுதவில்லை.

இதோ அதன் தொடர்ச்சி. கதையை கேட்டீர்கள் அல்லவா, இப்போது அந்த மகா சிற்பி சிவனை மட்டும் செதுக்கவில்லை, அந்த கதையையே செதுக்கி உள்ள அருமையை பாருங்கள்.

Kanchi kailasanatha bhikshadana.jpg
kanchi kailasantha bhikshadana closer.JPG
Kanchi kailasantha bhikshadana closeup.jpg

காஞ்சி கைலாசநாத கோவில். ராஜ சிம்ஹன் நிறுவிய அற்புத கோயில், தஞ்சை பெரியகோவிலை நிறுவிய ராஜ ராஜனே பெரிய கற்றளி என்று வியந்த கோயில். அங்கே இந்த அற்புத சிவ பிட்சாண்டவனின் வடிவம் - ராஜ சிம்ஹனின் பாயும் சிங்கங்களின் நடுவில் கம்பீரமாக நிற்கும் காட்சி. சிற்பத்தில் ஈசன் தன் இடது கை விரலை நீட்டி நம்மை மேல பார்க்க சொல்வது போல உள்ளது. மேலே என்ன இருக்கிறது. ஆஹா, ஆடல் வல்லானின் அற்புத ஆட்டம். ( இதே வடிவம் நாம் மல்லை ஓலக்கநெஸ்வர கோயிலிலும் பார்த்தோம் !!)

kanchi kailsanatha shiva as dancer.JPG
mallai olakaneshwara temple shiva as dancer.jpg

சரி சிற்பத்திற்கு மீண்டும் வருவோம். கட்டழகு வாலிபன் அல்லவா - உணர்த்த என்ன ஒரு கட்டுடல், முகத்தில் விஷம சிரிப்பு , ஒரு காலை அழகாய் மடித்து, கால்களில் இருக்கும் பாத ரக்‌ஷைகள் - அதிலும் ஒரு பாதம் சற்றே தூக்கியவாறு, பரந்த விரிந்த தோள்கள் , வலது கையை என்ன ஒரு யதார்த்தமாக தண்டத்தின் மீது இட்டிருக்கும் பாங்கு , அதில் ஒட்டிக்கொண்டு இருக்கும் திரு ஓடு.. அருமையான சித்தரிப்பு. அதனுடன் நிறுத்தவில்லை நம் சிற்பி.

Kanchi kailasantha bhikshadana closeup.jpg
the begging bowl.JPG
Angry Rishi.JPG
Rishi Pathini's.JPG

அழகு வாலிபனை கண்டு சொக்கி அவன் காலில் விழும் இரு ரிஷி பத்தினிமார்கள், அவர்களுக்கு மேலே இதை கண்டு சினம் கொண்டு ஈசனை தாக்க கை தூக்கும் ரிஷி. ஒரு கதா பத்திரத்தை மட்டும் சித்தரிக்க வில்லை இந்த சிற்பம், , ஒரு கதையையே சித்தரிக்கிறது.

சரி, திருமுறையில் இந்த காட்சி வருகிறதா ? நான்காம் திருமுறை

நான்காம் திருமுறை

கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும் நாகவீச் சரவ னாரே.

திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளைய ராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.

Mohini kaanchidevarajaswami.jpg
Rishis getting intoxicated.JPG
naughty rishis.JPG

சரி, இப்போது மோகினி வடிவம் - காஞ்சி தேவராஜசுவாமி கோவில் தூண் சிற்பம். அங்கும் சிற்பி தன் கலை நுணுக்கத்தை காட்டி உள்ளான்.உற்றுப் பாருங்கள் - மோகினியின் மோகனப் புன்னகையில் மயங்கி ,அவள் ஊற்றிக் கொடுக்கும் பானத்தை இரு கரம் கூப்பி அருந்தும் ரிஷிகளின் வேடிக்கையான காட்சியையும் காட்டிய சிற்பியின் கற்பனை , கலைத் திறன் அபாரம்.

சரி, திருமுறையில் இந்த காட்சி வருகிறதா ?இரண்டாம் திருமுறை

இரண்டாம் திருமுறை

விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்.

புறம்பயம் அமர்ந்த பெருமானே! எல்லாமாக விரிந்து நின்றாய்: நுண்ணியனாகக் குவிந்துள்ளாய்: ஊழிக் காலத்தில் விழுங்கிய உயிர்களை வினைப்போகத்திற்காக மீண்டும் உடலோடு உலவவிட்டாய்: உன் நிலையை விடுத்துப் பல்வகை வடிவங்கள் எடுத்துத் திரிந்தாய்.
குருந்தொசித்த திருமால் மோகினியாக வர அவ ரோடு கூடிப் பிரிந்தும் புணர்ந்தும் விளையாடினாய்: பிணம்புகும் சுடு காட்டை விரும்பிமகிழ்ந்தாய்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், அக்டோபர் 2nd, 2008 அன்று 12:33 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 8 மறுமொழிகள்

  1  

அருமையான தொகுப்பைக் கொடுக்கின்றீர்கள். திருப்புறம்பியம் பற்றிய செய்தி புதியது. இன்னும் பார்க்கவில்லை. மற்ற இரு கோயிலிலும் மேற்கண்ட சிற்பங்களைப் பார்த்து வியந்திருக்கின்றோம். நன்றி.

அக்டோபர் 2nd, 2008 at 13:40
srini
  2  

hi Vj
Wonderful man, u sometimes amaze me with yr thoughts n forays. kudos keep up

So long
Srini
Dxb

அக்டோபர் 5th, 2008 at 11:29
Kathie Brobeck
  3  

Bhaja friezes awfully tiny. Could we see them
larger to make out Surya & Indra?

அக்டோபர் 14th, 2008 at 17:53
  4  

I will send you another Mohini taken in KALAKKAD temple, to add here. Nice posting Vijay. How I missed this and read so late, I do not know
Chandra

அக்டோபர் 17th, 2008 at 20:49
  5  

Vj,

I have another interpretation to the second set of photos(Kanchi Devarajaswami temple pillar). It is indeed the Mohini Avatar of Vishnu but a totally different story altogether.

In my opinion, I feel it is the story of how Vishnu after the churning of the ocean wanted to prevent the asuras from having the nectar.

Disguised as an enchanting mohini he distributed the nectar to devas(seen with a “crown” on the right side) and an intoxicant to the asuras on the left(seen with matted hair and no crown.)

The story goes on as to how one of the demons disguised as a deva was able to consume some of the nectar before he was spotted. He was beheaded, but as he has consumed the nectar of immortality he could not be killed. He is none other than Raghu/Ketu.

http://en.wikipedia.org/wiki/Rahu

மே 27th, 2010 at 9:52
  6  

good observation prasad. the presence of the crown does raise doubts if these were rishis. I wish i could post the ones from Kudumiyanmalai - but would have to censor them very heavily

மே 27th, 2010 at 9:58
nallasivam
  7  

nice post.bikshadanar in perur kanakasabai is also very sensuous and mesmerising.

அக்டோபர் 2nd, 2010 at 13:29
  8  

sure mr nallasivam, thanks for reminding, have to do a post on the rest of the perur kanakasabhai pillars soon. will post

rgds
vj

அக்டோபர் 3rd, 2010 at 19:18

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி