Quantcast


சிங்கை அருங்காட்சியகத்தில் இருந்த சோழ வெண்கல சிலையை பற்றிய மடலுக்கு பலரும் மறுமொழி கூறுகையில், இந்த சிலை அங்கே எப்படி வந்தது என்ற கேட்டார்கள். பல அமெரிக்க, ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் சோழர் கால வெண்கல சிலைகள் உள்ளன.

Bronze_of_Uma_Parameshvari.jpg

திரு நாகசுவாமி ஐயா அவர்கள், அருமையாக வாதிட்டு சோழர் கால நடராஜர் சிலையை இங்கிலாந்திலிருந்து மீட்டு வந்தார்.

Bio Data of Dr. Nagaswamy with the London Nataraja case:

அதெல்லாம் இருக்கட்டும், நம் ஊரில் இருக்கும் சிலைகளின் நிலைமை என்ன? இதோ XXXXXXXX கோயில் , சோழர் கால வெண்கல சிலைகள். திரு சந்திரா அவர்களின் படங்கள்.

Nataraja.jpg
shiva bronze.jpg

நல்லதோர் வீணை செய்து - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்
மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

பாரதியின் புகழ் பெற்ற இந்தப் பாடலை அறியாத தமிழ் உள்ளம் இருக்க முடியாது.

அந்த சிவனே இப்படி புழுதியில் இருக்கும் பொது ? 13th C சோழர் கால பொக்கிஷங்கள் , புழுதி மட்டும் அல்ல, ஒரு சிறு அறையில் ,கூத்தபிரான் - அவன் இடு காட்டில் ஆடினான் என்பதற்காக இப்படியா? அடுத்து அமைதியே உருவான சிவன் .. கரையான்கள் துணைக்கு தரையில் கேட்பார் அற்று கிடக்கும் இந்தக்கலைச் செல்வங்களை பார்க்கும் பொது நெஞ்சு வெடிக்கிறது.

(கோவிலின் பெயர் பாதுகாப்பு கருதி இங்கே xxxxxxxxxxஇடவில்லை )

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, அக்டோபர் 8th, 2008 அன்று 7:34 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 4 மறுமொழிகள்

  1  

நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்… :(

நம் கலைகளை நாமே அழியவிட்டுக் கொண்டிருக்கிறோமே என்று நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சு விம்முகிறது அன்பரெ…

அக்டோபர் 8th, 2008 at 15:51
  2  

we’ll be happy if a support system prevails to preserve them using collapsible gates and locks in their respective temples. The cleaning groups we run, do clean them periodically with tamarind and also digitize them by photos, otherwise the count may be lost and sculpture thieves may pay paltry sum to the temple watchman and take away our precious art to foreign shores. No surprise when Vijay marked the loaction at our request as ,”xxxx” :( DOnors can come forward to provide security systems for these pricesless art through REACH.

அக்டோபர் 9th, 2008 at 14:56
  3  

எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, ஊர் பெயரை குறிப்பிடாமல் இருந்ததற்கு விஜய்க்கு நன்றி. சிலைத் திருடர்கள், ஊடகம், நவீன யுக்திகளைல் கை தேர்ந்தவர்கள்! மறு நாளேஎ சிலைகள் களவு போக நாம் ஏன் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்? ஒரு ஊரில், கோவில் கட்ட நிதி வேண்டி கடிதம் அனுப்பினார்கள். எங்களால் தொழில் நுட்பம் தரமுடியுமே தவிர, தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகையால், பணம் தர முடியாது. மறு முறை அவரை பார்க்கப்போகையில், கோவில் அழகாக எழுப்பியிருந்தார்கள்! ஆனாலும் ரசீது புத்தகத்தை நீட்ட, “என்னய்யா, இன்னும் எதற்கு?’ என்றேன். சாமி சிலை வாங்க! என்றார்! என்னது? ஆம்.இருந்த ‘பழைய’ சாமியை விற்று கோவிலைக் கட்டியிருக்கிறார் இந்த விஷய ஞானமற்ற மூடன்! புது சாமி வாங்கி பூசை போடவே, மீண்டும் வசூல்! என்னத்தைச் சொல்ல?

அக்டோபர் 9th, 2008 at 15:12
Kathie
  4  

a sad state of affairs, truly

ஜனவரி 18th, 2012 at 22:07

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி