Quantcast


பெரிய கோவில் சண்டேசர் சிற்பம் பார்த்தோம், அப்போது கங்கை கொண்ட சோழபுரம் சண்டேசர் சிற்பம் ஒன்றும் பார்த்தோம். ஆனால் அந்த அற்புத சிற்பத்தை முழுவதும் காண இந்த இடுகையில். ( சிற்பத்தை சார்ந்து இருக்கும் )சண்டேசர் கதையை விளக்கும் சிறு சிற்பங்களை பார்க்க மறவாதீர்கள்)

பல நண்பர்களுடன் நான் சிற்ப கலை பற்றி விவாதிக்கும் பொது, கல்லைப் பொறுத்த வரையிலும் பல்லவ சிற்பமும்/ சிற்பியும் முதன்மை பெற்றவர்கள் என்று வாதாடுவேன். ஏனெனில் ,பிற்கால சிற்பங்களை போல அல்லாமல், பல்லவ சிற்பி எந்த வித சட்ட திட்டங்களினுள்ளும் இல்லாமல், தனது சிற்பங்களை தனது கற்பனை திறனைக் கொண்டே செதுக்குவான். அதனால் அவனது கலையில் ஒரு உயிரோட்டம் இருக்கும், இந்த சிற்பத்தை பார்க்கும் பொது ,அப்படி பட்ட ஒரு திறமை உள்ள பல்லவ சிற்பி ,தப்பித்து கங்கை கொண்ட சோழ புறத்தில் வேலை செய்தான் போல உள்ளது. சிற்பக் கலையில் இதை போல வேறு சிலை இல்லை .. கல்லில் கவிதை இதுவே

breathing life.jpg
chandesaanugramurhtigangaikondacholapuram.jpg
electric wires.jpg
longshot.jpg
the full panel.jpg

திரு நாகசுவாமி ஐயா அவர்களின் வர்ணனை இதோ ( ஆங்கிலம் அதை நான் மொழி பெயர்கிறேன் )

நான்கு கைகளுடன் அரியணையில் அமர்ந்து இருக்கும் ஈசன், மேல் இரண்டு கரங்களில் மழு, மான், மற்ற இரண்டு கரங்களை கொண்டு அன்புடன் சண்டேசருக்கு மாலை அணிவிக்கும் காட்சி, என்ன ஒரு அரவணைப்பு, என்ன ஒரு அன்பு - அதை பிரதிபலிக்கும் சிலை, கரம் கூப்பி சிரம் தாழ்த்தி அதை பணிவுடன் பெரும் சண்டேசர்,உமையுடன் சண்டேசரை ஈசன் ஆட்கொள்ளும் அரிய காட்சி. அவர்களின் உருவங்கள், கால், கை, அணிகலன்கள், அனைத்தும் நம்மை பரவசபடுதுகின்றன . திரு சிவராமமுர்த்தி அவர்கள் - இந்த அற்புத சிலை, ராஜேந்திர சோழன் பெற்ற வெற்றிகளை அவன் ஆடியில் இட்டு அவனே தனக்கு கொடுத்த பரிசுகளாக கொள்ளாலாம்’ என்கிறார். இந்த சிற்பத்தை ஒட்டி உள்ள சிறு சிற்பங்களில் சண்டேசரின் கதையைக் காணலாம்.

லிங்கத்தை வழிபடும் சண்டேசர், பசுக்கள், அதை ஒட்டி சண்டேசரின் தந்தை மரத்தின் மறைவில் நின்று ஒளிந்து பார்ப்பது , பூசையை தடுப்பது, கோபத்தில் சண்டேசர் மழுவை தனது தந்தை மீது எறிவது. கடைசியில் இருவருக்குமே ஈசன் தனது ஆசியை வழங்குவது.

bestowing flowers.jpg
chandesaanugramurhtigangaikondacholapuram.jpg
closer.jpg
delightful.jpg
divine.jpg
majestic.jpg
sheer poetry.jpg
spectacular.jpg
splendid fluid grace.jpg
what grace.jpg

http://www.tamilartsacademy.com/books/gcpuram/chapter06.html

படங்கள் - ரவாஜெஸ், மோகன்தொஸ் ( பிலிக்கர் நண்பர்கள் ), சாத்மீகா ( பொன்னியின் செல்வன் குழுமம் )

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, அக்டோபர் 28th, 2008 அன்று 13:23 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 8 மறுமொழிகள்

arunn
  1  

but cant help wondering this… as cholas reigned after pallavas, the technology shud have improved in sculpting(or knowledge of this art is already avlbl.) but still intricacy and fit/finish is missing or of less qlty - excluding few such as … the one in this post! but the civil engineering had developed tho- in constructing towering vimanas!

நவம்பர் 17th, 2008 at 19:10
muthu
  2  

அடுத்த மாதம் கங்கை கொண்ட சோழபுரம் செல்கிறேன். நிச்சயம் இந்த சிற்பத்தை பார்க்க வேண்டும்.

பெப்ரவரி 28th, 2009 at 12:27
N.Srinivasan
  3  

One thing VJ and friends,

The panel pictured is called the Chandesa Anugraha Murthi. Actually the Chandesa bowing before Lord Siva and Parvathi is also said to be a likness of Lord Rajendra Chozhan himself!!!!! did you know about that??

Srinivasan N.

மார்ச் 16th, 2009 at 14:04
N.Srinivasan
  4  

In reply to arunn, I think the earlier Chola temples mainly spread in and around Pudukkottai Karaikudi have real masterpieces. Even the Tiruvanaikoil temple is very artistic.

மார்ச் 16th, 2009 at 14:11
Kathie B.
  5  

I’m with you, Arunn & N. Srinivasan, the sculpture down in Pudukkottai I find more
beautiful. What does the Jambuji Koil have that I should see?

அக்டோபர் 23rd, 2009 at 14:40
annapoorna
  6  

he looks so majestic!!!! :) appadiae ezhunthu varamatara!!!! beautiful sulpture…

மார்ச் 17th, 2010 at 17:08
nallasivam
  7  

Gangai konda cholapuram has three masterpieces-candesa anugrahar,natarajar and saraswathi

அக்டோபர் 2nd, 2010 at 17:56
  8  

True, sadly many have not lived to this day. guess a few are later works ( replaced) - ASI must do away with installing replacements!

அக்டோபர் 3rd, 2010 at 19:19

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி