Quantcast



இன்று ஒரு அற்புத சிற்பம். (நன்றி சந்திரா) புள்ளமங்கை கோவில் சிற்பம். (பெரிய அளவில் இந்த சிற்பம் பல இடங்களில் உள்ளது - தஞ்சை அருங்காட்சியகத்தில் ஒரு மிக முக்கியமான சிற்பம் - அதனைப் பின்னர் பார்ப்போம்). பழைய பதிவை நண்பர் சதீஷ் அவர்களின் படங்களை கொண்டு மீண்டும் இடுகிறேன்.

இந்த சிற்பத்தை முழுவதுமாக ரசிக்க அதன் அளவை முதலில் பார்க்க வேண்டும் , அது எங்கே உள்ளது என்பதும் மனதில் கொள்ள வேண்டும்.

முதலில் சற்று தொலைவில் இருந்து .

pullamangai+location

கணினி கொண்டு கொஞ்சம் வெளிச்சம் போடுவோம். இப்போது தெரிகிறாதா?

brighten+toshow

சரி, இப்போது கதை , நான் சொல்வதை விட அருமையான தேவாரப் பாடல் குறிப்பு தருகிறேன்.

சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.10.8

ஒளிறூபுலி அதள்ஆடையன் உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தான்இடம் அண்ணாமலை அதுவே.

ஒளி செய்யும் புலித் தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.

கஜமுகாசுரன் - அசுரன். மக்களுக்கு தீங்கு செய்தான். ஈசன் அவனை வைத்தான்.
எவ்வாறு - சிற்பத்தை பாருங்கள்.

pullamangai yaaniuri.jpg

சூலம் கொண்டு குத்தி, அவன் தலையை காலின் அடியில் இட்டு , அதன் மேல் ஆடி, அவன் தோலை உரித்து - அப்பப்பா - பயங்கரம். சிற்பி எவ்வாறு இதை செதுக்கி உள்ளான் பாருங்கள் - உடலை வளைத்து ஆடும் ஈசன், யானையின் தலை ( சூலத்தின் அடியில் ), யானையின் தோலை விரித்துப் பிடித்து ,

shiva+gajasamhaaram
shiva+twisting+as+he+skins+the+elephant
the+elephant+3+legs

அப்போது அந்த குள்ள பூதகணம் - ஏளனம் செய்கிறது விழுந்த அசுரனை பார்த்து . மேலே இன்னொரு பூத கணம் இந்தா காட்சியை அப்பப்பா என்கிறது.

headofelephant+gesturing+gana
headofelephant+gesturing+gana+detail
one+more+gana+praising+shiva+valor

இந்த கடும் சண்டையை பார்க்க மனம் இல்லாமல் திரும்பும் உமை - அவள் மடியில் குழந்தை முருகன் - மிரண்டு அடுத்து இருக்கும் தோழியிடம் தாவும் பாவம் - அருமை.

even+closeup
muruga+jumping+away+to+attendants+hand
muruga+jumping+away+to+attendants+hand+detail

- இது மிகவும் சிறிய சிற்பம் என்றேன்…ஆனால் அது போதுமே எங்கள் சிற்பிக்கு - அதில் ஒரு கதை சொல்லி அதில் அனைத்து முக பாவங்களை கொண்டு வந்துள்ளான். யானை உரி போர்த்திய முர்த்தி. சரி, சிறியது என்றால் எவ்வளவு சிறியது?

whats+that+in+front

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, நவம்பர் 5th, 2008 அன்று 11:56 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 12 மறுமொழிகள்

  1  

மிக அருமை !
தேவாரப்பாடலை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.
வழுவூர் ஆலயத்தின் கஜ ஸம்ஹார மூர்த்தியின் செப்புப் படிமமும் ஓர் அற்புதப் படைப்பு.
கஜ ஸம்ஹார மூர்த்தங்கள் அனைத்தையும் ஒரு தொகுப்பாக
அமைக்கலாம், குறிப்புகளுடன்.

தேவ்

நவம்பர் 5th, 2008 at 21:52
Narasimhan Srinivasan
  2  

Wonderful article dear VJ. You describe the elephant demon as Gajamuhasura. A similar sculpture is also found in the Chalukya cave temples at Aihole/Pattadakal belt. There is also at the Hoysaleswara temple at Halebidu, one aspect of Shiva slaying the elephant demon (tearing his skin into thin belt strings). In those sculptures the elephant demon is called Andhaka (Andhagan in Tamil). Of course, the Chalukya and Hoysala idioms in terms of source (Sanskrit/Vedic literature) is pretty common with religious figures having the same name, while in Tamizhagam there are variations.

So would the Gajamuhasuran be the same as Andhaka or Andhagan? Or am I mistaken?

நவம்பர் 6th, 2008 at 15:52
  3  

Hi Cheenu,

Adhaka is different - he is actually one way an ofspring ( indirect of shiva/shakthi)and totally blind - and he was speared by shiva in a very interesting circumstance. lovely sculpture of this exists in Ellora - will post shortly with verse reference.

rgds
vj

நவம்பர் 6th, 2008 at 16:05
annapoorna
  4  

The anger of the Lord Shiva is protrayed beautifully…… evalavu kovam…..

மார்ச் 19th, 2010 at 12:11
  5  

அருமை விஜெ, இந்த ஓவியங்களைப் பார்த்திருக்கேன், ஆனால் சிற்ப வடிவில் இப்போத் தான் பார்க்கிறேன், அருமையான சிற்பம் சிற்பியின் கற்பனைக்கு எல்லையே இல்லை.

ஏப்ரல் 7th, 2010 at 15:29
Shriram
  6  

I simply want to say: on those days, Gods created Gods !

ஏப்ரல் 7th, 2010 at 15:32
Srinivasan N. (Cheenu)
  7  

Yes, VJ. Re-visited this article and again read it to my heart’s content. Great, Great sculpture. It sure is a very old, one of the earliest Medieval Chola Sculpture belonging to the Vijayalaya or Aditya I reigns. Considering these sculptures were made between (I think 880-950 A.D.), meaning they are nearly 1100 years old, they sheer details, imagination of these sculptures as well as the work of the sculptors themselves makes them ageless and immortal. Don’t they?

Of course, you have been doing a yeoman service in spreading awareness of the great arts of India. I hope adequate maintenance of these ageless sculptures, especially at Pullamangai is being done for the sake of posterity.

Thanks for all your work VJ.

Cheenu

ஏப்ரல் 9th, 2010 at 11:07
  8  

Another story in stone, wow. Great.
I wonder how do you know all these.

I come across new places as well
Thanks

ஏப்ரல் 10th, 2010 at 21:03
  9  

Amazing portrayal. Thanks.

ஏப்ரல் 11th, 2010 at 12:09
  10  

thanks pns. long time, trust you are doing well

rgds
vj

ஏப்ரல் 12th, 2010 at 5:39
  11  

hi virutcham

pullamangai is a treasure trove. i guess the story telling started with my grandma and then onwards with ACK…( amar chitra katha)

rgds
vj

ஏப்ரல் 12th, 2010 at 5:40
சத்யா
  12  

அற்புதம் சிற்பியின் கலை திறன் வியக்க வைக்கிறது

பெப்ரவரி 27th, 2011 at 23:44

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி