Quantcast


இன்று மீண்டும் தஞ்சை பெரிய கோவில் சிற்பம் - நன்றிகள் திரு சதீஷ் ( படங்களுக்கு ), திரு திவாகர் ( அருமையான தமிழில் வள்ளியின் கதையை எழுதி கொடுத்ததற்கு )

முருகன் கோயில் - தஞ்சை பெரிய கோவில் வளாகம் - மயில் மீது முருகன் , அவனை சுற்றி வள்ளி திருமணம் கதை விளக்கும் சிற்பங்கள் .

The murugan temple inside big temple long shot.jpg
The main sculpture + surrounding panels.jpg
a diff angle of the main sculpture + surrounding panels.jpg

தொண்டைவள நாட்டிலே உள்ள வள்ளிமலை போலவே அங்கு வாழும் வேடர்களும் அவர்கள் தலைவனுமான நம்பியும் தங்கள் தருமத்திற்கு ஏற்ப சிறந்து விளங்கினர். ஆனாலும் அந்த நம்பிக்கும் ஒரு குறையுண்டு. குழந்தை இல்லையே என்ற ஒரு குறைதான். அதுவும் பெண் குழந்தை என்றால் நம்பிக்கு மிக மிக விருப்பம்.

சித்தர்கள் வாழும் அந்த அழகான வள்ளிமலையின் ஒரு ஓரத்திலே சிவமுனி எனும் தவயோகி தன் தவத்தில் ஈடுபட்டிருந்தார். அந்தத் தவக் கோலத்தில் இருக்கும் சிவமுனிக்கும் ஒரு சோதனை ஒரு அழகிய புள்ளிமான் வடிவில் வந்தது. தன் தவம் முடிந்து குடிலில் இருந்து வெளி வரும் வேளையில் அந்தப் புள்ளி மான் துள்ளலாக அவர் முன் ஓடிவந்தது. புள்ளிமானின் ஒய்யார அழகு ஒருகணம் அந்த தவமுனிவரை மயக்கியதன் காரணம், அவர் தவவலிமையால் புனிதமான பலிதமாகி, அந்தப் பெண்மான் கருவுற்றது.

அந்தப் புள்ளிமான ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்து, அங்கிருக்கும் வேடர்களின் வள்ளிக் கிழங்குக் குழியில் விட்டு விட்டு ஓடிவிட்டது. ஆதரவற்ற அந்த ஒளி வீசும் அழகான பெண் குழந்தையை தெய்வம் தந்த குழந்தையாக வேடர்களின் தலைவன் பாவித்து, வள்ளி என்றே பெயரிட்டு வளர்த்துவந்தான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் செல்லமாக வளர்க்கப்பட்டாலும் அந்த அழகு வள்ளி தங்கள் வேட்டுவக் கடவுளான வேலவனையே மனம் முழுவது வரித்து, அந்த ஆறுமுகத்தான் கந்தனுக்காகவே தான் பிறப்பிக்கப்பட்டதாகவே அவனையே நினைத்து வாழ்ந்து வந்தாள்.

கன்னிப் பருவத்துப் பெண்களை சோளக் கொல்லைக் காவலுக்கு வைப்பது வேடர்களின் வழக்கம். சோளப்பயிர்கள் மேலோட்டமாக வளர்ந்து சோளம் (தினைப் பருப்பு) அதிகம் வளரும் பருவத்தில், அந்தத் தினைப் பயிர்களின் மத்தியில் ஒரு பரண் அமைத்து அந்தப் பரண் மேலிருந்து குருவிகள், கிளிகள் வாராமல் இருக்க பருவப் பெண் வள்ளி காவல் காத்திருக்கும் ஒரு சுப வேளையில் வள்ளியின் மனதில் என்றும் கோயில் கொண்டுள்ள கந்தன் தன் மலைக் கோயிலை விடுத்து அவள் மனக்கோயிலின் நாயகனாய் வர எண்ணம் கொண்டான்.

சிற்பத்தை பாருங்கள் - பரண் மீது வள்ளி , கையில் உண்டிகோல். அருகில் என்ன மரம் ?

the main story panel.jpg
the valli thirumanam panel.jpg
valli minding the field with sling, muruga in the guise of old man, and the tree.jpg

அகிலத்தையும் ஆளும் ஆண்டவனான கந்தனுக்கு, ஏனோ தன் காதலியிடம் கூட சற்று விளையாடிப் பார்க்கலாமே என்ற எண்ணம் வந்தது போலும். அவள் மனத்துள் உருவான கடவுளாய் உருவம் பெறாமல் சாதாரண வேட்டுவ இளைஞனாய் அவளை சீண்டிப் பார்த்தான். (காதலியை சீண்டாமல் காதல் என்ன வேண்டிக்கிடக்கு?)

அவள் யாரோ.. என்ன பேராம்.. அவள் தந்தை யாராம்.. கல்யாணத்திற்குப் பெண் கேட்டால் அவளைத் தனக்குத் தர சம்மதிப்பாரோ.. என்றெல்லாம் அந்தச் சின்னப் பெண்னிடம் பெரிய கேள்விகளைக் கேட்டான். அந்த அழகு பதுமை பேசாமல் தலை குனிந்துகொண்டாள். தூரத்தே சத்தம் கேட்க, ‘வீட்டுப் பெரியவர்கள் அதுவும் வேடவர்கள் வந்தால் அவனை கொன்று விடுவார்கள்’ என்று எச்சரித்து துரத்தியும் விட்டாள். துரத்தப்பட்டவன் ஓடி ஒளிந்தவன் போல பாவனை செய்து அங்கேயே வேங்கை மரமாகி மாறி நின்று கொண்டான். சிற்பி செதுக்கிய மரத்தின் அர்த்தம் புரிந்ததா ? வேடவர்கள் கூட்ட்மாக வந்தனர். தேவைப்பட்ட தினைப் பண்டங்களை வள்ளிக்குக் கொடுத்தனர். சென்றுவிட்டனர்.

மறுபடியும் வேடனாய் உருமாறி வள்ளியிடம் காதல் மொழி பேசினான். வள்ளி கோபமாய் பார்த்தாள். ‘இது முறையா’ என்று கேள்வி கேட்டாள். போய்விடு என்று மன்றாடினாள். என் மனதில் இன்னொருவன் வந்து குடி புகுந்து தொல்லை செய்வது போதாது என்று நீயும் ஏன் தொல்லை செய்கிறாய்.. இது நியாயமா.. என்று கெஞ்சினாள். அப்படியானால் உன் மனத்தை வரித்தவன் பெயர் சொல்லு என்று வேடன் கேட்டான். வெட்கப்பட்டாள் அந்தப் பேதை.

மறுபடியும் சப்தம். மறுபடியும் துரத்தினாள் அவனை. இந்தச் சமயத்தில் ஓடி ஒளிந்தவன் மரமாக மாறாமல் வயதான சிவத் தொண்டர் போல உருக் கொண்டவன் தைரி்யமாக இப்போது வள்ளி முன்பும் அவள் கூட்டத்தார் முன்பும் வெளிப்பட்டான். தாத்தா சிற்பத்தில் பார்த்தீரா ? வயதான சிவத்தொண்டரைப் பார்த்ததும் வள்ளியும் அவள் தந்தையும், கிழவருக்கு வேண்டிய தினைப் பண்டங்களைப் படைத்து, அவர் காலில் விழுந்து வணங்கினர். அந்தக் கள்ளக் கிழவரும் ஆர அமர உண்டு விட்டு, தாராளமாக ஆசிகளையும் வழங்கினார். சந்தோஷமாக அவள் தந்தையும் மற்றவர்களும் அங்கிருந்து விலக, தனித்துவிடப்பட்ட வள்ளியிடம் வேண்டுமென்றே காதல் வார்த்தைகளை கிழவர் அள்ளிவீச, அந்தச் சின்னப் பெண் ‘சீச்சீ’ என்று விலகினாள். அப்போது ஒரு யானை அந்த சோளக் கொல்லையில் ஒடிவரக்கண்ட வள்ளி பயத்துடன் அந்த சிவனடியாரைக் கட்டிக் கொண்டு அந்த யானையை விரட்டுமாறு வேண்ட, சிற்பத்தை பாருங்கள் - என்ன அருமை - எம் சி ஆர் போல பயந்து நடுங்கும் வள்ளியை அனைத்து பிடித்திருக்கும் கள்ள தாத்தா

the disguised muruga saving valli from the elephant.JPG

அந்த கிழவனாரான கந்தன் தன் அண்ணன் விநாயகனை மனதுள் வேண்ட, அந்த வெற்றி விநாயகனே அந்த யானையாக வந்தவன், சுயரூபம் எடுத்து அண்ணனாக மாறி அவர்களை வாழ்த்தினான். கிழவனாக வந்த கந்தனும் அவள் மனக்கோயில் நாயகனாய் மாறினான்.
சிற்பத்தில் பாருங்கள் - கொஞ்சம் கொஞ்சமாக தாத்தா குமாரனாக மாறும் காட்சி

the eligible bachelor.JPG
the other side panel.jpg
the other side.jpg
the youthful muruga morphing into the old man maybe.JPG

ஆறு முகமும் ஈராறு கைகளும் கொண்டு மயில் மேல் அமர்ந்து குமரனாய் தரிசனம் தந்தான்.

Muruga.jpg

அழகு வள்ளிக் குறத்தி தன் மணாளனே இத்தனை நாடகம் ஆடி கள்ளத்தனம் செய்தவன் என்று அறிந்து உள்ளம் பூரித்தாள். தன் மன நாயகனோடு ஒன்று சேர்ந்தாள்

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வெள்ளிக்கிழமை, நவம்பர் 21st, 2008 அன்று 15:17 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 7 மறுமொழிகள்

  1  

நல்ல தமிழ் நடை! எம்பெருமான் முருகவேள் கட்டிக்காத்த தமிழை, அகத்தியரும் அதன் பின் வைசாக் (வைசாக?- முருகன்?) திவாகரும் காத்துவருகிறார்கள்!

நவம்பர் 21st, 2008 at 21:54
Srinivasan N. (Cheenu)
  2  

Yes dear VJ,

Exquisite capturing of the story, architectural panel by Satheesh. Especially the main sculpture of Lord Murugan with his vehicle the peacock and in the panel where he saves Valli from the elephant all the three, Valli, elephant and Lord Muruga as the old man have been sculptued and needless to add, have been captured beautifully.

I just have a doubt dear VJ, which I think a knowledgeable person like you or others like Satheesh or Reach Chandra can clarify and enlighten me more.

I heard that other than the main shrine of Shiva, the front Mandapam which earlier had a smaller Nandi (which was replaced by a bigger Nandi installed by the Nayaks (or Vijayanagara kings) and other shrines within and outside the main temple (or Dakshina Meru - which was its most popular name during and after the Chola rule) was constructed by the Cholas, and that the other temples (separate) in the complex, including the one for Ganesha, Varahi, Durga etc. were built by the Nayaks. Was the temple/shrine of Muruga (which probably is on the main Vimana of the Periya Koil in Tanjore) built by Raja Raja I only or was it added on later by the Nayaks or Vijayanagara kings?

Probably my question may seem stupid or trivial, but why I asked it was because the sculpture of Muruga, idiom-wise is certainly Chola (or Pallava-Chola in case the connotation is not objected to), with flowing, artistic movements with there being no hint of over-ornamentation, there is no over dressing but the robes of the Lord are very elegant. Where the overall (Muruga panel only) doubt crept into my mind was that while the peacock is indeed very beautiful, it seemed a bit sharply sculpted, chiselled or carved (as one may like to call the peacock sculpture), if not over artistic…. I repeat it is very beautiful, but (mainly its decoration part) seems a trifle to contrast with the serene look on the face of Lord Muruga.

Can you pls. enlighten me?

Srinivasan (Cheenu)

நவம்பர் 22nd, 2008 at 11:45
  3  

Hi cheenu

Very important question. and good observation of the difference in styles.

In the book, The royal temple of Rajaraja by Geeta Vasudevan. ( pg 44) she writes thus:

Rajaraja built the temple complex complete with additional shrines fro Candeswara and nandhi - mandapa, eight shrines for the dikpalas, shrine for the royal preceptor, karur devar adn the two walls surrounded by a moat. The shrine for amman, Ganesha and Subrahmanya were later additions.

The Subramanian shrine is located on the north-west of the Brihadisvara temple, constructed during 16th century A.D. by Sevappa Nayakkar period.

The nandhi - was replaced during the nayak period and the old one was placed here

http://www.kumbakonam.info/kumbakonam/thanjavur/images/arcpho/arph31.jpg

(This site wrongly says that this nandhi is from the vimanam.)

Now back to the Valli Thirumanam - there is another panel from the vimana depicting the same - which most probably is the original chola version - we will see that shortly and will compare it with this depiction.

Thanks again for your interesting and though provoking questions.

rgds
vj

நவம்பர் 23rd, 2008 at 6:14
Srinivasan N.
  4  

Thanks for the reply… So the photo captions accomkpanying the articles are not from the main Vimana of the Brihadiswara but from the Subrahmanya temples built by the Nayaks.. am I right in my understanding…. Because while the Nayaks (aided by local artisans from Tamizhagam of course), have stuck to the Chola-Pallava idiom with regard to Muruga (even the elephant) and other human figures plus the parrots, I thought (somehow, but really dunno how- ha ha) the peacock was just too sharply carved — though I must add, that from my own visit to a later temple (but earlier one than the Nayak creations in Tamil Nadu) i.e. the Darasuram temple there are some miniature peacocks which seem as sharply carved as the bigger peacock covered by you and Sateesh from Tanjore.

நவம்பர் 24th, 2008 at 11:51
  5  

[...] Muruga masquerades as an old man to marry valli … by, and the ascetic was aroused by its lovely shape; his lascivious thoughts made the gazelle pregnant. In due time, the gazelle gave birth to a girl in a pit dug out by the women of the hunter-tribe when they searched for the tubers of edible yam (valli kodi - yam creeper in tamil). The female deer, having … [...]

நவம்பர் 29th, 2008 at 14:39
arunn
  6  

Hi Vijay.. u mistook the info in the nandhi link from kumbakonam.info.
http://www.kumbakonam.info/kumbakonam/thanjavur/info/brtarch/arch5.htm
they are saying that the size of the Nandhi in the top of the Vimanam is similar to this. they are just wondering how it is posssible to lift such a piece to the towering vimana!

டிசம்பர் 6th, 2008 at 18:56
  7  

hi arun

Thanks for leaving the comment. There are many contentious claims about the vimana of the big temple. Sadly all these could have been easily set to rest if the ASI could bring out a comprehensive work or publish it on the net. on your particular comment…with due respects to the site ( one of the very best on the net for temples in and around tanjai - quite an inspiration) - the nandhi shown on the corridor is definitely much much larger than the one on the vimana. I had checked this with a few scholars - maybe we will seek the actual dims from them and post is shortly. If you have addnl info please do share, as we have seen in past even in the early part of the last century - we did’nt know who built the big temple !!

rgds
vj

டிசம்பர் 6th, 2008 at 19:57

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி