Quantcast

முந்தய பதிவுகள், மாதங்களில்: டிசம்பர், 2008


நாம் இதற்க்கு முன்னர் இரு இடங்களில் நம் நண்பர் புலி தொப்பையை சந்தித்தோம். மல்லை மற்றும் ஸ்ரீநிவாசநல்லூர் சிற்பங்களில் நம்மை மகிழ்வித்த இவர் இன்று புள்ளமங்கை பிரம்மபுரீர்ஸ்வரர் கோயிலில் தன் கூட்டாளிகளுடன் நம்மை அசர வைக்கிறார்.

சரி, உங்கள் கவனிப்பு திறனை சோதிக்கலாம். இந்த படத்தில் நம் நண்பரை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்

tiger belly see carefully.jpg

முடியவில்லையா ? சரி இந்த படத்தில் முயற்சி செய்யுங்கள்

tiger belly - see top right.jpg

என்ன ! இன்னும் முடியலையா ? இப்போது

tiger belly closer.jpg

சரி விடுங்க - இப்போ பாருங்க நம் குட்டி செய்யும் லூட்டி - அதுவும் என்ன அருமையான புலி தொப்பை - இருந்தும் சற்று சோகமாகவே உள்ளார் நம் நண்பர்

pullamangai tiger belly.jpg

இந்த காலத்தில் கட்டும் கோயில்களிலும் வெளி சுவரில் பூத கணங்களை வைகிறார்கள் - ஆனால் அவை அனைத்தும் ஒரே முக பாவத்துடன், பெரும்பாலும் வருவோரை முறைத்து கொண்டு இருக்கும். சோழர் கால பூத கணங்களை கொஞ்சம் பாருங்கள் - ஒவ்வொன்றின் உடல் அமைப்பு என்னமோ குள்ளனாக ( அதில் கூட சிற்பியின் திறமையை பாருங்கள் - கை , கால் என குள்ளர்களையும் தத்ரூபமாக செதுக்கி உள்ளான் ) இருந்தாலும் , அவற்றின் முக பாவம் - அவை நிற்கும் அலட்சிய தோரணை, உண்மையிலேயே நம்மை நக்கல் அடிப்பது போல உள்ளது.

look at the suttle change in smile.jpg
normal funny Ghanas.jpg
normal funny ones.jpg
normal well - for ganas.jpg
pullamangai normal ghana.jpg

ஒன்று பாருங்கள் - நம் புலி தொப்பை அனைவருக்கும் இல்லை - அது ஒரு பூத கணத்தின் அமைப்பு - அவர் பெயர் என்ன - ஆராய வேண்டும். அடுத்து முறை நீங்கள் புராதன இடங்களுக்கு செல்லும் பொது இது போல புலி தொப்பை சிற்பங்கள் இருந்தால் எங்களுடன் பகிருங்கள். அதே போல மற்ற பூத கணம் சிற்பங்களையும் பார்த்து மகிழுங்கள்.

படங்களுக்கு உதவி - காத்தி மற்றும் வரலாறு . காம்

மறுமொழி அளிக்கவும் »


இந்த சிற்பத்தை நாம் முன்னர் பார்த்த போது ஒரு கேள்வி கேட்டேன். இந்த சிற்பத்தை செதுக்க சிற்பிக்கு என்ன உத்வேகம்? இது ஒரு தனித்தன்மை வாய்ந்த சிற்பம். ஏனெனில் மல்லையில் பல இடங்களில் மிருகங்கள் மற்றும் பறவைகள் மிக அருமையாக செதுக்கிய சிற்பி - தவம் சிற்பத்தில் ஒரு முழு காட்டையே செதுக்கிய சிற்பி, கோவர்தன சிற்பத்தில் மாடுகள் - என்று பலவை இருந்தும் அவை அனைத்தும் புராண கதைகள் மற்றும் தெய்வங்களை ஒட்டியே வந்தன. இந்த சிற்பத்தில் உள்ள விசேஷம் - இது ஒரு சாதரண காட்சி.

spectacular.jpg

இதை வடிக்க எந்த மன்னனும் ஊதியம் அளித்திருக்க மாட்டான். அதே போல இது ஒன்றும் ஒரு இரவில் கிறுக்கிய சித்திரம் அல்ல. பல மாதங்கள் கை வலிக்க , நெற்றி வியர்வை சிந்த, கருங்கல்லை செதுக்கும் வேலை. அப்படியானால் , இதில் அவன் வேறு எதாவது நமக்கு சொல்ல வருகிறானோ ?

சரி மீண்டும் சிற்பத்தை பார்ப்போம்

ஒரு மகிழ்ச்சி ததும்பும் யானைகளின் குடும்பம் - அதிலும் சின்ன யானையின் கவலை இல்லா வேடிக்கை விளையாட்டு

spectacular.jpg
the baby elephant.jpg
the mail elephant.jpg

ஒரு அழகு மயில்

the peacock.jpg

ஒரு குரங்கு - குரங்கின் பார்வையில் எதோ ஒரு தேடல் ,ஒரு ஏக்கம். மற்ற மிருகங்களை போல அல்லாமல் அது வெளி பக்கமாக திரும்பி வருபவரை நோக்கி உள்ளது.

mallai elephants closer.jpg
spectacular.jpg
the monkey.jpg

சரி, இதற்கு ஒரு விளக்கம் தந்து பார்ப்போம்

சிற்ப கலை ஒரு அற்புத கலை - அதை எளிதில் கற்க முடியாது. சிறு வயதில் இருந்தே மிகவும் கடினமான பயிற்சி மேற்கொண்டு படித்தாலும், ரத்தத்தில் கலை உணர்வு, நினைவில் இறை உணர்வு என்று பல சரியாக அமைய வேண்டும். அப்படி இருக்கையில் சிறு வயதிலேயே சிற்பி தனது அனைத்து ஆசைகளையும் கட்டுப்படுத்தி தன் சிந்தனை முழுவதையும் ஒருமுக படுத்தி கலையில் ஈடு பட வேண்டும். அவனுக்கென்று ஒரு குடும்பம் , தாய் , தந்தை, தமையன், தாரம் இருந்தாரோ , இல்லையோ - அவன் பணி - கலை பணி

அப்படி இருந்த அவன் ஒருநாள் சற்று தன் நிலைமையை நினைத்து பார்க்கிறான். இப்போது சிற்பத்தில் உள்ள குரங்கு தான் அவன். யானை குடும்பம் - அவன் அனுபவிக்காத சுகம். மயில் அவனது காதலி / துணைவி - அனைத்தையும் துறந்து கலைக்கு தன்னை அர்ப்பணித்தான் சிற்பி. எனினும் அடி மனதில் ஒரு நெருடல் - என்ன அது ?

இப்போது மீண்டும் குரங்கை பாருங்கள் ! அது உங்களை பார்த்து சிற்பி கேட்கும் கேள்வியின் பிரதிபலிப்பு என் தியாகத்தின் விளைவு இந்த சிற்பம்! இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன - அவன் துறந்த மகிழ்ச்சிக்கு அவன் உருவாக்கிய அழியா சிற்பங்கள் ஈடா ?

monkey.jpg
the monkey.jpg

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 10  1  2  3  4  5 » ...  Last »