Quantcast


சிறு வயதில் இருந்தே எனக்கு கோயில்களில் உள்ள வாயிற் காப்போன்கள் மீது ஒரு கண். அதனால் அவர்களை பற்றி ஒரு தொடரை இங்கே எழுதவேண்டும் என்று நினைத்தேன். நாம் முன்னரே தஞ்சை பெரிய கோயில் மற்றும் மாங்காடப்பத்து வாயிற் காப்போங்களை பற்றி பார்த்தோம். பொதுவாக எல்லா கோயில்களிலும் இருக்கும் இவர்களின் சிற்பங்களை இப்போதெல்லாம் எவரும் பார்ப்பது கூட இல்லை. அருமையான அதிகார தோரணையில், கம்பீரமாக தங்கள் வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தி இருக்கும் இவர்களை அடுத்தமுறை செல்லும் போது கண்டிப்பாக பாருங்கள்.

இந்த தொடரை துவக்க ஒரு அற்புத சிற்பம். எனக்கு மிகவும் பிடித்து சிற்பம். அதனாலேயே நம் தளத்தின் முத்திரையில் இவரை காணலாம். மும்பையில் அண்மைய தீவிரவாத செயல்கள் நடை பெற்ற பகுதிக்கு மிக அருகில் இருக்கும்….

எலிபண்டா குடவரை வாயிற் காப்போன்.

our side door guardians.jpg

ஏன் இந்த சிற்பத்தை இத்தளத்தின் முத்திரையாக தேர்ந்தெடுத்தேன் ? இந்த கல் சிற்பம் சொல்லாமல் சொல்லும் கருத்து - அது தான் காரணம் . ஆயிரம் ஆண்டு நின்று தன் எஜமானான ஈசனின் கர்பக்ருஹம் பாதுகாத்து வந்த சிலை - பதினேழாம் நூற்றாண்டில் வந்த போர்த்துகீசியரிடத்தில் தோற்ற சிலை. என்னதான் கொடூரமான மனிதன் என்றாலும், அந்த நாட்டின் கலை, மொழி, நெறி , மதம், புரியவில்லை என்றாலும் குறி பார்த்து சுடும் பயிற்சிக்காக யாராவது இந்த அருமையான சிற்பத்தை தேர்ந்தெடுப்பார்களா? ஆனால் போர்த்துகீசியர் தேர்ந்தெடுத்தார்களே!! சிதைத்துவிட்ட மாபாவிகள். கலை அம்சம் சொட்டும் இந்த சிலையை சிதைக்க எப்படி மனம் வந்ததோ அவர்களுக்கு.

வாயிற் காப்போன் -. பல ஆண்டுகள் கற்ற அறிவை உளி கொண்டு கல்லில் உயிர்ச் சிற்பமாய் வெளிக் கொண்டு வந்த சிற்பி, வரும் பக்தர்களின் மனதை கட்டுப்படுத்தி, அவர்களை இறைவனை ஒரு மனதாக த்யானிக்க உதவவே இந்த உருவங்களை உருவாக்கினான் - இவை அலை பாயும் மனதை ஒழுங்கு படுத்த, துப்பாக்கி,தோட்டாக்களை எதிர்க்க அல்ல. தன் பணியில் தோற்றதால் தன் கை கால்களை இழந்து அவல நிலையில் நிற்கும் சிலையா இது? நன்றாக பாருங்கள்

elephantaguardian.jpg

இல்லை , அவன் பொறுமை ததும்பும் அன்பு முகத்தின் புன்னகை போதுமே ! அவனுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் அவனை இன்னும் அழகாக பிரதிபலிக்கின்றன - கலை ரசிப்பு - ஒரு உணர்வு , ஒரு உன்னத கலை - அதற்கு அழிவு என்பது கிடையாது என்று நின்று சிரிக்கும் சிற்பம். இவனே நம் தளத்தின் நோக்கத்தை முழுவதுமாக வெளி காட்டும் திறன் கொண்டவன்.

மேலும் சில படங்கள் - சிற்பம் இருக்கும் இடம், மற்றும் அதன் அளவு (பக்கத்து சுவரில் உள்ள சிற்பம் - ஒரே அளவு )

{வாயிற்காப்போன்களை த்வாரபாலகர்கள் என்று சொல்லுவார்கள், இவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே இறைவனை வணங்கவேண்டும் என்பது ஐதீகம் }

elepanta door G.jpg
elepanta door guardian.jpg
elephanta door guardians.jpg
elephanta scale.jpg
the other side.jpg

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், டிசம்பர் 18th, 2008 அன்று 15:46 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 8 மறுமொழிகள்

Shriram
  1  

விஜய், மிகவும் அருமையான வர்ணனை. இப்பொழுதே எளிபண்டா குகையை நேரில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது…….- ஸ்ரீராம்

டிசம்பர் 18th, 2008 at 16:02
manii
  2  

destruction of bodyguards exists even now and you have brought the relevance to the current context of terrorist strikes in the gateway ….. terrorism is not only destroying mankind but also the masterpiece like this, its a cultural terrorism

டிசம்பர் 18th, 2008 at 16:24
தமிழ்த்தேனீ
  3  

காகாசுரன் அன்னை சீதையை தவறான எண்ணத்துடன் நெருங்கி துன்புறுத்தினான்
சீதை மடியில் ராமன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார், விழித்து எழுந்த ஸ்ரீராமன் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து சக்ராயுதமாக காகாசுரனை நோக்கி அனுப்பினார், காகாசுரன் அந்த சக்ராயுதத்திலிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டி ஈரேழு லோகத்துக்கும் சென்று காகா என்று கதறினான், அனைவரும் ஒருமித்த குரலில் ராமரிடமே சென்று சரணடைந்துவிடுமாறு அறிவுரை சொல்லவே காகாசுரன் மீண்டும் ராமரிடம் வந்து விழுந்தான், ஆனால் கொஞ்சம் தள்ளி சீதையின் காலடியிலே விழுந்தானாம், சீதை தாயுள்ளத்தோடு காகாசுரனின் தலையை ராமர் பாதத்தில் வைத்தாளாம் மன்னிக்கச் சொல்லி
அது போல துவார பாலகர்கள் நமக்கு இறைவனிடம் நம்மைப்பற்றி எடுத்துச் சொல்லி அனுமதிப்பார்களாம்
அதனால் எந்தக் கோயிலுக்கு சென்றாலும் நான் முதலில் த்வாரபாலகர்களை வணங்கித்தான் இறைவனை வணங்குவேன்
அப்படிப்பட்ட த்வாரபாலகர்களுக்கு இப்படி ஒரு நிலையா வருத்தமாயிருக்கிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ

டிசம்பர் 18th, 2008 at 17:32
saathmeeka
  4  

எனக்கு இத்தனைநாளும் வாயிற்காப்போன்களை பார்க்கும்போது பொறாமை இருக்கும்.இறைவன் அருகிலே இருக்கிறார்களே என்றும்,கடவுளுக்கே காவல் இருக்கிறார்களே என்றும். ஆனால் அது எவ்ளோ கஷ்டம் என்று இப்போ புரிந்துகொண்டேன்.கடவுள்கிட்ட நம்மள அர்பணித்தால் எதுவும் கஷ்டம் இல்லன்னு புரிஞ்சுகிட்டேன்.
மிக்க நன்றி,VJ

டிசம்பர் 19th, 2008 at 8:35
Kathie Brobeck
  5  

As you probably know, dvarapalaka along with
ganas & yalis, are just about my favorite murthis. The sculptors are given much more lee-way for creativity.

டிசம்பர் 20th, 2008 at 0:59
  6  

hi kathie,

Ofcourse, looking forward to your forthcoming visit to add more to the collection.

rgds
vj

டிசம்பர் 21st, 2008 at 10:38
g.nanda kumar
  7  

dear sir,

dvarapalaka are main gate keepers to lord, there is rules if we want to meet any higher officials we should get permission to his poen or gatekeeper then only we can able to see the person ,like wise in temple if we get permission from them we will see god without any disturb and dvarapalaka also insist our prayers to god, for lord shiva we have to get permission to nandhi , lord vishnus main gate keeper jayan, vijyan. there is alot of stories about dvarapalakas. nowdays no one give repect to them , dvarapalaka statue showing the mudras of god is one,

டிசம்பர் 29th, 2008 at 22:40
  8  

hi nanda kumar

thanks for sharing, have been wanting to do a series on door guardians exclusively - will start soon. If you have interesting ones please share with us.

rgds
vj

டிசம்பர் 30th, 2008 at 5:51

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி