Quantcast


அண்மையில் மதுரை நண்பர்களிடம் சில படங்கள் வேண்டும் என அழைப்பு விடுத்தேன். நான் தேடிய படங்கள் திருபரங்குன்றம் பாண்டிய குடவரை - எனினும் நண்பர் திருமதி ஷோபா ராமகிருஷ்ணன் அவர்களை மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் படங்களை அனுப்பி வைத்தார். அந்த குவியலில் இந்த முத்தான படத்தை பார்த்தவுடன் இங்கே அதை பகிர்ந்து கொள்ள ஆசை - எனினும் இதை வாசகர்கள் எவ்வாறு கருதுவார்கள் என்று ஒரு சிறிய தயக்கம். சரி, முதலில் இதற்கு தகுந்த பாடல்களை எடுத்து பார்ப்போம், பின்னர் எவ்வாறு இடலாம் என்று யோசிக்கலாம் என்று எண்ணி நண்பர்களிடம் கேட்டேன். நண்பர் வைரம் பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடல் புராணத்தில் இது உள்ளது என்று கூறியவுடன் இணையத்தில் தேடினேன். தேனென இனிக்கும் தமிழில் பாடல்களை படிக்கப் படிக்க இன்பம் பொங்கியது, பயம் நீங்கியது. அழகு சிற்பம், அதை விட அமுத மொழி - வேறு என்ன வேண்டும் - ஐந்தே பாடல்களை கொண்டு கதையை விளக்குகிறேன்.

http://www.shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_02_u.htm

நிறைய பாடல் வரிகள் இருப்பதால் - இம்முறை முதலில் சிற்பத்தை பார்ப்போம். மூன்று முலை என்றவுடன் சிற்பத்தில் எவ்வாறு காட்ட முடியும்! அதுவும் அழகு கன்னியாய், கயல் விழியாய் காட்டவேண்டும். சளைத்தவனா நமது சிற்பி - இதோ

madurai queen thadathakai.jpg
madurai thadatakai.jpg
meenakshi - the fish eyed one

இப்போது வரிகளை பார்போம்

தெள்ளமுத மென்மழலை சிந்திவிள மூரல்
முள்ளெயி றரும்பமுலை மூன்றுடைய தோர்பெண்
பிள்ளையென மூவொரு பிராயமோடு நின்றாள்
எள்ளரிய பல்லுயிரும் எவ்வுலகு மீன்றாள் - Verse 542

மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவர்கள் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர். இதன் பயனாக வேள்வி குண்டத்திலிருந்து மூன்று முலைகளுடன் பார்வதிதேவி தோன்றினாள்.

மகவின்றிப் பலபகல்யான் வருந்தியருந் தவம்புரிந்தேன் மைந்தற் பேறு
தகவிந்த மகஞ் செய்தேன் அதுவுமொரு பெண்மகவைத் தந்த தந்தோ
முகவிந்து நிலவொழுக வருபெண்ணு முலைமூன்றாய் முகிழ்த்து மாற்றார்
நகவந்த தென்னேயோ என்றுவகை யிலனாகி நலியு மெல்லை - 547

நீண்ட நாட்களுக்குப்பின் பிறந்த குழந்தை, அதுவும் அரசாள பிள்ளை வரம் வேண்டி வேள்வி நடத்திப் பெற்ற குழந்தை - மூன்று முலைகளுடன் இருப்பதை அறிந்த அரசனும் அரசியும் மிகவும் வருந்தினர்..

மன்னவநின் றிருமகட்கு மைந்தர் சடங்கனைத்தும் வழாது வேதஞ்
சொன்னமுறை செய்துபெயர் தடாதகையென் றிட்டுமுடி சூட்டு வாயிப்
பொன்னையா டனக்கிறைவன் வரும்பொழுதோர் முலைமறையும் புந்தி மாழ்கேல்
என்னவரன் அருளாலோர் திருவாக்கு விசும்பிடைநின் றெழுந்த தன்றே 548

அப்போது இறைவன் அசரீரியாக “இந்த குழந்தைக்கு தடாதகை (தடுத்தற்கரிய தடையுடை யாள்) என்று பெயர் சுட்டுமாரும், அவள் அரசனுக்கு நிகராக முடி சூட்டி ஆட்சி புரிவாள் என்றும், அவள் கணவனை முதல் முறை காணும் போது தானாகவே மூன்றாவது முலை மறையும்”என்றார்.

மீன் போன்ற விழிகளைக் கொண்டிருந்ததால் அங்கயற்கண்ணி எனவும் மீனாட்சி எனவும் அவள் அழைக்கப்பட்டாள் - ஒரு ஆண் பிள்ளையை போலவே போர்ப் பயிற்சிகளை பெற்றாள். உரிய காலத்தில் மலையத்துவசனுக்கு பின் அரசுக்கட்டிலில் அமர்ந்தாள் பாலகி அங்கயற்கண்ணி. அன்றிலிருந்து அவள் மதுரை மீனாட்சி என அழைக்கப்பட்டாள்.

அவளை எதிர்த்த அரசர்கள் அத்தனை பேரும் தோற்றனர். கைலாயத்தையும் கைப்பற்ற விழைந்த அங்கயற்கண்ணியின் படை ஆரவாரத்துடன் கைலாயத்தை அடைந்தது.

ஒற்றை வார் கழல் சரணமும் பாம்பசைத்து உடுத்த வெம் புலித் தோலும்
கொற்ற வாள் மழுக் கரமும் வெண் நீறணி கோலமும் நூல் மார்பும்
கற்றை வேணியும் தன்னையே நோக்கிய கருணை செய்திருநோக்கும்
பெற்ற தன் வலப் பாதியைத் தடாதகை பிராட்டியும் எதிர் கண்டாள் - 646

ஈசனை எப்படி எல்லாம் வர்ணிக்கிறார் புலவர். ஒப்பில்லாதவன் - ஒருவன், பாம்பு அணிகலன், புலித் தோல் அணிந்து, உடம்பெல்லாம் சாம்பல் பூசி, சடைமுடி தரித்து, முப்புரி நூல் அணிந்து சிரித்து வந்தவனைக் கண்டதும், தான் யார் என்பதும் எதிரில் நிற்பது தனக்கு ஒரு பாதியை தந்தவன் என்றும் உணர்கிறாள். உணர்தவுடன் …


கண்ட எல்லையில் ஒரு முலை மறைந்தது கருத்தில் நாண் மடம் அச்சம்
கொண்ட மைந்திடக் குனிதா மலர்ந்த பூம் கொம்பரின் ஒசிந்து ஒல்கிப்
பண்டை அன்பு வந்து இறை கொளக் கரும் குழல் பாரமும் பிடர் தாழக்
கெண்டை உண் கண்ணும் புறவடி நோக்க மண் கிளைத்து மின் என நின்றாள்

அங்கயற்கண்ணியின் மூன்று மார்பகங்களில் ஒன்று மாயமாகிப் போனது. தடாதகைப் பிராட்டிக்கு அதுவரை இருந்த குணங்கள் சற்று மாறி, தன் கைத்தலம் பற்றப் போகிறவன் கைலாயநாதன் தான் என்பதை உணர்ந்த அவள் நாணம் மேலிட தரை பார்த்து தலை சரித்தாள்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, டிசம்பர் 22nd, 2008 அன்று 23:29 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 15 மறுமொழிகள்

malathi
  1  

VJ - beautiful sculpture and interpretation, thank you.

டிசம்பர் 23rd, 2008 at 4:24
  2  

hi malathi

Thanks. I would recommend readers fluent in tamil to read the tamil version of this post for it has some lovely compositions

rgds
vj

டிசம்பர் 23rd, 2008 at 5:49
தமிழ்த்தேனீ
  3  

ஆஹா மீனாட்சியின் பெருமை என்னே

இரு முலை கொண்ட தாய்மாரே கருணை தெய்வங்கள், மும்முலை கூடிய மீனாட்சி
பெருங்கருணைத் தெய்வமல்லவா
தன் குழந்தைகளுக்கு அதிக கருணை செய்ய எண்ணி மும்முலையோடு அவதரித்த மீனாட்சி நற்பெருங்க் கருணைத் தெய்வம் என்பதில் ஐய்யமில்லை,
அங்கயற்கண்ணி மீனாட்சியான கதை மிகவும் அருமை, ஆஹா இந்த சிற்பத்தில்
கண்கள் மூடியிருந்தாலும் அவற்றிலிருந்து கருணை பொங்கி வழிகிறது
அன்புடன்
தமிழ்த்தேனீ

டிசம்பர் 23rd, 2008 at 10:33
manii
  4  

kangal irandaal un kangal irandaal ennai katti izhuthaai ………

no more words to describe this beautiful portrayal,

mukkannanin leelaigal moonru maarbagangal…. !!!

டிசம்பர் 23rd, 2008 at 17:24
  5  

மிக்க நன்றி திரு தமிழ்த்தேனீ அய்யா

பல முறை தமிழில் பிழை திருத்தி தந்த உங்களுக்கு என்றும் கடமை பட்டுள்ளோம்

நன்றி
விஜய்

டிசம்பர் 23rd, 2008 at 18:40
  6  

dear mani

Thanks, you need more than two eyes to see these beauties.

rgds
vj

டிசம்பர் 23rd, 2008 at 18:41
  7  

I love the way you have presented. It was unfortunate for this sculpture escaped my attention, reason being my accopaniments. I wish I could publish this in Hindi and when I decide, I need your permission to use the photograph.
http://mallar.wordpress.com

ஜனவரி 2nd, 2009 at 13:29
  8  

Dear Mr. Subramanian,

Thanks for the nice comments. These pictures are from a friend as I mentioned in the blog, but as long as its used for non commercial purposes and if you provide a link to this post, see no issues.

After all the sculptor who sculpted it left no signature.

rgds
vj

ஜனவரி 2nd, 2009 at 22:07
  9  

Thank you so much for the kind gesture. In fact my Hindi post is ready and was frantically looking through my mail for your response. The net here is damn slow and it is with great difficulty that I could open your blog. God only knows if my comments go bacj to the server.

ஜனவரி 3rd, 2009 at 22:51
  10  

dear Mr. Subramanian

You can follow our posts and new comments via RSS feeds and twitter. RSS is the orange button by the side of search botton on top. Twitter
http://twitter.com/poetryinstone

anything urgent you can drop me a email anytime - [email protected]

rgds
vj

ஜனவரி 4th, 2009 at 7:04
கதிரவன் க.
  11  

சிலையும் தங்கள் வர்ணனையும் அருமை. திருவிளையாடல் புராணம் இணையத்தில் எங்கு கிடைக்கிறது.

ஆகஸ்ட் 18th, 2009 at 21:42
  12  

gud description. This sculpture is in puthu mandapam. when talking about puthu mandapam, We have lotsof beautiful sculptures. But the unfortunate thing is the mandapam is utilised as a commercial place. I really wonder how many beautiful sculpture would be hidden inside those tiny shops on either side of the mandapam. Also, the puthumandam shops are so important and a icon in madurai commercial world, there are few things which you will get only in those shops. I heard lot many times frm lot many persons, when asking for some rare piece of things, GO to Puthumandapam as an answeer. (for eg, one kind of ornamental wear that they use in village worships like samiyadal, you will get there. By someway, it is also helping out our traditions)But anyways, one good thing cannot be a threat to the other one right? Who will take care of this? :-( :-( :-(

மே 11th, 2011 at 19:53
  13  

True. It has many treasures and it takes lot of effort to even watch the willful defacement..hope someday we will realise the true value of our heritage treasures.

vj

மே 12th, 2011 at 7:03
esaanya sivam vetrivelan .
  14  

kadambavanaj soozh koodarkanni madhan ambai, adarntha vizhi angayarkkanammai-nadantha nadaikkuvamai anna, nagaikkuvamai mullai, yidaikkuvamai yillai yini.
— seerkaazhi arunaasalak kaviraayar.

num pani sirakka vaazhththukkal

பெப்ரவரி 14th, 2012 at 10:17
  15  

nandri thiru Vetrivelan

பெப்ரவரி 22nd, 2012 at 16:28

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி