Quantcast

முந்தய பதிவுகள், மாதங்களில்: டிசம்பர், 2008

சில மாதங்களாகவே இந்த சிற்பத்தை பற்றி எழுதவேண்டும் என்று ஆசை. எனினும் அதன் பின் இருக்கும் கதை விளங்காததால் பல இடங்களில் தேடிப்பார்த்தேன். கடைசியில் உங்களிடமே அதை விடுகிறேன். முயன்று பாருங்கள் - விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

உத்திரமேரூர் சுந்தர வரத பெருமாள் கோவில்.வெளி ப்ரஹாரம்… மூன்று சிற்பங்கள் ஒவ்வொன்றாக பார்போம்.

முதலில் சற்று தொலைவில் இருந்து சிற்பத்தை பாருங்கள்.

The panel.jpg

அருமையான பிருகு முனிவர் சிலை . ( நான் முதலில் தவறாக எழுதிவிட்டேன் )

the Brigu rishi  sculpture.jpg

ஆனால் இன்று நாம் பார்க்க வேண்டியது சிலையின் மேல் உள்ள மிகவும் அருமையான சிறு சிற்பம் ( நாம் எப்போதும் முக்கிய சிலைகளை பற்றி பேசுவது இல்லையே !!)

closeup of the miniature relief on top.jpg

தொலைவில் இருந்து பார்க்கையிலேயே சற்று வினோதமாக இருந்தது, படங்களை
பாருங்கள்.

மூன்று தபசிகள் - ஒவ்வொருவரும் ஒரு கோலத்தில்… வலது புறம் இருப்பவர் - ஒரு சிங்கத்தின் மேலே ( ஆஹா , என்ன ஒரு அருமையான சிங்கம்.)- ஒரு கால் மீது மற்றொரு காலை மடித்து தபஸ் செய்கிறார்

utm panel leftyogi.jpg
utm panel rightyogi.JPG
the delightful minature lion yaazhi.jpg

இடது புறம் இருப்பவர் கால் மாறி மடித்து உள்ளார்.

utm panel central fig.jpg
the even smaller stools legs - on one side a lion and another an elephant yaazhi motiff.jpg

நடுவில் அமர்ந்து இருக்கும் தபாசியின் தவ கோலம் - மிக அருமை. அரியணையின் மேல் மிக அழகாக ஒரு காலை இன்னொரு காலின் மேல் சப்பலாங்கால் போட்டு அமர்ந்துள்ளார் (அரியணையின் ஒரு கால் சிங்க முக யாளி , மற்ற கால் யானை முகம் கொண்ட யாளி ),மேல குடை, இருபுறமும் வெண் சாமரம்.

snakes everywhere.jpg
snakes in apt devoation.jpg

மூன்று பாம்புகள் வேறு உள்ளன.

இது என்ன கதை என்று இதுவரை தெரியவில்லை, எனினும் நுண்ணிய வேலைப்பாடு, மிக அழகிய சிற்பங்கள் ….அபாரம்.

மறுமொழி அளிக்கவும் »

கம்போடியாவின் ‘படேய் ஸ்ரி’ யில் ஒரு அற்புதமான சித்திரம். இந்தக் கலைச் சித்திரத்தின் பின்னணி முதலில் எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கலைப் படைப்பின் ஆழம் என்னை மூழ்கடித்துவிட்டதால் எங்கெங்கோ தேடியதில் ‘மகாபாரதத்தில்’ அதன் கதை கிடைத்தது. அற்புதமான கதை.. அதை நம் கண்முன்னே கொண்டுவந்த அற்புத சிற்பிகள்:

kadhava forest fire panel.jpg

காண்டவ ஆரண்ய தகனம்தான் அந்தக்கதை. இன்றைய மத்தியப் பிரதேசத்திலிருந்து டில்லி வரை பரந்த காடுகளைக் கொண்ட பகுதிக்கு காண்டவப்பிரஸ்தம் என்று பெயர் அப்போது நிலவிவந்தது. பஞ்ச பாண்டவர்கள் தங்கள் தலைநகரகமாக இந்திரப்பி்ரஸ்தத்தை உரு்வாக்கும் முயலும் தருணம். எங்கே உருவாக்குவது என்று கண்ணனை ஆலோசனை கேட்கிறான் அருச்சுனன். அந்தச் சமயத்தில் ஒரு அந்தணன் தானம் கேட்டு அவர்களிடம் வருகிறான். என்ன வேண்டும்.. கேளுங்கள்.. என்று அருச்சுனன் அந்த அந்தணனை வினவும்போது அந்த அந்தணன் கேட்கும் தானம் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

‘இதோ இந்த ஆரண்யத்தையே எரித்து அந்த பெருந்தீயினைத் தானமாக தந்தருள்க’ என்று கேட்கும் அந்தணன் அருச்சுனனுக்கு விசித்திரமாகப் பட்டாலும் காக்கும் தெய்வமாம் கண்ணனுக்கு அந்தணன் வடிவில் வந்தது யார் என்று தெரிந்து விட்டது. ‘சாட்சாத் அக்னி பகவானே’ அந்தணனாக வந்ததும் புரிந்தது.

அக்கினியே வந்து ஆகாரமாக அக்கினியை ஏன் கேட்கவேண்டும் என்று அருச்சுனன் வினவுகிறான். அப்படி நெருப்பு வேண்டுமென்றால் அந்த தேவதையே உருவாக்கிக் கொள்ளலாமே என்றும் கேட்கிறான். அதற்கு அக்கினிதேவன் தன் இயலாமையும் தான் வந்த காரணத்தையும் விளக்குகிறார்.

ஒரு சமயம் சுவேதகி என்னும் பேரரசன் தன் பேராற்றலை நிரூபிக்க தான் நீண்டகாலம் யாகபூசை செய்யவேண்டுமென அந்தணர்களை அழைக்கிறான். யாகம்தானே என்று அங்குள்ள அந்தணர்களும் ஒப்புக்கொண்டாலும் அது நீண்ட நெடிய வருடங்களாய் நீண்டுகொண்டே போவதில் அச்சப்படுகின்றனர். ‘இத்தனை காலம் யாம் இங்கு இந்த யாகத் தீயின் அமர்ந்து யக்ஞம் செய்ததே போதும் - எம்மை ஆளை விடு’ என்று கூறி எழுந்துவிடுகின்றனர். ஆனால் சுவேதகி கோபப்படுகின்றான். எப்படியும் செய்தே ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்க, அந்தணர்கள் அவனை சிவனை அழைத்துத் துணை கொள்ளுமாறு உபதேசம் செய்கின்றனர் (அவனால் முடியாதென்று தெரிந்தே). ஆனால் அதை நம்பிய சுவேதகி முதலில் சிவனை நோக்கிக் கடுந்தவம் செய்கின்றான். சிவனும் அவன் முன் தோன்றுகிறார். அவனை சுயமாகவே முதலில் 12 வருடத்திற்கு நெய்யூற்றி இடைவிடாது யக்ஞம் செய்து வந்த பிறகு தன்னைப் பார்க்க ஆணையிடுகிறார்.

சுவேதகியும் சுயமாகவே 12 ஆண்டுகள் இடைவிடாது நெய்யூற்றி யாகம் செய்து வெற்றிகரமாக முடித்து சிவனிடம் சென்று தன் பழைய யாகத்தையும் முடித்துத் தர வேண்டுகிறான். அவன் விருப்பப்படியே சிவபெருமானும் சிறந்த துர்வாசமுனியையே துணையாக அனுப்பி வைக்க, அவன் தடைப்பட்டுப்போன பழைய யாகம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. சரி போகட்டும். ஆனால் இனிமேல்தான் வினையே..

அந்த 12 வருடங்களில் இடைவிடாமல் ஊற்றப்பட்ட நெய்யானது அக்கினிதேவனின் உடலில் ஊதிப் போய் அவனை மிகக் கோரமான நிலையில் வைத்துவிட்டது. உடம்பில் மிக அதிகமான நெய் போகவேண்டுமானால் எங்காவது மிகப்பெரிய இடத்தில் தீயை வரவழைத்து அந்தப் பெருந்தீயில் கூடுதல் நெய் சுட்டெரிக்கப்படவேண்டிய கட்டாயம் அக்கினிதேவனுக்கு உருவாகிவிட்டது. மறுபடியும் சிவன் உதவிக்கு வந்தார். ‘காண்டவ ஆரண்யம் தற்சமயம் கொடுமையான உயிரினங்களின் தொந்தரவில் உள்ளதால் அந்த ஆரண்யத்தை சாம்பலாக்கி உன் துயரைப் போக்கிக் கொள்ளேன்’ என்றார் சாம்பசிவன்.

ஆதிக் கடவுளே சொல்லும்போது இனி என்ன கவலை என்று அந்த காண்டவ ஆரண்யத்தை சாம்பலூட்டும்போதுதான் இன்னொரு பிரச்னை வந்தது. நாகர்களின் தலைவனான தட்சகன் அந்தக் காட்டிலே தனி ராஜ்ஜியம் செய்துவந்தான். தேவேந்திரனுக்கு உற்ற தோழன். ஒவ்வொருமுறை அக்னி காட்டை அழிக்கும்போதெல்லாம் இவன் இந்திரனிடம் முறையிட அவன் அவ்வளவு முறையும் வருணனை வரவழைத்து மாபெரும் மழையினைத் தருவித்து அந்தக் காடுகளை ரட்சித்துவந்தான். அதனால் அக்கினியால் ஓரளவுக்கு மேல் போராடமுடியவில்லை.

அக்கினி நடந்த விஷயங்களைச் சொல்லினான். அதனால்தான் அவன் கண்ணனின் கருணாகடாட்சத்துக்காக ஏங்கி இந்தக் காடுகளை தீமயமாக்கி தனக்கு இரையாக தானம் கேட்டான்.

அருச்சுனனுக்கும் பாண்டவருக்கும் அந்த சமயத்தில் ஒரு நல்ல நாடு தேவைப்பட்டுள்ளதால் கண்ணனும் இசைந்து அருச்சுனனிடம் இந்த காண்டவப்ரஸ்தக் காடுகளை அழைத்து இந்திரப்பிரஸ்தநகரம் உருவாக்குமாறும் ஆணை கொடுத்தான்.

அக்கினியால் முடியாத அந்த அழிவினை அருச்சுனன் செய்ய ஆரம்பித்தான். ஆனால் இந்திரன் அவனை தடுக்க வருணனை ஏவினான். அருச்சுனன் பாணங்கள் வருணனைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்தக் காடுகளுக்கே வானத்துக் கூரையாக அம்புகளால் ஆகாயத்தில் காப்பு வைத்து அழித்தான். அப்போது அந்த தட்சகன் காட்டில் இல்லாமல் வெளியே சென்ற சமயம். தட்சகன் மகனான அசுவசேனா மிகப் பலம் கொண்டு போராடி முடியாமல் அந்தக் காட்டிலிருந்து வெளியேறப்பார்த்தான். அந்த மகனுக்கு உதவியாக தட்சகனின் மனைவி அசுவசேனாவை தனக்குள் முழுங்கிக் கொண்டாள். ஆனாலும் அருச்சுனம் விடாமல் அந்த நாகதேவியில் தலையை சீவி அசுவசேனாவை வெளிக் கொணர முயலும்போது மறுபடியும் இந்திரன் தன் நண்பனின் மகனை காப்பாற்ற முன் வந்தான். வாயுபகவானை அனுப்பி ஒரு கணம் மயக்கக் காற்றை வீசி அருச்சுனன் மயங்கும் வேளையில் அசுவசேனா ஓடிவிட உதவிசெய்தான். மறுபடியும் எழுந்த அருச்சுனன் மிகவும் கோபம் கொண்டு மாபெரும் போர் செய்து தன் வில் வித்தையைக் காண்பித்து வாயு தேவனை விரட்டி அடித்தான். கண்ணில் கண்ட துன்பப்படுத்தும் உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கத் தலைப்பட்டான். கருடன் போன்ற பறவைகள் தவிர்த்து அனைத்து உயிரினங்களும் அழிவைக் காண ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல் காட்டில் ஆங்காங்கே இருந்த அசுரர்களும், கந்தர்வர்களும் யட்சர்களும் அருச்சுனனோடு போருக்கு வந்தனர். அருச்சுனன் கண்ணன் உதவியை நாட கண்ணனின் சக்கரம் பல அசுரகணங்களை அழித்தது. முடிவில் மொத்தக் காடும் அக்கினி தேவனுக்கிரையாகி அவன் துன்பத்தைப் போக்கின.

பெரிய கதைதான். ஆனால் இந்தப் பெரிய கதையைப் பற்றிய சிற்பங்கள் இந்தியாவில் இல்லாமல் எங்கோ கம்போடியாவில் மிக அற்புதமான கலைச் சித்திரமாக வடிவமைக்கப்பட்ட விதத்தையும் அந்த சிற்பிகளின் கைவண்ணத்தையும் என்னவென்று சொல்வது? அற்புதம் என்று ஒரே வார்த்தையில் சொல்வது எந்த விதத்தில் பொருந்தும் என்றும் தெரியவில்லை.

இப்போது சிற்பங்களைப் பாருங்கள். ஐராவதத்தில் இந்திரன், இடி மழை பொங்கும் நீருடன் வருணன், (கீழே நீர் பொங்கும் காட்சி), ஒருபக்கம் அசுவசேனா நாகம் தப்பியோடும் சிற்பம், இன்னொரு சிற்பத்தில் சக்கரத்தோடு கண்ணனும் மறுபக்கத்தில் வில்லோடு கூடிய விஜயன், காட்டில் மற்ற விலங்குகள், மற்றும் பறவைகள் தப்பியோடுவது..

அப்பப்பா.. சிற்பிகளா இவர்கள். இல்லை.. கலைப் பிரும்மாக்கள்..

closer look at the panel.jpg
fire in the kadhava forest panel long shot.jpg
intricate carvings.jpg
kadhava forest panel.jpg
the panel.jpg
Arjuna with his bow.JPG
krishna with his discus.JPG
arjuna n krishna slaying.jpg
arjuna with bow on the other side.jpg
awasena in the process of being swallowed by his mother.JPG
closer look at the battle scene.jpg
indra striking with his thunderbolt seated on airavat.jpg
intricate carvings.jpg
krishna on one side.jpg
not even the birds could escape.jpg
the battle ground.jpg
the battle ground.jpg
the escape of awasena.jpg
the forest animals.JPG
the forest beings.jpg
the roof of arrows stopping varuna.jpg
the roof of arrows.jpg

மறுமொழி அளிக்கவும் »

 Page 10 of 10  « First  ... « 6  7  8  9  10