Quantcast



இன்று ஒரு ஓவியம் பிறக்கும் கதையை பார்க்கிறோம். ஒரு ஓவியன் - அவனும் பிறக்கிறான் , உண்மையான கலைக்கு அழிவு என்பதே இல்லை. ஒரு கலைஞனின் தாகம் அவனுள் என்றைக்கும் ஒரு ஏக்கத்தை உருவாக்கும். அந்த வலி அவனை ஒரு தேடலில் ஈடு பட வைக்கும் - இந்த தேடல் மொழி, கலாசாரம் , கால வட்டம் என்று அனைத்து தடைகளையும் உடைத்து எரியும்.

இதை போல ஒரு ஓவியத்தை இன்று நாம் பார்க்க போகிறோம். சிற்ப கலை - அதன் தூண்டலால் உருவான ஒரு சிற்பம் - அதன் தாக்கத்தால் உண்டான ஓவியம். அந்த ஓவியத்தின் தாக்கத்தால் உருவாகும் ஓவியன்.

ஸ்ரீ வைகுந்தம் தூண் சிற்பம். அப்பப்பா - அந்த வீரபத்ரர் சிலையில் தான் என்ன ஒரு உயிர்ரோட்டம் - சிலையே உயிர் பெற்று எழுந்து ஆடுவது போல உள்ளது. ஓவியர் சில்பி அவர்கள் இதை போல ஒரு தூணை பார்த்தல் - கேட்க வேண்டுமா - கரும்பு கடிக்க கூலி வேண்டுமா . அவரும் அந்த சிற்பத்தில் உள்ள பிரம்மாண்டம் , வீரம், அனைத்தையும் உள்ளே இழுத்து - ஒரு அற்புத ஓவியத்தை படைத்தார் ( நன்றி திரு பசுபதி மற்றும் வரலாறு .காம் நண்பர்கள் ) அமரர் சில்பி அவர்களின் தனி சிறப்பே ஒரு சிற்ப்பத்தை சிற்பம் போலவே வரைவது, கல்லிலே கலைவண்ணம் - அதை தன் கை வண்ணத்தால் வெளி கொணர்ந்த அற்புத கலைஞர் அவர்.

srivaikuntam pillar sculpture.jpg
silpi's version.jpg

சரி , இப்போது கதை வரலாற்று காலத்தை விட்டு , சென்ற வாரத்திற்கு நகர்கிறது. நண்பர் திரு பிரசாத் அவரது விடுமுறை நாட்களில் ஓவியம் தீட்ட நல்ல படம் கேட்டார். நானும் பல படங்களை கொடுத்து, அதில் மேலே குறிப்பிட்ட ஸ்ரீ வைகுந்தம் சிற்பம் மற்றும் சில்பி அவர்களின் ஓவியத்தை இணைத்தேன். பார்த்தவுடன் , இதை நான் வரைய முயற்சிக்கிறேன் என்றார். சற்று தயக்கத்துடன் இத்தனை கடினமான ஓவியம் ஆயிற்றே - என்று நிறைய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தேன்.

இரண்டு நாட்கள் கடந்தன - பிரசாத் எப்படி உள்ளது முதல் கோடுகள் என்று ஒரு படத்தை அனுப்பினார். கண்டவுடன் காதல் கொண்டேன். அமரர் சில்பி அவர்களின் கலை அழியவில்லை - அடுத்த தலைமுறையில் அவரது கலையை இட்டு செல்ல ஒரு அற்புத ஓவியன் பிறந்துவிட்டான் என்று எண்ணி பூரிப்பு அடைந்தேன்

prasad starts his.jpg
work in progress.jpg
breathtaking.jpg

( சிற்ப புகைபடத்தில் வாள் உடைந்து உள்ளது - அமரர் சில்பி அவர்கள் வரைந்த போதே அதில் விரிசல் விழுந்துள்ளதை அவர் கவனித்து அதையும் அவர் வரைந்துள்ளதை பாருங்கள் )

அருமை பிரசாத் - வீரபத்ரர் அற்புதம். சிற்பத்தில் மற்றும் சில்பி ஓவியத்தில் உள்ள அற்புத திறனை அப்படியே கொண்டு வந்துள்ளீர் - வாழ்க வளமுடன், இது போல இன்னும் பல படைப்புகளை உருவாக்க எங்கள் வாழ்த்துக்கள்.

another sephia tone.jpg
one more black n white.jpg
the masterpiece.jpg

திரு பிரசாத் அவர்களின் மற்ற ஓவியங்களை பார்க்க
பிரசாத் ஓவியக்கூடம்

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, ஜனவரி 6th, 2009 அன்று 5:53 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 14 மறுமொழிகள்

Kavitha
  1  

Do have pictures on sculpture from Aaudaiyar Koil? I am always amazed at the sculpture, details and images. Thanks.

ஜனவரி 6th, 2009 at 5:59
  2  

Hi kavitha,

Yes do have, will post shortly

rgds
vj

ஜனவரி 6th, 2009 at 6:02
  3  

ஓவியம் மட்டும் பிறக்கவில்லை
ஓர் அரிய ஓவியரும் பிறந்துவிட்டார்
கண் கவரும் ஓவியத்தால் பார்வையை
திருப்ப இயலவில்லை ஆறு வித்தியாசம்
காணவும் மனம் முயல்வில்லை!
வாழ்க திரு. பிரசாத்!

ஜனவரி 6th, 2009 at 7:59
Srivat
  4  

Beautiful.
Thanks for sharing.

ஜனவரி 6th, 2009 at 9:11
Sivaram Kannan
  5  

Wow… that is fantastic Vj. Is there more of Prasad’s work available? Would love to see more of his work? In Silpi’s drawing, was the background sculpture also was drawn?

ஜனவரி 6th, 2009 at 9:21
Shaji
  6  

Excellent work, Prasad. How many hours did it take you to complete this????

Could you now try a back ground, not as in Silpi’s one but on the original? That would bring out the image even better.

All the best. And, thanks to you Vj too.

ஜனவரி 6th, 2009 at 9:42
Prasad
  7  

Thank you everybody for your kind and encouraging words.

@Satheesh Kumar and Srivat:
Thank you very much. :)

@Sivaram kannan :
Here is my blog site where I post all my paintings.
http://raga-artblog.blogspot.com/

Please check the Image archives at the bottom of the page to view older work.

@ Shaji:
I think It took me close to 12 hours spread over several days.

I would love to give it a shot, but I need to consider the risk of ruining the picture too, Will weigh my risks and decide on the background. :) Thanks a million for your suggestions.

ஜனவரி 6th, 2009 at 10:24
baiju
  8  

it is nice work done by you to showcase the rich heritage we have hats off to you for the wonderful work.

ஜனவரி 6th, 2009 at 10:43
Kavitha
  9  

Thank you VJ, I’ll wait for AK.

ஜனவரி 6th, 2009 at 11:56
Shriram
  10  

Ouah!!! Really a masterpiece!! Congrats!

ஜனவரி 6th, 2009 at 13:29
தமிழ்த்தேனீ
  11  

ஒரு ஓவியம் பிறக்கிறது படித்தேன்
மிகவும் அருமையான பதிவு

ஒரு சிற்பத்தை பார்த்து அப்படியே ஓவியம் வரைவது என்பது எவ்வளவு கடினமான கலை என்பது ஓவியம் வரைபவர்களுக்கு தெரியும்,ஆனால் இந்த ஓவியத்தை மிகச் சிறப்பாக வரைந்திருக்கிறார் திருப்ரசாத் அவர்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

ஜனவரி 6th, 2009 at 18:25
jeevanandam
  12  

õ£˜ˆ¬îèœ õóñÁ‚Aø¶,

ஜனவரி 15th, 2009 at 15:22
Kathie Brobeck
  13  

I like Prasad’s version even better than
the original!

பெப்ரவரி 1st, 2009 at 4:03
சச்சிதானந்தன்
  14  

உங்‌கள் கலைத்தொண்டு வாழ்க. இவ்வாறு வெளிக்கொணரும் செய்திகளுக்கு நாம் அனைவரும் கடப்பாடுடையோம். சில்பியிடம் பயின்ற ஓவியர் பத்மவாசன் இன்னமும் அதே பாணியில் வரைவார், வரைந்துகொண்டிருக்கிறார்.

மார்ச் 26th, 2010 at 15:11

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி