Quantcast


இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நமது வாசகர் கவிதா அவர்கள் ஆவுடையார் கோயில் சிற்பங்களை காண வேண்டும் என்று கூறினார். நண்பர் திரு சிவராம் கண்ணன் அவர்கள் தன் பணியின் காரணமாக அமெரிக்கா சென்றிருந்த போதும் அங்கிருந்து படங்களை அனுப்பி நம்மை ஆவுடையார் கோயிலின் அருமையான சிற்பங்களை ரசிக்க ஒரு வாய்ப்பை தந்துள்ளார்.

சிற்பங்களை காணும் முன்னர், நாம் இந்த கோயில் உருப்பெற்ற ஒரு அதிசய கதையை கேட்க வேண்டும். இந்தியா மற்றும், உலகையே சென்ற வாரம் உலுக்கிய சத்யம் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் போல, ஆயிரத்தி இருநூற்று ஆண்டுகளுக்கு முன்னரே நடந்த ஒரு மோசடி - ஆவுடையார் கோயில் உருவான கதை. கதையை படித்த பின்னர் அது மோசடியா இல்லை இறைவன் இட்ட விதியா என்று நீங்களே முடிவு செய்யுங்கள் .

சரி, இதோ கதை - மதுரையை அடுத்து திருவாதவூர் - அங்கே வதவுரார் என்று ஒரு சிறுவன் - சிறு வயதில் இருந்தே அறிவுக் கூர்மை , இறை பக்தி என்று பலரையும் வியக்க வைத்தான். அவன் புகழ் பரவியது - பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் இதை கேட்டு , தனது அரசவையில் இடம் அளித்து தென்னவன் பிரம்மராயன் என்ற பெயர் இட்டு தன் சபையில் முதல் மந்திரி ஆக்கினான். எல்லாம் நன்றாக சென்றது.

அப்போது அரபு நாட்டு உயர் ஜாதி குதிரைகள் கப்பல் மூலம் சோழர் துறைமுகத்தில் விலைக்கு வருவதை அறிந்த மன்னன், தன் முதல் மந்திரியிடம் நிறைய பொன் கொடுத்து அவற்றில் நல்ல பரிகளை வாங்கி வர அனுப்பி வைத்தான். அவ்வாறே வதவுரார் சோழ நட்டு துறைமுக நகரம் செல்ல பயணித்தார்.

வழியில் திருபெருந்துறை அடைந்த வதவுரார், சற்று இளைப்பாரினார். அப்போது அங்கே அற்புதம் நிகழ்ந்தது - ஒரு மரத்தடியில் ஈசன் போதனை செய்து கொண்டு அவருக்கு காட்சி தந்தார். மற்றது சரித்திரம்

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்,
.. மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்,
பந்தணை விரலியும் நீயும், நின் அடியார்
.. பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே,
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்,
.. திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி வந் தாண்டாய்,
.. ஆரமுதே, பள்ளி எழுந்தருளாயே.

முதல் திருவாசகம் அங்கே உயிர்பெற்றது

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

பொழிப்புரை:

தலைவனது பெருமையை உண்ர்த்தும் நாமமாகிய நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தானது என்றும் நிலைபெருகுக, தலைவனது திருவருட்சக்தியானது என்றும் விளங்குக கண்ணைமூடி விளிக்கும் நேரமளவுகூட அடியேனது உள்ளத்தை விட்டு நீங்காதவன் தாள்வாழ்க திருவாவடுதுரையில் எழுந்தருளி அடியார்க்கு மெய்
உணர்த்தி ஆட்கொண்டருளிய முதல்வனின் திருவடிகள் வாழ்க தன் நிலையில் ஒருவனாய் அன்பர் நினைக்கும் பல வடிவம் உடையவனாய் உலகுயிரெங்கும் தங்குவானுடைய திருவடிகள் என்றும் பொலிவு பெறுக

ஈசன் அவரது அமுத மொழியை கேட்டு அவருக்கு மாணிக்கவாசகர் என்று பெயர் சூட்டி அங்கே ஒரு கற்றளி எழுப்பிக்க ஆணையிட்டு மறைந்தார்.

ஆண்டவன் ஆணை இட்ட பின் அரசன் ஆணையை மறந்து - பரிகளை வாங்க வைத்திருந்த பொன் அனைத்தையும் திருபெருந்துறை கோயிலை கட்ட செலவிட்டார் ..அதனால் என்ன நடந்தது - நரியை பரியாய் மாற்றிய கதை - அதை பின்னர் பார்ப்போம்.

இந்த கோயிலில் லிங்கம் இல்லை - வெறும் ஆவுடை மட்டும் தான் - அதனால் தான் இத்தலத்திற்கு ஆவுடையார் கோயில் என்று பெயர். இங்கே பரம்மனுக்கு காயத்ரி மந்திரத்தை சொல்லி கொடுக்கும் ஈசன் ( ஆத்மநாதர் ) - அதில் இருந்து நான்கு வேதங்களும் பிறந்ததாகவும் - அதனால் இந்த நகரம் சதுர்வேதபுரம் மற்றும் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது.

இப்போது அவ்வளவு பொன் கொடுத்து கட்டிய கோயிலின் அழகை கொஞ்சம் பார்ப்போம்.( சத்யம் பற்றி இங்கே இட்டது வாசகர் கவனத்தை ஈர்க்கவே - தவறாக இருந்தால் மன்னிக்கவும் )

சிற்பங்களை பார்க்கும் முன், எனக்கு மிகவும் பிடித்த - பலரும் பார்க்க மறக்கும் - தூண்கள், மேற்கூறை - இந்த கோயிலில் மிக அபூர்வமாக இவை வடிக்கப்பட்டுள்ளன. சிற்பி தனது முழு திறனையும் வெளி கொண்டுவர ஒவ்வொரு கல்லையும் கலை பொக்கிஷமாக மாற்றி உள்ளான்.

ceiling innocuous
the corner snake - watch its coils
the snake carved into the ceiling
the snakes coil
corner of ceiling snake

முதலில் மேற்கூறை, தொலைவில் இருந்து பாருங்கள் -தெரியவில்லையா ? அருகில் செல்வோம். எங்கோ பார்த்த மாதிரி உள்ளதா ? ஆம் நாம் முன்னர் இதே பாம்பை தாளக்காடு கோயிலில் பார்த்தோம். அற்புதமாக வளைந்து படம் எடுக்கும் பாம்பு - கல்லில்.

Check the stone rod - 4 sided
anther view of the stone rods ( a bit damaged)
check the stone rod - 8 sided
how on earth
see the diff kinds of rods - stone mind it
the diff rods
twisted rod of stone
wow rods again

சரி, இதைத்தான் நாம் முன்னரே பார்த்தோமே என்கிறீர்களா ? சரி இதைக் கொஞ்சம் பாருங்கள் - அலங்காரத் தூண்கள், மேற்கூறை, அதில் வெவ்வேறு கம்பிகள் - நான்கு, எட்டு பக்கங்கள் கொண்ட கம்பிகள், முறுக்கு கம்பி - எல்லாம் கல்லில். என்னே சிற்பியின் திறன்

a long shot of this magnificent work
another ceiling
ceiling decorations
check out the ceiling decoration
closeup of celing
lintel decoration
pillar decoration

இதை அனைத்தையும் விட , நம்மை ஈர்க்கும் சிற்ப வேலை பாடு - இதோ,

stone chain part of ceiling
stone chains from ceiling
the masterpiece
wow, no words
a long shot of this magnificent work
how on earth did they sculpt this

இதை பற்றி வர்ணிக்க வார்த்தை இல்லை. விடை பெறுகிறேன்

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, ஜனவரி 14th, 2009 அன்று 6:19 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 26 மறுமொழிகள்

Prasad
  1  

It would be unfair to call it a scam.
I would rather call it an Investment. It would have achieved twin objectives, given the kingdom its own wonder( Just imagine how this temple would have looked back then.) and also won the hearts of the people, which according to me is much more important than a bunch of Arabian horses.

ஜனவரி 14th, 2009 at 9:51
தமிழ்த்தேனீ
  2  

வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
நம்முடைய மூதாதையர்களில் எப்படிப்பட்ட கலைஞர்கள் இருந்திருக்கின்றனர் என்பது நம்முடைய பாரம்பரியத்துக்கே மரியாதை தரும்
சிற்பக்கலைகளின் பெருமையை உங்கள் வர்ணனை மிகவும் பெருமையுடையதாக்குகிறது அருமையான கலைச்சேவை

அன்புடன்
தமிழ்த்தேனீ

ஜனவரி 14th, 2009 at 16:22
Satish Kumar A
  3  

aha..Vijay/Siva without the pillars with Soldiers on the horse back, Avudayar Koil is incomplete. Hope you bring out another article on those specially…

Satish

ஜனவரி 14th, 2009 at 20:58
Satish Kumar A
  4  

When we say our ancestors were great artist, lets also pray that atleast the remaining art work is left untouched without being vandalized by Govt agencies in the name of renovation. The colours they apply to the temples in the nameof renovation is really painful to see.

Satish

ஜனவரி 14th, 2009 at 21:00
Vancheeswaran Gopal
  5  

I have worked as Manager for 3 years in a nationalised bank in this area i.e. Thiruppunnavasal (A Punnai Maram which is 2000 years old and living even today giving its name to the village!), which is about 42 kms from Aranthangi and 30 kms from Avudayarkoil, and on the way to Rameswaram (90 kms) is supposed to be a sacred Shivasthalam. Paramacharya Swamigal whenever he visits this temple, he used to walk bare-footed (without paadha raktchai) from the entrance to this village. claiming that the entire land is sttrewn with thousands of shivalingas! This temple is reported to have a secret passage constructed during the Pandya period and there is also a village by name Sundara Pandian Pattinam ( S P Pattinam) where even today thousands of Muslim families live, who have their business interests in Chennai, Madurai and other parts of Tamilnadu. This temple also has the Second (?) Biggest Shivalingam/Aavudai - next to Periyakoil. Tanjore. Unfortunately, this area is not covered in the toursim map of Tamilnadu due to its geographical disadvantage as the area is not connected to National/State Highways like Avudayarkoil - which is at least accessible at 12 kms from Aranthangi. Besides the above, more uncared for temples are located on the way from Avudayarkoil to Thiruppunnavasal, with excellent masterpiece architecture, some of the places boasting with connections to Ramayana period as Sri Rama is believed to have travelled through this route to reach Sri Lanka.

ஜனவரி 15th, 2009 at 2:39
  6  

hi prasad, thanks - ofcourse he had divine sanction, which clears all

Dear தமிழ்த்தேனீ sir, thanks for your lovely comments.

dear satish, yes, the horseriders along with the koravan korathi to follow shortly.

dear mr gopal

thanks for sharing so much info, if possible please do send us some photos and some base data, so we can all enjoy

rgds
vj

ஜனவரி 15th, 2009 at 5:16
nantha kumar
  7  

hi vijay,
the first 13 pics is the style of pandiyas, the tamil name for the roof is “kondugai” In thiruvathavur temple separate mandapas is delicated for these kondugai .In nowdays it is difficult to create like these roof. The second set of photos is belongs to nayakar style , the same chain stone also seen in perur temple in coimbatore. no words to praise .

thank you vj.

ஜனவரி 15th, 2009 at 11:56
nantha kumar
  8  

I hear that the jewel makers go there (Avudayarkoil)to take paper prints of statue jewels, Most of modern jewel models prints are taken from the temple statue, ( i hear these news jewel makers) the temple is famous for its staute.

ஜனவரி 15th, 2009 at 12:07
nantha kumar
  9  

I hear that the jewel makers go there (Avudayarkoil)to take paper prints of statue jewels, Most of modern jewel model prints are taken from the temple statue, ( i hear these news from jewel makers) the temple is famous for its staute.

ஜனவரி 15th, 2009 at 12:08
  10  

hi nantha

thanks for sharing the wonderful info

rgds
vj

ஜனவரி 15th, 2009 at 19:06
Sivaram Kannan
  11  

Vj, for the first time you made me feel proud for my photos. Thanks for the post, it was like going to the temple again.

ஜனவரி 16th, 2009 at 8:00
  12  

Fantastic. Out of this world experience. The scuptor could have landed from the Heavens. Thanks.

பெப்ரவரி 6th, 2009 at 18:46
rhoda alex
  13  

lovely !!
what stone is the temple made of?

அக்டோபர் 18th, 2009 at 23:51
Brahmanyan
  14  

Avudayarkoil is known for its stone Kodungai (canopy). The Temple itself is a museum of Art. I wish more people visit this wonderful Temple to enjoy the grace of Sri Athmanatha swamy.
Brahmanyan

நவம்பர் 15th, 2009 at 11:35
NANA
  15  

Intersting….
comparing with Stayam….
I can guess your level of serious sense of
humour…
After reading and seeing the images…
now Avudaiyar koil…is added in my triplist.
And I am enjoying the way of your writting…

anyway thanks for everything!

Nana
Asso. Art Director
India Today- Regional Editions
Chennai - 4
Mobile:9941011196

டிசம்பர் 28th, 2009 at 9:22
  16  

hi nana

welcome to poetryinstone and thanks for leaving your comments. keep visiting to see more such gems….

vj

ஜனவரி 6th, 2010 at 7:58
ssenthilkumar
  17  

really amazing work sculptures.soon i try to visit this temple thank u.. for ur valuable information

ஏப்ரல் 30th, 2010 at 13:27
omar
  18  

there is a place called ‘pariyamarudhupatti’, located south of pudukkottai dist. 2kms from ponnamaravathi… here is where exactly the horses started howling like foxes, the place is named after that… but the temple here in ‘pariyamarudhupatti’ is not that rich in scultures. but, i think you peole can figure out some finer details…

மே 16th, 2010 at 9:38
SARAVANAN
  19  

VERY GOOD INFORMATION. THANKS

மே 30th, 2010 at 18:52
  20  

thanks saravanan, keep visiting often

rgds
vj

ஜூன் 1st, 2010 at 8:08
  21  

ஆஹா! அற்புதமான கோயில், அருமையான சிற்பங்கள், ஆயிரத்தி இருநூறு ஆண்டு கால பொக்கிஷம் - மிகச் சிறப்பான பதிவு. நான் காண வேண்டிய ஆலயங்களின் பட்டியிலில் இதையும் சேர்த்து விட்டேன்.
நன்றி
வர்தினி.

ஜனவரி 17th, 2011 at 19:31
Dhivakar
  22  

Even somehow I missed this post. Thanks for remembering through fb

ஜனவரி 17th, 2011 at 22:14
Dhivakar
  23  

somehow I missed this post. Thanks for remembering through fb

ஜனவரி 17th, 2011 at 22:15
  24  

Speechless. Thanks for revealing these wonders.

ஜனவரி 17th, 2011 at 22:32
  25  

thank u so much…
the pictures posted inspired me to visit the temple n so on the 6th of this month i had been there ..
wonderful art on stones.. feel sorry ’cause it is not been maintained as expected….

பெப்ரவரி 11th, 2011 at 11:38
  26  

dear Vallivasanth

Went through your album - is really wonderful.

rgds
vj

பெப்ரவரி 12th, 2011 at 11:54

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி