Quantcast


பல நேரங்களில் நம்மையும் மீறிய சில செயல்கள் - நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்கள் நம்மை திகைக்க வைக்கின்றன. அதுபோன்று ஒரு நிகழ்வே இந்த பதிவு. ஓவியர் நண்பர் திரு பிரசாத் அவர்கள் ஒரு சிலையை ஓவியமாய் தீட்ட இணையத்தில் தேட, அப்போது மன்னார்குடி ராஜகோபாலசுவாமி படம் கிடைக்க, அவரும் அதை அழகாக தீட்டி என்னிடம் அனுப்பினார். அதை நண்பர் அசோக் பார்த்துவிட்டு அவர் உபயோகித்த படம் தான் எடுத்து என்றும் சொன்னார். அற்புதமான படம், அதை ஒட்டி, மதிமயக்கும் ஓவியம் - இரண்டையும் பார்த்தவுடன் இதைப் பற்றிய வர்ணனைனைக்கு சரியான வல்லுனர்கள் - நண்பர் திரு தேவ் மற்றும் வரலாறு .காம் நண்பர் கோகுல் அவர்களின் தந்தையார் திரு சேஷாத்ரி - இருவரையும் அணுகினேன். இருவருமே அருமையான பதிவுகளை தந்தனர். இரண்டையும் சேர்த்து இந்த பதிவு.

நாம் கண்களை மூடி மனதில் இதுவரை நாம் கண்டு நெகிழ்ந்த திருமேனிகளை நினைத்துப்பார்க்கையில் வரும் காட்சிகள்

1. அழகிய மணவாளன் - ஸ்ரீரங்கம்
2. திருமலை தெய்வம் (மூலமூர்த்தி)
3. ராமபிரான் -தில்லை விளாகம்
4. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி

கண்ணபிரான் யதுகுலத்தில் தோன்றி, கோகுலத்தில் வளர்ந்தருளினான். ஆநிரை மேய்த்தாலும் அரசர்க்குரிய காம்பீர்யம் சற்றும் குறையவில்லை. இக்கோலத்தில் ஆழங்கால் பட்ட அடியவர்கள் ‘ராஜ கோபாலன்’ என்றழைத்து இன்புற்றனர்

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி

கண்ணபிரான் இடது திருக்கரத்தால் பசுவை அணைத்துக்கொண்டு,வலது திருக்கரத்தால் சாட்டையைச் சுழற்றும் பாவனையில் ‘வேத்ர பாணி’யாக, நின்ற திருமேனியோடு ஸேவை ஸாதிக்கும் திருக்கோலம் “மன்னார்” என்றழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இத்தகைய கோலத்தில் கோபாலன் எழுந்தருளியிருக்கும் தலங்கள் மிகவும் அபூர்வமானவை. ஸ்ரீ வில்லிபுத்தூர், காட்டுமன்னார் கோவில்,மன்னார்கோவில்,மேலப்பாவூர், ராஜமன்னார் குடி ஆகிய இடங்களில் இப்பேரழகைக் காணலாம். இவை அனைத்தினுள்ளும் புகழ் பெற்றது மன்னார்குடி மட்டுமே.மன்னார்குடி ‘தக்ஷிண த்வாரகை’ என்னும் பெயர் பெற்றது; அழகான மதிற்சுவர் அமையப் பெற்றது.

இவ்வூரின் பெருமையை ‘ஊர்பாதி, குளம்பாதி’, ‘மன்னார்குடி மதிலழகு’என்னும் வழக்கிலிருந்து அறியலாம்.ஊரைச் சுற்றியோடும் பாமணியாறு தவிர,மேலும் ஒன்பது நீர்நிலைகள் பல்வேறு பெயர்களில் புராணகாலம் தொட்டு இன்றுவரை வளம் காத்து வருகின்றன.இவ்வூரில் பேரறிஞர் பலர் வாழ்ந்துள்ளனர்.

உற்சவ மூர்த்தியான ஸ்ரீவித்யா ராஜகோபாலனை வர்ணிப்பது கடினம்.

rajagopalaswamy(2)

அசோக் அவர்களின் படம்

இவன் கோஸகன்; ஆமருவியப்பன். ஒரே பட்டாடையை இடுப்பில் சுற்றிகொண்டு அதையே பின்புறமாகக் கொண்டு சென்று ஒயிலான தலைப்பாகையாகவும் ஆக்கிக்கொண்டுள்ளான். ‘த்ரைமம் வேத்ரம்; ஏக வஸ்த்ரம்’ என்று தொடங்கும் இவனைப் போற்றும் சுலோகம். மூன்று வளைவு கொண்ட சாட்டையும்,ஒற்றை ஆடையும் தனிச்சிறப்பு.இந்த ஆயர் சிறுவனின் மேனியழகில் மனத்தைப் பறிகொடுத்த ஸ்வாமி மணவாள மாமுனிகள் அந்திம காலத்தில் இங்கேயே வாஸம் செய்தாராம்.*

இதோ திரு பிரசாத் அவர்களின் ஓவியம்

Rajagopaswami Prasad's sketch

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரவர்கள் ‘பால கோபால ‘ (பைரவி) ,’ஸ்ரீ வேணு கோபால’ ( குறிஞ்சி), ‘ ஸ்ரீ ராஜ கோபால’ ( ஸாவேரி) போன்ற பல பாடல்களை ராஜகோபாலன் விஷயமாகப் பாடியுள்ளார். ஊத்துக்காடு வேங்கட கவியின் கண்ணன் பாடல்கள் எல்லாமே இவனைப் பற்றியவையே என்று கூறுகின்றனர்.

நன்றி

http://raga-artblog.blogspot.com/2008/10/rajagopalaswamy-temple-mannargudi.html
www.srirajgopalaswamy.blogspot.com

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், ஜனவரி 22nd, 2009 அன்று 19:33 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 19 மறுமொழிகள்

தமிழ்த்தேனீ
  1  

மன்னார்குடி ராஜகோபாலன் அவர்களின் திருமேனியின் அழகும்
அதை ஓவியமாக வரைந்த திரு ப்ரசாத் அவர்களின் கைவண்ணமும் ரசித்தேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

ஜனவரி 22nd, 2009 at 19:38
Satish Kumar
  2  

wow…kozhuk muzhuk kannan….a treat to watch. Great sketch by Prasad. Thanks

ஜனவரி 22nd, 2009 at 21:32
vishwaksenan
  3  

Sri Krishna showed 32 divisions (painted on the walls of temple)of Vidya to Gopilar and Gopralyar and the last one is Srividya Rajagopalan in which the temple is named. Those rishies are the two calves before Rajagopalan. In the beautiful drawing showed, one calf is there. What happened to Gopralaya calf?
The story for the changed earrings of Rajagopalan is an interesting one. It is painted beautifully.

ஜனவரி 23rd, 2009 at 6:48
Sivaram Kannan
  4  

Wow.. I have been a 1/2 drive from this place and never been to this temple. I will visit next time when I go to my native. Amazing sketch.

ஜனவரி 23rd, 2009 at 7:29
rajagopalan marimuthu
  5  

i belong to mannargudi and i really is thrilled to see the photo and sketch of our presiding deity. thanks and keep up the good work

ஜனவரி 23rd, 2009 at 9:25
manii
  6  

Its not a painting but a Life !!! Could feel the artists’ passion in this painting !!! Masterpiece always comes with passion

ஜனவரி 23rd, 2009 at 10:50
Tha. Ki. Neelakantan
  7  

Eversince I had the oppurtunity of writing about Srividhya Rajagopalan in the kalki’s just concluded series “Azhagin Vadivey …Arulin Vadivey”, I have been hearing and reading more & more about ” That little fellow “. I felt that I had come across all these before I wrote the Article ( or is it a way of gently telling me that ” My leelais are endless ” ) The vennai Thazhi uthsavam of panguni, His Bullukku , Kunjalam , Thandai, salangai, Sendu ( yes, U ve sa has written about Him in his article ” Sendalankarar”) the paintings on the wall , the story of His being named Srividhya Rajagopalan( also called Gopalasundari )…..More I read ..More .I Long to see Him . By the way what is the interesting Story behind His earrings ?

ஜனவரி 23rd, 2009 at 10:54
  8  

Ashok specializes in taking photos of deities, with remarkable clarity. One wish I would ask from Prasad: REACH FOUNDATION is planning for a art exhibition well in second half of 2009, exhibiting works related to temple and the art around, all in various forms painted/ drawn by various artists. We would have some VIP artists inaugurate the show and would be in Chennai. Can Prasad, donate few pictures for this show, as the proceeds would go for restoring dilapidated temples? FYI, the OOthukadu temple you mentioned in this blog is also under renovation plans, wish from Chitraveena Ravikiran. REACH would join hands to renovate this temple. Vijay, pls forward this to all concerned at get me their replies.

ஜனவரி 23rd, 2009 at 11:20
  9  

thanks chandra. wishing you luck

rgds
vj

ஜனவரி 27th, 2009 at 13:19
A.V.SUKUMAR
  10  

dear sir,
the photograph’s exhibited by you are of rare nature, first the myth of shadow of brihadeswara temple, second the bull on the top of the tower etc.
near tutukudi one hill temple is there where , the tower of reversed carved from bottom - up/
krishnapuram/ taramanagalam/tadikombu ha ve excellent sculptues.
for people who are residing in karanataka. the marvel of sculptural civilization of great/ rare yogis like - hoyasalas/ chalikyas/ the rareity of rarenss in stone - the musical excellences in stone = at - ITTIGI= GADAG ETS are a treat for art - lovers= phototo journalists.

ஜனவரி 31st, 2009 at 19:20
A.V.SUKUMAR
  11  

dear sir,
the photograph’s exhibited by you are of rare nature, first the myth of shadow of brihadeswara temple, second the bull on the top of the tower etc.
near tutukudi one hill temple is there where , the tower of reversed carved from bottom - up/
krishnapuram/ taramanagalam/tadikombu ha ve excellent sculptues.
for people who are residing in karanataka. the marvel of sculptural civilization of great/ rare yogis like - hoyasalas/ chalikyas/ the rareity of rarenss in stone - the musical excellences in stone = at - ITTIGI= GADAG ETS are a treat for art - lovers= phototo journalists.A,V,SUKUMAR

ஜனவரி 31st, 2009 at 19:20
Muruganandam
  12  

When we talk about mannargudi, the garudakambam of Mannargudi also another marvel in stone on the top of the high rised tower you have the temple of Mount of Lord Vishnu namely garudan.

The tallest Garuda tower is at srimusnam and Mannargudi garudakambam is second.

பெப்ரவரி 7th, 2009 at 9:59
Mannai V.Ranganathan
  13  

I am very happy to see the greatness ideas of many devottes of the God shri Rajagopalaswamy. Those who are the real bakthas of shri Gopalan they never loss anything in their life time.

மார்ச் 27th, 2009 at 19:55
kalaivirumbi
  14  

cute krishnan;
lord shiva, we can’t say in words abt ur leelai. great to hear. thiruchitrambalam.

அக்டோபர் 29th, 2010 at 10:54
chandra
  15  

About 45 years before between 1955 t0 1963 all my early hood is recalled 18 days Lord Rajagopalan’s urchavam came to my eyes.Thanks to you a lot.
Chandra

பெப்ரவரி 23rd, 2011 at 9:54
kanakavalli
  16  

His Name thrills, his appearence transports on to srivaikuntam

மே 3rd, 2011 at 11:56
Balaji
  17  

His Smile and Style are mesmerizing.
The way he is decorated is also unique. The turban and half dhoti of the shepherd are adding to his beauty.

Kodai (Kodha / Andal) lived a long time before this temple came into existence. Thatz the reason that no alwars have sung about this temple.

ஜூலை 1st, 2011 at 21:29
  18  

My take on this splendid idol..

ஆகஸ்ட் 15th, 2011 at 2:59
  19  

My take on this splendid idol..

https://picasaweb.google.com/alchemy2/MannargudiRajagopalan?authkey=Gv1sRgCIfrz4XuncGKMw

ஆகஸ்ட் 15th, 2011 at 3:00

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி