Quantcast



கஜசம்ஹாரமூர்த்தி அல்லது யானை உரிபோர்த்திய மூர்த்தி வடிவம் தஞ்சை அருங்காட்சியக சிற்பம். இது தாராசுரத்திலிருந்து எடுத்து வந்தது.

yaanaiuri4

நாம் முன்னரே புள்ளமங்கை பதிவில் இதே வடிவத்தை பார்த்தோம். இதே போல தில்லையிலும் உள்ளது

yaanaiuri chidrambaram

ஆனால் இது ஒரு அற்புத சிற்பம். இந்த சிற்பம் இரு ஜாம்பவான்களால் இவ்வாறு கூறப்பட்டது - ஒருவர் திரு குடவாயில் பாலசுப்ரமணியம், மற்றொருவர் சிற்பி திரு உமாபதி அவர்கள் ( உமாபதி அவர்கள் இதனை செப்பு தகடு கொண்டு வடித்த வடிவம் இதோ )

sir umapathy's plate
pullamangai yaaniuri.jpg

சரி - இந்த வடிவத்தில் அப்படி என்ன புதுமை என்று திரு குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவை கேட்டேன். இதே வடிவங்கள் மற்ற இடங்களிலும் உள்ளன … ( இதே சிற்பம் தில்லையிலும் உள்ளது ) அவர் அளித்த அருமையான விளக்கத்தை உங்களுடன் பகிர்கிறேன்

இந்த சிலையின் / வடிவத்தின் அருமை, அதை சிற்பி கையாண்ட முறை.

இதை விளக்க என்னிடத்தில் அப்போது சரியான படம் இல்லை - அதனால் பெங்களூரை சேர்ந்த தோழி திருமதி லக்ஷ்மி ஷரத் அவர்கள் சென்ற வாரம் தஞ்சை சென்ற பொது இந்த சிற்பத்தை படம் எடுத்து வர சொன்னேன். ( அமெரிக்கா தோழி காதி இரண்டு படங்கள் தந்து உதவினார்! )

Darasuram yaani uriporthia murthy
darasram yaanai uri sculpture

இதோ படங்கள். இப்போது முதலில் காட்சியை பாருங்கள், என்ன காட்சி?

தாருகாவனத்தில் ரிஷிகள் ஏவிய யானையைக் கொன்று அதன் தோலை அணிந்தவன்.

இதோ தேவாரம் குறிப்பு.

சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.10.8

ஒளிறூபுலி அதள்ஆடையன் உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தான்இடம் அண்ணாமலை அதுவே.

ஒளி செய்யும் புலித் தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.

முதலில் அவன் ஆடும் அழகு, வலது காலை பாருங்கள்,யானையின் தலையில் மேல் ஊன்றி, நாம் முன்நின்று பார்க்கும் பொது அவன் நம்மை நோக்கிஇராமல் - பின்புறம் தெரிய உடலை எவ்வாறு முறுக்கி ஆடுகிறான்.

இரு புறமும் நான்கு கரங்கள், மேல் வலது கரத்தை பாருங்கள், யானை தொலை கிழித்து வெளி வரும் விரல்கள், சரி கிழே இடது கரம், நம்மை அங்கே இருக்கும் இருவரை பார்க்க சொல்கிறது ,யார் அவர்கள் ?

yaanaiuri2

ஆஹா, ருத்ரன் வெகு கொடூரமாக ஆடும் ஆட்டத்தை குழந்தை முருகன் பார்க்காமல் இருக்க அம்மை அவனை தன் இடுப்பில் இட்டு தன் உடல் கொண்டு மறைக்கிறாள்,அதை காணும் ஈசனோ புண் முறுவல் புரிகிறான்.

Paravathi with skanda

3.86.1:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=3086&padhi=126+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி யதள்பட வுரிசெய்த விறலினர்
நறியுறு மிதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி யடிகடம் வளநகர் சேறையே

சிவபெருமான், தளிர் போன்ற நிறமும், அரும்பு போன்ற முலையுமுடைய உமாதேவி அஞ்சுமாறு, மதம் பிடித்த யானையின் தோலை உரித்த வலிமையுடையவர். நறுமணம் கமழும் இதழ்களை உடைய கொன்றைப் பூவோடு, கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும், மண்டையோட்டையும் நெருங்கிய சடை முடியில் அணிந்துள்ள அவ்வடிகள் வீற்றிருந் தருளும் வளநகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
—————–
4.51.10:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4051&padhi=051&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

பழகநா னடிமை செய்வேன் பசுபதீ பாவ நாசா
மழகளி யானையின் றோன் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே யரக்கன் றிண்டோ ளருவரை நெரிய வூன்றும்
குழகனே கோல மார்பா கோடிகா வுடைய கோவே

கோடிகா உடையகோவே ! ஆன்மாக்களின் தலைவனே ! பாவங்களைப்போக்குபவனே ! இளைய மதமயக்க முடைய யானையின் தோலைப் பார்வதி அஞ்சுமாறு போர்த்த அழகனே ! அரக்கனாகிய இராவணனுடைய வலிய தோள்கள் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு நெரியுமாறு கால்விரலை அழுத்திய அழகனே ! நின் தொண்டிற் பழகுமாறு நான் அடித்தொண்டு செய்வேன்.
——————–

( நன்றி .. எனக்கு உதவியவர்கள் : திரு வி.சுப்பிரமணியம் அவர்கள் மற்றும்
திவாகர் ஐயா )

இதை எப்படி சிற்பத்தில் காட்டுவது, படத்தை பாருங்கள்,முகத்தில் வலது புறம், கோரை பல்,கோவத்தில் வில்லென மேல் விரியும் புருவம், அதே முகத்தின் இடது பக்கம்,உமையை பார்க்கும் பக்கம்,ஆஹா புருவம் அழகாக வளைந்து உள்ளது , கோரை பல் இல்லை - புன்முறுவல்.

single fang
yaanaiuri1
closeup of Shiva
angry side
normal shiva

இரு பாவங்களை ஒரே முகத்தில் கொண்டு வருகிறது இந்த சிற்பம் ( இதை போல புன்முறுவல் ஓவியம் உலக புகழ் பெற்றுள்ளது… …ஆனால் அதை விட கடினாமான கல்லில் உள்ள இந்த சிற்பம் தஞ்சையில் ஒரு ஓரத்தில் கிடக்கிறது…)

.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், ஜனவரி 29th, 2009 அன்று 14:13 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 13 மறுமொழிகள்

Dhivakar
  1  

Just Excellent. I wonder myself with each and every post of you when published, whether we could go back to these good old times!.

Dhivakar

ஜனவரி 29th, 2009 at 14:26
திவா
  2  

beautiful!
one thing i dont understand.
if the face on the side of his consort and boy is normal and the other side frightening one can understand. but it is just the reverse!
but perhaps that is why parvati is shielding!

ஜனவரி 29th, 2009 at 14:38
  3  

hi திவா,

nice question. See it as an action figure - Shiva is all rage personified, as he is skinning the elephant demon - just as he is finishing -he sees his wife shielding his son from seeing the gory sight. He knowing his son’s prowess starts smiling - so the face watching the wife n son is just beginning to smile - the fang is gone.

rgds
vj

ஜனவரி 29th, 2009 at 14:42
Swaroopini
  4  

hi vijay
Excellent Post. But i would like to touch upon what Dhiva said. The last 2 images that u have given, the angry shiva and normal shiva, if you look close it looks like the side facing parvathi is angry and the other side looks calm as opposed to what you’ve mentioned. Can u pls have a re-look?

ஜனவரி 29th, 2009 at 17:50
ragothaman
  5  

Hi,
One of your silent admirers from PSVP group. Firstly kudos for maintaining a site like this. Very happy to see that you are putting so much effort and posting very frequently. Last year in August there was a seminar at madras sanskrit college where myself and plastics chandra participated and had a wonderful time listening to the stapathi who gave a talk titled “iconography of shiva” the highlight of the talk was about the same sculpture from Darasuram. He explained the marma sthanams and other details of this sculpture. So very happy to see this on your blog.

But, one comment from myside is that I donot see any difference between the two half of the faces. The reason is as follows:the side facing parvathi also has the brows arched in the same angles and the eyes are wide open. Lets imagine looking shiva not from the side angle but rotating the view so as to face him straight to straight. Then you could imagine that if half is in anger and other half smiling then it would look like the two-face from batman comics. (The dark knight effect….) What I would suggest for you to check your theory is to ask some one visiting tanjore to take a photograph of the sculpture with the close up of shiva’s face facing the camera. This will throw more light.

Looking forward to your interesting posts.

With Kind Regards,

Ragothaman

ஜனவரி 30th, 2009 at 11:06
  6  

dear ragothaman,

Greetings and welcome to the site. I will most certainly ask my friends to get better snaps to support the post. Meantime you could see below article of K Balu sir which came in the Hindu on this sculpture

http://www.hindu.com/thehindu/fr/2004/12/17/stories/2004121702601200.htm

you can also try to click on the image titled single fang

http://gallery.poetryinstone.in/d/3393-2/single+fang.jpg?g2_GALLERYSID=849a9213b34bfdd74fd6d80701e99201

to get a clearer view

rgds
vj

ஜனவரி 30th, 2009 at 13:09
  7  

simply superb! , waiting for the other one to come.

ஜனவரி 30th, 2009 at 16:29
  8  

Also seen in most of the Rajendra/ Rajaraja temples.

ஜனவரி 31st, 2009 at 0:36
ஜி.ஸன்தானம்
  9  

தாராசுரத்தின் மற்ற சிற்பங்களின் முழு அழகைக்காண கட்டாயம் ஒருமுறை நேரில் சென்று பார்வையடவேண்டும்.

ஜனவரி 31st, 2009 at 21:05
Sethuraman
  10  

That is divine! the sculpture must be at least a thousand years’ old but the divinity has not gone! we should be proud that we have this kind of heritage. Will our descendants be lucky to look at these after some hundreds of years?

பெப்ரவரி 2nd, 2009 at 16:49
  11  

நன்றி திரு ஜி.ஸன்தானம்,

விரைவில் இன்னும் ஒரு தாராசுரம் சிறப்பு சிற்பத்துடன் வருகிறேன்.

விஜய்

பெப்ரவரி 2nd, 2009 at 19:06
kalaivirumbi
  12  

I wonder with all of your efforts. go ahead. It is just like getting juice in desert not water. THIRUCHITRAMBALAM.

அக்டோபர் 27th, 2010 at 19:20
  13  

thanks Kalai virumbi - nice name by the way !!

vj

அக்டோபர் 28th, 2010 at 13:10

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி