Quantcast


அது என்ன சித்தன்னவாசல் ஓவியம் ?

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் பற்றி பதிவை வெகு நாட்களாக எழுதவேண்டும் என்று எனக்கு ஆசை. அங்கே அப்படி என்ன இருக்கிறது என்று நண்பர்கள் கேட்பார்கள். சரியான கேள்வி தான். திரு சுவாமிநாதன் அவர்கள் ஒருமுறை ஒரு மணிநேரம் விளக்கினர். பிறகு நண்பர் திரு இளங்கோவன் அவர்களது அருமையான பதிவும் படித்தேன்.

சித்தன்னவாசல்

எனினும் இதை பற்றி இணையத்தில் அதுவும் குறிப்பாக அங்கே உள்ள ஓவியங்கள் பற்றி இணையத்தில் எங்கும் எதுவும் இல்லையே என்பதால் இந்த பதிவை இடுகிறேன்.

இதன் தற்போதைய நிலைமை, கலை ஆர்வலர் சென்றாலே விரக்தி அடைந்து திரும்பும் நிலை - ஏன் தெரியுமா ? அங்கே அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்விதான் ? இதற்கு விடை அளிப்பது கடினம். அங்கே அப்படி என்ன இருந்தது என்ற கேள்விக்கு வேண்டும் என்றால் பதில் கூறலாம். கூறும் முயற்சியே இந்த பதிவு .

அங்கே ஒரு குகைக்கோயில், சில பல சமணர் படுக்கைகள், பழமையான கல்வெட்டுக்கள் என்று பல இருந்தும் என்னை மிகவும் கவர்ந்தவை அங்கே உள்ள ( இருந்த ) ஓவியங்கள். சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றி செவி வழி கூட செய்தி அறியாமல் பல தமிழரே இருக்கும் பொது இதை பற்றி வெளி உலகிற்கு தெரியாமலேயே போனது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதை விட சுவையான தகவல் - இவை அனைத்தும் சமணர்களின் பங்களிப்பாகும். ஆனால் இப்போது அங்கே என்ன இருக்கிறது?

sirigiyacelestials

அஜந்தா ஓவியங்கள் பாணியில் மிக அற்புத ஓவியங்கள் இருந்தன . அவை எங்கே போயின ? இலங்கையில் பல இடையூறுகள் நடுவிலும் நிற்கும் சிகிரியா மாந்தர்போல இவை ஏன் நிற்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் நின்ற இவை - வெள்ளையர்கள் வெளியேறிய பின்னரே சிதைந்தன. நம் கைகளாலேயே நம் கண்களைக் குருடாக்கி கொள்வது போல நம் ஆட்களே ஓவியங்களை சிதைந்துள்ளனர்.

அப்படி என்ன ஓவியங்கள் அங்கே உள்ளன - முதலில் , தூண்களை பார்ப்போம். தூண்களின் முகப்பில் நாட்டிய மங்கையர் இருவர் நடனமாடும் எழில்மிகு தோற்றம் தீட்டப்பட்டுள்ளன. இவை மிகவும் அழிந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

ஒவ்வொருவரை பார்ப்போம்.

முதல் மங்கை. என்ன தெரியவில்லையா ?

sittanavasal dancer1
sittanavaasal dancer 2
sittanavaasal dancer3

இப்போது

closeup of sittanavasal dancer
this is what is left - sittanavaasal dancer

அதுதான் இன்றைய நிலை.

சுமார் ஐம்பத்து வருடங்களுக்கு முன் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படம் மட்டுமே மிஞ்சி உள்ளது. சில கோட்டோவியங்கள்

line drawing
sittannavasal_dancer02

இவள் எப்படி இருந்திருப்பாள் என்பதை கற்பனை செய்து நான் தீட்டிய ஓவியம்.

a recreation
some experimentation

ஓவியம் காட்டும் அபிநயமும், முத்திரைகளும், ஆடல் அரசன் நடராசரின் தாண்டவத்தை நினைவுபடுத்துகின்றன. நாட்டியக் மங்கை பலவித அணிகலன்களை அணிந்துள்ள பாங்கு வியக்கத்தக்கது. பொன்னிறமான மேனியழகு புன்முறுவல் நெஞ்சத்தை ஊடுருவிப்பார்க்கும் நீண்ட நயனங்கள் குறுகிய இடை பாம்புபோல் நெளியும் கரங்கள், அங்க அசைவுகள் கண்களின் ஒளி இவையாவும் ஒன்று சேர்ந்து உயிரோட்டம் ததும்பும் இவள் தேவலோகத்திலிருந்து இறங்கிவந்து இன்னிசைக்கேற்றவாறு நடனமாடுவது போல் உள்ளது.

இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வழக்கிலிருந்த நாட்டிய பாவனைகளையும் நாட்டியக்கலை விதிகளையும் தெரிந்துகொள்ள இந்த ஓவியங்கள் நல்ல சான்று பகிர்கின்றன.

சித்தன்னவாசல் ஓவியங்களை வரைய உபயோகப்படுத்திய வண்ணங்கள் யாவும் இயற்கை கனிப்பொருள்களே ஆகும் கருப்புக்கு கரிப்பொடியும், சிகப்பு, மஞ்சள் நிறங்களுக்கு இவ்வண்ண காவிக்கற்களும் நீல நிறத்திற்கு நீலக்கல்லும் பிறவண்ணங்களுக்கு இந்த வண்ணங்களின் கலப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும் அமைதியையும் பண்பட்ட கலைத்திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காணமுடிகிறது.இந்திய ஓவியக்கலைப் பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கினை சித்தன்னவாசல் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

கலை உணர்வற்ற மூடர்களின் கருணையின்மையால் பெரும்பாலான ஓவியங்கள் சிதைந்து அழிந்துவிடட் போதிலும், இன்று நாம்காணும் எஞ்சியுள்ள ஓவியங்கள் அக்கால தமிழகத்தில் ஓவியக்கலை, நாட்டியக்கலை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள காலத்தால் முற்பட்ட சான்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது சிந்தைக்கு விருந்தளிக்க சித்தன்னவாசல் ஓவியக்கூடம் அன்புடன் உங்களை அழைக்கின்றது. முழுவதுமாய் ரசிக்க கொஞ்சம் கற்ப்பனை இல்லை நிறைய கற்பனைத் திறன் வேண்டும்.

தென்னிந்தியாவின் ஓவிய திறமைக்கு முடி சூடும் இந்த ஓவியங்கள் இப்போது நம் அறியாமைக்குத் தீனியாகி மாண்டுவிட்டன. மாண்டவர் மீண்டும் வருவாரோ ?

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, பெப்ரவரி 11th, 2009 அன்று 13:32 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 23 மறுமொழிகள்

manii
  1  

moment i saw sittannavasal, i remember a lyrics which says “sittannavaasalin oaviyamae , sindhaikul ooriya kaaviyamae !!)

wow, what a beauty, this is surely one of the last and lost treasures of art of olden days.

modern day sculptors (i mean this young generation) write their names and their lover names on the rocks ( u find in beaches, monuments, mountains) without knowing the value of art and love

good work vijay !!!

பெப்ரவரி 11th, 2009 at 13:53
Vamsee
  2  

What a wonderful post, Vijay. Your description of the dancing lady is beautiful!

I wish there were more people in India, interested in preserving ancient art.

பெப்ரவரி 11th, 2009 at 14:02
pari vallal
  3  

imm what we do sir ????

பெப்ரவரி 11th, 2009 at 14:10
Shriram
  4  

Nice colours, Vijay! :)

பெப்ரவரி 11th, 2009 at 14:42
mouli
  5  

Sittannavasal is truly a masterpiece vijay..
our people sadly dont know the value of these artworks..defacing any such art or sculpture comes very easily to our youngsters.shame on us.
You must also post on the beautiful fresco which has jain monks picking lotus flowers from a pond and the various creatures(fishes,swans, elephants etc) depicted as living in/near the pond.

பெப்ரவரி 11th, 2009 at 15:18
தமிழ்த்தேனீ
  6  

கலை உணர்வற்ற மூடர்களின் கருணையின்மையால் பெரும்பாலான ஓவியங்கள் சிதைந்து அழிந்துவிடட் போதிலும்,

வருத்தப் படவேண்டிய செய்தி

அன்புடன்
தமிழ்த்தேனீ

பெப்ரவரி 11th, 2009 at 15:27
Navin
  7  

the features look suspiciously Caucasian, add to that, your Blonde Colouring of her hair, Indian women were the most beautiful, Then , Now and forever.

பெப்ரவரி 11th, 2009 at 15:37
Dhivakar
  8  

விஜய்,
இந்த ஓவியத்தைப் பற்றி எழுதி மின்னுலகத்தில் முதன்முதலாக வெளியிட்டமைக்கு நன்றி!

சமணர்கள் சிற்பக் கலைக்கும் ஓவியத்திற்கும் மிகச் சிறந்த சேவை செய்திருக்கிறார்கள் என்பதற்கு தமிழகத்தில் சித்தன்னவாசல் என்றால், கர்நாடகத்தில் இந்திரகிரி மற்றும் சந்திரகிரி (சரவணபெலகுலா) அருகில் உள்ள ஓவியக்கலைகளே சாட்சி. நல்லகாலம் - கர்நாடகத்தில் சைவம் ஆதிதொட்டே சமணர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்களென்றாலும் கலைகளை அப்படியே பாதுகாத்தனர். இன்னமும் அங்கு சமணர்களின் ஒன்பதாம் நூற்றாண்டு ஓவியங்களைக் காணலாம். ஒரு ஓவியம் என்னைக் கவர்ந்தது - அந்தக் காலகட்டத்தில் பெண்கல்விக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பது. இரண்டு பெண்மணிகள் தலையில் முக்காடிட்டு அமர்ந்து ஆச்சாரியரிடம் ஸ்ரமணம் செய்யும் காட்சி.(ஒன்பதாம் நூற்றாண்டு)

சித்தன்னவாசல் முற்கால பாண்டியர்கள் காலமல்லவா.. இவைகளைப் பற்றி இன்னமும் ஆராய்ச்சி செய்யவேண்டும். நிறைய தகவல் கிடைக்கும் என நம்புகிறேன்

அமளிகள் அதிகம் நடைபெறும் ஸ்ரீலங்காவில் கூட ஓவியங்கள் அழகாகப் பாதுகாக்கப்படுவதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். தமிழ்நாட்டில் அந்த நிலை இல்லாதது குறித்து வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது. சுதந்திரம் வந்த நாளிலிருந்தே அரசியல் மட்டுமே தமிழ்நாட்டில் பிரமாதமாகப் பேசப்பட்டு காலத்தைக் கடத்தியாகிவிட்டது. கோவில் பொக்கிஷம் எல்லாம் எப்போதோ காணாமல் போய்விட்டன. அழகான சிலைகளெல்லாம் மேற்கத்திய ரசிகர்களுக்கு ஏராளமான அளவில் கடத்தப்பட்டு விற்பனை செயவதை எல்லோருமே அறிவார்கள்தான். இந்த லட்சணத்தில் இவர்கள் சித்தன்னவாசலின் தூண்களையாவது விட்டுவைத்தார்களே என்று சந்தோஷப்படுவோமாக..

திவாகர்
பி.கு: அந்தப் படங்களுக்கு நீங்கள் வண்ணம் கொடுத்து வரைந்திருப்பது நன்றாக வந்திருக்கிறது.

பெப்ரவரி 11th, 2009 at 16:01
Abi
  9  

Vijay. It’s just awesome. Your portrayal about the dancing lady is stunning and sexy! I can fortune a good outlook in movie also (Like Manirathnam ).

பெப்ரவரி 12th, 2009 at 7:09
Nirmalaa Shrethar
  10  

good one vj, unfortunately anything from South is rejected….see how Ajanta paintings has been preserved and protected…..as Dhivakar wrote…contribution of Jain’s towards art is splendid…thanks for bringing it to notice

பெப்ரவரி 12th, 2009 at 12:53
  11  

hi mani - thanks. We got to educate people to respect and appreciate art.

hi vamsee, True. We got to develop this among our kids. They are the future, but will these treasures sustain till then is the question!!

hi pari, Immdly - we have to develop awareness. pressurise governments to allocate and then spend the funds to preserve / protect these beauties.

thanks sri. little bit of manual coloring and then lot of experimenting with the pc..

sure mouli, thats why this is part 1. will feature them all in the coming weeks.

nandri theni sir,

navin - beauty lies in the eyes of the beholder i guess!!

thanks dhivakar sir, will try and find out more.

Abhi - all praise to the artist who drew her !!

Hi nirmala - Ajantha hasnt fared too well either, just that the sheer volume of works there allowed some to escape. will post that as well

tks everyone

rgds
vj

பெப்ரவரி 12th, 2009 at 19:56
Sivaram Kannan
  12  

Sad Vj. I did not understand when you said that you will cry on seeing the post. I choked on seeing the neglect. It is really sad.

பெப்ரவரி 14th, 2009 at 16:53
  13  

நல்ல பதிவு.

நானும் சித்தன்னவாசல் மூன்றுமுறை சென்று இருக்கிறேன். குகைகள், கற்படுக்கைகள், ஓவியங்கள் என்று பார்க்கத்தான் நாம் சித்தன்னவாசல் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். இவற்றை எல்லாம்தவிர இன்னொரு பிரபலமில்லாத விசயமும் இவ்விடத்திற்கு உண்டு. நான் இரண்டாவது தனியாக சென்றது அதற்காகத்தான்.

வெறும் இருபது ரூபாய் பணத்துடன் கிளம்பினேன். சமணர் படுக்கையின் காவலர், அங்கு கடை வைத்திருக்கும் பெண், ஐஸ்காரர், ஓவியங்களை விளக்கிச் சொல்வபர் யாரைக் கேட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் முழுக்க மதிய உணவில்லாமல் அழைந்து, திரும்பும் வழியில் இரண்டு ரூபாய் பஸ்ஸிற்கு போதாமல், ஐந்து கிலோமீட்டர் நடந்து வீடு வந்து சேர்ந்தேன்.

பொதுவாக தேச எல்லை வரைபடங்கள் தயாரிக்கப்படும்போது, அசையா பொருளகளான மலை, கடல் போன்றவற்றைத்தான் உபயோகப்படுத்துவார்கள். எஸ்.ராமகிருஷ்ணணின் தேசாந்திரி புத்தகத்தில் கூட, இந்திய தேசிய வரைபடம் வரையும் பணி, சென்னை பரங்கிமலையில் தொடங்கப்பட்டதாகவும், அதன் நினைவாக ஒரு கல் இருப்பதாகவும் கூறியிருப்பார்.

அதே இந்திய வரைபடம் வரைய உதவிய சித்தன்னவாசல் மலையிலும் ஒரு கல் உண்டு. அதைதேடித்தான் இரண்டாம் முறை சென்றேன். இதுவரை அது சரியான தகவலா என்றுகூட எனக்குத் தெரியாது. இருந்தும் இன்னும் தேடுவேன்!

-ஞானசேகர்

பெப்ரவரி 15th, 2009 at 1:43
  14  

VJ one big doubt…
Jains painting Dancers?…. Weren’t they against music and dance and other earthly pleasures….and that too in their temples?

பெப்ரவரி 18th, 2009 at 20:13
  15  

hi vairam,

Good question. Sittanavasal is a true jaina cave, infact it has an inscription which states that the Pandya king renovated this cave! So one line of argument could be that this was later addition. But the other motiff ( yet to feature them) - the one mentioned by Mouli is a true Jain subject and hence all could be taken as Jaina art. Guess we got to search more.

rgds
vj

பெப்ரவரி 18th, 2009 at 20:19
Sreenivasarar s
  16  

Pleasae see the following link.It might interest you:
http://ssubbanna.sulekha.com/blog/post/2008/12/the-legacy-of-chitrasutra-four-sittannavasal.htm

பெப்ரவரி 19th, 2009 at 11:42
  17  

சித்தன்னவாசல் ஓவியம் எப்படி இருந்திருக்கணும் என நீங்கள் வரைந்திருப்பது மிக அழகாய் வந்துள்ளது. அஜந்தாவும் கிட்டத் தட்டச் சீரழிந்து விட்டது. திருக்குற்றாலம் சித்திரசபை நடராஜரின் மேலே பல கீறல்கள், எழுத்துக்கள், மக்கள் தங்கள் பெயரைப் பொறித்து அழகு பார்க்கும் இடமாக ஆக்கிக் கொண்டுள்ளனர். 64 திருவிளையாடல்களும் வரைந்துள்ளனர். ஆனால் காணக் கிடைப்பதோ?? நமக்கு நம் கலையின் பாரம்பரியமே தெரியவில்லை. அதையும் அரசியலாக்கிக் கொண்டு உள்ளதையும் அழிக்கின்றோம். திவாகர் சொல்வது போல் கர்நாடகாவில் கலைச் செல்வங்கள் கவனமாய்ப் பாதுகாக்கப் படுகின்றன.

மார்ச் 1st, 2009 at 13:54
  18  

கண்ணில் நீர் வருகின்றது மீண்டும் பார்க்கும் போது! :((((((((

மார்ச் 1st, 2009 at 13:55
av.arvell
  19  

hey i’ve been there. (travelled some 200 kms just to visit this place. and it was totally worth it) the place has jain rock beds on a nearby hillock, a beautiful pond and lots of peacocks..its quite close to viralimalai, famed for its peacocks. and this awesome guide showed us leaves used for the natural dyes . but ure not allowed to take pictures :(

மே 23rd, 2009 at 19:40
Thenu
  20  

actually sittanavasal was not known by me before my university took me to the place for my evs field study……… when v reached the place we were astonished to see that r govt undertook and made the place clean and tidy for the tourists to come and at the sight of those paintings all our mouth were wide open since it was done by the plant pigments they got in and around the place…….!!!!!
thanks to you since your info helped me to submit my project report since we weren’t allowed to take pics of those paintings [:)]

ஏப்ரல் 5th, 2010 at 22:26
tisu
  21  

superb.ellam vasitha pin partha pole ullathu

அக்டோபர் 13th, 2010 at 15:48
akshayah
  22  

very useful information

அக்டோபர் 26th, 2010 at 20:41
  23  

அருமை. சித்தன்ன வாசல் சென்று வந்தது போல் உள்ளது. இவ்வார விடுமுறையில் நிச்சயம் சென்று விட்டு வருவேன். பகிர்வுக்கு நன்றி.

ஆகஸ்ட் 4th, 2011 at 21:22

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி