Quantcast


நண்பர் திரு சதீஷ் அவர்களின் படங்கள் கொண்டு இன்று இன்னும் ஒரு தாராசுரம் சிற்பம். திருநீலன்கண்ட நாயனார் புராணம். சிறு சிற்பம்.

முதலில் சிற்பத்தை பார்த்துவிட்டு கதைக்கு போவோம்.

தொலைவில் இருந்து

thiruneelakantar darasuram

சற்று அருகில்

thiruneelankantar closer

இன்னும் அருகில்

thiruneelakantar panel darasuram

சரி - இதோ சிற்பம்

thiruneelakantar

மிகவும் சிறப்பாக, முக்கியமான நிகழ்வை கொண்டு கதையை விளக்கும் காட்சி - ஒரு புறம் கோயில், மறு புறம் ஒரு தடியை பிடித்துக்கொண்டு குளத்தில் இருந்து வெளி வரும் தம்பதியர்.

முழு கதையையும் படிக்க

http://ta.wikipedia.org/

திருநீலகண்ட நாயனார் என்பவர் 63 நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களில் ஒருவர். இவரைப் பற்றிய குறிப்பு, 8 ஆம் நூறாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலிலும், பின்னர் 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் குறிப்புகள் உள்ளன. இவர் சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்தவர் என்பது மேலுள்ள நூல்களில் உள்ள செய்தி.

“திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்” - திருத்தொண்டத் தொகை

“சொல்லைச் சிவன் திரு ஆணைதன் தூம்மொழி தோள் நசையால்
ஒல்லைத் துறந்து உரு மூத்தற் பின் உமைகோன் அருளால்
வில்லைப் புரைநுத லாளொடு இளமை பெற்று இன்பம் மிக்கான்
தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே” - திருத்தொண்டர் திருவந்தாதி

சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்த ஓர் அடியவர் இருந்தார். அவர் சிதம்பரத்துச் சிற்சபையில் சிவகாமியம்மையார் காண அற்புதத் தனிகூத்தாடும் நடராசவள்ளலை நாளும் வாழ்த்தி வழிபடும் நலத்திறன் மிக்கவர். அன்பர் பணி செய்வதும் அவ்வடியாரின் ஓர் அருஞ்செயல். தாம் ஆக்கும் ஓடுகளிற் சிறந்தனவற்றை அடியவர் அமுது செய்வதற்காக இலவசமாக அளிப்பது அவர்தம் வழக்கம். அவர் சிவபெருமானது எண்ணில்லாத சீர்மைகளுள் திருநீலகண்டத்தைப் பெரிதும் நயந்தார். அன்பாளர்கள் அமுது செய்தற் பொருட்டு பெருமான் நஞ்சுண்ட பெருங்கருணைத் திறத்தின் அடையாளமல்லவா திருநீல கண்டம்! ஆதலால் திருநீலகண்டம் என்பதைப் பெருமந்திரமாகக் கொண்டு ஒழுகினார். இதனால் அவருக்கு திருநீலகண்டக்குயனவார் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அவருக்கு அருந்ததியைப் போன்று கற்பிற் சிறந்த அமைந்தார். அவரிடம் ஓர் பலவீனமும் இருந்தது இளமை தூர்ந்த அவர் இன்பத்துறையில் எளியராயினமையே அது. அவர் தம் புற ஒழுக்கத்தை அறிந்த மனைவியார் மானத்தால் நொந்தார். கணவனுக்கு வேண்டும் பணிகளை எல்லாம் குறைவுறச் செய்து உடனுறைவுக்கு இசையாதிருந்தார். ஒரு நாள் நாயனார் அவரது புலவியைத் தீர்ததற் பொருட்டு அருகணைத்து வேண்டும் இரப்புரைகளைக் கூறித் தீண்டுவதற்குச் சென்றார். உடனே “எம்மைத் தீண்டுவாராயின் திருநீலகண்டம்” என அம்மாதரசி ஆணையிட்டார். அவ்வாணைக்கு நாயனார் கட்டுண்டார். மனைவியாரை அயலவர் போல் நோக்கி எம்மை எனச் சொன்னமையால் “எம் மாதரையும் தீண்டேன்” உறுதி கொண்டார்.

இளமை மிக்க நாயனாரும், மனைவியாரும் உடனுறைவின்றி வேறு வேறாக தம் மனையிலே (வீட்டிலே) வாழ்ந்தனர். தமது இவ்வொழுக்கத்தை அயலறியா வண்ணம் பேணி நடந்தனர். ஆண்டுகள் பலவும் செல்ல இளமை நீங்கி முதுமையெய்தினார். முதுமையெய்தி உடல் தளர்ந்த நிலையிலும் திருநீலகண்டத்திலும் கொண்ட பற்றுதியும் தம் உறுதி தவறாது ஒழுகினார்.

இவர் தம் செயற்கருஞ்செயலை உலகத்தவர்களுக்கு விளக்கம் செய்ய இறைவர் திருவுளம் பற்றினார். ஒரு சிவயோகியார் வேடம் பூண்டு நாயனரது மனைக்கு எழுந்தருளினார். நாயானார் அவரை எதிர்கொண்டு வணங்கி முறைபப்டி பூசனை செய்து “அடியேன் செய்யும் பணி யாது?” என இரந்து நின்றார். சிவயோக்கியார் தம்மிடமிருந்த ஓட்டினை அன்பரிடம் கொடுத்து “இத்திருவோடு ஒப்பற்றது இதனைப் பாதுகாப்பாக வைத்து நாம் வேண்டும் போது தருக” எனக் கூறிச் சென்றார். பல நாட் சென்ற பின்னர் ஓட்டினை வைத்த இடத்தில் இராத வண்ணம் மாயஞ்செய்து விட்டுச் சிவயோகியார் மீண்டும் வந்தார். வந்த சிவயோகியாரை வரவேற்று பூசனை செய்து பணிந்து நின்ற நாயனாரிடம் “யான் முன்பு உன்னிடம் தந்த ஓட்டினைத் தருக” எனக் கேட்டார். திருநீலகண்டர் வைத்த இடத்தில் எடுப்பதற்காகச் விரைந்து சென்றார். அங்கே ஓட்டினைக் காணாது திகைத்தார். அங்கு நின்றவரிடம் கேட்டும் எங்கும் தேடியும் காணதவராய் யாது செய்வதென்றறியாமல் அயர்ந்து அங்கேயே நின்றார். சிவயோகியார் “நொடிப்பொழுதில் எடுத்து வருவதாகச் சென்றீர்; யாது செய்கின்றீர்” என அழைத்தும்; அருகே வந்து கைதொழுது “சுவாமி பாதுகாப்பாக வைத்த இடத்தில் ஒட்டினைக் காணவில்லை. வேறிடந்தேடியும் அகப்படவில்லை, அந்தப் பழைய ஓட்டிற்குப் பதிலாக நல்ல புதிய ஓடு தருகிறேன். அதனை ஏற்று பிழை பொறுத்தருளுங்கள்” என இரந்து நின்றார். சிவயோகியார் “யான் தந்த மண்னோடன்றி பொன்னோடு தந்தாலும் கொள்ளேன் தந்ததையே கொண்டுவா” எனக் கூறினார். திருநீலகண்டர் “பெரியோய் தங்கள் ஓட்டைத் தரும்வழி காணேன். வேறு நல்ல ஓடு தருகிறேன் என்றாலும் ஏற்றுக் கொள்கின்றீர்கள் இல்லை” எனக் கூறி உணர்வொடுங்கி நின்றார். புண்ணியப் பொருளாக வந்த சிவயோயார் “யான் தந்த அடைக்கலப் பொருளைக் கவர்ந்துகொண்டு, பாவத்திற்குச் சிறிதும் அஞ்சாது பலபல பொய்மொழிகள் கூறுகிறாய், யாவரும் காணத் திருவோட்டை வாங்காது இவ்விடம் விட்டுப் போகேன்” என்றார். அதற்குச் “சுவாமி! தேவரீரது ஒட்டை அடியேன் கவரவில்லை. இதை எப்படித்தெரிவிப்பது? சொல்லும்” என நாயனார் கூறினார். “உன் அன்பு மைந்தனைக் கைப்பிடித்துக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்” எனச் சிவயோகியார் கூறினார். “அப்படிச் செய்வதற்கு எனக்கு மகன் இல்லையே! என் செய்வது” எனச் சிவயோகியாரை நோக்கினார் திருநீலகண்டர். “உன் மனைவியின் கையைப் பற்றி குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்” எனச் சிவயோகியார் கூறினார். “நானும் என் மனைவியும் எங்களிடையேயுள்ள ஒரு சபதத்தால் கைபிடித்துச் சத்தியம் செய்ய முடியவில்லை. நான் தனியே குளத்தில் மூழ்க்கிச் சத்தியம் செய்து தருகிறேன் வாரும்” என நாயனார் அழைத்தார். “தந்த ஓட்டைத் தராமல் இருக்கிறாய்; அதனை நீ கவரவில்லை எனின் உன் மனைவியின் கைப்பிடித்து சத்தியஞ்செய்துதரவும் தயங்குகின்றாய். தில்லைவாழந்தணர்கள் கூடியிருக்கும் பேரவையிலே இவ்வழக்கினைச் சொல்லப்போகின்றேன்; நீ அங்கு வா” என அழைத்தார் சிவயோகியார். திருநீலகண்டர் அதற்கிசைந்து அவருடன் சென்றார்.

தில்லைவாழந்தணர் சபையை அடைந்த சிவயோகியார் “இந்தக் குயவன் யான் அடைக்கலம் வைத்த ஓட்டைத் தருகிறானில்லை. அதனை அவன் கவர்ந்துகொள்ளவில்லை என்று மனைவியின் கைப்பிடித்து சத்தியம் செய்கிறானுமில்லை” என்று தம் வழக்கினைக் கூறினார். அதுகேட்ட அந்தணர்கள் திருநீலகண்டரை நோக்கி “நீர் நிகழ்ந்ததைக் கூறும்” என்றனர். “திருவுடை அந்தணர்களே இவர் தந்த திருவோட்டை மிகப்பாதுகாப்பான இடத்தில் வைத்தேன். அது மருமமாய் மறைந்து விட்டது. இதுவே நிகழ்ந்தது” எனத் திருநீலகண்டர் உள்ளதைக் கூறினார். “அப்படியாயின் இவர் கேள்விப்படி உம்முடைய மனைவியின் கைப் பிடித்து குளத்திலே மூழ்க்சிச் சத்தியம் செய்து கொடுத்தலே முறை” எனத் தில்லைவாழந்தணர்கள் தீர்ப்பளித்தனர். அது கேட்ட திருநீலகண்டர் தம் மனைவியைத் தான் தீண்ட இயலாத சபத்தை வெளிபடுத்த முடியாதவராய். “பொருந்திய வகையால் மூழ்கித் தருகிறேன்” எனச் சொல்லி சிவயோகியாருடன் தம் வீட்டை அடைந்தார். வீட்டில் இருந்த மனைவியாரையும் அழைத்துக் கொண்டு தில்லைத் திருப்புலீச்சரக் கோயிலின் முன்னுள்ள குளத்தை அடைந்தார். திருநீலகண்டத்தின் ஆணையினைக் காத்தற்பொருட்டு மூங்கில் தடியொன்றில் ஒரு முனையைத் தாமும் மறுமுனையை மனைவியும் பிடித்த வண்ணம் குளத்தில் இறங்கினர். அப்பொழுது சிவயோகியார் “மனைவியின் கையைப் பிடித்து மூழ்குக” என வற்புறுத்தினார். அது செய்யமாட்டாத சபதத்தை அங்குள்ளோர் அனைவரும் கேட்கும் வண்ணம் வெளிப்படுத்தித் திருநீலகண்டர் மனைவியாருடன் குளத்தில் மூழ்கினார். மூழ்கிக் கரையேறும் திருநீலகண்டரும் மனைவியாரும் முதுமை நீங்கி இளமைக் கோலத்தில் தோன்றினார்கள். அந்த அற்புதக் கண்ட அனைவரும் சிவயோகியாரைக் காணாது மருண்டு நின்றனர். மறைந்த இறையவர் உமையம்மையாரோடு, வெள்ளையெருதின் மீது தோன்றி ‘புலனை வென்ற பெரியோர்களே! இவ்விளமையோடு என்றும் எம்மை நீங்காதிருப்பீர்களாக” என்றருளி மறைந்தருளினார். நாயனாரும் துணைவியாரும் இவ்வுலகிலே இறைபணியாற்றிச் சிவலோகமடைந்து பெறலரும் இளமை பெற்றுப் பேரின்பமுற்றனர்.

படங்கள் : திரு சதீஷ் மற்றும்
http://www.kumbakonam.info/kumbakonam/darsuam/index.htm

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 15th, 2009 அன்று 6:58 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 7 மறுமொழிகள்

  1  

I think I have taken a pic of this ..tho am not sure..interestg story ..

பெப்ரவரி 16th, 2009 at 10:07
  2  

அருமையான சிற்பம், ஒரு சிற்பத்தினாலே முழுக்கதையையும் சொல்லும் சிற்பியின் திறமை பாராட்டுக்குரியது.

மார்ச் 6th, 2009 at 19:59
swarnamalya ganesh
  3  

am new to this site.However I wish to thank Mr.Vijay for inviting me to see this site and also my wishes for the awesome work you are doing. I recently read this article by Prema Kasturi about the indian- cambodian connections. a lot of discussions have been going on on PSVP abt it however i though Id share my view here. I know that it is out of context to the above panels but it is still abt darasuram.
Kasturi has mentioned a stone that was gifted to Kulotunga I by Suryavarman II, a cambodian king while kulotunga was reconstrcting the Chidambaram Shiva Temple.

There is a similar stone at the Darasuram Airavatesvarar temple. It is placed near the bali peetam and the Nandi. According to Dr.Kudavoil Balasubramaniam this stone too was gifted to kulotunga by a cambodian king along with the chidambaram stone. It was perhaps brought to darasuram later while rajarajan II was building it.

Ottakottar in Takkayagabarani mentions Rajarajan II’”S construction of a chariot for the chidambaram and the plans of Kulotunga II to construct a seven tier tower for the Chidambaram temple. we do not know if he has made any mention of a stone gifted to the cholaz by a cambodian king being brought to darasuram. but both the stones at chidambaram and darasuram are very identical. however i did not look for any inscriptions on the stone so far. if anyone has got any info that would be great. do see the article of prema kasturi on this link
http://www.hindu.com/mag/2009/03/29/stories/2009032950240800.htm

ஏப்ரல் 1st, 2009 at 17:01
  4  

thanks lakshmi.

Geetha amma, mikka nandri

Dear Swarnamalya, we are honored to have you here. welcome.

Recapping the inscription

1) South Indian Shrines By P. V. Jagadisa Ayyar

A precious stone given to chola king rajendra by king of kambojia
was inserted into the hall of god.

http://books.google.com/books?

2) also checked the reference in - Hultsch E., (Ed) Epigraphia
Indica, Vol V, 1889-99, pp 105-106; Ancient Kamboja, People and the
Country, 1981, p 10, 333]

(L. 10.) A stone was exhibited by the Kamboja king before the
glorious Rajendra- Choladeva* This (stone) was, by order of the lord
Rajendra choladeva, placed in front of the shrine of the god who is
the lord of Tirucitrambalam, This stone was placed in the
upper front row of stones of the hall opposite the shrine.

trying to get the actual tamil words as below:

Rajendra sola devarku kambosarajan kaatchiyaaga kattina kallu, idu
udaiyar rajendra sola devar tiruvaai molindaruli udaiyar
tiruchrirramblam udaiyar koyilil mun vaittadu indakkallu tiruvedir
ambalattu tiru kkai sarattil tiru mum pattikku melai ppattiyille
vaittadu
===========================================

The first portion of the inscription records donations made to the
temple at Chidambaram
Tillai, 11, 7 and 9, or Tiruchchirrambalam, 1. 12) by Kundavai
Alvar, (the daughter of)
rajaraja and yonnger sister of Kulottunga-Chola. She presented the
god with a golden
easel (1. 3) and a mirror (1. 10) and covered (the roof of) the
shrine with gold (L 8),
the second portion (11. 10-14) states that a stone which the king of
Kamboja had given to
rajendra Chola was, by order of the latter, inserted into the wall
of a hall in front of the shrine,
Of the names mentioned in the preceding paragraph, Kulottunga-Chola,
(1, 1 f.) and rajendra chola (11. 10 and 11) refer to the reigning
king Kulottunga-Chola I., who is known to hv
have originally borne the name Rajendra-Chola (II,) and to have
subsequently assumed the
name Kulottunga. 4 Rajaraja, the father of Kulothunga’s younger
sister Kundavai (11, 2 and
is identical with the Eastern Chaiukya king Rajaraja I. (A.D.
1022-1063), 5.

>>>>>>>>>This is on the gift of the chairot incl a artists impression

http://exhibitions.nlb.gov.sg/kaalachakra/alliances_and_rivalries.htm

Karanthai Copper Plate

Period: Early 11th Century CE
Script: Tamil Grantha
Language: Sanskrit, Tamil
Found in: Puttur, Tamilnadu, India
Material: Copper
Present Location / Lender Government Museum, Chennai, Tamilnadu, India.

The Karanthai copper-plate charter issued by Rajendra Chola I in the 8th year of
his reign (1012-1044 CE) contains a significant verse in its separate Sanskrit
section.

The verse reads as follows:
Kamboja-rajo ripu-raja-send jaitrena yen a ajayad ahaveshu
tam prahinot prarthita-mitra-bhavo yasinai
ratham rakshitum - atma-lakshmixh.

It says that in order to seek the Chola’s friendship and also in order to
protect his own kingdom (lakshmi), the king of Kamboja presented to Rajendra
Chola a chariot with which he had vanquished his enemies in many battles.

The danger that threatened Kamboja kingdom, which prompted Kamboja King
Suryavarman I to solicit Rajendra Chola’s friendship, is not mentioned in the
inscription.

ஏப்ரல் 1st, 2009 at 17:54
DHIVAKAR V
  5  

திருநீலகண்டரின் கதை எனக்கு கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளைத்தான் நினைவுப்படுத்தும் விஜய்!
‘நிலவைப்பார்த்து வானம் சொன்னது, என்னைத் தொடாதே, நிழலைப்பார்த்து பூமி சொன்னது என்னைத்தொடாதே, என்று சொல்லி விட்டு கவிஞர், ‘திருநீலகண்டரின் மனைவி சொன்னது’ என்று முடிப்பார். எந்த மனைவி அப்படி உரிமையை மறுத்துப் பேசமுடியும், அதுவும் சிவபக்தரின் வீட்டில் அப்படி நடக்க முடியுமா.. சிவன் சுந்தரரின் காதலுக்காக பரவையாருக்கு தூது சென்றவன். மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல்களில் இந்த சிவ-சக்தி மகிமை ‘நீரும் அலையுமாக’ வர்ணிக்கப்படுகிறது. நீரிருந்தால் அலை வரும். அலை வராவிட்டால் நதி நீரோட்டம் இல்லை. எத்தனையோ செய்திகள் இந்த சிற்பங்கள் மூலம் பாடம் படிக்கலாம். முக்கியமாக குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கவேண்டும் என்பதை சிற்பிகள் இந்தக் கதை மூலம் சொல்கிறார்கள். எத்தனை தூய உள்ளம் கொண்டவர்கள்..

நல்ல கதை.. நல்ல சிற்பங்கள்.. வாழ்த்துகள்

திவாகர்

ஆகஸ்ட் 4th, 2009 at 16:11
jayakumar
  6  

Regarding Karanthai copper plates,i wish to state that,for more than seventy five years these plates were in the hands of Karanthai Tamil Sangam.The inscriptions of these plates were published by Karanthai Tamil Sangams monthly Tamil Pozhil in 1954 itself.Since these plates were in the custody of Karanthai tamil Sangam these plates are called Karanthai Copper Plates.In the year 1995 these plates were handed over to the Govt. Now these plates are diplayed in the Govt.Musium,Chennai

அக்டோபர் 18th, 2010 at 20:59
  7  

thanks Mr Jayakumar for the informations.

rgds
vj

அக்டோபர் 19th, 2010 at 6:59

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி