Quantcast


சித்தன்னவாசல் பற்றிய எந்தன் முதல் பதிவுக்கு ஆதரவு தந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி! சித்தன்னவாசலின் சோகக்கதையை கலையுள்ளம் கொண்ட யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? இதோ இன்னொரு பதிவு. கடைசியாகக் காணப்படும் கோலங்கள் கலைப் பார்வைக்காக மட்டுமே என்பதனை முன்னமேயே சொல்லிவிடுவது நல்லது.

நான் இந்த அழகியை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன், சில தெளிவுகள்.

நீங்கள் காண்பது ஒரு மதத்தினர் சம்பந்தப்பட்டது என எண்ணாமல் வரைந்தவர் தம் கலைத் திறனைக் காண்பிக்கும் சித்திரமாகவே மனதில் கொள்ளவேண்டும். நிர்வாணம் என்பதே அலங்கோலம், அருவருப்பு, கவர்ச்சியின் உச்சகட்டம் என்பதெல்லாம் தற்போதைய கணிப்புதானே தவிர பழைய காலங்களில் அதனை அழகாகக் காட்டும்போது வெகுவாகவே ரசித்ததாகவே தெரிகிறது. நாகரீகம் உலகில் எங்கெல்லாம் வெகுவாக போற்றப்பட்டதோ அங்கெல்லாம் கூட நிர்வாணக் கலையும் வெகு அழகாக ரசிக்கப்பட்டு போற்றப்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். கலை வெளிப்பாடு என்பது கலைஞனின் ஆழ் உள்ளத்தில் எழுந்து அது தூய்மையான எண்ணமாக வெளிக் கொணரும்போது அங்கு அருவருப்பு என்று சொல்லுக்கே இடமில்லை. கலைஞனின் கைவண்ணம் காவியம் போலவே நம் கண்களுக்கு விருந்தாகப் படுகிறது. அந்தக் கலை ஒரு நிர்வாணமான ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் அந்தக் கலைஞனின் கையிலிருந்து பெறப்படும்போது அவன் திறமையை நாம் போற்ற வேண்டும். அப்படிப்பட்ட கலைஞன் யுகத்துக்கு ஒருவனாகக் கூட தென்படலாம்.

சித்தன்னவாசலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். கலைஞனின் ஞானத்தை நாமும் போற்றலாமே.

வழக்கம் போல தொலைவில் இருந்து நாம் அருகில் செல்வோம்.

sittanavaasal dancer3
sittanavasal dancer2
sittanavaasal dancer 23
sittanavaasal dancer234

“என்னடா ஒண்ணுமே தெரியலை?” என்று உங்கள் குரல் கேட்கிறது , இன்று நீங்கள் அங்கு சென்றால் இப்படி தானே இருக்கும். சரி சற்று அருகில் செல்வோம்.

sittanavaasal dancer 23435
sittanavasal dancer 23456

பெரிய பில்ட் அப் கொடுத்துட்டு வெட்டி சுவரை காட்டுகிறானே இவன் என்று நினைக்காதீர்கள் . இந்த அவல நிலைதான் இவளின் நிலை.

sittannavasal_dancer

கொஞ்சம் வண்ணம் தீட்டுவோம். கையில் முதலில் தீட்டி பிறகு கணினியில் (திரு அசோக் அவர்களுக்கு நன்றி.) இப்போது ..

artist impression

பாருங்களேன்.. அந்த அழகியின் ஒயிலான இடை, கவர்ச்சியால் தன்னை நோக்கி அழைக்கும் கண்கள், ஒரு பக்கம் சற்றே சாய்ந்த நிலையில் ‘என்னைப் பாராயோ’ என்பது போல அந்த அழகியின் முகம், வலது கையை மூடிய அழகு, ஒன்றைப் புகழ்ந்தால் இன்னொன்று கோபிக்குமோ என்ற நிலையில் அவள் ஒவ்வொரு உயிர்த் துடிப்பான அங்கமும் எந்த கலை ரசிகனையும் எங்கெங்கோ அழைத்துச் செல்லுகிறதே..

எனினும் இந்த அழகு ஓவியம் கலைந்த சிதைந்த நிலையை பார்க்கும் பொது நெஞ்சில் ஒரு சோகம், கண்களின் ஓரத்தில் சிறு கண்ணீர்த் துளிகள் … இந்த அற்புத வடிவங்களை அழிய நாம் விட்டுவிட்டோமே !

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, பெப்ரவரி 18th, 2009 அன்று 20:05 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 11 மறுமொழிகள்

  1  

VJ you could have just left it without any justification of why you added last two fotos….
people by just seeing the photos will understand the beauty of the image…it is absolutely beautiful….

பெப்ரவரி 18th, 2009 at 20:09
raju rajendran
  2  

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்‍ –சித்தன்ன வாசல் அழகி

பெப்ரவரி 19th, 2009 at 2:30
Navin
  3  

VJ, the painting seems to be drawn on top of a pillar supporting the roof, what kind of vandal would take the trouble of climbing up there and destroy such a glorious piece if work

பெப்ரவரி 19th, 2009 at 10:31
Satish Kumar A
  4  

Beautiful Viajy. Though we lost a lot, its not too late. We can still try to protect the remaining treasures. Surely such posts will bring some awareness to any person with a basic common sense (but thats the uncommon thing found amoung common people :) ).

பெப்ரவரி 20th, 2009 at 0:31
Sivaram Kannan
  5  

I just getting redundant with my comments of sadness here. :(

On the positive side, great to see the work reproduced. Thanks to Ashok for the beautiful pictures.

Vj, when do you think this would have been painted?

பெப்ரவரி 20th, 2009 at 7:56
manii
  6  

enna vilai azhagae !!!

azhagae unnai aaraadhikiraen !!!

பெப்ரவரி 20th, 2009 at 14:39
Sivakumar S
  7  

Are you sure that this is ‘nude’ and not just ‘normal’ attire? Sangam tamil women, I heard, like their men, did not wear any tops. Comments?

மார்ச் 4th, 2009 at 17:44
  8  

hi Siva, This art can be dated after the sculptures in Mahabalipuram. So technically we cant go back to sangam period. In mahabalipuram you can see breast bands already in vogue.

http://www.poetryinstone.in/lang/en/2008/12/05/2008-fashion-is-6-packs-abs-check-this-girl-from-730.html

rgds
vj

மார்ச் 4th, 2009 at 18:14
மணிவண்ணன்
  9  

ஒரு இனத்தின் அடையாளங்களை பாதுகாக்கும் ஒப்பீடு இல்லாத உங்களை காப்பீடு செய்து வைத்துக்கொள்ள விரும்புகிறோம் உங்களின் ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் தலை வணக்குகிறோம்.தொடரட்டும் அழகிய கலை மகனே!

மார்ச் 28th, 2010 at 20:33
Vasanth
  10  

Very well expressed Vijay. Yes, these are much precious than anything else and we should be protecting them like our life. It is so noble to bring attention to such things. Is there anything we could do by forming a group for each site?

ஜூலை 12th, 2010 at 17:32
  11  

நன்றி மணிவண்ணன்.

@ vasanth - there are lot of things that we can do. We need to make these sites show up on the tourist map - only with economic sense that we can ensure that their true value is known and the community benefits from these. else u and i can scream our lungs out, nothing will happen. its got to be a community effort.

ஜூலை 13th, 2010 at 11:27

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி