Quantcast


இன்று மீண்டும் தராசுரம் - பெரியபுராணம் சிற்பம். முதலில் சிற்பம் இருக்கும் இடம் பார்க்க சதீஷ் அவர்களின் படங்கள்.

darasuram panel.jpg
sundarar splitting1
sundarar splitting kaveri

இப்போது சிற்பம். மிகச்சிறிய அளவில் உள்ள இந்த சிற்பம் எதனை குறிக்கிறது என்ற அறியாமல் பல நாட்கள் தேடினேன்.

ஒரு கோயிலின் முன் இருவர் - ஒருவர் ராஜ தோரணையில் இருகரம் கூப்பி பக்திப்பரவசத்தில் - மற்றும் ஒருவர் ஒரு கையை மடித்து ஏதோ சொல்ல - மறு கரம் உயர்த்தி - எதோ ஒரு மரத்தை இடித்து /வெட்டி கோயிலின் மேல் விழச் செய்வது போல இருந்தது.

sundarar splitting kaveri 2

பிறகு திரு நா . கணேசன் அவர்கள் ஒரு அருமையான ஆய்வுக்கட்டுரையை தந்தார் - சான் இரால்சுடன் மார் அவர்களது ( Marr, JR, “The Periya Puranam frieze at Taracuram: Episodes in the Lives of the Tamil Saiva Saints’ ). அப்போது தான் விளங்கியது. என்ன ஒரு அற்புத நிகழ்வு , அதை பற்றி பெரியபுராண குறிப்புகளை தேடும்போது, திரு சதீஷ், திரு திவாகர் , திரு சுப்ரமணியம் அவர்கள் உதவியுடன் இவை கிடைத்தன .

சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருடன் மலை நாட்டுக்குச் செல்லும் பொழுது , திருக்கண்டியூர் வணங்கி வெளியே வரும் பொழுது திருவையாறு எதிர்தோன்ற , சேரமான் பெருமாள் நாயனார் அங்குச் சென்று இறைவரைப் பணிய வேண்டுமென்று கூறுதலும் ஓடம் முதலியவை செல்லாதபடி காவிரியில் பெருவெள்ளம் சென்றதைக் கண்டு…


130. பொன் பரப்பி மணிவரன்றி புனல் பரக்கும் காவேரித் 3877-1
தென் கரை போய்ச் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி 3877-2
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திருக் கண்டியூர் 3877-3
அன்புருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் 3877-4

131. வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர்க் கரங்கள் 3878-1
உடலுருக உள்ளுருக உச்சியின்மேல் குவித்து அருளிக் 3878-2
கடல் பரந்தது எனப் பெருகும் காவிரியைக் கடந்து ஏறித் 3878-3
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார் 3878-4

132. ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள ஆரூரர் தமை நோக்கி 3879-1
செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார் 3879-2
மையார் கண்டர் மருவு திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகி 3879-3
நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன 3879-4

133. ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் 3880-1
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப 3880-2
நீறு விளங்கும் திருமேனி நிருத்தர் பாதம் பணிந்தன்பின் 3880-3
ஆறு நெறியாச் செலவுரியார் தரியாது அழைத்துப் பாடுவார் 3880-4

134. பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில் 3881-1
அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகளோ என்று 3881-2
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம் 3881-3
நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும் 3881-4

135. மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில் 3882-1
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல் 3882-2
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என 3882-3
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட 3882-4

136. விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பால் பளிக்கு வெற்பு என்ன 3883-1
நண்ணி நிற்கக் கீழ்பால் நீர் வடிந்த நடுவு நல்லவழிப் 3883-2
பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்டதொண்டர் பயில் மாரி 3883-3
கண்ணில் பொழிந்து மயிர்ப் புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார் 3883-4

137. நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர் 3884-1
செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர் வணங்கி 3884-2
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து 3884-3
தம்பிரானைப் போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் 3884-4

138. செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான் 3885-1
எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் இடையே அளித்த மணல் வழியில் 3885-2
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்று 3885-3
பஞ்ச நதி வாணரைப் பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்

நன்றி மதுரை திட்டம்

சிற்பத்தில் இருப்பவர்கள் சுந்தரர் மற்றும் சேரமான் பெருமாள். இடது புறம் ( நம் பார்வையில் ) இருப்பது கண்டியூர் கோயில். நடுவில் காவிரி கரை புரண்டு ஓடும் காட்சி - வெள்ளம் அலை மோதி செல்லும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ள முறை அருமை. வலது கரையில் திருவையாறு கோயில். ராஜ உடையில் இருப்பவர் சேரமான் பெருமாள் - காவிரியை நோக்கி ( வெள்ளம் கரை புரண்டு ஓடும் சத்தத்தில் அவர் பாட்டு கேட்க கையை அப்படி வைத்து கூவுகின்றாரோ ?) - இதே போன்று சிறு வயதில் பிரபல ஹாலிவுட் திரைப்படம் - ஈஸ்ட் மேன் கலரில், சிசில் டி மில்லி இயக்கம், சார்ல்டன் ஹெஸ்டன் , யுள் பிரின்னர் - பிரம்மாண்ட படைப்பு இறுதிக்காட்சி நினைவுக்கு வருகிறது - யூதர்கள் செங்கடலை கடக்கும் காட்சி.

Parting Red Sea
charlton_heston_plays_moses

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, பெப்ரவரி 24th, 2009 அன்று 20:15 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 12 மறுமொழிகள்

Dhivakar
  1  

விஜய்!

சுந்தரரைப் போல ஒரு அரிய சிவபக்தரை காண்பது கடினம். எல்லா உரிமையையும் கேட்டுப் பெற்றவர் அவர். பரவையாரை மனைவியாய் கொள்வதிலிருந்து, காவிரியைப் பிரித்தது, எப்போதோ எமனிடம் சென்றுவிட்ட ஒரு உயிரினைத் திரும்ப வரவழைத்தது, பொன் கேட்டு வேறு இடத்தில் பெற்றது எல்லாமே சுந்தரரின் உரிமைப் போராட்டம் போலவே தெரியும். இறைவனை ஒரு உயரிய தோழனாகப் பாவித்தவர். அவனை அடிபணிந்து வணங்குவார். எது வேண்டுமானாலும் இறைவனிடம் கேட்டு விடுவார். ஒருவேளை தாமதமானால் போதும் - கோபம் கூட வந்துவிடும்.

இந்தக் கோபம் இங்கே காவிரி வெள்ளத்தைப் பிரிப்பதிலும் காண்பித்தவர். ஐயாறு செல்லவேண்டும் - வெள்ளம் வழிந்தோட காவிரி நடுவில் இருக்கிறது. அதற்கென்ன.. இந்த இறைவன் எதற்காக இருக்கிறான் - ஒரு அழுகை அழுது் விட்டால் அருள மாட்டானா, என நினைத்தவர் ஒரு பாடல் பாடுகிறார். பாடிவிட்டு ‘நான் வழி கேட்டு அழுகிறேனாக்கும்’ என்பது போல ஓலம் என்று கூட சொல்லுவார். ஆனால் இறைவனுக்கு சுந்தரர்க்கு பாதை விடுவதைக் காட்டிலும் அவர் பாடல்களைக் கேட்பதில்தான் விருப்பம் போலும்.. மேலும் பாடவிடுகிறார். இல்லை அழவிடுகிறார்..

பத்துப் பாடல்கள் வரை பாடியவர் காவிரி வெள்ளம் வழி விடாமல் இருக்கக்கண்டு சுந்தரர்க்குக் கோபம் வந்துவிடுகிறது. இதோ பதினொன்றாம் பாடல்

கூடி அடியார் இருந்தாலும்
குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன்
உம்மைத் தொண்டன் ஊரனேன்
தேடி எங்குங் காண்கிலேன்
திருவா ரூரே சிந்திப்பன்
ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !

அசைகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், அடியார் உம்மைவிட்டு நீங்காது கூடியே இருந்தாலும் நீர், அவர்க்கு அருள்பண்ணும் குணம் சிறிதும் இல்லீர், ` அருள் பண்ணுதல் வேண்டும் ` என்னும் எண்ணமும் இல்லீர் ; அது நிற்க, நீர் என்பால் பிணக்குக் கொண்டிருந்தும், யான் அதனை உணர்ந்திலேன் ; உம் அடியேனும், ` நம்பியாரூரன் ` என்னும் பெயரினேனும் ஆகிய யான் உம்மை இங்குப் பலவிடத்துந் தேடியும் காண்கின்றிலேன் ; அதனால், உம்மை யான் நேர்படக்கண்ட திருவாரூரையே நினைப்பேனா யினேன் ; ஓலம் ! (நன்றி http://www.thevaaram.org )

பாருங்களேன். எப்படிப்பட்ட கோபம்! சரி,, சரி.. திருவையாறுக்காரரே.. உமக்கு நானெல்லாம் ஒரு பொருட்டா.. உனக்கென்ன.. உன்னைச் சுற்றி எப்போதும் அடியார் கூட்டம் இருப்பதால் நானெல்லாம் சாதாரணம்தானே.. போகட்டும்.. நம்ம பேரே நம்பிஆரூரான்.. அந்த ஆரூருக்கே போய்க்கொள்கிறேன்.. நீரும் வேண்டாம்.. உம்ம சங்கதியும் வேண்டாம்.. - என்ற வார்த்தை சுந்தரரின் வாயில் வந்தத்தும்தான் அந்த அற்புதம் நிகழ்கிறது. காவிரி பிரிந்து அந்தக் கோபக்கார பக்தருக்கு வழிவிடுகிறது.

மனோதத்துவ ரீதியில் பார்த்தோமானால் கூட ஒரு குழந்தை தனக்கு ‘அது’ வேண்டும் என்று கொஞ்சநேரம் அழும். எத்தனை நேரம்தான் அழுவது.. கோபம் வந்து கையில் கிடைத்ததைத் தூக்கிப் போட்டு தான் நினைத்ததைச் சாதிக்கத் தோன்றும். இங்கு சுந்தரர் குழந்தை. அம்மா அந்தக் குழந்தையின் அழுகையை சற்று வேடிக்கைப் பார்த்துவிட்டு பிறகு அதற்கு கோபம் வருகிறது என்பது தெரிந்தவுடன் அது கேட்டதைத் தந்துவிடுவாள்.

ஆழமாக சிந்திக்கவைத்த சிற்பம்.

திவாகர்

பெப்ரவரி 25th, 2009 at 17:58
  2  

ஆஹா! அற்புதம் திவாகர் சார்! என்ன ஒரு சிந்தனை ஓட்டம் தங்களுக்கு. எத்தனையோ முறை சுந்தரரைப் பற்றி படித்துள்ளேன், ஆனால் இதுபோன்றதொரு சிந்தனை தோன்றவேயில்லை. தனக்காக ஊடல் கொண்ட தன் மனைவியை சமாதானப் படுத்த இறைவனையே அனுப்பிவைத்தவர் ஆயிற்றே. பித்தன் தன்னுடைய திருமணத்தை நிறுத்திய நாளில் வந்த கோபம் ஒவ்வொரு முறையும் தான் விரும்பியதை அடைய கடைசி வரை சுந்தரருக்கு வந்துகொண்டே இருந்தது போலும்!

பெப்ரவரி 25th, 2009 at 23:26
  3  

I could not have figured it out. The river paving the way to Sundarar and the Perumaal. Beautiful depiction. Thanks for the explanation.

பெப்ரவரி 28th, 2009 at 11:15
  4  

உண்மை, திரு சதீஷ் சொல்லி இருப்பது போல் பல முறை சுந்தரரைப் படிச்சும், இப்படி ஒரு கோணம் புரியலை. அருமையான சிற்பம். தேடித் தேடிப் பொறுக்கி நல்முத்துகளாய்க் கோர்ப்பதற்கு வாழ்த்துகள்.

மூன்று நாளாய் முயன்றும், இன்று தான் திறக்க முடிந்தது. நன்றி.

மார்ச் 3rd, 2009 at 10:50
R.Devarajan
  5  

நுண்ணிய சிற்பம் அழகு என்றால்
திவாகரின் வர்ணனையோ அதைவிட அற்புதம்!

தேவ்

மார்ச் 3rd, 2009 at 11:18
தமிழ்த்தேனீ
  6  

அன்புள்ள விஜய் அவர்களே தமிழ்மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப் பட்டறையில் கலந்து கொண்டு திரும்புகையில் திரு ஓகை நடராஜன் அவர்களும், திரு தேவு அவர்களும் பேசிக்கொண்டு வந்தனர்
அவர்கள் கூறினார்கள் திரு விஜய் அவர்களின் பணி மிகவும் சிறந்த பணி
அதற்கு நாம் எல்லோரும் உதவவேண்டும்
என்று
அடடா எத்தனை மனங்களை வசப்படுத்தி வைத்திருக்கிறீர் மகிழ்ச்சியாக இருந்தது
தொடருங்கள் உங்கள் புனிதப் பணியை

அன்புடன்
தமிழ்த்தேனீ

மார்ச் 3rd, 2009 at 17:21
  7  

மிக்க நன்றி, உங்கள் நல்லாசிகள் என்றும் தேவை

மார்ச் 3rd, 2009 at 20:33
  8  

I dont know weather you have noticed this…even in Ragventhra movie…the river will part for Nilakal Ravi so that he could see Ragaventhra Rajni before he attains samdhi!

மார்ச் 5th, 2009 at 9:55
  9  

its Delhi Ganesh actually!

மார்ச் 5th, 2009 at 10:08
  10  

hi vairam

Dont remember seeing, but the correct version should be walking on the river and not the river aprting. as below

Appanacharya, his favorite disciple, lived in a village across the river,
very close to Mantralaya. When Appanacharya heard the news that his guru
was about to enter the brindavana, he immediately
rushed towards Mantralaya. He was so overcome by devotion and sorrow that
he did not notice that the river was in spate. His heart full of devotion
for his beloved guru, he composed a stotra in his
honor. This is the famous stotra which starts “Sri Poornabodha..”. By
guruji’s grace he was able to walk across the river in full spate, but
could not make it in time. Just as he entered the location, the final
stone was lowered over the Brindavana. He was overcome with emotion and
broke down, unable to complete the stotra. Then, from the Brindavana,
Raghavendra Swamy uttered the words “Sakshi
Haya stotraHi” and completed the stotra composed by Appancharya.

rgds
vj

மார்ச் 5th, 2009 at 18:42
rhoda alex
  11  

very interesting….. good one vj.

how come rivers are always depicted vertically in Indian sculpture.. does it change down the ages?

ஜூலை 26th, 2010 at 11:37
rhoda alex
  12  

thanks vj…i did see the depiction of the pond too…(and the crane and fish)…there too its vertical! I remember seeing a small panel from a stupa (not sure whether it was Sanchi) - it is vertical there also.!! Will find and send across.

But as you have pointed out …amazing miniature sculpture. Kudos to Satheesh and you.

ஜூலை 26th, 2010 at 12:23

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி