Quantcast

தொகுப்புக்காக ஏப்ரல் 2nd, 2009


ஆர்வத்துடன் புதிரை உடைக்க பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி. ஆம் இவை டெல்லி குதுப் மினாரை ஒட்டி உள்ள சிதைவுகள்.

location.JPG
location 2.JPG
solution.JPG
atleast know that i was there.jpg
i lost he won.jpg
victor n the vanquished 2.jpg
victor n the vanquished.jpg
who lost.jpg

இவற்றை பற்றி பல விதமான கருத்துக்கள் உள்ளன.நண்பர் ரகு குறிப்பிட்டதை போல - இந்து கோயில், சமணர் கோயில், தோமர் கோட்டை, ராஜபுத்திர கோட்டை,ஏன் அங்கே இருக்கும் தொல்லியல் துறை அறிவுப்பு பலகை படி பிரிதிவ் ராஜ் சோஹான் அவரது கோட்டை என்று பலவும் உள்ளன. இணையத்தில் தேடினால், ஏன் அமர் சித்ரா கதா புத்தகம் கூட உண்டு. சிதைந்த சிற்பங்களை காட்டி இனவாதம் / மத வாதம் பற்றி எழுதுவது இந்த தொடரின் நோக்கம் அல்ல. போர் என்று வந்தால் எல்லாம் சரிதான். இதற்க்கு நம்மவர்களும் சலித்தவர்கள் அல்ல. கலை சிற்பம் பல இன்றும் நம் கோயில்களில் கண்ணெதிரில் சிதைந்து இருப்பதை யாரும் பார்ப்பது கூட இல்லையே. மாற்றான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிதைத்தான் என்றால் கொதித்து எழும் நம்மவர்கள் அன்றாடம் சிதையும் நம் கோயில்களின் பால் ஏன் திரும்புவது கூட இல்லை?

இந்த மடலின் நோக்கம் வேறு - இந்த தூண்கள் மிகவும் கனமான வை - அதனால் அருகில் இருந்த தான் எடுத்து வந்திருக்க வேண்டும். தூண்களும் ஒன்றுக்கொன்று வித்யாசமாக இருப்பதால் இவை பல இடங்களில் இருந்து வந்தவை என்று நாம் உணரலாம்.

P3270715.JPG
defaced cow and corner ganas.JPG
defaced ganas and lion riders on top of pillar.JPG
defaced lady looking into a mirror and ornamenting herself.JPG
defaced relief panel.JPG

இந்த தூண்களின் வேலைப் பாடை வேறு எங்காவது நாம் பார்த்து உண்டா? இவை எட்டாம் நூற்றாண்டில் இருந்து பதினோராம் நுற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தை சார்ந்தவை. வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணம்.

மறுமொழி அளிக்கவும் »


சென்ற மடலின் புதிரை உடைக்க முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி ( விடையை முதலில் அளித்த திருவுக்கு ஒரு சபாஷ் ) . கொஞ்சம் கடினமான புதிர் தான். சரி உங்கள் உதவிக்கு இன்னும் சில படங்களை தருகிறேன்.

தூண்களின் படங்கள் - முதலில் தொலைவில் இருந்து , பின்னர் அருகில் சென்று.

தொலைவுப் பார்வை

inspect closely.jpg
inspect this pillar closely.jpg
watch closely.JPG
watch closer.JPG

அருகில் சென்று

headless ganas 3.jpg
headless sculpture 2.jpg
headless sculpture.JPG
the lion riders.jpg
damaged pillars.jpg
defaced cow and corner ganas.JPG
defaced dancing maiden.JPG
defaced ganas and lion riders on top of pillar.JPG
defaced lady looking into a mirror and ornamenting herself.JPG
defaced maidens.JPG
defaced pillar 1.jpg
defaced pillar 2.jpg
defaced pillar 3.jpg
defaced pillar 4.jpg
defaced pillar ganas 2.JPG
defaced pillar ganas.jpg

சில தருணங்களில் நம் கண்களே நம்மை எப்படி மறைகின்றன பார்த்தீர்கள. இது போலவே இங்கு தினமும் கூடும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பார்த்தும் பார்க்காமலும் செல்லும் தூண்கள் இவை.

இன்னும் பல சிற்பங்கள்

P3270715.JPG
defaced cow and corner ganas.JPG
defaced relief panel.JPG

சரி, விடையை நெருங்கிவிட்டோம். அழகிய சிற்ப வேலைப் பாடு மிகுந்த தூண்களை யாரோ வேண்டும் என்றே சிதைத்து உள்ளனர். யாராக இருக்கும் ?

சென்ற மடலில் ஒரு படத்தில் விடையை ஒலித்து வைத்தேன்.

carved pillaster.jpg

கண்டுபிடிக்க முடிந்ததா ? சற்று அல்லாந்து பாருங்கள்

the vital clue.JPG

இரண்டு சிந்தனைகள் மோதிய தருணம் …

ஆம், இந்த தூண்கள் பிறந்து சிதைந்த வேலை நம் நாட்டின் தலை எழுத்தே மாறிய தருணம். இன்னுமா விடை தெரியவில்லை, முந்தைய வாக்கியத்தை இன்னொரு முறை படியுங்கள்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 2  1  2 »