Quantcast



சீயமங்கலம் நோக்கி. ( வெகுவாக பயணத்தில் நிகழ்ந்த உரையாடல் , மற்றும் சில கற்பனைகள் )

திண்டிவனம் வந்தவாசி சாலை ….காலை mani 8.30 இருக்கும்

சந்துரு சார் : இது சரியான வழியா? . சார் சீயமங்கலம் இப்படி போனா வருமா .
ஊர் நபர் : பாலத்துல தப்பா திரும்பிட்டீங்க!
டிரைவர்: ஒ அப்படியா , சரி திரும்பி போகிறோம்.

வெங்கடேஷ்: அதோ பாலம். இப்போது எப்படி - நேர போங்க.
சந்துரு சார்: அதோ ஆசி போர்டு.
####: ஒரு நிமிஷம் ஓரமா நிறுத்துப்பா - முட்டுது !!!

ரகோத்தமன்: எடுங்க எடுங்க சீக்கிரம் போவோம்.
விஜய்: சதீஷ், அந்த முறுக்கு பாக்கெட் எங்கே. கார வேர்கடலை - பரவாயில்லே - அத்தையும் கொடுங்க.

நாராயணசுவாமி சார் : ஏதோ கிராமம் போல இருக்கே. வழி சரியா. கேட்டுக்கோ
சந்துரு சார் : எம்மா - குகை கோவில் வழி எப்படி
ஊர் அம்மா : அதுவா , இப்படீகா போய், அப்படி திரும்பி நேர போங்க. யாரையும் கேக்க வேண்டாம்.!!!!!
சந்துரு சார்: அது சரி, அப்படியே போப்பா .

வெங்கடேஷ்: அதோ அங்கே ஒரு மலை தெரியுது. உடு உடு .
சதீஷ்: என்னப்பா ரோடு வேறு பக்கமா போகுது.
நாராயணசுவாமி சார்: இரு இரு , இன்னொரு வாட்டி வழி கேப்போம்.
சந்துரு சார்: ஏம்பா.. குகை
ஊர் ஆசாமி: அதுவா சார், இப்படிகா போய் ….
டிரைவர்: நாங்க அப்படிக்கா தா வந்தோம்.
ஊர் ஆசாமி: இல்ல பா, இப்படி கா பொய், நடுல ஒரு பக்கம் ஒரு பாத போகும், அப்படி உடுங்க
சந்துரு சார்: ஓ சரி சரி

3291431613_d708f359e7.jpg

சந்துரு சார்: அப்பாடி, ஒரு வழியா வந்தாச்சு.
விஜய்: என்ன சார், குடவரை கோயில்னு வந்தா பெரிய கோபுரம் , விமானம், வெளி ப்ராஹாரம் எல்லாம் இருக்கு. நாங்கள் மஹேந்திர சீயமங்கலம் குடவரை கோயில், அதில் இருக்கும் முதல் முதல் கல்லில் செதுக்கிய ஆடல் வல்லான் பாக்க தான் வந்தோம்.

சந்துரு சார்: அதுவா, உள்ளுக்குளே இருப்பது மஹேந்திர குடவரை - அவர் வைத்த பெயர் அவனிபாஜன பல்லவேஸ்வரம் . அதை சுத்தி பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்து பெரிதாக்கி உள்ளனர்.

விஜய்: ஒ, அப்படியா ? என்ன ஈ காக்கா காணும்.

side view.jpg
the cave location.jpg
the entrance gopuram and indiana venkatesh.jpg

வெங்கடேஷ்: வாங்க வாங்க.
விஜய்: என்ன வெங்கடேஷ் , தொப்பி எல்லாம் பலமா இருக்கு. எதாவது புதையல் தேட போறீங்களா ?
வெங்கடேஷ்: இல்ல பா, இது எனக்கு மிகவும் ராசியான தொப்பி, இலங்கையில் வாங்கியது. அதோ யாரோ ஒருத்தர் வாரார் !

venkat with his hat.jpg

ஆசி காவலர் : வணக்கம்
சந்துரு சார்: வணக்கம்
விஜய்: சார் நாங்க உள்ளே போகணும். ரொம்ப தொலைவில் இருந்து வந்துருக்கோம்
ஆசி: சார், வெளியிலே பாருங்க. உள்ள போகனும்னா சாமி வரணும். அவர் கிட்டே தான் சாவி இருக்கு.
வேணும் நா இதோ - இந்த ஓட்ட வழியா பாருங்க.
விஜய்:இல்ல சார், உள்ளே போகணும். எங்களுக்கு ########### அவரை தெரியும். ########## தெரியும். வேணும் நா போன் போடட்டுமா ?
ஆசி: சாமி போன் தாரேன் , போட்டு பாருங்க சார். பெரிய பெரிய ஆளுங்க பேரெல்லாம் கரெக்டா சொல்றீங்க!!
விஜய்: கொடுங்க கொடுங்க , ரொம்ப ஆர்வமா வந்துருக்கோம்

ட்ரிங் ட்ரிங் : ஹலோ சாமியா, நாங்க கோயில்ல இருக்கோம். வர முடியுமா

விஜய்: அஞ்சு நிமிஷத்துல வாராராம்.வாங்க அதுக்குள்ளே மத்ததெல்லாம் பாப்போம்

the location of the cave.jpg

விஜய்: சந்துரு சார், எப்படி மஹேந்திர பல்லவர் இப்படி ஒரு அத்துவான காட்டை செலக்ட் பண்றார்.
சந்துரு சார்: அதுவா, நல்ல கேள்வி. இதுக்கு சரியான பதில் இல்லை. இருந்தாலும், பல குடைவரைகள்
இருக்கும் இடங்களில் சில ஒற்றுமைகள் உண்டு . பெரும்பாலும் சிறு குன்றுகள், அருகில் ஒரு தடாகம் அல்லது அருவி ( நீர் பரப்பு ) இருக்கும் இடங்களையே அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
விஜய்: ஒ, அப்படியா. இங்கே எங்கே சார் நீர் பரப்பு.
சந்துரு சார்: அதோ அங்கே பாருங்க. அந்த பக்கம். இப்போ மழை இல்லை, அதனால் நீர் இல்லை. மேலே ஏறி பாருங்க , நல்லா தெரியும்.

the hilltop muruga shrine.JPG

விஜய்: அது என்ன - பாறைக்கு மேலே ஒரு குட்டி கோயில்
சந்துரு சார்: அது ஒரு முருகர் கோயில். பின்னாளில் கட்டப்பட்டது பாத்து ஏறுங்க!!
விஜய்: படி இருக்கே ( பாதி வழி ஏறினப்பறம் தான் வந்தது ஆப்பு - அப்பா என்ன உசரம் )
எல்லோரும் வாங்க - அருமையான வியு

ah there is a water body.jpg
closer .jpg
the dry lake bed and the stone -linga.jpg
thoonaandavar.jpg
the pillar lord.jpg

அசோக்: நானும் வாரேன்
சந்துரு சார்: அங்கே மழை காலத்தில் குளம் நிறைஞ்சு இருக்கும் . நடுவில் உள்ள கல் - அப்போ ஜல லிங்கம் போல காட்சி அளிக்கும். இந்த கோயில் இறைவனுக்கு தூணாண்டார் என்ற பெயர் வர அந்த கல்லே காரணமாக இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

panaromic view fromtop of muruga shrine.jpg
the cave location.jpg
the nearby hillock with Jain beds and the entrance gopuram.jpg

விஜய் : வழுக்குது பாத்து பார்த்து இறங்குங்க
காலை நம்ப முடியாது, அப்படியே உக்காந்து ( ஜீன்ஸ் பாண்ட் தானே ) சறுக்கு மரம் மாதிரி வர வேண்டியது தான். என்ன என்னை பாத்து எல்லாரும் சிரிக்கிறிங்களா - இறங்கும் போதுதானே உங்க வீரம் தெரியும்.

best way down.jpg
doesnt look steep.jpg

குடவரை அமைக்கப்பட்டுள்ள பெரும் பாறையை சுற்றி வந்தோம். அருகில் பல கல்வெட்டுகள், மற்றும் கல் உடைக்க பயன் பட்ட முறைகள் பற்றி பேச நிறைய இருந்தது. நாம் முன்னரே பார்த்த மாதிரி மர ஆப்புகள் அடிக்க துளைகள் பல இடங்களில் பார்த்தோம். அதன் அளவை காட்ட இதோ ஒரு படம். அருகில் இருப்பது இன்ஹேளர் .

the backside of the cave boulder.jpg
the finished cutting.JPG
the square holes.jpg
size of the holes.jpg

சந்துரு சார் : அதோ சாமி டி வி எஸ் 50 வராரு . வாங்க திரும்புவோம் .

ஆடு மேய்ப்பவன்: யார் சார் நீங்க. அதோ பாருங்க - விமானத்துல இடி விழுந்து ஒரு யாழி உடஞ்சு போச்சு. யாரும் சரி செய்ய மாட்டேன்கரங்க. நீங்க எதாவது பண்ணுங்க சார்
அசோக்: அப்படியா , எப்போ இடி விழுந்துச்சு?

the broken yaali when lightning struck.jpg

சாமி: சார் இதோ திறந்து வுடறேன் வாங்க

சதீஷ் : என்ன ஒரே இருட்டா இருக்கு
சாமி: அதுவா சார், இன்னும் இருட்டா இருக்கும். மூச்சு முட்டும். பாம்பு தொல்லை வேற இருந்துது. ஒரு கீரிப்பிள்ளையை உள்ளே வுட்டுட்டு தான் நான் உள்ளே போவேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை. வெளி மண்டபத்தை பிரிச்சு கட்டி கொடுத்தாங்க. ஆனா இப்போ வெளிச்சமும் வருது மழை தண்ணியும் வருது. !!

the later madabams leading to the inner cave.jpg
the outer corridor and mandabam plush with the rock face.jpg
the outer hall.jpg

விஜய்: என்ன சந்துரு சார் - இந்த மண்டபம் தூணும் மஹேந்திர தூண் மாதிரி இல்லையே ( அது என்ன மஹேந்திர தூண் - விரைவில் பார்ப்போம் )
சந்துரு சார்: இன்னும் உள்ளே போங்க
விஜய்: ஆஹா , அதோ மஹேந்திர தூண்

the inside pillar is the classic mahendra style pillar.jpg

ஆசி: சார், போட்டோ எடுக்கக் கூடாது
விஜய்: மெயின் சாமி போட்டோ எடுக்க மாட்டோம்.தூண், வாயிற் கார்ப்பொன் அப்படி தான் எடுப்போம். ப்ளீஸ் , எங்களுக்கு @@@@@@@@@ தெரியும் !!!
ஆசி: ம்ம்ம்ம்ம்ம்

சதீஷ்: விஜய், இங்கே இன்னும் பல சிற்பங்கள். இடுக்கில் ஒரு மகர தோரணம் , அதில் ஒரு கணம்

makara 2.jpg
makara 3
makara thoranam

விஜய்: ஒரு நிமிஷம் , இந்த வலது புறத்து வாயிற்காப்போனின் தலை பாருங்கள் - கொம்பு போல உள்ளது. ( என்ன அது - விரைவில் பார்ப்போம் )

the horns of the door guardian.jpg
the left door guardian.jpg
the right door guardian.jpg

சந்துரு சார்: தூணில் உள்ள வேலைப்பாட்டை பாருங்கள்.
விஜய்: அருமை - இரண்டு கம்பீர சிங்கங்கள். இங்கே தூணின் பொதிகையில் டிசைன் போட ஆரம்பித்துள்ளனர் ( அப்போ டிசைன் இல்லாத தூண் - உண்டு உண்டு - இங்கே இல்லை, வேறு இடத்தில )

floral designs on the pillars.jpg
intricate design on the pillars.jpg
pillar designs 2 .jpg
master at work
the design of the fluted pillar.jpg
the fluted capitals.jpg
the lion emblem.jpg
the matching lions.jpg
the fluted capitals.jpg
the fluted pillars.jpg

நாராயணசுவாமி சார்: இங்கே இரு பக்கமும் பாருங்க.

விஜய்: சதீஷ், நீங்க சுந்தர் சார் கிட்டே கடன் வாங்கின மஹேந்திர குடைவரைகள் புக்கில் பாருங்க . யார் இது.

amalayaar long shot.jpg
amalayar 3.jpg
amalayar.jpg

சதீஷ் : அவங்க அமலையர் சிற்ப்பங்கள்.

விஜய் ; ஒ அப்படி என்றால் என்ன, பார்க்கணும். இதோ பாருங்க பூ கூடையுடன் ஒரு தோழி ….

the lady in waiting.jpg

ரகோத்தமன்: சந்துரு சார், இதோ தூணில் ஒரு கல்வெட்டு இருக்கே. தமிழ் மாதிரி இல்லையே.
சந்துரு சார்: அது க்ரந்தம் . மஹேந்திர பல்லவர் கல்வெட்டு

mahendra inscription.jpg

விஜய்: ஒ , அப்படியா, சதீஷ் பூகில் குறிப்பு இருக்குமே பாருங்க
சதீஷ்: இருக்கு - இதோ படிக்கிறேன்.

அவனி பாஜன பல்லவேஷ்வரம் எனும் இக்கோயில் இலலிதாங்குரனால்
நற்செயல்கள் எனும் நகைகளை உள்ளடக்கிய நகைபெட்டியென எடுக்கப்பட்டது

விஜய்: அற்புதம், ஆயிரத்தி முன்னுறு ஆண்டுகள் ஆகியும் தன் புகழ் மட்டது இருக்கும் பல்லவர் …..வாழ்க

ரகோத்தமன்: தூணுக்கு இந்த பக்கம் வேறு கல்வெட்டு இருக்கு. ஆனால் வேறு எழுத்து.
சதீஷ்: அது பின்னாளைய தந்தி வர்மர் மற்றும் நந்தி வர்மர் - தமிழ் கல்வெட்டு.

சந்துரு சார் : இதோ நடராஜர் சிற்பம். தென்னகத்தில் கல்லில் வடிக்கப்பட்ட முதல் முதல் நடராஜர் வடிவம் இதுவே - இதோ இந்த தூணில் உள்ளது. சாமி கொஞ்சம் ஆர்த்தி காட்டுங்க. அந்த பக்கம் ரிஷப வாகனத்துடன் சிவன் பார்வதி .

Natarajar
Shiva , parvathi and nandhi.jpg

அசோக்: ஒரு நிமிஷம் பொறுங்க, இதோ நான் வாறன் கேமரா வுடன்

the lord of dance.jpg
the moment.jpg
Time stood still.jpg

ஆஹா… இருளை போக்கி ஆடல் வல்லான் ஆடிய ஆட்டத்தை மீண்டும் பார்க்கும் பாக்கியம். …

என்ன அற்புத புடைப்பு சிற்பம். சிற்பம் மற்றும் தூண்கள், மகர தோரணம் - அனைத்தும் அடுத்த பதிவில் அலசுவோம்.

படங்கள் : குழு நண்பர்கள், மற்றும் திரு சுவாமிநாதன் மற்றும் திரு சந்துரு அவர்களது முதல் பயணம் . நன்றி திரு சுந்தர் சார்.

the tour group.jpg

ரகோத்தமன் , சதீஷ் ,வெங்கடேஷ் , சந்துரு சார் , அசோக் மற்றும் உங்கள் விஜய்

Ref: Sri K.R. Srinivasan - Cave temples of the Pallavas, Dr KKN’s மஹேந்திர குடைவரைகள்

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், ஏப்ரல் 16th, 2009 அன்று 18:22 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 27 மறுமொழிகள்

  1  

Nice! The conversation makes it easier to blend simple and complex topics.

ஏப்ரல் 16th, 2009 at 18:35
  2  

interestg style tho its more ” Vamsee’s style ” than mine :)

ஏப்ரல் 16th, 2009 at 18:41
தமிழ்த்தேனீ
  3  

அன்புள்ள விஜய் புதுமையான முயற்சி
உங்களுடன் இப்பயணத்துக்கு வந்த அனைவருக்கும் வணக்கம்

மிக நன்றாக இருக்கிறது
இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

ஏப்ரல் 16th, 2009 at 18:54
vishwaksenan
  4  

The 5th photo from below : The name of Siva is Vrushapanthigar. No other cave temples have a sculpture like this (as far as I know). And the name of Main Deity is Thambeswarar.The inscription on the left pillar belongs to Nandi Varman II(731-796AD). Happy to see the photos of sculptures in colour which I have taken in B&W long ago. There are many cave temples in that area. Try to capture them, please.
Vishwak

ஏப்ரல் 16th, 2009 at 20:09
நாராயணசாமி
  5  

conversation format ரொம்ப நல்லா இருக்கு… எனக்கும் இது குடவரை கோயில் முதல் பயணம் தான்!! :)

ஏப்ரல் 16th, 2009 at 22:10
R. Venketesh
  6  

Hi thanks
I re lived the trip

venketesh

ஏப்ரல் 16th, 2009 at 22:20
திருநாவுக்கரசு
  7  

எல்லாம் சரி, அது என்ன கடைசி foto-வில “உங்கள் விஜய்” — ? ? எதுக்கு இந்த வெளம்பரம் ??

ஏப்ரல் 17th, 2009 at 9:55
Dhivakar
  8  

எளிமையான வர்ணனை.. பலமான சிற்பங்கள். சீயமங்கலம் போன்ற குகைக்கோயில் சிற்பங்கள் பார்க்க ஒருநாள் போதுமா.. கல்லினால் செதுக்கப்பட்ட நடராசரைப் பார்க்கவே ஒருநாள் தேவைப் படும். மத்தளம் அடிக்கும் சிவகணம் அவர் நந்தியாரா? பாம்பு ஒன்று அழகாக படம் எடுத்து ஆடுகின்றது.. வலதுகைப் பக்கத்தில் இன்னொரு சிவகணம் ஆனந்தத்தில்..

அசத்தி விட்டீர்கள். உங்கள் எங்கள் விஜய் இல்லை நீங்கள்.. ‘நம்’ விஜய்.

வாழ்த்துகள்

திவாகர்

ஏப்ரல் 17th, 2009 at 10:25
narsi
  9  

Excellent discovery of architechural marvels. Wish i could have joined you ashok in this adventure, Beautiful reproduction of the sculptures. Good work. Best wishes to continue the same.

ஏப்ரல் 17th, 2009 at 10:53
N.Srinivasan
  10  

Ah Vj,

not just a typical and stupendous effort from you.

You did me (among scores of other visitors to this site) an unforgettable favour by taking through this peerless structure.

One doubt from the comments above… in your convos you mention that the inscription is in Pallava Tamil or Pallava Grantha and the same are from Mahendra or in praise of Mahendravarma Pallavan. But there is another comment (in the comment column) that the inscription belongs to Nandivarman II Pallavan and is of 731-736 AD antiquity. Could you pls. clear the confusion either by posting a reply here or enlightening me on gmail-chat?

In any case, a beautiful, beautiful temple. Can you also tell me if the two gopurams pictured are the original creations of the Pallavas. Of course from your last photograph (of the group including you), the gopuram to the left is so typically Pallava is it not? it takes us back to Kudumiyanmalai and Thirumayyam in that the left gopurak seems to magically and miraculously sprout out of the mountain, is it not…. I think you should try to get similar closeups, if possible from the existing photographs.. I think they will make tremendous pictures.

What do you say VJ? But a million thanks all the same.

ஏப்ரல் 17th, 2009 at 12:05
  11  

சீயமங்கலம் குடவரைக் கோயில் பற்றியும், நடராஜரின் முதல் சிற்பம் பற்றியும் இன்று வரை கேட்டதில்லை. அரிய முயற்சி. வெளிக்கொண்டு வந்ததுக்கு பாராட்டுகள். இதன் தொடர்பான மற்ற விளக்கங்களுக்குக் காத்திருக்கிறேன்.

ஏப்ரல் 17th, 2009 at 12:49
  12  

Hi Vamsee, tks.

Lakshmi -bang on - copied vamsee style

Theni sir, car was already overflowing…!! count me as two count

Viswak sir, i checked again in Mahendra Kudavaraigal Book - the granta verse is referring to Lalithanguran ( pl see the tamil version of the post for actual inscription). ofcourse there are two more tamil culverts which are mentioned belonging to danti and nandhi varman.

Narayanaswamy sir and Venkatesh - yes, it was a pleasant trip and memories etched in

narsi - sir, please dont call these discoveries. we are just presenting them in a format which is easy on the net

thiru sir, ungal vijay was not meant to be promotion, more a personal association with my loving readers.

Cheenu, the gopurams and vimanams are later additions. there are lot many inscriptions in the structure - right from cholas ( madurai konda parakesari) - surprisingly there are three inscriptions of Aditya Karikala ( very rare) and a few of Raja raja as well, Kulottuga II, Pandyas ( Maravarman Vikrama Pandian) to Vijayanagara times ( Kambana Udayar).

Geetha amma, thanks, yes a detailed post will follow on the sculptural beauties.

rgds
vj

ஏப்ரல் 17th, 2009 at 13:59
  13  

விஜய்,
புதுமையான பதிவு poteryinstone-ல். கலக்கிட்டீங்க. இருபத்தேழு நாட்கள் சென்றுவிட்டன இருந்தும் அருமையாக நினைவில் வைத்து எழுதியுள்ளீர்கள்.
சூப்பர், அப்படியே மற்ற குடைவரைகளையும் எழுதுவீர்களல்லவா…

ஏப்ரல் 17th, 2009 at 14:44
admin
  14  

விஜய், அற்புதம். உங்களுடைய புதுமையான இடுகை முறை அருமை. முக்கியமா #### @@@@ !

ஏப்ரல் 17th, 2009 at 17:57
shriram
  15  

hi Vj,
very nice Dwarabalakar statue….the primitive one to that of Thirumayam sivan temple one! :)

ஏப்ரல் 17th, 2009 at 19:02
Sivaram Kannan
  16  

Interesting entry Vj. The photos are all amazing, I really regret missing the trip. Love the way the photos pop up when clicked on them. I have seen this technique before, but it fits perfect to the site.

ஏப்ரல் 18th, 2009 at 8:33
  17  

Beautiful. Very innovative style of presentation. I too will adopt this as an experiment with my Hindi readers.

ஏப்ரல் 18th, 2009 at 11:57
Chandru
  18  

Vijay:

Nicely written!

N.Srininvasan has written, “… the gopuram to the left is so typically Pallava is it not? it takes us back to Kudumiyanmalai and Thirumayyam in that the left gopuram seems to magically and miraculously sprout out of the mountain, is it not….. ” Any similariteies here must be a coincidence, as the Kuduiyanmalai and the Thirumayyam temples were of Pandya oringin and Thirumayyam pre-dates the earliest Pallave cave (Mandagappattu) by at least 150 years.

ஏப்ரல் 19th, 2009 at 10:33
N.Srinivasan
  19  

Ah, I noticed Chandru’s comments just now.

Hmm.. Thanks for confirming that Thirumayyam is older than Mangadapattu… but I thought that the structures at Thirumayyam, Namakkal (I mean the Ranganathar panel, with both the God, the Demons and the accompanying sculptures) look typically Pallava.. though for the longest period the Pudukottai-Karaikkudi region was under Pandiya control (Thirumayyam Vishnu temple is typically called a Pandiya Nattu Divya Desam only - but I entertain a genuine doubt that if at all Thirumayyam in its entirety was a Pandiya creation). Sure the nearby Vettuvan koil is a Pandiya creation.. lot of sculptures like Rathi Manmadan, Kuravan Kuratti plus the Swambhoo of Satyamurti perumal at Thirumayyam are certainly Pandiya creations/ contributions.. but I think the Azhagiya Meyyar, Ranganatha Panel at Thirumayyam is certainly Pallava for its them is so similar to (first) Namakkal, and then the Anantasyayi at Mallai Rathas…

Kindly educate me more both dear Chandru and VJ.

Cheenu

ஏப்ரல் 21st, 2009 at 12:56
N.Srinivasan
  20  

One more thing friends… Certainly, I don’t doubt the antiquity of Thirumayyam panel (at least the Anantasyayi panel) simply because in the Vaishnava (Iyengar parlance).. Thirumayyam as a religious shrine is considered older than the Srirangam temple… which itself is (only as per legends) is considered a creation of Chola Nedumili or Kilivalavan of the BC era!!!!!!!!!!!!

ஏப்ரல் 21st, 2009 at 12:59
Srinivasan N. (Cheenu)
  21  

yes Vj..

pls. change the title or name of the place to Aavanibhaja Pallaveswaram or Avanabhaja Pallawesvaram… Palleswaram does not sound good at all… it seems we are talking about the Tooth (Palle) God (eswaram) .. ha ha ha…

ஏப்ரல் 21st, 2009 at 15:37
  22  

hi cheenu, mr chandru

Not sure if this is correct ” Thirumayyam pre-dates the earliest Pallave cave (Mandagappattu) by at least 150 years.” To the best of my knowledge the only caves predating mandagapattu is the pillayarpatti caves.

http://www.pudukkottai.org/places/thirumayam/01thirumayam.html#Historical%20background

rgds
vj
( sorry for the typo on the header - hv changed)

ஏப்ரல் 21st, 2009 at 18:24
Kathie B.
  23  

Earlier Dvarapalaka than Thirumayam? how I love this early sculpture!
Anyway, reminds me of travelling all day to Deogarh [DasavataraMandir, that masterpiece] from Bhopal, then having someone come running at me: ‘no photo, no photo.’ Also sculpture shed was locked, key at AIIS in Delhi!
What a disappointment.

ஏப்ரல் 22nd, 2009 at 6:41
Chandru
  24  

I just noticed the title… It is actually AVANI-BHAJANA PALLAWESHWARAM.

You may be right on the antiquity of the caves.. Pillayarpatti is certainly older than Mandagappattu. Thirumayam is probably later. The Namakkal caves are certainly Pandya, not Pallava. It is a fact that the Pandyas have excavated more cave temples than the Pallavas. In fact they started excavating cave temples before the Pallavas and this activity went on even after the decline of the Pallava empire.

ஏப்ரல் 22nd, 2009 at 8:04
  25  

hi kathie,

Yes - actually a long pending task ( was actually waiting for a photo of teh right door guardian from vallam mahendra cave) - the so called `horned’ door guardian is a topic on its own.

mr chandru, thanks, have corrected. thanks for sharing the info on tirumayam and namakkal. looking forward to hearing more from you

best rgds
vj

ஏப்ரல் 22nd, 2009 at 19:35
Kathie B.
  26  

How do the Muttaraiyars of Sendalai fit into
all this? Aren’t they in the Pudukkottai area, too? I get really confused about who built what.

ஏப்ரல் 30th, 2009 at 6:13
Muralisamy
  27  

மிக்கவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தங்களது தளம் மற்றும் சார்ந்த விசயங்கள்.. பொதுவாக யாரும் முயற்ச்சி செய்யாத புதுவகையில் நீங்கள் புகைப்படங்களுடன் விவரித்திருக்கிறவிதம் மிகவும் அருமை. என்னுள்ளும் எப்போதும் அலைந்துகொண்டிருக்கும் எண்ணம் இதுகூட.. கோயில், சிற்ப்பம் இவை எப்பொழுதும் நினைத்தவுடன் சிலிர்ப்பூட்டுகிறது.. வாழ்த்துக்கள்..

அன்புடன்..
முரளிசத்ரியன்
http://muralisathriyan.blogspot.com/

டிசம்பர் 16th, 2009 at 16:27

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி