Quantcast


இன்றைக்கு நாம் மீண்டும் புள்ளமங்கை பிரம்ம புரீஸ்வரர் ஆலயம் செல்கிறோம். சிற்ப புதையல்கள் நிறைந்த ஆலயம், ஒவ்வொரு முக்கிலும் சிற்பம். எங்கும் சிற்பம், எதிலும் சிற்பம். சுற்றி சுற்றி நம்மை திணற வைக்கும் கலை பெட்டகம் . அவற்றில் ஒரு அற்புத சிற்பக் கொத்தை நாம் இன்று சதீஷின் உதவியுடன் பார்க்கிறோம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் போது - யார் படைப்பாளி யார் படைப்பு. புரியவில்லையா . மேலும் படியுங்கள்.

லிங்கோத்பாவர் சிற்பம். சைவ ஆலயங்களில் ஆகமங்களில் முக்கிய இடம் பெற்று விமானத்தின் பின்னால் இடம் பிடித்த சிற்பம்.

அதற்கு முன்னர், யாரையும் புண்படுத்த இந்த பதிவை இடவில்லை, சிற்பத்தை சிற்பமாக பார்ப்பதே எங்கள் நோக்கம். அதற்கு எவ்வளவு தூரம் கதை வேண்டுமோ அதை மட்டுமே இங்கு இடுகிறோம்

Ligothbhavar panel pullamangai

இந்த சிற்பக் கொத்தில் பார்க்க நிறைய உள்ளது

so much to see

அவற்றை முறையே பிரித்து ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

முதலில் லிங்கோத்பாவர்

closeup of the panel

ஒருநாள் நான்முகனுக்கும் ( அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் ) திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவ்வாறு அவர்கள் வாதமிட, அங்கே தீ பிழம்பாகிய ஜோதி வடிவம் ஒன்று எழுந்தது. அதன் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று ஒரு அசரீரி வானத்தில் கூறியது. பிரம்மா அதன் முடியைக் காண அன்னமாகி மேலே பறந்து சென்றார் . திருமாலும் வராக(பன்றி) வடிவில் பூமிக்குள் சென்று அடியை தேடினார். மிகவும் முயன்றும் பல காலம் கழிந்தும் இருவருக்கும் எந்த பலனும் கிட்டவில்லை . பறந்து சென்ற பிரம்மா வழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ உச்சியிலிருந்து தான் புறப்பட்டு பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறியது. உடனே போட்டியில் ஜெயிக்க குறுக்கு வழி வகுத்த பிரம்மா தாழம்பூவைத் தன் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார். திருமால் பலகாலம் முயன்றும் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார்.

அப்போது அதில் இருந்து வெளி வந்தார் சிவன், தங்கள் அகந்தையால் எதிரில் இருப்பது ஈசன் என்றும், அவன் ஆதி அந்தன் என்பதையும் உணராதது பிழை என்று ஒப்புக்கொண்டனர். எனினும் பொய் சொன்ன பிரம்மாவின் தலையை கொய்தான் ஈசன். மேலும் அவருக்கு இனி தனி வழிபாடு இல்லை என்றும், தாழம் பூ இனி தெய்வ வழிபாட்டிற்கு உகந்த பூவல்ல என்றும் கூறினார். அவ்விருவர் அகந்தையையும் போக்கி சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.

இரண்டாம் திருமுறை - பாடல் எண் - 9

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=2&Song_idField=2025009&padhi=025

மாலும் நான்முகன் தானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுட்
பால தாடிய பண்பன் நல்லனே.

திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.

சரி, இப்போது சிற்பம்.

மேலே பறக்கும் பிரம்மா , கிழே பூமியை குடையும் வராஹம். நடுவில் சிவன் ( மிகவும் சிதைந்த நிலையில்) பிளந்துக்கொண்டு வெளி வருகிறார்.

closeup of flying brahma
flying brahma
vishnu as varaaham
shiva emerging from the pillar

இந்த சிற்பத்தின் இரு புறமும் பிரம்மன் மற்றும் திருமாலின் அற்புத சிற்ப வடிவங்கள்

vishnu - on the other side
Vishnu closeup
brahma -on one side
closeup of brahma
brahma closer
brahma - what a beauty

கதையில் சற்று தாழ்ந்தாலும், பிரம்மனின் முகத் தோற்றம் அப்பப்பா அபாரம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் பொது - யார் படைப்பாளி யார் படைப்பு. தலைப்பு புரிந்ததா .

பொறுங்கள், இது ஒன்றும் நாடகம் அல்ல, தலைப்பு வந்தவுடன் முடிய, இன்னும் உள்ளது.

மிக அரிய சிறிய சிற்பங்கள்.

the left side bottom row panel
the left side first row panels
the right side first row panels
the right side lower row panel

நாம் முன்னரே கங்கை கொண்ட சோழபுரத்தில் சண்டேச அநுகிரஹ முர்த்தி வடிவம் பார்த்தோம். இப்போது அதன் எறும்பு அளவு சிற்பம். ஈசன் அன்புடன் சண்டேசரின் தலையில் பூ சுற்றும் காட்சி.

miniature panels - chandesaanugraha murthy

அடுத்து, ஆதி சேஷனின் மடியில் துயிலும் திருமால், தேவி மற்றும் ஒருவர்.

mahavishnu on adisheshan with lakshmi and an attendant

அடுத்து, சிவன் பார்வதி - பார்ப்பதற்கு கங்காதரா வடிவம் போல உள்ளது

shiva paarvati - is it a gangadhara

அடுத்து மூன்று பேர், யார் இவர்கள்.

three attendants

அடுத்து மிக அற்புத மகா சதாசிவ வடிவம் ( இல்லை பிரம்மனா)

shiva - mahasadhashiva or brahma

முடிவில் ( இல்லை இன்னும் யாளி வரிசை உள்ளது - அடுத்த பதிவில் பார்ப்போம் ) -

shiva parvathi and a ghana

ஆஹா , அம்மை அப்பன் , கீழே ஒரு பூத கணம், எப்படி தான் உயிரோட்டத்துடன் வடித்தார்களோ, அம்மை அப்பன் அமர்ந்திருக்கும் ( ஒரு காலை மடித்து ) தோரணை அபாரம். இந்த சிற்பங்களை இன்னும் போற்ற முடிவில் சதீஷ் டச்

to give you an idea of the size of these miniatures

அருகில் இன்னொரு சிற்பம் - அதன் அளவை குறிக்க கார் சாவி …

படங்கள்: திரு சதீஷ், மற்றும் வரலாறு.காம்

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, ஜூன் 16th, 2009 அன்று 21:28 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 25 மறுமொழிகள்

  1  

கல்லிலே கலை வண்ணம் கண்டான் சிற்பி, அந்த கல்லில் கதை வண்ணம் காட்டுகிறார் நம் கலைஞர் விஜய்…அற்புதம்!

ஜூன் 16th, 2009 at 21:45
Kathie B.
  2  

Wonderful !
When there in ‘95 I didn’t take time to examine the small reliefs. I Thank goodness for the Br. Indologist, J.C. Harle, who had a photo of it in his great tome: Art & Archit of the I. Subcontinent, Penguin ‘86. Nart. is there, too. Pullamangai has among the finest sculpture in TN.
I’ll send you my favorite Korravai from here.
She’s so quietly beautiful. Guy offering head, also.

ஜூன் 16th, 2009 at 21:50
  3  

Brahma’s face peculiarly looks like a Buddhist or south east face. The pointed nose , long ears and curved thin eye brows typically look like the Buddha face we see these days.

ஜூன் 16th, 2009 at 21:53
anadhinatarajan
  4  

Hi, i enjoy the blog.Mostly the westside or back side of garbagra has Ligothbavar.But in Thyagarajatemple backside Vishnu is there. But in Moolavar Vanmeekinathar Back side has Lingothbhavar.Like ponnamangalam there are many small silpas resampling Pallavas of kanchi.Because It was renovated by Aathithakarikalan elder brother of rajaraja. -anandhinatarajan

ஜூன் 16th, 2009 at 21:55
Cheenu
  5  

well VJ,

The legend about Siva proving himself to be bigger than both Brahma and Vishnu is the one on which the story behind Tiruvannamalai Agni Lingam is based upon… I think there is a similar panel even in the Jambukesvarar temple in Tiruchy… of course in Vaishnava parlance… Vishnu is the creator of Brahma and giving him responsibility to create the universe… and the first person to be created by Brahma (before creation of animal and human life plus flora and fauna) was none other than his own son, Shiva… so in that way Iyengars consider Vishnu to be the father of Brahma and the thatha of Lord Shiva… so how can there by any fight between Gods who are kith and kin of each other…. ??

ஜூன் 16th, 2009 at 22:23
Cheenu
  6  

In any case Brahma sprouts out of the nabhi or navel of Vishnu is it not? so there is no question of there being any fight or argument about who is bigger among the Gods.. be it Brahma, Siva or Vishnu among each other…

ஜூன் 16th, 2009 at 22:24
  7  

u bring back the magic of GKC..I love that place

ஜூன் 16th, 2009 at 22:57
Prabha
  8  

An excellent documentation.

ஜூன் 17th, 2009 at 1:06
  9  

//Shiva as Maha Sadhashiva. or is it Brahma??//

mmmmm???? still doubting! will look into it again.

simply superb!! Excellent work! Great as usual!

ஜூன் 17th, 2009 at 6:17
Rajeswari
  10  

Amazing!!

The sculpture of Brahma is so beauty,yes it almost look like buddha and other tiny minatures are also really wonderful

ஜூன் 17th, 2009 at 6:20
Dhivakar
  11  

விஜய்!
இந்தக் கதாசிரியர்கள் அழகான பெண்களையோ இயற்கையையோ வர்ணிக்கும்போது படைத்த பிரமனின் பெயரை மறக்காமல் போட்டுவிடுவார்கள். ஆனால் கல்லாசிரியன் (சிற்பிதான்) கதாசிரியனை விட மேலானவன். அழகைப் படைத்த பிரமனையே எத்தனை அழகாகப் படைக்கிறேன் பார்.. என்று வரிந்துகட்டிக் கொண்டு செதுக்கி இருக்கிறான் பாருங்கள். பிரமனின் அழகு கொள்ளை போகிறது..

அத்தனை சிற்பங்களும் அதி சௌந்தர்யம். சதீஷுக்கு ஒரு ‘பலே’!!

திவாகர்

ஜூன் 17th, 2009 at 10:02
Manii
  12  

when creator is being creator all the beauties of the cosmos is reflected on the creation !!!

ஜூன் 17th, 2009 at 11:33
Prasad
  13  

Must visit.. :) .. Thanks for introducing such wonderful temples to us.

ஜூன் 17th, 2009 at 12:22
gnanambikai
  14  

i think the 5th photo from the end (one of the miniatures in the panel) is a depiction of shiva soothing parvathi ,who is angry on him for adorning ganga on his head…..one of his hands seems to bear the locks with ganga while he holds parvathi’s cheeks in his other hand….one can find a similar miniature on the pillars of darasuram………

ஜூன் 17th, 2009 at 23:41
Satish Kumar Arunachalam
  15  

Wonderful post. I think the panel in question - Sadashiva or Brahma - is Sadashiva or Siva because we find some figures all around..one even sitting near the leg. I dont think Brahma is depicted with figures sorrounding or like people listening…which is more common with Shiva panels.

And the other one should be ganagadhara…for the reasons quoted by Gnanambikai…

And, is the three attendees - Rama, Lakshmana and Sita? The left most figure has a different hair dress than the other two. In between the middle and right figure, something looks like a bow…The posture of the two figures is masculine and the left figure is more feminine…

Regards,
Satish

ஜூன் 18th, 2009 at 3:02
GRS
  16  

Vishnu’s face (pic 10 of 24) looked like Asian (Oriental or pertaining to Mongloid Race). Is my observation way out of mark?

thanks
GRS

ஜூன் 19th, 2009 at 1:07
GRS
  17  

Sorry, it is not the 10 out of 24 pictures, it is the 9th one .

ஜூன் 19th, 2009 at 1:08
  18  

2006 ல் ..புள்ளமங்கை.. என் பதிவுகள்…
http://maraboorjc.blogspot.com/2006/04/6_29.html

Chandrasekaran J

ஜூன் 19th, 2009 at 11:23
  19  

A wonderful post. I salute the creators of such superb panels around the places of worship.

ஜூன் 21st, 2009 at 22:46
Thanga.. Jagadeesan
  20  

really amzing work tat u r doing now. mind blowing…
researcher lik me, will get a much more informations from this site. thanks for being keep doing this!!!!!!!!

அக்டோபர் 5th, 2009 at 12:43
  21  

dear mr jagadeesan

thanks for your nice words and happy to see the contents are interesting to you. we are eager to know more about your field of research. Please do share with us when you have time

rgds
vj

அக்டோபர் 5th, 2009 at 12:51
சிவக்குமார் .வெ
  22  

//கதையில் சற்று தாழ்ந்தாலும், பிரம்மனின் முகத் தோற்றம் அப்பப்பா அபாரம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் பொது - யார் படைப்பாளி யார் படைப்பு. தலைப்பு புரிந்ததா //

பிரம்மாவின் புன்சிரிப்பும் , உயிரோட்டமான கண்களும் , வரைந்த ஓவிய உதடுகளும் …..சிற்பமா?ஓவியமா ?
வியக்கவைக்கிறது …!!!
அறிய படைப்பு !!!
வாழ்த்துக்கள் விஜய் .

டிசம்பர் 20th, 2009 at 21:49
சிவக்குமார்.வெ
  23  

வில் புருவம்
ஓவிய கண்கள்
வரைந்த உதடு
முக்கோண மூக்கு
பளிங்கு கன்னம்
மெல்லிய புன்னகை
நீள் காதுகள்
தொங்கும் தோடுகள்
கல் மகுடம்
மூன்று முகம்
படைத்தவனே …
உன்னை ரசிக்க
எனக்கு மட்டுமே தெரியும் …!!!
என் ரசனையை
யாருடனும் பகிரிந்து கொள்ள
நான் விரும்பவில்லை
ஏன் தெரியுமா ?
நீ என்னை பார்த்து மட்டுமே
புன்னகைக்க வேண்டும்.
உன் புன்னகை
எனக்கு மட்டுமே சொந்தம்.
ஆம் நான் சுயநலக்காரன் தான் …!!!

டிசம்பர் 21st, 2009 at 22:19
சிவக்குமார்.வெ
  24  

புள்ளமங்கை பிரம்மன்
என்னை பிரம்மிக்கவைத்த
பிரம்மன் !!!

டிசம்பர் 21st, 2009 at 22:29
  25  

அருமை சிவக்குமார். நேரே சென்று பாருங்கள்….கவிதை அப்போது வருகிறதா என்று பார்ப்போம். ஏனெனில் எனக்கு வார்த்தை வரவில்லை !!

விஜய்

ஜனவரி 6th, 2010 at 8:04

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி