Quantcast


வணக்கம் நண்பர்களே, இன்று நாம் மீண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான மல்லைக்கு பயணிக்கிறோம். இன்னும் ஒரு அற்புத படைப்பு இந்தச் சிற்பம். நாம் முன்னரே பார்த்தது தான் , ஆனால் வேறு ஒரு கண்ணோட்டத்தில். ( இந்தக்கால கட்டுடல் அந்தக்காலத்தில் )

mallai mahisha

ஆம்!. மகிஷாசுரமர்தினி சிற்பம் தான். இந்த சிற்பத்தை முழுவதுமாக ரசிக்க மூன்று நான்கு பதிவுகள் தேவை. எனவே இதோ முதல் பதிவு. தேவியை பார்ப்போமா…

‘சித்திரம் பேசுதடி. சிந்தை மயங்குதடி’ என்பது போல பேசாமலேயே நம்மை மயக்கும் சிற்பம் இது. தனது கை இல்லை கல் வண்ணத்தால் நம்மை கிறங்க வைக்கிறான் சிற்பி. அவற்றை பார்க்கும் முன்னர் முதலில் கதையை பார்ப்போம்.

வழக்கம் போல ஒரு அசுரன். மகிஷன். வரம் கேட்டு கடுந்தவம் புரிந்து பிரம்மனை வரவழைத்து அழியா வரம் கேட்கிறான். பிறப்பு என்றால் இறப்பும் நியதி. அதனால் சாகாவரம் தர இயலாது என்று நான்முகன் மறுக்க, தனது வரத்தை சற்று மாற்றிக் கொள்கிறான் மகிஷன். தனது வலிமையின் மீது இருந்த ஆணவத்தால், தன்னை எந்த ஆணாலும் எதிர்க்க முடியாது என்று இருக்க, மிகவும் புத்திசாலித்தனம் என்று நினைத்து தான் மடித்தால் ஒரு பெண்ணின் கையாலேயே மடிய வேண்டும் என்று வரம் கேட்கிறான். நான்முகனும் அவ்வாறே கொடுத்து விட, தவத்தின் பலத்தாலும் தனது அசுர குணத்தாலும் உலகை வென்று அடுத்து தேவலோகத்தின் மேல் படை எடுக்கிறான் மகிஷன். அவனது செயலை முறியடிக்க அனைத்து தெய்வங்களும் ஒன்று கூடி ஒரு தேவியை உருவாக்கி அவளுக்கு தங்கள் சக்திகளை கொடுக்கிறார்கள். எவ்வாறு… ( நன்றி கீதா அம்மா ) தேவி மகாத்தியத்தில் இருந்து வரிகளை எடுத்து அதற்க்கு தமிழில் விளக்கங்களும் தந்தார்.

ஷூலம்ஷூலாத் விநிஷ்க்ருஷ்ய ததெள தஸ்யை பிநாகத்ருக்

பிநாகபாணியான ஈசன் தனது சூலத்திலிருந்து ஒரு சூலத்தைத் தோற்றுவித்து அவளுக்குக் கொடுத்தார்.

சக்ரஞ் ச தத்தவான் க்ருஷ்ண: ஸமுத்பாத்ய ஸ்வசக்ரத:
கரிய திருமால் தன் சக்கரத்தினின்று ஒரு சக்கரத்தை உண்டாக்கி அளித்தார்.

சங்கஞ் ச வருண: சக்திம் ததெள தஸ்யை ஹுதாஸன:

வருணன் சங்கத்தையும், அக்கினி சக்தி ஆயுதத்தையும் கொடுத்தனர்.

மாருதோ தத்தவாம்ச்சாபம் பாணபூர்ணே ததேஷுதீ

வாயு பகவான் வில்லையும் அம்பையும் பாணங்கள் நிறைந்த அம்பறாத்தூணியையும் அளித்தார்.

வஜ்ர-மிந்த்ர: ஸமுத்பாத்ய குலிசா-தமராதிப:

இந்திரன் தனது குலிசத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட வஜ்ராயுதத்தையும் யானையாகிய ஐராவதத்தில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட மணியையும் கொடுத்தான்.

குலிசம் இங்கே இடி என்ற பொருளில் வரும் என எடுத்துக் கொள்ளலாம்

ததெள தஸ்யை ஸஹஸ்ராக்ஷோ கண்டா-மைராவதாத் கஜாத்

காலதண்டாத்-யமோ தண்டம் பாசஞ் சாம்புபதிர்ததெள

யமன் காலதண்டத்தில் இருந்து தண்டத்தையும், வருணன் பாசத்தையும் அளித்தனர்.

ப்ரஜாபதிச் சாக்ஷமாலாம் ததெள் ப்ரஹ்மா கமண்டலும்

பிரஜாபதியாகிய பிரம்மா அக்ஷமாலையையும் கமண்டலுவையும் கொடுத்தார்.

ஸமஸ்த-ரோம-கூபேஷு நிஜரச்மீன் திவாகர:

அவளுடைய மயிர்க்கால்களில் பிரகாசிக்கும்படியான கிரணங்களைச் சூரியன் அளித்தான்.
காலச்ச தத்தவான் கட்கம் தஸ்யாச் சர்ம ச நிர்மலம்!

காலன் கத்தியையும் நிர்மலமான கேடயத்தையும் அளித்தான்.

சரி, சிற்பத்திற்கு வருவோம். போருக்கு செல்லும் தேவியின் அழகோ அழகு. எட்டு கைகளுடன், சிங்கத்தின் மீது அமர்ந்து, ஒரு கம்பீரத்துடன் பார்க்கும் அந்த முகம்

mallai mahisha suramardhini
the majestic pose
what a mahestic pose
does look like she is smiling
the rich onamentation well she does look like smiling
hand stretching the bow string

நாணை வில்லில் ஏற்றி நிற்கும் பாணி, வில்லை பிடித்திருக்கும் கரத்தை பாருங்கள். கட்டை விரல் வில்லின் மீது படர, மற்ற விரல்கள் பலத்துடன் பற்றி இருக்கும் காட்சி, வில்லை வளைத்து இழுத்து கயிற்றை பிடித்திருக்கும் கரமோ இன்னும் அற்புதம். அதற்க்கு ஏற்றார்போல உடலை சற்று விறைப்பாக செதுக்கி இருப்பது .. உயிரோட்டம்

does look like she is smiling
hand stretching the bow string
the hand holding the bow

அடுத்து நம் கண்ணுக்கு சட்டென படுவது - தண்டம். யமனின் கால தண்டம். இது தண்டமோ அல்லது (G)கதையோ என்ற கேள்வி வராமல் இருக்க, சற்று படத்தை உற்று பார்ப்போம்.

the baton
the hand weilding the baton

கைப்பிடி கதை போல இருந்தாலும், உருண்டையாகவே இருக்கிறது. மேலும் தண்டத்தின் மேல் பாகம் நன்கு உருண்டு உள்ளதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. தண்டம் சிங்கத்தின் பிடரி பக்கம் முடிவதாலும், அதை அடுத்து சிங்கத்தின் பிடரி ரோமங்களின் வேலைப்பாடு இருப்பதால், சிதைந்த கூரிய கத்தி அல்ல என்று நாம் தெளிவாகவே சொல்லலாம்.

மேலும் மற்ற கரங்களில் உள்ள ஆயுதங்கள் என்ன என்னவென்பதை படங்களை கொண்டு பட்டியலுடன் ஒப்பிட்டு கூறுங்கள் பார்க்கலாம்.

2
hand holding the bell
hand holding the discuss
the hand holding the conch

ஆமாம், ஈசனிடம் பெற்ற சூலம் எங்கே?. ஒருவேளை வில்லையும் நாணையும் பிடிக்க இரு கரங்கள் தேவைப்பட்டதால் சிற்பி சூலத்தை விட்டு விட்டாரோ?

சிற்பத்தின் அழகை ரசிக்க இன்னும் ஒரு படம். படைப்பு சிற்பம், அதிலும் இப்படிப்பட்ட சிற்பத்தை வடித்த சிற்பி, தேவியை சிங்கத்தின் மீது சவாரி செய்வது போல காட்ட வேண்டும். இங்கே பாருங்கள், வலது கால் எப்படி முழுமையாக வெளியில் நீட்டி செதுக்கி உள்ளான் என்று.

the foot

இப்போது நீங்கள் மனதில் இந்த சிற்பத்தை ஒரு தனி படைப்பாக பார்க்காமல், ஒரு குடைவரையின் ஒரு பக்க சுவர் ( மறு பக்கம் இருப்பது நாம் முன்னர் பார்த்த சேஷ சயன பெருமாள் ),

Mahisha suramardhini cave facade
mallai anthasayana panel
mallai mahisha suramardhini panel

ஒரு மலையினுள் குடைந்த அதிசயம் இது. புரிகிறதா.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, ஜூலை 8th, 2009 அன்று 16:18 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 13 மறுமொழிகள்

  1  

Potetyinstone.in - The Gift of VJ - The God of Art Blog to the World.

Great work VJ .. you increase the inquisitiveness to see the sculptures once more even if we had seen it many times.

Do Continue the same spirit !!!

ஜூலை 8th, 2009 at 17:55
Manii
  2  

whenever vijay talks of mallai, there seems to be a touch of grace in it, the minute, intricte things become beautiful in his way of expression. wonder why our gods always smile even at the time of assassination !!! maybe its a lesson to understand that death is also a boon !!!

excellent presentation !!!

ஜூலை 8th, 2009 at 18:03
Rajeswari
  3  

excellent!!!!!! VJ your are doing great job.

The structure of amman is really very fantastic!!

ஜூலை 8th, 2009 at 20:10
anadhinatarajan
  4  

Thanks vj. It is a excellent job. woh…………..

ஜூலை 8th, 2009 at 21:35
Prabha
  5  

it is one of your master-commentry. Thank you.

ஜூலை 9th, 2009 at 0:46
  6  

//மேலும் தண்டத்தின் மேல் பாகம் நன்கு உருண்டு உள்ளதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. தண்டம் சிங்கத்தின் பிடரி பக்கம் முடிவதாலும், அதை அடுத்து சிங்கத்தின் பிடரி ரோமங்களின் வேலைப்பாடு இருப்பதால், சிதைந்த கூரிய கத்தி அல்ல என்று நாம் தெளிவாகவே சொல்லலாம்.//

அருமையான ஆழ்ந்த கவனிப்பு. சும்மா சிற்பத்தைப் பார்த்து நல்லா இருக்கேனு சொல்லுவதற்கும், உங்கள் கலைக்கண்களின் பார்வைக்கும் உள்ள வேறுபாடு அதிசயமானது. வாழ்த்துகள். வெற்றிகள் தொடரட்டும்.

ஜூலை 9th, 2009 at 13:48
  7  

Extremely beautiful description. If you continue this way, people will seldom come out of the temple complexes. That will be the real enjoyment.

ஜூலை 9th, 2009 at 22:55
V Dhivakar
  8  

பல புதிய மற்றும் அரிய விஷயங்களை அறிந்து கொள்கிறோம். This blog is reference guide for future. அடுத்தடுத்து போடுங்கள். தேவியைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள மிகப் பெரிய வாய்ப்பை வழங்குகிறீர்கள்.

கலைஞன் விஜய் க்கு வாழ்த்துகள்.

திவாகர்

ஜூலை 10th, 2009 at 11:35
Srinivasan N.
  9  

Yes Vijay, I think this Mallai panel would tend to stand out for its grace, flowing movements, enormous clarity of expression (even now!! mind it!!) despite the antiquity of the panel (almost 1300 years old!!!!!!!) and the weather worn condition of the Shore temple as well as many of the sculptures at Mallai because of salty sea breeze. Now this raises or brings to question an interesting debate:

Which of the sculptures (I mean of the three that come readily to mind, especially with you having so painstakingly and breathtakingly captured two of the three i.e. Mahisha as well as the Anantasyayi panel) i.e. WHICH OF THE THREE i.e. the earlier Trivikrama so beautifully captured by you earlier, this peerless Mahisha panel and indeed the Anantasyayi IS THE MOST COMPLICATED SCULPTURE. of course, Anantasyayi seems the least complicated although there is no denying that it is so full of simplicity and grace, but it looks like Trivkirama and Mahishasuramardini seems to vie with each other for the most complicated and yet most graceful sculptures…. one would tend to favour with Trivikrama simply because graceful sculpting of the feminine figures seems to come easily to the ancient artists, be it from the Pallavas, or the Cholas or Pandiyans… (outside the main discussion, I found remarkable similarities between the Anantasyayi at Thirumayyam and indeed the Namakkal mountain top Ranganatha, with both having similar themes and sculptures but different endings — but it seems the entire Namakkal sculpture including Narasimha, Hanuman, Goddes Lakshmi and indeed the mountain top Ranganatha were the creations of the Adigaimans or Adiyamans — perhaps later may be, VJ will be able to throw more light on this aspect).

ஜூலை 10th, 2009 at 12:01
Kathie B.
  10  

Excellent as usual. Just one query: thought
Yama’s attribute was His noose.
Another thought: Lord Vishnu at Thirumayyam is reaching back to pat Sesha.

ஜூலை 27th, 2009 at 19:51
sankaranarayanan
  11  

Dear Vijay

The Anathasayana here is the miniature of Thirumyam anthasayana. Which is carved first? mallai or meyyam.

டிசம்பர் 15th, 2009 at 18:40
sankaranarayanan
  12  

Dear Vijay

The Anathasayana here is the miniature of Thirumyam anthasayana. which was carved first?

டிசம்பர் 15th, 2009 at 18:40
  13  

dear Sankaranarayanan

Mallai for sure predates tirumayam.

rgds
vj

ஜனவரி 6th, 2010 at 8:00

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி