Quantcast

நண்பர்களே, இன்று நாம் மீண்டும் தாராசுரம் பயணிக்கிறோம். மீண்டும் ஒரு பெரியபுராணம் சிற்பம். இறை பக்தி , அதன் அற்புத தன்மைகளை விளக்கும் கதை. நமிநந்தி அடிகள் புராணம். முதலில் தொலைவில் இருந்து பாருங்கள்

water for lamp panel

பதினோறாம் திருமுறை
திருத்தொண்டர் திருவந்தாதி

வேத மறிக்கரத் தாரூர் அரற்கு விளக்குநெய்யைத் தீது செறிஅமண் கையர்அட் டாவிடத் தெண்புனலால் ஏத முறுக அருகரென் றன்று விளக்கெரித்தான் நாதன் எழில்ஏமப் பேறூர் அதிபன் நமிநந்தியே.

அழகிய ஏமப்பேறூர்த் தலைவராகிய நமிநந்தி அடிகளே, மறைவடிவாய மானை ஏந்திய கையினராகிய ஆருர்ப் பெருமானுக்கு, விளக்கு எரிக்க நெய் தாராது அமணர் மறுக்க, தெளிந்த நீராலேயே விளக்கு எரித்து, அமணர் துயருறச் செய்த பெரியவர் ஆவார்.

பேரூரில் பிறந்த நமிநந்தி அடிகளுக்கு திருவாரூர் தியாகராஜர் மீது மிகுந்த பற்று, பக்தி. ஒருமுறை ஆலயத்திற்கு சென்ற அவர், பல மணி நேரம் அங்கேயே கழித்தார். கதிரவன் மறையும் தருவாயில் விளக்குகளை ஏற்ற எண்ணெய் தேடி, அருகில் இருந்த வீட்டை பார்த்து, அங்கு இருந்தவர்களிடம் உதவி - விளக்கு ஏற்ற எண்ணெய் கேட்டார். வேற்று மதத்தை சான்ற அவர்கள் எண்ணெய் கொடுக்கு மறுத்தது மட்டும் அல்லாமல் , உங்கள் ஈசன் தான் கையிலேயே தீயை வைத்து ஆடுபவன் தானே , அவனுக்கு எதற்கு எண்ணெய், வெறும் தண்ணீரே போதுமே என்றனர்.

இதை கேட்டு மிகவும் மனம் உடைந்து மீண்டும் கோயில் மண்டபத்தில் வந்து அமர்ந்த அவருக்கு ஒரு அசரீரி குரல் கொடுத்து. தாமரை குளத்து தண்ணீர் கொண்டு வந்து விளக்கை ஏற்று என்று. …

அவரும் அவ்வாறே செய்ய - அதிசயம், விளக்குகள் அனைத்தும் மிக பிரகாசமாக எரிந்தன. விளக்கு எரிய எரிபொருள் தேவை இல்லை, அது எரிந்தது அவரது பக்தி மற்றும் இறை நம்பிக்கையினாலே …

சரி , சிற்பத்தை பார்ப்போம்.

naminandhi darasuram.jpg

இரு பாகங்களாக பிரித்து பார்க்கவேண்டும்.

naminandhi 1st part
naminandhi 2nd part

முதல் பாகம், தடாகத்தில் இருந்து தன்னேர் எடுக்கும் காட்சி ( தடாகத்தில் பூக்கள், மீன்கள் மற்றும் ஒரு கொக்கு வேறு ) , அடுத்து ஆலயத்தின் விளக்குகளுக்கு மிகுந்த பக்தியுடன் நீரை ஊற்றி எரிய வைக்கும் காட்சி, மிகவும் அற்புதம்

அது சரி, விளக்கு எரிய வேறு ஒரு வஸ்துவை உபயோகித்த இன்னொரு நாயனார் கதையும் உண்டு. அடுத்த இடுகையில் அதையும் பார்ப்போம்.

படங்கள் நன்றி : பொன்னியின் செல்வன் குழும நண்பர்கள் : சதீஷ் மற்றும் சாத்மீகா

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, ஜூலை 14th, 2009 அன்று 17:39 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 5 மறுமொழிகள்

  1  

Nice Blog once again !

I have one suggestion to make… It will be more useful from a readers perspective , If you can also inform about the particular place in Temple Complex at which the mentioned Panel is found.

ஜூலை 16th, 2009 at 11:36
  2  

Thanks swaminathan sir, well well - the search is half the fun…

ஜூலை 17th, 2009 at 7:57
Srinath Rajagopalan
  3  

Excellent blog, amazing observations and a simply fantastic effort in bringing our treasured sculptures to the forefront.

Keep up the good work - thangal kalayulaga sevaikku en manamarndha nalvazthukkal. - Srinath

ஜூலை 18th, 2009 at 4:12
  4  

Many thanks for your nice words Srinath. please spread the word among friends so that many more can view, enjoy and contribute

rgds
vj

ஜூலை 21st, 2009 at 15:59
  5  

hi swami sir, updated the post with the location. trust will be useful…

ஜூலை 22nd, 2009 at 17:35

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி