Quantcast

நண்பர்களே!

இன்று மிகவும் சந்தோஷமான நாள். எனது முதல் கண்டுபிடிப்பு இன்று வெளி வருகிறது. இது தற்செயலாக கண்ணில் பட்ட ஒரு புகைப்படத்தில் இருந்த வந்ததே என்றாலும், இரண்டு வருடங்களாக இதனை நான் எப்படி வெளியிடுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். ஏதாவது கருத்தரங்கில் பெரிய பெரிய ஆய்வாளர்களுக்கு முன் இதனை வெளியிடவேண்டும் என்ற ஆசை இருந்தது. பிறகு தான் புரிந்தது, இவை எல்லாம் எவ்வளவு கடினம் என்று, அது மட்டும் இல்லாமல் அவ்வாறு சமர்ப்பித்த ஆவணங்கள் எத்தனை சான்றோர்களையும், சாமானியர்களையும் ஆன்றோர்களையும் சென்று அடைகின்றன! அதனால், இன்று நண்பர்கள் துணையுடன், இணையத்தில் எங்கள் தளம் தரும் தைரியத்தில், முதல் முதலில் எனது கண்டுபிடிப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

பல்லவர்கள் கலை உலகுக்கு செய்த சேவை மிக அரியது. அதனை பற்றி எழுத வேண்டும் என்பதால் மகேந்திர குடைவரைகள் பற்றிய தொடரை துவங்கினேன். அவற்றில் நாம் பல அரியதகவல்களை தெரிந்து கொண்டோம் . இந்தத் தொடரில் மேலும் பல விஷயங்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.

பல்லவர்கள் சிற்பக் கலை வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டில் மிகவும் போற்றப்பட வேண்டியவை அவர்கள் தந்த சோமாஸ்கந்த வடிவம், சிவ கங்காதர வடிவம் மற்றும் மகிஷாசுரமர்தினி வடிவங்கள். அவற்றில் பல்லவ சோமாஸ்கந்த வடிவம் மிகவும் அற்புதமான வடிவம், பிற்கால பல்லவர் ஆலயங்களில் கருவறையில் பின் சுவரில் இந்த அற்புத வடிவத்தை நாம் பார்க்கலாம்.

இந்தப் பதிவு அப்படிப்பட்ட மூன்று சோமாஸ்கந்த வடிவங்களை பற்றியும் அவற்றால் எழும் புதிருக்கு விடையும் பற்றியது. பொதுவாக கருவறை பின்சுவரில் மட்டுமே இருக்கும் இந்த வடிவம் சாளுவன்குப்பம் அதிரணசண்ட மண்டபத்தில் வெளியிலும் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தக் குடைவ்ரையே புதிர்கள் நிறைந்த ஒன்று.

the atiranchanda mandabam as it stands today

பல அறிஞர்கள் வெகுவாக விவாதித்த விஷயம். பார்ப்பதற்கு குடைவரையின் பாணி முற்கால பல்லவர் குடைவரை போல ( தூண்களின் அமைப்பு ) இருந்தாலும் , அங்குள்ள கல்வெட்டில் (அற்புதாமான கல்வெட்டு) ராஜஸிம்ஹ பல்லவன் தான் எடுப்பித்த அதிரணசண்ட பல்லவேஸ்வர க்ருஹம் என்று தனது பட்டப்பெயர் அதிரணசண்ட (அதி - மிகை , ரண - போர்களம், சண்ட - வல்லவன் ) என்று கூறுகிறது.

inscriptions on left wall
inscriptions on right wall

மல்லை பற்றி திரு நாகசுவாமி அவர்களின் அற்புதமான பதிவைப் படியுங்கள். ஒரு தவம் போல அவர்கள் பணிகள் நம்மை நெகிழவைக்கும்.

http://tamilartsacademy.com/books/mamallai/new-light.xml

வாசகர்கள் இந்த அதிரணசண்ட மண்டபத்தின் அமைப்பையும் மகேந்திரர் கால குடவரைகளின் அமைப்பையும் ஒப்பு நோக்கினால் இன்னும் பல கேள்விகள் வெளி வரும்.

அதற்கு முன்னர், இந்த சோமஸ்கந்தர் என்றால் என்ன? உமையுடனும் கந்தனுடனும் இருக்கும் ஈசன் என்றே பொருள்சரி! முருகன் மட்டும் ஏன், விநாயகர் எங்கே? அதற்கு முந்தைய பதிவான மல்லையில் எங்கும் விநாயகர் இல்லை வாசியுங்கள்.

பல்லவ மன்னன் மகேந்திரன் தான் முதல் முதலில் உலோகம், சுதை, செங்கல், மரம் போன்றவற்றை உபயோகிக்காமல் கல்லில் கட்டிய ஆலயம் என்று கூறியதை மண்டகப்பட்டு கல்வெட்டில் பார்த்தோம். அப்போது அவர்கள் இறைவனின் வடிவத்தை சுதை மற்றும் மரத்தில் செய்து வழிபட்டார்கள். இன்றும் பல்லவ கால உத்திரமேரூர் வரதர் ஆலயத்தில் சுதை வடிவங்களை பார்க்கலாம். ஆலயத்தை கல்லில் கட்டிய அவர்கள், மரத்தாலும் சுதையாலும் ஆன விக்கிரகங்கள் மிக விரைவில் அழிந்து விடுவதை கண்டோ, அல்லது அங்குள்ள சிற்பியின் கைவண்ணம் காலத்தால் வளர்ந்ததாலோ, அவற்றையும் கல்லிலே செதுக்க ஆரம்பித்தனர் எனவே பிற்கால பல்லவர் கருவறை சுவரின் பின்பக்கம் சுவரிலேயே சோமாஸ்கந்த வடிவம் செதுக்கப்பட்டது. இவ்வாறு வந்ததே சோமாஸ்கந்த வடிவம். வலது புறத்தில் ஈசன், இடது புறத்தில் உமை, உமையின் மடியில் அல்லது நடுவில் குழந்தை முருகன். இந்த வடிவமும் காலப்போக்கில் எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதை பற்றி படிக்க திரு கிபிட் சிரோமொனே அவர்களின் பதிவு

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

சோழர்கள் இந்த வடிவத்தை வெண்கல சிலைகளாக வடித்து, இந்த வடிவத்தின் பெருமையை இன்னும் பெரிதாக்கினார்.

somaskanda  bronze

சரி, மீண்டும் அதிரணசண்ட பல்லவேஸ்வரக்ருஹம் வருவோம், பலருக்கு இன்று நாம் பார்க்கும் மல்லை முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணுள் புதைந்து இருந்தது என்பது தெரியாது. (ஆம், புகழ் பெற்ற பஞ்ச பாண்டவ ரதம் கூடத்தான்!) அந்தக் காலத்தில் ( 18 C) இருந்த நிலையை அரிய இந்த புகைப் படத்தை பாருங்கள் ( நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி )

as it was escavated

இன்று இப்படி காட்சி அளிக்கும் மண்டபமே அது.

a closer look at the cave

சரி, சற்று அருகில் சென்று பார்ப்போம்.

highlights where we are going to focus

கருவறைக்கு இருபுறமும் இரண்டு சோமஸ்கந்தர் வடிவங்கள் உள்ளதை பாருங்கள். பொதுவாக கருவறையில் உள்ளே மட்டுமே இருக்கும் இவை ஏன் இங்கு வெளியில் வந்துள்ளன.

the somasskanda panel on the left
the somasskanda panel on the right

கருவறையினுள் சற்று சென்று பார்ப்போம். சிவ லிங்கத்தின் பின்புறம் அழகிய சோமஸ்கந்தர் வடிவம் உள்ளது.

the central shrine
somaskanda in the main shrine
the prismatic lingam and somaskanda
closer look at the somaskanda
the closest

பின்னர் எதற்காக சிற்பி வெளியிலும் இரண்டு சோமாஸ்கந்த வடிவங்களை செதுக்கினான்

the somaskanda in outer wall right side
the somaskanda in the outerwall leftside

இங்கே தான் எனது கண்டுபிடிப்பு வருகிறது. மண்ணில் புதைந்த மண்டபத்தை வெளிக் கொணர்ந்தவுடன் எடுத்த புகைப் படம் ( மீண்டும் நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி ) என் கண்ணில் பட்டது.

a late 18thC photo offering vital clues

சற்று உன்னிப்பாக கவனியுங்கள். வெளியிலும் இரண்டு சிவ லிங்கங்கள் இருப்பதை பார்க்கிறோம்.

the clues

அதனால் தான் சிற்பி அவற்றுக்கு பின்னர் சோமஸ்கந்தர் வடிவங்கள் செதுக்கி உள்ளான். இதுவே எனது கண்டுபிடிப்பு

இந்த லிங்கங்கள் இப்போது எங்கே போயின ? இவை மற்றும் இன்றி இன்னும் இரண்டு சிற்பங்கள் புகை படத்தில் உள்ளன. தலையில்லாத அமர்ந்த கோலத்தில் ஒரு வடிவமும், நிற்கும் கோலத்தில் அழகிய இன்னொரு வடிவமும் காணலாம். சென்ற முறை அங்கு சென்ற பொது இந்த சிதைவுகள் ஒரு ஓரத்தில் இருப்பதை படம் எடுத்தேன்!!

ruined sculptures
ruined sculptures lying uncared for

கால ஓட்டம் ஒரு கலைஞனையும் அவன் திறமையயும் அழிக்க நினைத்தாலும், அந்தக் கலைஞனின் சிற்பக் கலையை மட்டும் காலத்தால் அழிக்க முடிவதில்லை என்பதையும் உணர்ந்தேன். அது பதினெட்டாம் நூற்றாண்டின் நிலை. பின்னர் விளைந்த சிதைவுக்கு யார் பொறுப்பு?

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், ஆகஸ்ட் 6th, 2009 அன்று 18:28 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 23 மறுமொழிகள்

  1  

Super VJ!!!
Better start working for a paper..Though the reach is wide for blogs, a paper still has its value!

ஆகஸ்ட் 6th, 2009 at 18:44
  2  

அருமை விஜய். மண்ணில் புதையுண்டிருந்த சாளுவன்குப்பம் அதிரணசண்ட மண்டபத்தில் வெளியில் இரண்டு இடங்களில் உள்ள சோமஸ்கந்தர் வடிவங்களுக்கான காரணத்தை உரிய சான்றுகளுடன் காட்டி உள்ளீர்கள். புதியன கண்ட ஆராய்ச்சியாளரின் ‘யுரேகா’ என்ற உற்சாகக் கூவலை உங்கள் விவரிப்பில் கண்டு மகிழ்ந்தேன். அரிதான இந்தத் தேடல், பாராட்டுக்கு உரியது. அந்த லிங்கங்கள் இப்போது எங்கே போயின? என்ற கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியும்?

ஆகஸ்ட் 6th, 2009 at 19:54
anandhinatarajan
  3  

thanks vijai. cholas folowwed pallava’s ideas and developed it later.But first credits goes to Pallavas.
First Ganapati was vathapi ganapati brought by Paranjothi senathipathi of narashima pallava is in his village Thiruchenkaatankudi near thiruvar

ஆகஸ்ட் 6th, 2009 at 20:31
Kathie B.
  4  

Dear VJ, so 3 sanctums w both SivaLingams, & Somaskandas. Great sleuthing! Interesting that there’s no Ganapati anywhere here. I’ll try to dig one up ? ? Love your website, always.
Kathie

ஆகஸ்ட் 6th, 2009 at 20:38
Rajeswari
  5  

Excellent VJ. Your are doing a great job.

ஆகஸ்ட் 6th, 2009 at 20:42
Kathie B.
  6  

Another question : Why would the Pallavas
carve a shrine with 3 nearly identical murthis
& SivaLingams? What, I wonder did each signify?

ஆகஸ்ட் 6th, 2009 at 20:51
  7  

wow..that solves my question ..amazing ..u must be an armchair archaeologist :)

ஆகஸ்ட் 7th, 2009 at 8:34
  8  

Came here thanks to Lakshmi and wow, am stumped.. the kind of information, details… have blogrolled you!!

ஆகஸ்ட் 7th, 2009 at 9:13
DHIVAKAR V
  9  

Really a Hard work and rich harvest my dear Vijay! In Saluvan Kuppam, still many more such to identify and the most important one is Muruga Termple. Let us hope for bright feature.

கலைஞன் விஜய்க்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

திவாகர்

ஆகஸ்ட் 7th, 2009 at 10:13
Manii
  10  

You are the latest indiana jones….. continue your discoveries !!!

ஆகஸ்ட் 7th, 2009 at 12:50
திருநாவுக்கரசு
  11  

அன்பு நண்பர் விஜய் அவர்களுக்கு,

வாழ்த்துக்கள் !!

இதற்கு முன்பு -”சிவாஜி படத்தின் பாட்டில் பல்லவ சிற்பத்தின் சாயல் ! “- பதிவின் பின்னூட்டத்தில் “வரலாற்றுச் சின்னங்களை ஆராய்வது ஒரு புதிரை விடுவிப்பதை போல் சுவாரஸ்யமானது” என்று எழுதினேன். இன்று மீண்டும் ஒருமுறை அதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். மீண்டும் வாழ்த்துக்கள்.
–http://www.poetryinstone.in/lang/ta/2008/12/11/pallava-inspiration-for-rajini-balle-rakha-song-costumes.html#comment-432–
அதன் மறுமொழியாக நீங்கள் “சிற்பம் என்பது மக்களுக்கு சென்று அடைந்தால் போதும்” என்று சொல்லி இருந்தீர்கள். இன்று அதைத் தாண்டி “இங்கே ஒரு சிலை இருந்திருக்கணும் அந்த சிலை எங்கப்பா ” என்று எல்லோரையும் அலற விட்டு விட்டீர்கள்.
மிகச் சிறந்த வளர்ச்சி !

பொக்கிஷம் திரும்பக் கிடைத்த ஒரு சந்தோஷம் கூடவே அதை சிதைந்த நிலையில் காணும் சோகம். என்ன செய்வது ? வரலாற்றுப் பாடம் என்றாலோ வரலாற்றுச் சின்னம் என்றாலோ அசிரத்தையுடன் பார்க்கும் சமூகம்,அரசாங்கம். இதுவே அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ, இஸ்ரேலிலோ என்றால், இந்தக் கண்டுபிடிப்புக்கு அரசாங்கம் பாராட்டு விழா எடுத்திருக்கும். மேலும் காணமல் போயுள்ள சிலைகளை கண்டுபிடிக்க ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டிருக்கும்.

தடுக்கி விழுந்தால் ஒரு குடைவரை கோவில், நிமிர்ந்து பார்த்தால் கோபுரம் என்று ஊர் முழுக்க கோவில்களாக நிறைந்து இருக்கும் நம்ம ஊரில், உங்களைப் போல் யாராவது வந்து புகைப்படம் எடுத்து இப்படி எல்லாம் இருந்தது இப்போது இதெல்லாம் இல்லை என்று சொன்னால் தான் தெரிகிறது.

தாராசுரத்தில் உள்ள மினியேச்சர் சிற்பங்களில் உள்ள பெரிய புராணக் கதைகளை வெளிக்கொணர்வதில் இருந்து உங்கள் ஆராய்ச்சி துவங்குவதாகக் கொள்ளலாம். இது வேறு வகையான வெளிப்பாடு. வெறுமனே கல் - கலை - வண்ணம் என்று காட்டி -” ஆஹா என்னமா செதுக்கி இருக்கான் பாரு” என்று கூறுவதோடு நிறுத்தி விடாமல், ஏன்-எதற்கு-எப்படி என்று நீங்கள் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டு எங்களுக்கும் தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி !!

மீண்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக !!

அன்புடன்,
-திரு.

ஆகஸ்ட் 7th, 2009 at 15:56
Satish Kumar A
  12  

Wonderful Vijay. Great to see the old photos…really a great discovery. Where the hell are those siva lingams now?
A good point that there are not ganapathi anywhere…but, I think I pointed to you once that there is a ganapathy in the shore temple, as one among the gana’s in the vimanam.

Good work and thanks for such wonderful posts.

Satish

ஆகஸ்ட் 7th, 2009 at 21:30
  13  

அனூர் செங்கல்பட்டு அருகே உள்ளது. 5-6 நூற்றாண்டு பிள்ளையார் relief சுவற்றில் உள்ளது. அதேபோல், திருவல்லரை கோயிலில், கண்க்களோடு கணங்கலாய், பூத ரேகையில் கணபதியைப் பார்த்து, புகைப்படமெடுத்துள்ளேன்.
சந்திரா

ஆகஸ்ட் 7th, 2009 at 23:24
Humble
  14  

british library photos are eye opener to me.

thanks vijay !

ஆகஸ்ட் 8th, 2009 at 9:24
  15  

tks vairam…. papers take too long and need lot of patience, maybe once i retire…

dear anna kannan, you always amaze me with your detailed study of articles and comments. tks for the same.

dear ms anandhinatarajan, while i do agree about the vatapi ganapthy legend, dating of pillayar patti ( possible early pandyan cave) is 3rd C. so …

ஆகஸ்ட் 8th, 2009 at 15:11
  16  

hi kathie

well its not 3 shrines. actually designwise its just one shrine cut into the main rock - the outer corridor has been converted into two more shrines. this cave is a big puzzle. the styling is very very mahendra like - the pillars and all, but none of mahendra’s caves have somaskanda panels cut into the stone. and the inscription!!

ஆகஸ்ட் 8th, 2009 at 15:14
  17  

hi aarthi

Thanks for the nice words and lakshmi, hope you can now do the pallava and chola trails. viewers watch out for lakshmi’s upcoming tours.http://travelwise.in/

ஆகஸ்ட் 8th, 2009 at 15:17
  18  

dhivakar sir, thanks for your continued support. you are as much a pillar of poetryinstone as are thiru, satheesh and all the other contributors

mani, neenga arasiyal vaadhiya irukkanum, ehtukkeduhtaalum pattam koduthadareenga

ஆகஸ்ட் 8th, 2009 at 15:18
  19  

நண்பர் திருநாவுக்கரசு,

மிகவும் ரசித்து எழுதின பதிவு இது. அதனை ரசித்து படித்து நீங்கள் இட்ட மறுமொழி படிக்க இன்பமாக உள்ளது.

நன்றி விஜய்

ஆகஸ்ட் 8th, 2009 at 15:21
  20  

hi sathish, chandra

http://www.poetryinstone.in/lang/en/2009/01/01/there-are-no-ganesha-sculptures-in-mallai-except-for.html

I meant there are no main shrines for Ganesha in mallai. read above.

Chandra, very interesting 5 -6th C - eager to see. Btw, have read that even in the aadhi varaha cave there is one such bootha regai with a gana with an elephant head, but not seen yet. anyone can help getting a picture??

ஆகஸ்ட் 8th, 2009 at 15:25
  21  

hi thiru<

at last, got u to comment

vj

ஆகஸ்ட் 8th, 2009 at 18:59
  22  

Congratulations on this discovery.

ஆகஸ்ட் 11th, 2009 at 23:01
N.Balasubramanian
  23  

It is Isaac Newton, not Einstein, who is credited with that quote.

அக்டோபர் 5th, 2009 at 10:54

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி