Quantcast

நண்பர்களே , இன்று நான் என்னை மிகவும் கவர்ந்த மனிதரை பற்றி எழுதுகிறேன். எனது அறிவுப்பசியைத் (சிற்பங்களை சார்ந்த!!) துவக்கி வைத்த அற்புத மனிதர், இணையத்தின் பலம், அதன் முழு பயன், வரும் சந்ததியனருக்கு நாம் விட்டுச்செல்ல கூடிய பொக்கிஷங்கள் போன்றவற்றை எனக்கு உணர்த்திய மாமனிதர். திரு ஐன்ஸ்டீன் அவர்கள் தனது அற்புத கண்டுபிடுப்புகளை பற்றி இவ்வாறு கூறினாராம்..” தொலைவில் உள்ள ஒரு நல்ல பொருளை என்னால் காணமுடிவதற்குக் காரணம் நான் உயர்ந்தவர்களின் தோளில் இருந்து பார்ப்பதால்தான்”

அது போல ஒரு உயர்ந்தவரை பற்றிய பதிவே இது. நான் எழுதும் அந்த மனிதரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. நான் எனது வாழ்கையை எப்படி எழுதவேண்டும் என்பதை பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்னரே, அதாவது 1988 இல் அவர் மறைந்துவிட்டார்.

சிற்பக்கலை பற்றி எனக்கு ஆர்வம் வந்தவுடன், மல்லை கலைச்செல்வங்களை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், ஒரு தேடலாக பார்த்தேன் . அவற்றை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள பல ஊடகங்களை அலசினேன். சிங்கையில் இருந்தபடியால் நேரில் பார்க்க வாய்ப்புகள் குறைவு, எனவே புத்தங்களை படித்து பசியாறினேன். எனினும் சிற்பக்கலை பற்றி ஒரு சில புத்தகங்களே கிடைத்தன. அவற்றில் பலவும் என் அறிவுக்கு ( இன்றும் ) எட்டாத நிலையில் இருந்தன. அவற்றில் சில விலை அதிகமாக என்கைக்கு எட்டாதவகையில் என்னை வாட்டின. ஆர்வம் என்னை இணையத்திற்கு எடுத்து சென்றது. அல்லும் பகலும் தேடினேன் . இரண்டு தளங்கள் கிடைத்தன. திரு நாகசுவாமி அவர்களின் தளம் மற்றும் திரு

கிஃப்ட் சிரோமோனி அவர்களின் தளம் Dr.Gift Siromoney (30.7.1932 - 21.3.1988), M.A., M.Sc., Ph.D., F.S.S.

http://www.cmi.ac.in/gift/Archaeology.htm

திரு கிஃப்ட் அவர்களின் இடுகைகள் எனது பல கேள்விகளுக்கு எளிமையான முறையில் விடை தந்தன. மேலும் அருமையான வர்ணனை , இலவசமாக, புகைப்படங்கள், விளக்கும் சித்திரங்கள் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அவர் கையாண்ட முறை, என்னை மிகவும் கவர்ந்தன. இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் சாமானியர்கள் கூட ஒருமுறை படித்தால், நமது குல பொக்கிஷங்களான கலைப்பெட்டகங்ளை போற்றி அவற்றை ரசிக்க வைக்கும் வண்ணம் இருந்தன அவரின் இடுகைகள். வரும் சந்ததியினர் இவற்றை போற்றி பேணி காக்க அவர் செய்துள்ள பனி அபாரம். அவரது இந்த செய்கை, அவர் இந்த உலகை விட்டு சென்றபின்னரும் என்னை போல சிலரை ஊக்குவிப்பதை கண்டு பெருமை படுகிறேன். ஏகலைவன் போல அவரை மானசீக குருவாக கொண்டு, நானும் இணையத்தில் இவ்வாறு ஒரு சிற்பக்கிடங்கியை உருவாக்க வேண்டும், அவரை போல என் தளமும் எனக்குப் பின்னரும் பலருக்கு உதவ வேண்டும் என்ற ஆசையில் அவர் வழி பின்தொடர்கிறேன்.

அவர் இவ்வாறு விட்டுச்சென்ற ஒரு இழையை இன்று விரிவு செய்து இங்கு படைக்கிறேன். இதுவும் ஒரு பல்லவ புதிர். திரு கிஃப்ட் அவர்களது இடுகையை சற்று நேரம் எடுத்து படியுங்கள்.

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_dvarapalaka.htm

நண்பர்களின் உதவி கொண்டு அவரது இந்த பதிவை படங்கள் கொண்டு நான் விளக்குகிறேன்.


மிகவும் எளிய கருத்து இது. பல்லவ வாயிற் காப்போன் வடிவங்கள் உள்ளே இருக்கும் தெய்வங்களின் ஆயுதங்களே! என்பதே ஆகும்

இதை விளக்க, பல்லவ கால குடவரைகளின் வாயிற் காப்போன்களை பார்ப்போம். பொதுவாக பல்லவ கால சிவன் ஆலய வாயிற் காப்போங்களின் தலை அலங்காரங்கள் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. இவர்களுக்கு கொம்பு உண்டு ! பழங்கால பழகுடியின மக்களின் பழக்கமோ , அல்லது சமண வடிவங்களில் வரும் நாக சித்தரிப்பின் விளைவோ, இல்லை நந்தி வடிவமோ ..என்று பல விதமான கருத்துக்கள் உண்டு.

வல்லம் குடைவரையை ஆய்வு செய்து தனது விளக்கங்களை தந்துள்ளார் திரு கிஃப்ட் அவர்கள், ஆனால் இன்று வல்லம் குடவரை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. நல்ல படம் எடுக்க முடியாத படி ” பாதுகாத்து வருகின்றனர். ” ( படங்களுக்கு நன்றி திரு சுவாமிநாதன் ஐயா மற்றும் திரு சந்துரு). ஆனால் நண்பர் திரு ஸ்ரீராம் அவர்களின் உதவி கொண்டு திருமயம் குடைவரை சிற்பங்கள் மற்றும் மண்டகப்பட்டு , சீயமங்கலம் குடைவ்ரைகளின் சிற்பங்கள் கொண்டு நாம் இன்று விரிவாக பார்க்கப்போகிறோம்.

சரி, முதலில் வல்லத்திலேயே ஆரம்பிப்போம். அற்புத சிற்பங்களை பாதுகாக்க அசிங்கமான இரும்புத்திரை .

vallam cave face

அற்புத துவாரபாலகர்கள். பிற்கால கோயில்களில் தனித்தன்மையை இழந்து நிற்கும் சிற்பங்களை போல அல்லாமல், ஒவ்வொருவரும் தனக்கே உள்ள தனித்தன்மையுடன் உயிரோட்டத்துடன் இருக்கும் பல்லவ சிற்பங்கள். இரு பல்லவ சிற்பங்கள் ஒன்று போல இருக்காது, அதுவும் அவர்கள் சற்றே திரும்பி நிற்கும் பாணி அருமை.

vallam Cave  Dvarapala left
vallam Cave Dvarapala right

வலது புறத்து சிலைக்கு இருக்கும் கொம்பை பார்த்தீர்கள ? இவை கொம்புகளா. கொம்பென்றால் தலையின் மேலே அல்லது சற்று நெற்றிப்பொட்டின் அருகில் அல்லவா இருக்க வேண்டும். இவை எங்கோ கழுத்தின் நடுவில் இருக்கும் படி உள்ளனவே, அதிலும் “கொம்பு” ஆரம்பிக்கும் பகுதியில் ஒரு தேவையற்ற வளைவு உள்ளதே.

closeup of the horns of the rightside door guardian vallam
closeup of the leftside door guardian vallam

சரி, இடதுபுறத்து சிற்பத்தை பார்ப்போம். இவருக்கு கொம்பில்லை, எனினும் கூர்ந்து பாருங்கள், நாடு நெற்றியில் ஒரு புடைப்பு தெரிகிறது . இது அவரது கிரீடத்தின் அலங்காரமா ? இல்லை இதற்க்கு வேறு ஏதாவது அர்த்தம் உண்டா ?

சரி, அடுத்து மண்டகப்பட்டு மகேந்திர குடைவரை செல்ல்வோம் .

mandagapattu cave face
mandagapattu leftdoor guardian
mandagapattu rightdoorguardian
closeup of left door guardian mandagapattu
closeup of right doorguardian mandagapattu

வலது புறத்து துவாரபாலகன் அழகாக இருந்தாலும் கொம்பில்லை. வருத்தப்பட வேண்டும், இடது புறத்து ஆள் நமக்கு உதவுகிறார். நெற்றி புடைப்பு தான் இங்கேயும் .

mandagapattu left door guardian
mandagapattu left doorguardian
mandagapattu left doorguardian- highlighting the protrusion
the protrusion
the protrusion highlighted

அது என்ன இது, புது அலங்காரம். இன்னும் சிலவற்றை பாற்றுவிட்டு இந்த கேள்விக்கு விடை தேடுவோம்.

அடுத்து சீயமங்கலம் செல்வோம்.

seeyamangalam cave face

வலது புறத்து சிற்பம் கொம்புடன் காட்சி அளிக்கிறது. இடது புறத்து வாயிற் காப்போன் கிரீடத்தில் தான் புடைப்பை காணவில்லை.

seeyamangalam cave dvarapala left
seeyamangalam cave dvarapala right

சரி, மீண்டும் கொம்பை சற்று அருகில் சென்று பார்ப்போம். இங்கேயும் கொம்பின் அடியில் உள்ள அரை வட்டம் குழப்பத்தை தருகிறது.

closeup of the horns of rightside door guardians seeyamangalam

இப்போது புதிருக்கு விளக்கம் பெற, நண்பர் ஸ்ரீராம் அவர்களின் உதவி கொண்டு திருமயம் சிற்பங்களை பார்ப்போம். அற்புத வடிவங்கள், அதுவும் அந்த வலது புறத்து சிற்பத்தின் நிற்கும் பாணி, ஆஹா என்ன ஒரு கம்பீரம், அப்படியே உயிர் சிற்பம்.

tirumayam right door guardian

இடது புறத்து சிற்பம் சற்று அடங்கி இருந்தாலும் அருமை.

tirumayam left door guardian

அருகில் சென்று ஆராய்வோம் . அவர்களின் தலை அலங்காரம் மிக அருமை.

closeup of left door guardian
closeup of right door guardian
a better view of the right side door guardian
closeup 2
closeup of the right side horn
left door guardian

வலது புறத்து வாயிற் காப்போனின் தலை கொம்பு - இப்போது இந்த சிற்பத்தில் இன்னும் அலங்காரமாக இருக்கும் கொம்பு நமக்கு பல உண்மைகளை வெளி கொணர உதவுகிறது. உங்கள் மனக்கண்களில் வாயிற் காப்போனின் முகத்தை எடுத்துவிட்டு வெறும் கொம்புகளை மட்டும் பாருங்கள்

due you notice the trident
due you notice the trident1

கிரீடத்தின் மேலே ஒரு வேல் போன்ற அமைப்பு தெரிகிறதா. இதையும் இரண்டு கொம்புகள் ( அவற்றின் அடியில் இருக்கும் அரை வட்டம் ) ஆனதையும் சேர்த்து பாருங்கள். ஒரு திருசூல வடிவம் தெரிகிறதா. .

the trisoolanthahar

ஆம் இவரே திரிசூலநாதர்

இதே வாதத்தின் படி, இடது புறம் இருப்பது வெறும் புடைப்பு இல்லை. அது மழு . கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள புகழ் பெற்ற சண்டேசர் வடிவத்தில் அவன் கரத்தில் உள்ள மழுவை பாருங்கள்.

GKC shiva with axe blade
mandagapattu left doorguardian- highlighting the protrusion
not the protrusion on top

இவரே மழுவுடையார்.

ஈசனின் மழுவும் சூலமும் மனித உரு கொண்டு அவன் சன்னதியை காக்கும் கோலங்களே இவை.

சகோதரி காதி அவர்கள் அனுப்பிய காவேரிபாக்கம் சிற்பம். தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் சிற்பம். இவரும் திரிசூலநாதர் !!

Kaveripakkam charmer

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, ஆகஸ்ட் 12th, 2009 அன்று 13:36 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 25 மறுமொழிகள்

திவா
  1  

சாதாரணமா பாத்துட்டு நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போயிடறோம். இவ்வளோ விஷயங்கள் இருக்கா? :-))

ஆகஸ்ட் 12th, 2009 at 13:57
Megarajan
  2  

hi

Good work … When I went to vallam it was a mystery and now its no more a mystery.

ஆகஸ்ட் 12th, 2009 at 14:10
DHIVAKAR V
  3  

aRputham, one of the best research article on sculptures.

இதைக் கல்லில் வடித்த சிற்பிகளின் ஆவி சந்தோஷப்படும் (:-. இத்தனை ஆண்டுகள் கழித்தேனும் இவ்வளவு உன்னிப்பாகக் கவனித்துச் சொல்ல ஆள் இருக்கிறார்களே என்று!!

D

ஆகஸ்ட் 12th, 2009 at 14:55
DHIVAKAR V
  4  

Especially the step by step explanation is very good. I studied as student.

Keep it up

D

ஆகஸ்ட் 12th, 2009 at 15:14
Manii
  5  

next time, when i go to temple, dwarabalakar will look different to me !!! deeper we look , there is a spirituality in all things !!!

dwarabalakar in temples are being used by us to put holy ashes and kumkum .. .now it will be a different thing…

ஆகஸ்ட் 12th, 2009 at 17:06
  6  

Amazing VJ…
seeing these two people in every temple in my life and after 24 years i know who they are…thanks to you!

ஆகஸ்ட் 12th, 2009 at 18:12
Kathie B.
  7  

brilliant, VJ! great job. I love them, too. Will have to examine the right-hand ones more to
make out that Parasu. I was just looking at photos of some some Chozha ones I have and
found sinhamukhas in crowns of both sides.
You’ve inspired me to take them all out and study them!

ஆகஸ்ட் 12th, 2009 at 18:17
Rajeswari
  8  

Excellent VJ. By reading this i came to the importance of them.The pictures and the way of explation is really fantastic.

ஆகஸ்ட் 12th, 2009 at 19:04
Rajeswari
  9  

Excellent VJ.By reading this i came to know the importance of them.The pictures and the way of explanation is really fantastic!

ஆகஸ்ட் 12th, 2009 at 19:08
  10  

i want to go there and see for myself..thanks VJ..another learning for me

ஆகஸ்ட் 12th, 2009 at 20:42
  11  

நன்றி திவா சார்,

இன்னும் தெரிந்துக்கொள்ள நிறைய இருக்கிறது. நான் கற்றது கை மண் அளவு!!!.

விஜய்

ஆகஸ்ட் 13th, 2009 at 11:44
திருநாவுக்கரசு
  12  

விஜய் அற்புதம் !!

உங்கள் வலைப் பக்கத்தின் பெயரை மாற்றும் எண்ணம் ஏதும் உண்டா ?
ஏனெனில் இதில் வெறும் கலை வண்ணம் மட்டும் காண்பதாக நான் எண்ணவில்லை.

கல்லை மட்டும் கண்டால் கலைவண்ணம் தெரியாது - கலையை மட்டும் கண்டால் கல்லே தெரியாது - நாங்கள் காண்பது முதல் ரகம் என்றால் நீங்கள் காண்பது இரண்டாம் ரகம்.

“Da Vinci Code” போல ஒவ்வொரு சிற்பமும் ஒரு புதிராக இருக்கக் கூடும். அதில் நாம் அறிந்து கொள்ளக் கூடிய ரகசியம் புதைந்து கிடக்கக் கூடும். மனித சமுதாயம் உய்யக் கூடிய ரகசியங்கள் காலம் காலமாக காப்பாற்றப் பட வேண்டி சிலை வடிவில் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கலாம். எல்லாவற்றையும் வெளிக் கொணர உங்கள் ஆராய்ச்சிகள் சிறந்த முன்னோடியாக இருக்கும்.

நம்ம ஆளு ஒருத்தர் நம்மளைப் போல் இல்லாமல் ஒவ்வொரு சிற்பத்திற்கும் அர்த்தம் காண்பவராக இருக்கிறார் என்று என்னும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

உங்களது “சோமாஸ்கந்தர்” பற்றிய ஆராய்ச்சிப் பதிவை படித்த பிறகு கடந்த வார இறுதியில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் வெளிப் பிரகாரத்தில் உள்ள சோமாஸ்கந்த வடிவங்களைப் பார்த்து இதன் முன்பும் சிவலிங்கங்கள் இருந்திருக்குமோ என்று எட்டிப் பார்த்தேன். ஒரே சிலிர்ப்பு - சிவலிங்கம் இருந்ததற்கான அடையாளம் அங்கே இருந்தது. அதே போல் மற்ற எல்லா இடங்களிலும் பார்த்தேன். எல்லா சோமாஸ்கந்தர் வடிவத்தின் முன்பும் சிவலிங்கம் அல்லது இதற்கு முன்பு இருந்த தடயம் தெளிவாக இருந்தது.

எத்தனையோ முறை அந்த கோவிலுக்கு சென்றிருந்தாலும் முதன் முறையாக அக்கோவிலை முழுமையாக பார்த்த திருப்தி. இன்னும் ஏராளமான புதிர்கள் உள்ளே இருக்கும் என்றாலும் இது வரையாவது பார்த்தோமே என்ற சந்தோசம். விரைவில் நான் எடுத்த படங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

நன்றி !!

-திரு.

ஆகஸ்ட் 13th, 2009 at 11:53
Satish Kumar Arunachalam
  13  

wonderful Vijay!!! Really exciting to know such details. Thanks.

ஆகஸ்ட் 13th, 2009 at 20:43
Muruganandam
  14  

அடியேன் தரிசித்த பல தலங்களில் துவார பாலகர்களின் கையில் உள்ள ஆயுதங்கள் மாறியிருப்பதை கவனித்துள்ளேன். வலப்புறம் உள்ளவரிட்ன் கரங்களில் சிவபெருமானின் மானும் மழுவும் விளங்கும் அதே சமயம் இடப்புறத்தாரிடம் விநாயகப்பெருமானின் அங்குசமும், பாசமும் விளங்கும். இந்த ஆயுதங்கள் எல்லாம் நம்மை தண்டிக்க அல்ல, நம்மை சரிப்படுத்த என்பதால்தான் நம் முன்னோர்கள் கடவுளர்களீன் கையில் இவ்வாயுதங்களை அளித்தனரோ?

தாங்கள் அளித்துள்ள அஸ்திர தேவர்( திரிசூலம்), மழு துவாரபாலகர்கள் மிகவும் அருமை. முடிந்தால் நானும் சில துவாரபாலகர்களின் படங்களை தங்களுக்கு அனுப்புகின்றேன்.

தங்கள் சேவைக்கு வாழ்த்துக்க்ள்.

ஆகஸ்ட் 29th, 2009 at 16:00
oorsutri
  15  

இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று…..இப்போடியொரு பார்வைக்கு எனது வாழ்த்துக்கள்

செப்டம்பர் 4th, 2009 at 13:27
annapoorna
  16  

உங்கள் blogகை தோண்ட தோண்ட புதையல் கிடைகிறது. மிக்க நன்றி. இன்னும் நம் நாட்டில் கண்டறியாத அதிசியங்கள் எவ்வளவோ!! நினைத்தால் பிரமிப்பாக உள்ளது!!!!

மார்ச் 19th, 2010 at 14:14
  17  

Hi Vijay,

Doing fantastic work, I am also publishing temple details in my http://www.virutcham.com webpage but, I am appreciating your involvement to bring our temple architectural brilliance to the entire world. I am also ready to share photos of different temples which I captured in my camera. Keep rock.

Regards,
G. Kannan
Chennai

மே 5th, 2010 at 10:12
  18  

dear kannan,

Thanks for the mail. will take a look. you are always welcome to send us your photos.

rgds
v

மே 5th, 2010 at 11:40
ARVIND
  19  

your work is so impressive, keep doing…..!! , if i could come across any such information i will pass on.

ஜூன் 27th, 2010 at 18:09
  20  

Thanks Arvind. Please keep visiting and share with friends as well. If you are planning any trips, do let us know the locations.

rgds
vj

ஜூன் 30th, 2010 at 7:24
  21  

Good spade work, rather good digging shall we say with some deep horns ;)
Nice VJ
Chandra

செப்டம்பர் 19th, 2011 at 16:29
  22  

very enlightening. I am very much impressed. The zeal with which you are pursuing your studies of South Indian sculptures, is indeed uncommom even amongst the archaeologists.

செப்டம்பர் 19th, 2011 at 17:11
  23  

thanks PNS sir. However, must confess that we are walking on the path guided by doyens from the past.

rgds
vj

செப்டம்பர் 20th, 2011 at 9:05
  24  

thanks chandra. so much to learn and see and share

rgds
vj

செப்டம்பர் 20th, 2011 at 9:05
VC
  25  

Vijay,

This is terrific analysis. Very interesting indeed! I did notice these in my recent trip to Thirumaayam, but no such light bulb (as yours) lit up in my head :-) Obviously you are endowed with a better eye and intellect!

Thanks again for the contribution. You are our Gift - pun intended!

பெப்ரவரி 3rd, 2012 at 21:06

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி