Quantcast

அருங்காட்சியகம், அதிலும் இந்திய பிரிவு என்றவுடன் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும், உடனே கண்ணில் படுவது சோழர் கால வெண்கல / செப்பு சிலைகள். எப்படி தான் இவை நம்நாட்டை விட்டு சென்றனவோ ! எனினும் ஒவ்வொரு பெரிய காட்சியகத்திலும் ஒரு நடராஜர், ஒரு விஷ்ணு, சோமஸ்கந்தர், சம்பந்தர் என்று பல சிலைகளை நாம் பார்க்கலாம். அது சொக்க வைக்கும் சோழர் சிலைக்கு இந்த பணம் படைத்த உலகம் கொடுக்கும் சன்மானம்.

சரி, இன்று கண்ணன் அவதரித்த நாள், ஒரு சிறப்பு சிலையோடு வருகிறேன். ஒரு அரிய சிலை - கிளீவ்லாந்து அருங்காட்சியகம் .

yashoda n krishna cleveland museum

அறிவிப்பு பலகையின் படி, இந்த சிற்பம் பிற்கால சோழர் காலத்து சிலை ( (12 C) - எதனால் அப்படி. சிலையில் அணிகலன்கள் குறைவாக இருப்பதால் இவ்வாறு சொல்லுகிறார்கள். எனினும் முற்கால சோழ சிலைகளில் அணிகலன்கள் சற்று குறைவாக இருந்தாலும் நுண்ணிய வேலைபடுடன் கூடிய அணிகலன் இருக்கும். பொதுவாக அதே காலத்து சைவ நாயன்மார்கள் சிலைகளே அப்படி நிறைய நகைகள் இல்லாமல் இருக்கும். அவர்களின் சித்தரிப்பு அப்படி. அப்படி இந்த சிலையில் அரியது என்ன. யசோதை கண்ணனுக்கு தனது பாலை ஊட்டும் காட்சி - வளர்ப்பு அன்னை, தனது தத்துப் பிள்ளைக்கு தன மார்பை அளிக்கும் தாய்மை போற்றும் சிற்பம், அதுவும் ராணியின் மகன் ஒரு மாடு மேய்ப்பவளிடம் - ஓ, அதனால் தானோ நிறைய ஆபரணங்கள் இல்லை ?

அற்புத அரிய சிற்பம் தான், ஆனால் இந்த காட்சியை பெரியாழ்வார் பாட்டாய் படிக்கிறார் பாருங்கள்.

இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே

yashodha krishna cleveland musuem

இதற்கு மேலும் இந்த சிலைக்கு ஒரு வர்ணனை தேவையோ ?

இருந்தும் சிலையை பார்க்கும் பொது சில கேள்விகள் எழுகின்றன. பொதுவாக சோழர் கால வெண்கல, செப்பு சிலைகள் ஒரு மேடையுடன், அதில் கொம்புகளை பொருத்தி தோலின் மீது இட்டு ஊர்வலமாக கொண்டுவர நேர்த்தியாக வசதிகளுடன் வரும். இந்த சிலையை பார்த்தல் அப்படி தெரியவில்லை. யாராவது மன்னன் தனது சொந்த அரண்மனைக்கோ மண்டபத்திற்கோ பிரத்தியேகமாக செய்த சிலையோ ? ஆனால் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்து சோழர்கள் வீர சைவர்கள் என்றே இந்நாளில் சொல்கிறார்களே?

படங்களுக்கு நன்றி

http://www.metmuseum.org/toah/ho/07/sss/ho_1982.220.8.htm
http://www.harekrsna.com/gallery/parents1-gallery.htm

சென்னையில் எங்கள் பொன்னியின் செல்வன் விழவிற்கு வாருங்கள் ( ஆகஸ்ட் 15th)
http://festival2009.ponniyinselvan.in/

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், ஆகஸ்ட் 13th, 2009 அன்று 13:39 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 12 மறுமொழிகள்

தமிழ்த்தேனீ
  1  

இதற்க்கு மேலும் இந்த சிலைக்கு ஒரு வர்ணனை தேவையோ ?

அன்புடன்
தமிழ்த்தேனீ

ஆகஸ்ட் 13th, 2009 at 14:43
Manii
  2  

Mesmerising !!!

ஆகஸ்ட் 13th, 2009 at 15:53
  3  

Hi VJ,

Cant this be Umai and Sambandar…thats a more popular legend..?

Vairam

ஆகஸ்ட் 13th, 2009 at 17:23
  4  

hi vairam

Nice question. It did crop up when i did the post, sambandar figures are always resembling Krishna. will post a few bronzes shortly of him as well, but one of the reasons why i am accepting this identification as Yashoda - is the total lack of ornamentation, especially the head dress and the very very commoner styling of the hair style. I will also posted a lovely bronze umai from chennai museum for comparison. the facial features of bronzes were defn different for divinity.

cheers
vj

ஆகஸ்ட் 13th, 2009 at 18:21
arvind Venkatraman
  5  

I love this VJ.
I have seen more sculptures where Krishna suckle Boothagi, but this bronze is livid.
The only pick i would have (if I may,) is that
“Kathu valarthal” (stud/ornament hole on the ear) seems more pronounced for child around 5 years, especially in absence of a pambadam.
I believe the answer to de-ornamentation of the mother and child, that the scene is just after a bath.
Regards
Arvind

ஆகஸ்ட் 13th, 2009 at 21:02
Malathi
  6  

Dear Vijay, another masterpiece as always :) Just a small correction, Yashoda was not a ‘milkmaid’ she was the wife of the cowherd chieftan Nanda who employed several cowherds and milkmaids. Sri Krishna was supposedly breast fed by several gopis/milkmaids, not just her though, that is a different point.

ஆகஸ்ட் 14th, 2009 at 3:16
Malathi
  7  

Also i wonder if it is possible to see the forehead of the baby, if it is adorned with a naamam? Sri Krishna is almost never portrayed without a naamam.

ஆகஸ்ட் 14th, 2009 at 3:19
  8  

hi malathi

Normally bronze figures dont have such embelisments.

Btw, searched for this and located it in flickr

http://www.flickr.com/photos/elissacorsini/1681798385/in/set-72157603964977281/

http://www.metmuseum.org/toah/ho/07/sss/hod_1982.220.8.htm

But this ref is from Metropolitan museum Nyc! and it says it 14C, Vijayanagara!!

But the site says chola!

http://www.metmuseum.org/toah/ho/07/sss/hod_1982.220.8.htm

hmm

vj

ஆகஸ்ட் 14th, 2009 at 8:18
வெங்கட் சாமிநாதன்
  9  

நான் பார்க்காத இடங்கள், பார்த்திராத சிற்ப வளங்களையெல்லாம் எனக்கு அறியத் தருவதோடு அவற்றைப் பற்றிய சரித்தி, சிற்பக் கலைத் தகவல்களையும் இங்கு பெறுகிறேன். மிக்க நன்றி.

ஆகஸ்ட் 14th, 2009 at 11:15
  10  

hi vairam,

Got this lovely clarification from Mr. Subramaniam sir, sambandar was fed in a cup ( her milk but in a cup)

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=3&Song_idField=3024002&padhi=024
போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத் தான்எனை யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.
——-
பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து ` யார் தந்த அடிசிலை உண்டனை ?` என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார். அத்தகைய பெருமையுடைய சிவபெருமான் காதிற் குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருளுகின்றார்.

ஆகஸ்ட் 20th, 2009 at 7:22
lakshmi priya
  11  

ungal ezluthum padagalum kavithai kavithai ….. solla varthaiyaa illa, muthalam andu vetriku yen valzthukal

ஆகஸ்ட் 20th, 2009 at 9:54
  12  

நேற்று ஒரு நண்பர் பூண்டி பெருமாள் கோவிலில் தான் கண்ட இந்த “யசோதை கண்ணனுக்குப் பாலூட்டும்” வெள்ளி விக்ரஹத்தை அனுப்பியிருந்தார். இந்த சுட்டியிர் பார்க்கலாம்.
http://f1check.rediff.com/bn/download.cgi/poondikannan.jpg?login=rajamragu&session_id=1L4PK1KSKRdFo9OpSivMi4Nay2xC6RV&folder=Inbox&formname=download&file_name=1251549683.S.1397188.33584.f4mail-234-242.rediffmail.com.old.replied&filetype=image/jpeg

ஆகஸ்ட் 30th, 2009 at 8:39

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி