Quantcast

நண்பர்களே, இன்று நமது ‘கல்லிலே கலைவண்ணத்துக்கு’ முதல் ஆண்டு நிறைவு நாள். சரியாக ஓராண்டுக்கு முன், வறண்ட பூமியில் விழுந்த விதைக்கு இயற்கை தந்த அரவணைப்பினால் மளமளவென வளரும் விருக்ஷம் போல நல்ல உள்ளங்கள் பலரின் தூண்டுதலால் ஓங்கி வளர்ந்துள்ளது. தயங்கி தயங்கி நடை பயிலும் சிறு குழந்தை போல நாங்கள் எடுத்து வைத்த கால் நண்பர் பலரின் உதவியுடன் எழுந்து ஓடும் பிள்ளையாய் இன்று நூற்றைம்பது பதிவுகளாய் தமிழிலும் ஆங்கிலத்திலும் மலர்ந்துள்ளது.

தமிழகக் கோயில் கலையோடு மட்டும் நின்றுவிடாமல், அதுவும் கல்லோவியங்களோடு மட்டும் நிற்காமல், இந்தியா, இந்தோனேசியா, கம்போடியா என்றும் சிற்பம், ஓவியம், குடவரை என்று எங்கும் உலாவி, பல சுவையான கலைபெட்டகங்களை நம் கண்முன்னே நிறுத்தி, அதன் மூலம் இன்னும் பல புதுப்புது உறவுகளை உருவாக்கி தளத்தின் தரத்தையும், இடுகைகளின் அழகையும் மெருகு சேர்த்துள்ளோம். எங்கள் உயரிய நோக்கம் ஒன்றே, எங்கள் தளத்திற்கு வரும் ஒவ்வொரு நண்பரும் நம் கலையை ரசிக்க, அதன் பால் காதல் கொள்ளச் செய்ய வேண்டும், இதற்கு இந்த துறையின் வல்லுனர்கள் பலரிடம் கலந்துரையாடி, பல நூல்களை சேகரித்து, அதில் இருக்கும் கருத்துக்களை பாமரனும் புரிந்துகொள்ளும் பாணியில் படைக்க வேண்டும் என்பதே.

உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் நாங்கள் இந்த இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து நுழைகின்றோம். இந்த இரண்டாம் ஆண்டு விழாவில் இன்று மீண்டும் ஒரு சிறப்பு பதிவு.

இந்தப் பதிவு உருவான கதையும் மிகவும் சுவாரசியமானது, முந்தைய பதிவில் உள்ள சிலை பற்றி நண்பர் வைரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, செப்பு படிமங்களில் வெகு நாட்களாக இருந்த சந்தேகம் வெளிவந்தது. இரண்டு சிலைகள் - பார்ப்பதற்கு ஒன்று போலவே இருப்பதால், பலருக்கும் ஐயம் தரும் வடிவங்கள். பால கண்ணன் மற்றும் திருஞானசம்பந்தர் சம்பந்தப்பட்ட சோழர்கால சிலைகளே இவைகள். கைதேர்ந்த வல்லுனர்களும் பல அருங்காட்சியகங்களுமே குழம்பி, திகைத்து, எதற்கு வம்பு என்று இரு பெயர்களையும் பெயர்ப்பலகையில் இட்டு தப்பிக்க பார்க்கும் புதிர் இந்த வடிவங்கள். இதோ தஞ்சை அருங்காட்சியகத்தில் அடுத்து அடுத்து இருக்கும் சிலைகள் ( நன்றி சதீஷ் )

2 krishna and 1 sambandar - tanjore

அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. நீங்களே பாருங்கள். முதல் பார்வையில் இரு வடிவங்களுக்கும் குமுதம் புதிர் போல ஆறு வித்தியாசங்கள் போட்டி வைக்கலாம் போல உள்ளது.

Dancing-Balakrishna Michael C. Carlos Museum of Emory University
freer gallery sambandhar

ஆனால் இங்கே தான் கலை வல்லுனர்களின் திறன் வெளி வருகிறது. அதுவும் வெண்கல/செப்புச் சிலைகளை பற்றிய வல்லுநர் என்றால் முதலில் நினைவுக்கு வரும் பெயர் - முனைவர் திரு நாகசாமி அவர்கள். எங்கள் பாக்கியம், அவர்களின் அறிமுகம் ஏற்கனவே நண்பர் சுந்தர் பரத்வாஜ் மூலம் கிடைத்ததால், அவரிடமே ஐயத்தைக் கேட்டோம். அவரும், உடனே பதில் அளித்தார் - சான்றோர் எப்போதும் சான்றோரே!! அவர் அளித்த தெளிவுரையே இந்த பதிவு.

சரி, மீண்டும் இரு உருவங்களை பார்ப்போம். வலது கையின் சித்தரிப்பில் உள்ள வித்தியாசத்தை கூர்ந்து பாருங்கள்!.

Dancing-Balakrishna Michael C. Carlos Museum of Emory University

பால கண்ணன் சிலைக்கு வருவோம். விடை கண்ணன் வலது மார்பில் உள்ளது. ஆம்! முக்கோண வடிவில் ஸ்ரீவத்சம் தெரிகிறதா? கேள்விக்கு இடமே இல்லை, இது கண்ணனே!. வலது கரம் அபய ஹஸ்தம், தன்னிடம் அடைக்கலம் நாடும் பக்தரை ரக்ஷிக்கும் பாணி.

இப்போது அடுத்த சிலை. ( நன்றி நண்பர்கள் சதீஷ் சிங்கை மற்றும் ஸ்டூவர்ட் லீ சென்னை அருங்காட்சியக - அற்புத புகைப்படங்களுக்கு )

sambandar sin musuem
chennai museum 3
watch the right hand

இந்த வடிவம், சோழர் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிலை. சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவர் - சைவ நெறியில் மூழ்கி இருந்த சோழர்களின் குலக்கொடி பேரரசன் ராஜ ராஜன் கண்டெடுத்த ( திருமுறை கண்ட சோழன் ) திருமுறைகளில், பின்னாளில் அவை தொகுக்கப்பட்டபோது, முதல்வராக போற்றப்பட்டு, முதல் மறை, முதல் தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் சிலை!. அவர் பாடிய முதல் பதிகத்தின் காட்சியையே இந்த சிலை குறிக்கிறது.

இவரது தந்தையார் சிவபாதஹிருதயர், தாயார் இசைஞானியார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் “தோடுடைய செவியன்” என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார்.
தோடுடைய செவியன்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

இந்த காட்சியை படமாக காண


தோடுடைய செவியன்

காட்சி புரிந்ததா, இப்போது இதனை சிற்பி வடிக்கிறான். அதுவே இந்த சிலை யாரை குறிக்கிறது என்பதற்கு விடையும் கூட.

” குழந்தையின் தந்தை, யார் பாலூட்டியது என்று கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டியவர்”

இப்போது சிலையின் வலது கையை மீண்டும் நன்றாக பாருங்கள். ஆள் காட்டி விரல்

notice his lips,seems to be singing
notice the index finger

ஒரு நிமிடம் , சரியான படத்தை இடுகிறேன், சோழ சிற்பி தனது படைப்பில் கொண்டு வரும் உயிரோட்டத்தை விளக்கும் சிலை இது - இல்லை இல்லை, விரல் இது!. ஆள் காட்டி விரல், சற்றே மேல் நோக்கி நகருங்கின்றது, எனினும் இன்னும் முழுமையாக வானத்தை காட்ட வில்லை.

study 22
study1
the movement of the index finger
watch the right hand

குழந்தை தந்தையின் கேள்விக்கு விடை அளிக்கும்போது ஆனந்தத்தில் ஆடிப் பாடி, விரலை மேல் நோக்கி நகர்த்தும் தருவாயில் சிற்பி தன் அகக்கண்ணில் அக்காட்சியை படம் பிடித்து உலோகத்தில் வார்த்து விட்டான். முகத்தில் ஒரு பரவசம், இடது கையில் தான் என்ன அப்படி ஒரு நளினம்!. நேரில் பார்க்குபோது சிலை உயிர் பெற்று அப்படியே பதிகத்தை பாடி அதற்கேற்ப அபிநயம் பிடிப்பது போல உள்ளது.

பல அருங்காட்சியகங்களில் இந்த வடிவம் உள்ளது - தில்லி, சென்னை, ப்ரீஏர்..

australia sambandar
madras musuem sambandhar
samabandhar pondicherry museum
sambandar bronze delhi national museum
sambandar tanjore museum2
sambandar tanjore musuem
sambandhar pudukkottai musuem

இனி நாம் இந்த சிலைகளை அடையாளம் கொள்ளவது சிரமம் இல்லை.

ஆக்க்லாந்து அருங்காட்சியகம்

krishna auckland musuem

ஸ்ரீவத்சம் நன்கு தெரிகிறது - எனவே கண்டிப்பாக கண்ணன்

இங்கே இருப்பது சம்பந்தர், தளத்தில் குறிப்பிட்டது போல கண்ணன் அல்ல.

hinduswisdom site samabandar shown as krishna

ஹிந்து விஸ்டொம் தளம்

இந்த ஓவியத்தில் இருப்பது மேலே பார்த்த குறிகளை வைத்து சம்பந்தராக இருக்கலாம். (ஸ்ரீவத்சம் இல்லை!!)

Bala krishna

சிற்பக் கலை பற்றி நல்ல பதிவு எனினும்

இந்த மகிழ்வான சந்தர்ப்பத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும், வாழ்த்திக் கொண்டே இருப்பவர்களையும், எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பவர்களையும், எங்களுக்கு எல்லா வகைகளிலும் உதவுபவர்களையும் நினைத்துப் பார்க்கிறோம். இவர்கள் ஒவ்வொரு பெயரையும் எழுத ஆரம்பித்தால் இந்த வலைத்தளம் போதாது என்னவோ.. அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. வழக்கம் போலவே உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எந்நாளும் நாடுகிறோம்.

மீண்டும், உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி கூறி, இன்னும் பல நண்பர்களை எங்களுடன் இணைத்து வையுங்கள், கோயில், அருங்காட்சியகம் எங்கு சென்றாலும் எங்களை நினைவு கொண்டு படங்களை எங்களுடன் பகிருங்கள் என்ற வேண்டுகோளை மீண்டும் இட்டு உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, ஆகஸ்ட் 19th, 2009 அன்று 13:09 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 34 மறுமொழிகள்

  1  

முதல் ஆண்டில் கலையும் கவினும் ஒயிலும் ஒளியும் பக்தியும் பயனும் கொண்டு, வரலாற்று வெளிச்சம் பரப்பும் 150 பதிவுகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ள ‘கல்லிலே கலைவண்ணம்’ தளத்திற்கு என் நல்வாழ்த்துகள். எதிர்காலத்தில் இன்னும் நிறைய புதையல்களை எடுத்து, புத்தொளி பாய்ச்சி, புவியெங்கும் பரவச் செய்வீர்.

ஆகஸ்ட் 19th, 2009 at 14:13
  2  

congrats…its been a pleasure always coming to your blog..this is one of the best posts so far and like i always say, I learn a lot from your posts..

ஆகஸ்ட் 19th, 2009 at 14:19
DHIVAKAR V
  3  

திருஞானசம்மந்தர் ஞானக்குழந்தை. அந்த ஞானக் குழந்தை தான் பெற்ற ஞானப்பாலைப் பருகியவுடன் ஆடும் சந்தோஷத்தை நினைத்துப் பார்த்து சிற்பி செதுக்கியதாக நீங்கள் எழுதியது சாலப் பொருத்தமே! குழந்தையின் ஆட்டம் விதம் விதமாக இருப்பது போலவே சிற்பி செதுக்கி இருப்பது ஆச்சரியம்.

கண்ணனா-சம்பந்தரா,- சிற்ப விஷயங்களில் இவை போன்ற குழப்பங்கள் கேள்விகள் அதிகம் இருக்கின்றன. இந்தப் புதிர்கள் வருகின்ற காலங்களில் உங்களைப் போன்றோர் விளக்கத்தால் புரியவைக்கப்படவேண்டும்.

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறீர்கள். உங்களிடம் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகளும் கூடவே அதிகமாகும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்!

திவாகர்

ஆகஸ்ட் 19th, 2009 at 14:48
  4  

அற்புத வடிவங்கள். கண்ணன் சிலையில் நடன எழில் தனிப்பட்டுத் தெரிகிறது. சம்பந்தர் சிலையில் அந்த எழில் காணப்படவில்லை. ஆகவே நான் ஊகம் செய்த வண்ணமே கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும். பல நாட்கள் சென்று வந்ததற்கு கண்ணுக்கும் கருத்துக்கும் அருமையான விருந்து கிடைத்தது.

முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துச் சொல்லி, இன்னும் பல்லாண்டுகள் நீங்கள் இந்தப் பணியில் சிறந்து விளங்கவும் வாழ்த்துகிறேன்.

ஆகஸ்ட் 19th, 2009 at 14:51
வெங்கட் சாமிநாதன்
  5  

It is great. I make it a point to file them under a head and preserve. The photographs are a delight and the texts are illumianting and informative. thanks. It is all so pleasurable and educative at the same time.

ஆகஸ்ட் 19th, 2009 at 15:00
  6  

HI VJ,
Congrats on first anniversary.. I was wondering Face book status has come a week ago and why post hasnt come…but worthy post for end 1 yr!
I must surely give hats of to all the people who provided you the photos for this blog …as well as all you our other blogs! with out them….this blog would be suvar illa chitiram!
Taking a bow for your work…
Hoping for more - Vairam

ஆகஸ்ட் 19th, 2009 at 15:39
Manii
  7  

Great Progress starts with a small beginning !!! You made it !!!

Keep Going !!!

ஆகஸ்ட் 19th, 2009 at 16:10
Vishwaksenan
  8  

My heartful congradulations for the first anniversary and wish you success in the years to come.

ஆகஸ்ட் 19th, 2009 at 17:12
Rajeswari
  9  

Congrats for the great work!!!Wishing a very best of luck for the future success.

ஆகஸ்ட் 19th, 2009 at 19:48
Prasad
  10  

Congratulations!!! Its been an amazing year reading your blogs. The quality and content of this blog is truly marvelous! :) .. Wishing you greater success in the years to come.

ஆகஸ்ட் 19th, 2009 at 19:58
Satish Kumar Arunachalam
  11  

First of all - Congrats on the first anniversary Vijay. Great work and may god bless you for many more years of service.

Wonderful post. Just like to add what I heard. The differences you stated are perfect. Though the sudarshanam in Kanna’s chest is news to me, the abaya hastam and the pointed finger should show the difference clearly (but might not help in images like the one with broken hand).

When Gananasambandar’s father finds him with milk in his mouth, he gets angry and picks up a stick to beats him, becasue he thinks the kid drank some ‘echil’ milk. So he beats him asking ‘yar kudutha echil palai kudithai’. To avoid his beating on the leg, the kid lifts the leg and at the same time points to the temple and sing ‘thodudaya seviyan’.
This snapshot is wonderfully captured by the sculptor.

ஆகஸ்ட் 19th, 2009 at 20:33
  12  

Worthy blog in the anniversary posting. Yes, many fail to differentiate between Krishna and Sambandar. Thanks Vijay

ஆகஸ்ட் 19th, 2009 at 21:39
  13  

Nice informative post. My best wishes to continue your good and original work of this extensive documentation for this is the thing we lack most in any field of traditional wisdom.

ஆகஸ்ட் 20th, 2009 at 8:26
  14  

Congrats for a successful year.
I am just amazed at your enthusiasm to research and write about these pieces.

I am sorry I don’t comment often, because your work is so esoteric, but maybe I will pay attention from now on…..I might learn a lot from your blog.
This post is one of your best. Keep up the good work

ஆகஸ்ட் 20th, 2009 at 14:35
Kathie B.
  15  

Congrat’s on the 1st successful year of your always enlightening BLOG. Hope you continue for many more.
Brilliant! Now I’ll be able to distinguish the two murthis — S. & K.

ஆகஸ்ட் 21st, 2009 at 4:28
Kathie B.
  16  

Dear VJ,
May I ask ThiruNagaswamy to help me distinguish SIVA Vinadhara from SIVA Tripurantaka?

ஆகஸ்ட் 21st, 2009 at 4:47
  17  

http://www.poetryinstone.in/2009/08/19/first-year-anniversary-post.html

A beautiful & informative post. Congratulations on the First
Anniversary
for your blog.

In 1970s, Smt. Vidya Dehejia, a Tamil raised in Bombay, corrected
many labels in American museums from Krishna to Sambandhar
by these criteria. She has some papers on this aspect, and
also in her book, the path of Tamil saints (which also has come
out in an Indian edition from Delhi). Pl. read that book.
will give the details on Vidya’s other papers on this subject.

There is Dr. Gauri Krishnan, an Indian art curator, she married
a Tamil I think. Gauri Parimoo is the daughter of the famous
prof. of art history from Baroda, Sti Rathan Parimoo.

http://www.asianart.com.au/events/symposia/past_symposia/goddess_symp...
Dr Gauri Parimoo Krishnan is Senior Curator for South Asia at the
Asian Civilisations Museum, Singapore. She holds a Ph.D. in art
history from the M.S. University of Baroda, India. She has curated a
number acclaimed Asian art exhibitions for the ACM, including
Alamkara: 5000 Years of India; Ramayana: A Living Tradition; and
Krishna the Blue God. She is author of the forthcoming publications,
Power of the Female and Devangana Sculptures on Hindu temple
Architecture. She is currently involved in writing and editing the
catalogue of the south Asian collections at ACM.

—–

Gauri is in Singapore, please try to meet her. Dr. Gauri Krishnan
edited a book,
an exhbition catalogue when Singapore Museum acquired lots of Indian
sculptures for display for exhibiting Indian connection. In the open
market,
most of them should have been lifted out of India’s temples.

Dr. Gauri edited a volume, Alamkara: 5000 Years of Art in India.
I have that book. There is a noticeable error, perhaps Gauri
does not know about Vidya’s papers, blog post like yours.
In Singapore museum, there is a beautiful Sambandhar bronze,
wrongly labeled as Krushna! Pl. contact her, and make the
Museum officlas correct the name.

By the way, Vidya explains this: Balakrishna imagery and concepts is
ancient
in Tamil Nadu. When legends of Sambandhar’s life needed to
get converted into arts, the artists took the Balakrishna prototype,
and created Sambandhar image with a pointing finger
signifying the “thODuDaiya cheviyan …” tEvAram episode.

More later.

Best wishes,
N. Ganesan

PS: I’ve not read you last 3 or 4 posts, will do & revert back.
~ NG
http://tamilmanam.net

ஆகஸ்ட் 21st, 2009 at 19:02
  18  

Thanks to all for the overwhelming support. Thanking you all individually will run up the comment entries, but my best way of thanking you all is to bring more such rare treasures into public domain for all to see, appreciate and contribute.

tks once again

rgds
vj

ஆகஸ்ட் 24th, 2009 at 8:25
ரமேஷ்
  19  

Simply amazing Vijay. I have been a reader for some time, though not commented much.

I was at the inscription class this summer when you made a visit. You are a source of inspiration. Here is wishing for many more years of your service.

ஆகஸ்ட் 24th, 2009 at 19:49
  20  

thanks Ramesh. It was pleasure to meet you all at the inscription class. You can all contribute more incl the wealth of the knowledge you gained from interacting with great scholars like Sri Ramachandran.

looking forward to interacting more with you all.

rgds
vj

ஆகஸ்ட் 25th, 2009 at 8:17
Prabha
  21  

congradulation. The above article is excellent.

ஆகஸ்ட் 25th, 2009 at 13:01
  22  

பொக்கிஷம்…

ஆம் இது ஒரு பொக்கிஷம், இந்தப் பொக்கிஷம் ஆலமரமாய் விழுது விட்டு பல்லாண்டுகள் இருந்து நிழல் தர வேண்டும். நம்மால் இயன்றவரை நீர் விட்டு வளர்ப்போம்.

சிற்பக் கலை எதனால் உருவானது? அல்லது உருவாக்கப்பட்டது? கடவுளரை உலகிற்கு காட்டுவதற்கா? அல்லது கடவுளின் பெயரால் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கா? அல்லது கடவுளின் பெயரால் மக்களுக்கு நல்லெண்ணங்கள் உண்டாக்குவதற்கா? எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். இந்த அழகு சிற்பங்களை பார்க்கையில் உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கிறது, அதன் பின்னணி கதையை கேட்கும் போது மனதின் ஆழத்தில் ஏதோ ஒரு மூலையில் நல்லெண்ணம் உதிக்கிறது.

நான் ஆலயங்களுக்கு செல்லும் போதெல்லாம் சற்றே நின்று சிலைகளைப் பார்ப்பது வழக்கம்தான், இருப்பினும் எதற்காக இந்த சிற்பம் யாரை குறிக்கிறது என்று எனக்கு பெரும்பாலான சிற்பங்களை பார்க்கும் பொழுது தெரியாது. இதை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், புராண, வரலாற்று சம்பவங்கள் தெரிந்திருக்க வேண்டும். இதை எல்லாம் படித்து நாம் தெரிந்து கொள்ள பல காலம் ஆகும். ஆனால் உள்ளங்கை நெல்லிகனிபோல் இங்கே “poetryinstone”ல் ஏராளமான தகவல்கள் நிறைந்திருக்கின்றன. உண்மையில் நண்பர் விஜயுடன் நட்பு ஏற்பட்ட பின் சிற்பக் கலை மட்டுமின்றி, வரலாறு பற்றியும், நாயன்மார்கள் பற்றியும், ஆழ்வார்கள் பற்றியும், ஏராளமான செய்திகள் தெரிந்து கொள்ள முடிந்தது என்னால். அது மட்டுமின்றி இன்று எந்த ஆலயத்திற்கு சென்றாலும் சிற்பத்தை பார்ப்பதற்கென்றே தனியாக நேரம் ஒதுக்க ஆரம்பித்து விட்டேன். இப்பொழுதெல்லாம் அனேகமாக அனைத்து சிற்பங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது, இன்னமும் தெரியாத ஏதேனும் இருந்தாலும் அதே படம் பிடித்து நண்பருக்கு அனுப்பினால் அது என்னவென்று உடனே பதில் கிடைத்துவிடும்.

இப்படி ஒரு நல்ல நண்பர், நல்ல மனிதர் உருவாகிய இந்த தளத்திற்கு ஓராண்டு முடிந்துவிட்டது, இரண்டு நாளுக்கு ஒரு பதிவு என்று தன்னுடைய மிக கடினமான அலுவலகப் பணியிலும் அவரால் கொடுக்க முடிந்ததென்றால் அப்பப்பா அவருடைய ஆர்வம், உழைப்பு எத்தகையதாய் இருக்க வேண்டும்!

நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பொக்கிஷத்தை யாவரும் அறிய வேண்டும், அனைவரும் அதை ரசித்து மகிழ வேண்டும் என்ற எண்ணம் வானளவு பாராட்டுக்குரியது. இந்த ஒரு வருடத்தில் அவருக்கு சேர்ந்த ரசிகர் பட்டாளமும், அவர்களுடைய ஆர்வமும், இன்னமும் நம்முடையே ஏராளமான கலா ரசிகர்கள் இருக்கிறார்கள், அதுமட்டுமின்றி இந்தக் கலைப் பொக்கிஷங்களை போற்றிப் பாதுகாக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து விட்டது.

இந்த தளமும், நண்பர் விஜயும் பல்லாண்டுகள் வாழ்ந்து நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற அத்தனை சிற்பங்களையும் நம் வருங்கால சந்ததியினருக்காக இங்கே ஆவணப் படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டி வாழ்த்துவோம்.

செப்டம்பர் 11th, 2009 at 14:37
  23  

சதீஷ், நான் ஒரு கருவி - நீங்களும் அவ்வாறே. இயக்குபவன் அவனே. எல்லாம் அவன் செயல்

மூன்று நாட்கள் தஞ்சை செல்லும் பொது கூட இரண்டு கோயில்களை படம் எடுத்து அனுப்பும் உங்கள் அறிமுகம் கிடைத்தும் அவன் செயலே.

நண்பா, நம் பனி தொடருவதும் அவன் அருளாலே .

செப்டம்பர் 12th, 2009 at 7:22
  24  

See Prasad’s sketch of this icon

http://4.bp.blogspot.com/_KYP8iJPSAIY/SxFsNafvDYI/AAAAAAAAFOI/Fc9WsvP4vKw/s1600/pb281652-1.jpg

நவம்பர் 30th, 2009 at 8:06
rhoda alex
  25  

great post and sketch too!

டிசம்பர் 2nd, 2009 at 10:11
Innamburan
  26  

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழிந்த பின் என் கட்டுரை இன்றுக்கு, விஜய், இதன் மூலமாக, திவாகர் தெய்வ அனுக்ரஹம் கொணர்ந்தார். எப்படியெல்லாம் ஆடுகிறார்கள், இருவரும்.
நன்றி,
இன்னம்பூரான்

ஜூலை 29th, 2010 at 18:28
  27  

மிக்க நன்றி , இன்னும் பல பதிவுகள் உள்ளன. அவற்றை எல்லாம் பார்த்துவிட்டு வாருங்கள்

விஜய்

ஜூலை 29th, 2010 at 19:14
venkata rao
  28  

refer katie b reqest u can see him talking about this in his r nagasami-MASTERPIECES OF EARLY SOUTH INDIAN BRONZES PAGES 91 IWILL AGAIN GIVE HIS ACTUAL WORDS IN COMING DAYS

ஆகஸ்ட் 18th, 2010 at 20:30
venkata rao
  29  

refer cathie reqyestr nagasami writes “identification of these (tirupurantaka&veenadara )is often problamaticalbecauseof resemblence it is wellto rememberthat though siva is generally accompanied by his concert tirupurasundari in the latter aspect but inthe veenadharaformheis depicted by himself the front left arm ot tirupurantaka is also heldstraight as though to hold a bow while in veenadara form it is held at an angle the correctmode for holding &playing on veena when the position of hand is unclear temple usage could possibly provde a clue “Dr.R.Ramaseshan in his HAHESHWARA VADIVANGAL says AMSUMATH BEDHAKAMAM tirupurandaka can be depicted in 8 ways like __with ,2,4,8.10, hands wihhhilftoor igghtfoot on MUYALAAAGGGGAN WITH HIS CONCERT etc both these books r worth reading &preserving Has lot of beautiful plates

ஆகஸ்ட் 19th, 2010 at 17:04
venkata rao
  30  

I see some errors in typing _8 10 hands ,with right or left foot on MUYALAGAN

ஆகஸ்ட் 19th, 2010 at 17:12
  31  

சிற்பத்தினை பார்த்ததும் கண்ணன் என நினைத்தேன். சம்மந்தனுக்கு இப்படியொரு அழகா.

செப்டம்பர் 24th, 2010 at 12:20
  32  

Awesome! What a beauty! Really amazed at the wonderful grace of the bronze statues, the smile of Krishna stays in my eyes and Sambandar’s singing posture is attracting like a magnet! Thank you for the wonderful post!!!

Regards
Vardhini

பெப்ரவரி 10th, 2011 at 0:57
vishwaksenan
  33  

Sarva Mangala Prapti Rastu for the 1 year child. Wish your marvellous work to continue for years and years.I pray my Oppili to bless with more treasures.

மே 15th, 2011 at 10:26
Suraj
  34  

Hello, I am trying to get the email contact details of Dr Nagaswamy and would be truly grateful if you could help me with this. I am in Europe so it is difficult for me to make it to Chennai to see him personally. Thank you.

ஜூலை 12th, 2011 at 15:28

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி