Quantcast

புள்ளமங்கையின் ஈர்ப்பு நம்மை அவ்வளவு சுலபத்தில் அங்கிருந்து வெளிவர விடை தர மறுக்கிறது. அதனால் இன்று மீண்டும் அங்கிருந்து ஒரு சிற்ப விருந்து. நன்றி திரு அர்விந்த் அவர்களே. இந்த பதிவின் மூலம் வாசகர்களுக்கு இன்னும் ஒரு வேண்டுகோள். நீங்கள் அடுத்த முறை இத்தளங்களுக்கு செல்லும் பொது அங்கு நான் சென்றேன் என்பதற்கு அத்தாட்சியாக சிற்பங்களின் முன்னர் நின்று படம் எடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு சில நிமிடங்கள் எங்களுடன் உங்கள் படங்களை பகிரும் நோக்கத்தோடு, சிற்பங்களின் கலைத் திறனை வெளிக் கொணரும் பாணியில் படங்களை எடுத்து உதவுங்கள். இப்போது முன் போல படம் எடுக்க பணம் விரயம் செய்யவேண்டிய அவசியம் இல்லை, மின்னணு புகைப்படக் கருவி வந்துவிட்டதே.படச் சுருள் தேவை இல்லை - மற்றும் எடுத்ததை அப்போதே பார்த்து பகிரலாம். இவ்வாறு படம் எடுக்க சில நொடிகள், நடுக்கம் இல்லாத கை, அருகில் இருக்கும் சாமானிய பொருள்கள் மற்றும் நல்ல உள்ளம் மட்டுமே.

திரு அர்விந்த் அவர்கள் எப்படி படம் எடுத்துள்ளார் பாருங்கள்.

handphone

இல்லை, இது அலை பேசி / கை பேசிக்கான விளம்பரம் இல்லை. எதற்காக இந்த படம் என்பது இந்த அற்புத சிற்பத்தின் பதிவின் முடிவில் விளங்கும்.

pullamangai ardhanari

அர்தனாரி - உமை ஒரு பாகன், அம்மையும் அப்பனும் ஒன்றாய் காட்சி அளிக்கும் திருவுருவம். பெண்கள் ஆண்களுக்கு சரி சமானம் என்றும், ஆணின் சரி பாதி என்றும் உலகுக்கு உணர்த்தும் உன்னத கோலம். இந்த வடிவத்தை கல்லில் அற்புதமாக செதுக்கி உள்ளான் சிற்பி.

உமையொருபாகன் தேவார வரிகளில் பல முறை வந்தாலும், அவனது எழில் மிகு தோற்றத்துடன் நந்தி இணைந்து விடை வாகனாக குறிப்பிடும் பாடல் இதோ

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=20850&padhi=085&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமை நங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவ பிரான் தன்னை அடைந்த இளமதியையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத் தால், வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா. அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும்.

இந்த சிற்பத்தின் அழகு அதை வடித்த சிற்பியின் கலை திறனைப் போற்றுகிறது. ஒரு புறம் ஆணின் வீரியம், அதனுடன் பெண்மையின் நளினத்தை இணைக்க வேண்டும், வெளி வரும் சிற்பம் இரு பாதிகளை ஒட்டியது போல இல்லாமல், பார்ப்பதற்கு ஒரு சிற்பம் போல இருக்க வேண்டும்

சிற்பத்தின் இரு பாதிகளையும் தனித்தனியாக பார்ப்போம். ஆண் பெண் என பார்த்தவுடனேயே நமக்கு உணர்த்தும் வகையில் நேர்த்தியாக செதுக்கிய அழகு அருமை

shiva portion
umai oru paagam

ஆண் பெண் என்ற இரு அம்சங்களையும் அவன் படித்து இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகளை உரிய வகையில் மிகைப் படுத்தி கல்லில் வடித்தான் என்பதை, அந்த இடையை பார்த்தாலே தெரிகிறது.

the diff shown in the waist
the diff shown in the waist detail

ஆண் என்பதனால் பறந்து விரிந்த தோள்கள், அதே உமைக்கோ கொடியென வளைந்து தவழும் வண்ணம் வடித்துள்ளான்.

check out the shoulders
check out the shoulders detailing

அவன் கல்லில் இட்ட கோடுகளை சற்று மிகை படுத்தி நாம் ரசிக்க காட்டியுள்ளேன்.

அடுத்து ஈசன் கம்பிரமாய் நிற்கும் பாணி, அந்த பக்கம் உமையோ நளினமே உருவான தோற்றம். நந்தி பின்னால் - அதையும் மிக நேர்த்தியாக ( கழுத்தில் தொங்கும் சதை / தோல் ) வடித்துள்ளான் சிற்பி

nandhi

அதனுடன் நமது பதிவு முடியவில்லை. அலை பேசி வரவேண்டுமே, இதோ..

size comparison

அலைபேசி அளவில் உமையொருபாகன் விடை வாகன்

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, ஆகஸ்ட் 31st, 2009 அன்று 13:31 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 11 மறுமொழிகள்

தமிழ்த்தேனீ
  1  

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல

திரு அர்விந்த் அவர்களுக்கு செல்லும் ஆயுதம்

அதோடு உங்கள் ஊடுருவும் பார்வைத்திறன் வெறு சேர்ந்து கொள்கிறது

வர்ணனைக்கு ஏது பஞ்சம்

வளர்க உமது கலைத்திறன்

அன்புடன்
தமிழ்த்தேனீ
[email protected]
http://thamizthenee.blogspot.com

ஆகஸ்ட் 31st, 2009 at 13:37
தமிழ்த்தேனீ
  2  

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல

திரு அர்விந்த் அவர்களுக்கு செல்லும் ஆயுதம்

அதோடு உங்கள் ஊடுருவும் பார்வைத்திறன் வேறு சேர்ந்து கொள்கிறது

வர்ணனைக்கு ஏது பஞ்சம்

வளர்க உமது கலைத்திறன்

அன்புடன்
தமிழ்த்தேனீ
[email protected]
http://thamizthenee.blogspot.com

ஆகஸ்ட் 31st, 2009 at 13:38
Manii
  3  

with the modern technology (hand phone) we could only capture this masterpiece and not create it, without the technology our ancestors could create such a master piece not leaving any minute features as well. my pranams to these sculptors !!! and to all for exposing this to the comman man’s eyes !!!

ஆகஸ்ட் 31st, 2009 at 14:02
  4  

பாண்டிய மன்னனின் பிணி தீர்க்க சம்பந்தர் கிளம்பியபோது, அய்யனே கோள்கள் சரியில்லை அங்கு இருக்கும் சமணர் மிகப் பொல்லாதவர்கள் இப்பொழுது தாங்கள் போகவேண்டாம் எனச் சொல்ல, அப்பரே கோள்கள் நம்மை ஒன்றும் செய்யாது என்று கோளாறு பதிகத்தை பாடினார் சம்பந்தப் பிள்ளை. இன்றும் அதைப் பாடினால் நமக்கு ஒரு தீங்கும் நேராது என்பது நம் நம்பிக்கை.

இப்படி மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பாடலை பாடும் பொழுது இறைவன் உருவமும் மனக்கண் முன் தோன்றினால் மிகவும் மனதிற்கு இதமாக இருக்குமல்லவா! ஆஹா! அந்த உருவம் கையளவே என்றாலும், கலை நுணுக்கம் விண்ணளவு என்று சொன்னாலும் மிகையாகாது. மன்னனால் சிற்பி சிற்பத்தை உருவாக்கினான், இன்று திரு. அர்விந்த் அவர்களால் திரு. விஜய் நமக்கு காட்டுகிறார். நன்றி இந்த நல்ல உள்ளங்களுக்கு.

எல்லாம் ஈசன் செயல்….

ஆகஸ்ட் 31st, 2009 at 14:10
  5  

எல்லாம் அவன் செயல். அணுவும் அண்டமும் நம் கன்ணுக்கு அவன் காட்டும் வித்தியாசமே! புள்ளமங்கை முழுதும் பார்க்க கண்ணாயிரம் வேண்டும்.

ஆகஸ்ட் 31st, 2009 at 15:54
சச்சிதானந்தன்
  6  

29.8 அன்று திருப்பூர், அவிநாசி போயிருந்தேன். கல்லில் பொளியும் சிற்பிகளின் கலைக்கூடங்களைச் சாலை ஓரமெங்கும் வரிசையில் கண்டேன். மிக அழகான படைப்புகளைச் செதுக்கி வைத்திருதனர். செதுக்கி வருகின்றனர். அவைகளின் கலை நுணுக்கத்தை நுட்பமாகப் புரிந்து கொள்ள, புள்ளமங்கையில் செதுக்கியதைப் புரிந்துகொள்ளவது போலப் புரிந்து கொள்ள, நீங்கள் இல்லையே என்ற ஏக்கம்!

ஆகஸ்ட் 31st, 2009 at 16:26
  7  

beautiful work, thank you for your efforts to keep us informed baout the truth of yesterday.

ஆகஸ்ட் 31st, 2009 at 17:10
இன்னம்பூரான்
  8  

மறு மொழியா! மகிழ்ச்சியில் திகழும் போது, பாடங்களும் இணைந்து வரும் போது, நன்றி என்று பலமுறை சொல்லத்தானே இயலும்.
இன்னம்பூரான்

ஆகஸ்ட் 31st, 2009 at 18:50
shanthi palaninathan
  9  

Hi Vijay,
Thanks for sharing such beautiful ‘poems’ with us.

செப்டம்பர் 1st, 2009 at 12:35
  10  

Really enjoyed the post. Highlighting the curves has helped.

செப்டம்பர் 3rd, 2009 at 14:03
  11  

அற்புதமான வர்ணனை, பொருத்தமான கோளறு பதிகம், ஞானசம்பந்தர் எழுதியது அப்படியே கண் முன்னர் வந்துவிட்டது. அர்த்தநாரீசுவரர் சிற்பத்தில் ஆண், பெண் வித்தியாசத்தைச் சுட்டிக் காட்டி இருக்கும், உங்கள் நுணுக்கமான கவனிப்பும் வியக்க வைக்கிறது.

செப்டம்பர் 6th, 2009 at 17:28

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி