Quantcast

நண்பர் திரு தேவ் அவர்களுடன் சென்ற மடலைப் பற்றி தற்செயலாக நடந்த உரையாடலில் வந்த கேள்விகளை ஆராயும்போது கிடைத்த விடைகளை விரிவுபடுத்தி ஒரு பதிவாக இங்கு இடுகிறேன். சிற்பங்கள் வெகுவாக சிதைந்து இருப்பதால் அவற்றை கொட்டோவியங்களாகவும் உங்கள் பார்வைக்கு இடுகிறேன். ( வரைந்தவை அல்ல - ஒற்றி எடுத்தவை - திரேசிங்)

முதலில் ஒன்றை தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். இந்த பதிவின் குறிக்கோள் அர்த்தனாரி வடிவத்தின் இரு பாகங்களின் வேற்றுமைகளை எடுத்துக்காட்டுவதல்ல, அந்த வடிவம் எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்பதை விளக்க ஒரு முயற்சி. அதுவும் ஒரு சிற்பி இந்த வடிவத்தை செதுக்கும் போது எதிர்க்கொண்ட சவால்கள் என்னவாக இருந்திருக்கும், அதனை அவன் எப்படி சமாளித்தான் என்பதை காட்டவே இந்த பதிவு.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அங்க அமைப்புகளின் வித்தியாசங்கள் பல. அவற்றை இங்கு பட்டியலிடாமல், சிற்பி எவ்வாறு இவற்றை ஒரு உருவத்துள் கொண்டு வர முயற்சிக்கிறான் என்று பார்ப்போம். ஆண் பெண் இருவரையும் ஒன்றாக இணைக்க வேண்டும், ஒரே உருவமாகத் தெரிய வேண்டும், எனினும் இரு பாகங்களும் ஆண் எது பெண் எது என்றும் தெளிவாகத் தெரிய வேண்டும். அழகாகவும் இருக்க வேண்டும். இந்தக் கேள்விகளையும் அவன் கண்டுபிடித்த விடையையும் நான்கு சிற்பங்களின் மூலம் பார்ப்போம். ( சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிக அருமை - அவற்றிற்கென தனி இடுகை வேண்டும், எனினும் தலைப்புக்கு என்ன தேவையோ அதை மட்டும் இன்று பார்ப்போம்)

முதல் சிற்பத்தை பார்ப்போம் - முற்கால பல்லவர் வடிவம் ( முதல் வடிவம் அல்ல, எனினும் நமது பதிவின் கால அட்டவணையில் மூத்தது). மல்லை தர்மராஜ ரதம் அர்த்தனாரி சிற்பம்.

dharmaraja ratham mallai

எளிதில் சிற்பத்தை ரசிக்க ஒற்றி எடுத்த கோட்டோவியம்.

ardhanari dharamaraja ratha

முற்கால பல்லவர் சிற்பம் என்பதற்கு சான்றுகள், மிகவும் குறைந்த அளவு ஆபரணங்கள் மற்றும் எளிமையான வடிவம். எனினும் பல்லவ சிற்பத்திற்கே உடைய உயிரோட்டம் இதில் இல்லை, அதே மல்லையில் உள்ள மற்ற சிற்பங்களில் உள்ள தன்மை இதில் ஏன் இல்லை. ஒருவேளை இந்த வடிவத்தை முதல் முதலில் சிற்பி வடித்ததால் இப்படியோ என்று தோன்றுகிறது. பல முறை சோதனை செய்து பார்த்து வடிக்க இது களிமண் பொம்மை இல்லையே. கருங்கல் அதுவும் நிலத்தில் இருந்த சிறு குன்றை குடைந்து வடித்த வடிவத்தின் வெளிச் சுவரில் வரும் புடைப்புச் சிற்பம். எனினும் பல்லவர் சிற்பம் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம், பலரிடத்தில் அவர்கள் சிற்பக்கலை சோழர்களின் கலையை விட மேலானது என்று நான் வாதாடியதும் உண்டு. எனினும் இந்த சிற்பம் என்னை கவரவில்லை - ரோட்டில் லாரி ஏறி கிடக்கும் தேரை போல ஒரு வெறுமை - கண்டிப்பாக இது அவனது முதல் முயற்சி என்றுதான் தோன்றுகிறது. இரண்டு பாகங்களுக்கும் வேற்றுமைகள் ஒன்றும் பெரிதாக இல்லை, வெளிப்படையாக ஒன்றே ஒன்றுதான் தெரிகின்றது - மார்பகங்கள். கால்கள் இரண்டும் வித்தியாசம் பெரிதாக எதுவும் இன்றி ஒரே போல் இருப்பது வருத்தமே.
சரி, சிற்பி இதற்கு என்ன செய்தான். அதே சிற்பி என்று சொல்லவில்லை, சிற்பக் கலை பயில்வோர் இந்தச் சிலைவடிவதை எவ்வாறு அழகூட்டுவது என்று ரூம் போட்டு யோசித்தால் ….என்ன நடந்திருக்கும்.

அடுத்த உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். வாசகர் கவனிக்க. சிற்பங்களை அட்டவணை போட்டு காலம் என்னவென்று நாங்கள் ஆராயவில்லை. பொதுவாக எப்படி இந்த உருவம் காலப்போக்கில் வளர்ச்சி பெறுகிறது என்று பார்ப்பதற்கே இந்த உதாரணங்கள்

agastyesvara temple perungudi

மீண்டும் ஒற்றி எடுத்த ஓவியம்.

ardhanari perungudi

இங்கே சிற்பி, ஆண் பெண் வேற்றுமையை இன்னும் பிரதானமாக எடுத்துக்காட்ட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளான். பெண்ணின் இடுப்பை அழகாக வளைத்து திருபங்கத்திற்கு எடுத்துச்செல்ல எத்தனித்துள்ளான். ஆனால் ஒரு பக்கம் இழுத்தால் மறு பக்கம் விளைவு - அதை சரி செய்ய ஆணின் காலை சற்று மடித்து - சவாலே சமாளி !! கைகளில் சிறு வேற்றுமைகளை காணலாம். பெண்ணின் கையை நளினமாகவும், ஆணின் கையை கம்பீரமாகவும் ( இடுப்பில் வைத்து ), ஆடைகளிலும் சற்று வேறுபாட்டை காட்டுகிறான் - அம்மைக்கு புடவை, ஐயனுக்கு அரை டிரௌசர் !!

இன்னும் வளர்ச்சி - பிற்கால சோழர் சிற்பம் சென்று, பூர்த்தி பெற்ற அம்மை அப்பன் - உமை ஒரு பாகன் சிற்பத்தை பார்ப்போம். .

vridhagirisvarar vriddachalam

மீண்டும் ஓவியம்.

ardhanarai vridhachalam

பெண் பாகம் முழுமையாக திருபங்கத்தில் வந்துவிட்டது, அதனை சரிகட்ட ஆணின் கால் முழுமையாக மடித்து விட்டான் சிற்பி. எனினும் ஆணின் மேல் பாகம், வெகுவாக ஒரு பக்கம் சாய்ந்துள்ளது - பார்ப்பதற்கு சிற்பம் அழகாக இருந்தாலும், ஒருபக்கம் இழுத்துக்கொண்டு இருப்பது போல இருக்குமே. என்ன செய்வது என்று யோசிக்கிறான் சிற்பி. எதன் மேலாவது சாய்வது போல காட்டினால் என்ன? கடினமான வினா! விடை என்ன ?? ஆஹா “விடை”யே விடை. ஒய்யாரமாக சாய்ந்து நிற்க அவரது கையை வாகனமான விடை மீது இறங்க விட்டு சிற்பத்தை முடித்துவிட்டான். அழகிய ஆபரணங்கள் மற்றும் அணிகளை வடித்தான். அற்புத அர்த்தனாரி வடிவம், விடை வாகன் வந்துவிட்டான். அர்த்தனாரி என்றால் இனி இந்த வடிவமே என்று எங்கும் திகழும் வண்ணம் பரவியது அவன் திறன்.

அப்படியா. இந்த விடை அங்கு வருவதற்கு இது ஒரு காரணமோ. சரி இதை சோதிக்க எளிபண்டா குடவரை செல்வோம்.

elephantaArdhanari

அற்புத அர்த்தனாரி வடிவம், கொள்ளை அழகு, ஆண் பெண் இருவரும் பிணைந்து நிற்கும் வடிவம். ஆஹா, அதோ இங்கேயும் நமது விடை தன் தலையை ஐயனுக்கு தந்துள்ளதே

அணிகலன், ஆபரணம் வேறுபட்டாலும் வடிவம் ஒன்றே!!

ardhanari elephanta

சரி, இதற்க்கு வேறு சான்று உண்டா. எப்படி சோதிப்பது. பொதுவாக அர்த்தனாரி உருவங்கள் சிவன் வலது புறம், உமை இடது புறம் என இருப்பது வழக்கம். எனினும் இதற்கும் ஒரு சிற்பம் விதி விலக்கு ( ஏன் - ஆராய வேண்டும்) - இங்கு இடம் மாறி இருக்கும் அம்மை அப்பன் பாதிகள். பாருங்கள்.

vadapurisvara tiruvedjudi tjore 3

சரி, இடம் மாறி உள்ளார்கள், அதற்கும் நமது இடுகைக்கும் உள்ள தொடர்பு என்ன ? பின்னால் இருக்கும் உருவத்தை பாருங்கள் …

ardhanari transposed trivetkudi

விடையும் இடம் மாறி, இடது புறம் நோக்கி இருப்பது - ஆண் பாதிக்கு முட்டுக்கொடுக்கவே என்பதை ஊர்ஜிதை செய்கிறது.

இது ஒரு கருத்தே. இதை இன்னும் ஆராய வேண்டும். இந்த வடிவம் கல்லில் செய்தது, பின்னர் உலோகத்திலும் வடித்தனர். கல்லில் வடித்த போது வளைத்து செதுக்கும் போது கல்லின் எடை போன்றவையை நினைவில் கொள்ள வேண்டும். அப்படி என்றால் உலோகத்தில் வார்க்கும் போது என்ன ஆகும். அதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

படங்களுக்கு நன்றி : அமெரிக்கன் இன்ஸ்டிடுட் ஒப் ஆசியான் ஸ்டடீஸ்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 4th, 2009 அன்று 15:29 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 26 மறுமொழிகள்

art.e
  1  

vj, u have made an intersting study.( i am obsessed by arthanari principle and intend doing paintings in that theme

செப்டம்பர் 4th, 2009 at 15:46
dhivakar
  2  

கலைக்கல்லூரி உத்தியோகத்துக்குப் போவதாக சித்தமோ.. அருமையான விரிவுரை.

இடங்கால் ஆடுவதும் வலதுகால் மாறி ஆடுவது கூட சிற்பியின் ரசனைகளில் ஒன்று.

விடைக்கு விடை.. சரியான தலைப்புதான்.

செப்டம்பர் 4th, 2009 at 15:53
Manii
  3  

what more we need to describe the beauty of arthanareeswar than this narration !!! we find bliss in things which are most intimate to us. this description and the sculptors provides more bliss. by just reading and viewing itself. i wonder how happy would be the writer (vijay) when he wrote this !!! “kallilae kalai vannam mattum alla, kadavulaiyae kaangiroam” :)

செப்டம்பர் 4th, 2009 at 16:17
  4  

Hi Vj,
The taces have worked out really well…

I thought you would post the bronze too…waiting for it!

செப்டம்பர் 4th, 2009 at 18:25
  5  

Vairam is right. Waiting for the bronzes..
Chandra

செப்டம்பர் 4th, 2009 at 19:05
திவா
  6  

சந்தோஷம்! enjoyed!

செப்டம்பர் 4th, 2009 at 19:22
R.Devarajan
  7  

சிவ பெருமானுக்குரியதாகப் அறுபத்து நான்கு மூர்த்தி பேதங்களைச் சிவாகம நூல்கள் பகரும்.
அவற்றுள் ஒன்று ”கேசவார்த மூர்த்தி”.
இடப்புறம் திருமாலும், வலப்புறம் சிவனும் சேர்ந்த சங்கர நாராயண வடிவம்.
முற்கால பல்லவரின் அர்தநாரீசுவர வடிவமும் வளைவுகளின்றி அதைப்போலவே அமைந்துள்ளது.

தேவ்

செப்டம்பர் 4th, 2009 at 20:04
Satish
  8  

Wonderful Vijay. Thanks for the post.
I thought Ajantha predates Pallavas…is it not older than pallava? Then if Ajanatha has the grace, then pallava might not have been well trained :) OR as Mr.Devarajan has pointed out this might be an extension of Hariharan.
And the reverse image with female on the right side…may the sculptor got the trace from his master and due to neglegence turned the page the other side and came up with the reverse image and later realized its the wrong side (but being stone no ctrl Z possible. just wild imagination :) (antha kalathula trace paper irunthathanu kekkka koodathu…)..

செப்டம்பர் 4th, 2009 at 20:57
anandhinatarajan
  9  

thanks vijay,
very good describtion of arthanareeshwar

செப்டம்பர் 5th, 2009 at 22:21
  10  

//இரண்டு பாகங்களுக்கும் வேற்றுமைகள் ஒன்றும் பெரிதாக இல்லை, வெளிப்படையாக ஒன்றே ஒன்றுதான் தெரிகின்றது - மார்பகங்கள். கால்கள் இரண்டும் வித்தியாசம் பெரிதாக எதுவும் இன்றி ஒரே போல் இருப்பது வருத்தமே.//

பெண்ணுக்குரிய நளினம் இல்லை, விறைப்பாக இருக்கின்றார் அல்லவா?

//அதை சரி செய்ய ஆணின் காலை சற்று மடித்து - சவாலே சமாளி !!//

ஆஹா!

//அம்மைக்கு புடவை, ஐயனுக்கு அரை டிரௌசர் !!//

ஹிஹிஹி, புலித்தோலாடை அது! :D

//ஆஹா “விடை”யே விடை. ஒய்யாரமாக சாய்ந்து நிற்க அவரது கையை வாகனமான விடை மீது இறங்க விட்டு சிற்பத்தை முடித்துவிட்டான். //

“விடை”யால் விடை கிடைத்தது. உங்கள் அருமையான ஆய்வுக்கும், உழைப்புக்கும் பாராட்டுகள்.

//இங்கு இடம் மாறி இருக்கும் அம்மை அப்பன் பாதிகள். பாருங்கள்.//

இதுவும் எலிபண்டாவா?? பார்த்தமாதிரி இல்லையே??

தேவ் அவர்கள் சொல்லி இருப்பதுபோல் சங்கரநாராயணன் உண்டு. ஆனால் முற்காலப் பல்லவர் சிற்பம் அதைப் பிரதிபலிக்கிறதா தெரியலை! பார்க்கணும்!

செப்டம்பர் 6th, 2009 at 17:39
  11  

வணக்கம் கீதா அம்மா

இடம் மாறி இருப்பது திருவேட்குடி வடபுரீர்ஸ்வரர்

விஜய்

செப்டம்பர் 6th, 2009 at 17:47
  12  

interestg illustration

செப்டம்பர் 8th, 2009 at 14:12
anandhinatarajan
  13  

arputham. edammari erupathu ghavanika vendiya sirpam. pallava sirpam ellavatrikum mumoodi

செப்டம்பர் 12th, 2009 at 9:52
nallasivam
  14  

i think thiruchengode hill temple near erode has the oldest ardanareewarar.this temple is mentioned in silapadikaram.here ardanareewarar is the moolavar and made of herbal mixture called navapasaanam.it is a 6 feet tall majestic statue.

செப்டம்பர் 20th, 2010 at 21:36
  15  

dear mr nallasivam,

can you give us the ref from silambu.

rgds
vj

செப்டம்பர் 21st, 2010 at 18:30
nallasivam
  16  

seerkezhu senthilum CHENKODUM venkundrum
erakamum neenka iraivankai velandre…….

-vanchi kaandam;kundrakkuravai;paattumadai;2nd verse.
there is a sub shrine for murugan in this temple called chengottu velavar.ilango adigal is mentioning him.any way the temple is more than 1800 years old.

செப்டம்பர் 24th, 2010 at 11:20
Parvadha Vardhini
  17  

Very nice analysis and very beautiful sculptures!!

அக்டோபர் 1st, 2010 at 20:02
  18  

Hello, I enjoyed reading your articles on “Poetry in Stone”. You have taken great efforts to collect quite interesting information on Ardhanari.

Similarly you may find similar interest in Ajanta Caves in Maharashtra - one of the UNESCO World Heritage Sites….

Among the most important monuments in India are the magnificent caves at Ajanta and Ellora, both featuring some of the world’s most exquisite rock carvings. At Ajanta and Ellora, statues and monumental structures were chipped out of solid basalt rock, where as at Ajanta, one can also see the most remarkable cave paintings which has survived over the centuries.

The caves are now like chapters of splendid epic in visual form, recalling the life of the Buddha, and illustrating tales from Buddhist Jatakas(fables). They are cut from the volcanic lavas of the Deccan trap into a steep crescent-shaped hillside in a forested ravine of the Sahyadri Hills. After the late seventh century, the jungle took over and they lay unnoticed for centuries. These caves were only rediscovered in 1819, by a group of British tiger hunters.

http://www.grandeurmaharashtra.com

The caves at Ajanta not only contain sculptures, but remarkably preserved frescoes as well. The frescoes and sculptures of Ajanta are from the heavy period after the death of Buddha when the priests felt the need to give a representational form to their teachings, of Buddha to proliferate. Thus began the process of Buddhism acquiring some of the sensuousness of Hinduism. They are secluded and were discovered by accident only in the 19th century, which explains why the monuments escaped the depredations of invading armies.

The miraculously preserved paintings and sculptures that decorate 30 Ajanta caves cut into the basalt rock of a beautiful crescent-shaped gorge provide the most extensive idea of early Buddhist artistic traditions in India. They are also the sources for iconography and styles found in later Central Asian and Far Eastern Buddhist Art.

http://www.grandeurmaharashtra.com

The Ajanta caves date mostly from two periods: the second and first centuries B.C., then the late fifth century A.D., when the Vakataka rulers, especially Harishena, were energetic patrons. These caves contain the most impressive sculptures, ranging from votive images to narrative tableaus with many figures and an elaborate decorative motif.

Ajanta caves also have India’s only extensive series of Buddhist paintings of such virtuosity, quality, and wide range of subjects. The masterpieces retell the life story of the Buddha and reveal the life and culture of the people of the times, royal court settings, family life, street scenes and superb studies of animals and birds. The Jatakas relate the Buddha’s previous two births-showing the progress of the soul. Ajanta’s excavations are adorned with a swirling profusion with murals.

Over the period of seven centuries, the cave temples of Ajanta evolved into works of incredible art. Architectures continue to be awestruck by the sheer brilliance of the ancient builders and techniques, which, undaunted by the limitations of their tools, materials, and skills, created a marvel of artistic and architectural splendour. In all, 30 caves were carved, 15 of which were left unfinished; some of them were viharas (monasteries) complete with stone pillows carved onto the monks’ stone beds and others were chaityas (Buddhist cathedrals). All the caves with intricate sculptures and murals depict the many incarnations of Buddha.

The first to be excavated was Cave 10, followed by the first Hinayana caves (in which the Buddha is not depicted in human form), on either side. Later Mahayana caves were discovered, completing the spectrum of Buddhist development in India.

Time has taken its toll on many of the murals, and modern- day restoration projects have even contributed to the near- ruin of some of the work. Despite this, the paintings continue to enthral, and it’s hard to imagine the patience and profound sense of spiritual duty and devotion that led to the creation of this, arguably the best Buddha site in India, the voluptuousness of much of the imagery.

Please read more details about Ajanta & Ellora caves at http://www.grandeurmaharashtra.com and I will be happy to have your comments.

மார்ச் 22nd, 2011 at 17:34
  19  

Hello, I enjoyed reading your articles on “Poetry in Stone”. You have taken great efforts to collect quite interesting information on Ardhanari.

Similarly you may find similar interest in Ajanta Caves in Maharashtra - one of the UNESCO World Heritage Sites….

Among the most important monuments in India are the magnificent caves at Ajanta and Ellora, both featuring some of the world’s most exquisite rock carvings. At Ajanta and Ellora, statues and monumental structures were chipped out of solid basalt rock, where as at Ajanta, one can also see the most remarkable cave paintings which has survived over the centuries.

The caves are now like chapters of splendid epic in visual form, recalling the life of the Buddha, and illustrating tales from Buddhist Jatakas(fables). They are cut from the volcanic lavas of the Deccan trap into a steep crescent-shaped hillside in a forested ravine of the Sahyadri Hills. After the late seventh century, the jungle took over and they lay unnoticed for centuries. These caves were only rediscovered in 1819, by a group of British tiger hunters.

Please read more details about Ajanta & Ellora caves at http://www.grandeurmaharashtra.com and I will be happy to have your comments.

மார்ச் 22nd, 2011 at 17:37
  20  

thanks Sandeep. Its long due to cover Ajanta n Ellora. Fortunately some of our team have visited and we are working on interesting posts.

rgds
vj

மார்ச் 22nd, 2011 at 17:45
Chandramouli
  21  

Very interesting piece. Am still catching up in this domain.

I remember having seen the Hermaphrodite sculptor in the Louvre museum. Always wondered why the western architects resorted to a Top (Female) and Bottom (Male) composition against the Indian Left - Right approach.

Also the nuances in the Hermaphroide sculptor has not been this significantly carved out. The legs seem to be that of a woman’s. Do you have any comparisons between the Ardhanareeshwarar and the western equivalent form?

ஏப்ரல் 25th, 2011 at 17:47
  22  

Dear Mr Chandramouli,

Can you give the link for the Louvre sculpture you are talking off.

rgds
vj

ஏப்ரல் 26th, 2011 at 15:52
Chandramouli
  23  

Vijay,

Thanks for the follow up. I found this link-
http://www.louvre.fr/llv/oeuvres/detail_notice.jsp?CONTENT%3C%3Ecnt_id=10134198673225803&CURRENT_LLV_NOTICE%3C%3Ecnt_id=10134198673225803&FOLDER%3C%3Efolder_id=9852723696500817&bmLocale=en

I hope you find this useful.

Regards.

Mouli

ஏப்ரல் 26th, 2011 at 16:32
  24  

The link is not working - says under construction. Maybe you can send a screen shot instead

rgds
vj

ஏப்ரல் 27th, 2011 at 7:33
injavaven
  25  

brilliant insight on the addition of Nandhi in balancing & giving life to Ardhan. Where have yu found the earliest one of this kind? How often does the f side have only one arm as opposed to the m side’s 2 ? Another area for study.

அக்டோபர் 14th, 2011 at 14:57
  26  

True, kathie..so much to learn

Normally the male Gods are shown with four hands and consorts shown with two. If the female form is a separate deity then she is shown the addnl arms / attributes

rgds
vj

அக்டோபர் 18th, 2011 at 10:16

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி