Quantcast

பல்லவ சிற்பியின் உன்னதக் கலை ஏன் நம் மக்களை முழுவதுமாக சென்றடையவில்லை? கண்முன்னே இருக்கும் அற்புத வடிவங்களை நம் கண்கள் ஏன் உணர மறுக்கின்றன ?
உதாரணத்திற்கு அர்ஜுன ரதம் சிற்பங்கள் - இரண்டு அற்புத வடிவங்களை இன்று பார்ப்போம். ( எந்த புண்ணியவான் பஞ்ச ரதங்களுக்கு பஞ்ச பாண்டவர் பெயரை சூட்டினானோ ? எதற்கு வைத்தானோ ?)

அர்தனாரி வடிவத்தை பற்றி பார்க்கும் போது, சிற்பி எப்படி விடையை வைத்து சிற்ப வடிவத்தை அழகு சேர்த்தான் என்று பார்த்தோம். அந்த யோசனை திடீரென அவனுக்கு உதித்ததா, அல்லது வேறு எதாவது யுக்தி அவனுக்கு உதவி செய்ததா? அதைத்தான் இன்று நாம் பார்க்க போகிறோம். எப்படி விடை வாகனான ஈசனின் உருவத்தை அர்தனாரி உருவத்துடன் இணைத்தான் என்பதை பாருங்கள்.

அர்ஜுன ரதம். விடை வாகன்.

rishanbandaka shiva arjuna ratha closeup

பல்லவனுக்கே உரிய அழகு சிற்பம், அதிகமான அணிகலன்கள் இல்லை,
எளிமையான எனினும் அழகிய அங்க அமைப்பு.

என்னடா இவன், சும்மா சாதரணமான சிற்பத்தை போட்டுவிட்டு இப்படி வர்ணிக்கிறானே என்று நீங்கள் மனதுள் நினைப்பது கேட்கிறது. சிலை அப்படி ஒன்றும் அபாரமாக இல்லையே? அதுவும் உடலமைப்பு சற்று சரியாக இல்லாதது போல தெரிகிறதே? சிற்பி ஏதாவது தவறு செய்துவிட்டானா ? இல்லை, கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இதோ விளக்குகிறேன்

முதலில், இது ஒரே கல்லில் குடையப்பட்ட ரதம், புடைப்பு சிற்பம், பல்லவனின் அற்புத சிற்ப திறனை பிரதிபலிக்கும் சிற்பம்.

arjuna ratha
arjuna ratha 2
closer look at shiva

இந்த கோணத்தில் பாருங்கள் - இப்போது புரிகிறதா ?

rishabashiva arjunaratha

சிற்பக்கொத்தில், கிடைத்த சட்டத்திற்குள் ஈசனையும் அவனது விடை வாகனத்தையும் நேர் வடிவில் செதுக்க இடம் இல்லை. அதனால் கல்லின் ஆழத்தை உபயோகம் செய்து, ஈசனை ஒரு பக்கமாக திருப்பி வடித்துள்ளான் சிற்பி.

bottom view to show depth

இந்த கோணம் சிற்பத்தை ரசிக்க சரியான கோணம் அல்ல ( படத்திற்கு நன்றி அசோக், நீங்கள் எப்போதுமே புதிய கோணங்களில் படம் எடுப்பது இங்கே உதவுகிறது ) , எனினும் சிற்பத்தின் ஆழத்தை உங்களுக்கு கட்டவே இதை இங்கே இடுகிறேன். கருங்கல்லில் இதனை கற்பனை செய்து எப்படி தான் செதுக்கினானோ!! நினைத்துப் பார்க்கவே தலை சுத்துகிறது.

இப்போது புரிகிறதா - விடைவாகனும் அர்தனாரி உருவங்களும் எப்படி ஒன்றாக ஆயின என்று.

சிற்பியின் இத்திறமையை ரசிக்க அர்ஜுன ரதத்தில் இருந்தே இன்னும் ஒரு எடுத்துக்காட்டு .

arjuna ratha royal couple

இது கல் என்றே நம்மை மறக்கடிக்கும் சிற்பம் இது

the other angle

அந்த கோணத்தில் இருந்து அல்ல , இந்த கோணத்தில் பாருங்கள்.

closeup of royal couple
the right angle

அரசி கூப்பிட, அவள் குரலுக்கு தலை திருப்பும் அற்புத வடிவம்

ஒரு நிமிடம் கண்ணை மூடி கற்பனை செய்யுங்கள். பெண் குரலில் ” பிராண நாதா !” ஆண் . முகத்தை திருப்பியவாறு ” பிரிய சகியே ” - அல்லது இப்படி கற்பனை செய்வோமா ” ஏன்னா , செத்த இங்க பாருங்கோ !”

did u call me

உயிர் சிற்பம் என்றால் என்ன? இதுவே அது. அதை நாம் ஆத்மார்த்தமாக உணர வேண்டும்

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 15th, 2009 அன்று 19:01 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 14 மறுமொழிகள்

  1  

Makes me wonder…these people didnt have any photosop or maya 3d or any other design software..nor it is a paper art to erase and redraw…they must have had a amazing power packed processing system in their head!!

செப்டம்பர் 15th, 2009 at 19:14
  2  

ஆஹா! என்ன ஒரு கலைத்திறன், பல்லவர்கள் தொலை நோக்குப் பார்வையாலே கற்றளி ஏற்படுத்தினர் என்றால் அவர்களது சிற்பிகள் முப்பரிமாணத் தோற்றத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் சிலைகள் படைத்துள்ளனரே!!!

இன்றைய காலகட்டத்தில் 2D படத்தையே இதற்கு மேல் சொதப்ப முடியாது என்ற அளவுக்கு படம் போட்டுவிட்டு, அதனை ஆசிரியர் வெளியிடவில்லை என்று கோபப்படுவோர் ஆயிரமாயிரம்.

ஆனால் 1300 ஆண்டுகளுக்கு முன், எந்த ஒரு தொழில்நுட்பமும் வளராத காலத்தில் (3D) முப்பரிமாணத் தோற்றத்தில் கற்பனை செய்து, அதனை கல்லில் சிறிதும் தவறின்றி வடிக்கவேண்டுமானால் எவ்வளவு தவம் வேண்டும்!!! சாதரணமாக பார்த்தால் இதன் நுட்பம் தெரியாது, ஆழ்ந்து கவனித்தால்தான் ஓரளவுக்காவது புரியும்.

ஏன்னா, இங்க செத்த பாருங்கோ நம்மளை படம்பிடிச்சு எல்லாருக்கும் காட்டிட்டார் இந்த விஜய்…

செப்டம்பர் 15th, 2009 at 19:30
Satish
  3  

“ஆனால் 1300 ஆண்டுகளுக்கு முன், எந்த ஒரு தொழில்நுட்பமும் வளராத காலத்தில்”

Satheesh…do we know for sure? Just because we dont know something, we conviniently say that our ancestors didnt had the technology. ‘katrathu kai man alavu’ sir. :)

Recently, I wrote in the PS group about the Bee Movie - that as per known laws of Aerodynamics, Bees cannot fly. But still Bees fly because they dont bother what the humans think :)

So what we think/perceive might be totally different from the fact.

My father knows basic electronics, plumbing, electrical work, carpentary, a bit of masanory and any other household work you name it, he knows it apart from him banking knowledge. He is a SSLC second attempt. I dont know anything and I have B.Sc, MCA, PGDBA and PMP.
whom will you call more knowledgeable, me or my father???? I will definitely say ‘my father’ :)

செப்டம்பர் 15th, 2009 at 22:24
  4  

அவங்க கற்பனையை விட அதை ஆய்வு செய்யும் உங்கள் கற்பனைத் திறன் வியக்க வைக்கிறது.

//உயிர் சிற்பம் என்றால் என்ன? இதுவே அது. அதை நாம் ஆத்மார்த்தமாக உணர வேண்டும்//

உணர வைத்துவிடுகிறீர்கள். நன்றி.

செப்டம்பர் 16th, 2009 at 6:54
anadhinatarajan
  5  

Hi vj,

“Prana natha” Kural enkalukum keatatha.
Thanks
Anandhi

செப்டம்பர் 16th, 2009 at 7:52
  6  

Bewitching exploration of the various facets of Pallava Art. Thanks.

செப்டம்பர் 16th, 2009 at 13:42
Srinivasan N.
  7  

Simply terrific. But there is a problem VJ despite my attempts, I am unable to have a closer view of the pics by clicking on them… it seems to take ages. Can you help. I must admit though that for sometime I did not have a steady net connectivity. But even after that improved, the difficulty remains. Anyways.

செப்டம்பர் 17th, 2009 at 12:47
  8  

Hi Srinivasan sir, we try and limit the image sizes to as low as possible without loosing out on quality. we had some issues last week but should be better now.

rgds
vj

செப்டம்பர் 18th, 2009 at 14:21
Manii
  9  

Simply “Rocking” !!!!

செப்டம்பர் 18th, 2009 at 15:19
  10  

VJ !!! The Sindabad of Sculpture World !!!

Well Done Vj …

செப்டம்பர் 20th, 2009 at 10:05
R.Narasimhan
  11  

To understand, Mahamalaipram, you should visit Kailasanatha Temple in Kanchi. This temple is the first temple built in India, dedicated to the Sun. The artisans were Greeks, Persian and locals of the Kandahar school. The Pallavas encouraged their artisans to adopt their skills on granite. Each one of the pagodas was a replica of the Kailasanatha model. They succeeded. Mahamalaipuram was thus the experimental station for granaite. Most of the original temples in Kanchi were of sansdstone.

செப்டம்பர் 25th, 2009 at 11:29
Subramanian
  12  

Shri. Narasimhan says and I quote “The artisans were Greeks, Persian and locals….” The locals were not ordinary people. They belong to the Viswakarma or Viswabrahmin community, who were considered to be the descendants of Lord Viswakarma who created the world. They are the great sthpathis and shilpis, that is great sculptors and master craftsmen, who followed the tenets of Vastu science. As somebody said the singular greatest contribution by a community to this country were not that of the princely community as they could not defend our country’s borders from various invaders, neither that of the priestly community who could not spread our ancient religion beyond our country, but that of the Viswakarma community consisting of artisans and artifiers, who created monuments such as the Brahadeswara Temple in Thanjavur, Sun Temple in Konarak, the creations in Ellora and Ajanta, the Khajuraho Temple, the creations in Mammallapuram and a whole lot of palaces and temples lying throughout the length and breadth of this country, which attract a whole lot of foreign visitors to our country and make them astounded by the breath-taking artistic monuments and the technology possessed by our country in creating such monuments during those age-old days. Let us salute them for their contribution. And, I request Shri. Pradeep to shed light on them in his writings.

ஆகஸ்ட் 20th, 2011 at 19:09
Ragavendar
  13  

Dear Vijay,

In the above article about Arjuna ratha you use the word RATHA actually it is not ratha type it is origanally a temple built by NarasimhavarmanI,but around 14th or 15th century religious war between shaiva and vaishnava people who fought themsleves but at the end vaishnava people won and destoryed most of lingams in all rock cut temples you may notified in mamallapuram rock cut temples and then vaishanavas named all the places belong to their religion and vishnu god for eg:- pancha padava ratha, ramanujar mandapam, krishna’s butter rock, arjuna penance it is keep on going not only arjuna ratha all the rock cut temples are made as temples only on those days,so in future if you wrote any article about mamallapuram kindly use the word temples,because historical information should be truth and should be very open to all the hisotry lovers.
Refernence Book Name:-Narasimhavarman
Author:-Mayilai. Seni.Venkatasami

ஆகஸ்ட் 23rd, 2011 at 0:28
  14  

dear Ragavendar,

With due respects to the author, there are many new findings, postulates based on these new discoveries etc - I beg to differ on your views and submit below:

1. Agree that Ratha is a common usage and Monolithic rockcut vimana is a more apt word - however, the objective of these posts are not to be read as scholarly dissertations but more as interesting insights to spur people on to develop an interest in such art. sadly we do not have the names of any of these ` rathas’

2. To say that all the ‘ rathas’ had Lingam inside is grossly wrong. A barrel shaped ` ‘Bhima’ ratha was most certainly styled for a sayana perumal. The ` draupadi’ ratha has the durga/kotravai still. If you analyse the sculptures in the ‘Dharamaraja’ ratha - you will know that even though it is dedicated to Siva, it carries sculptures of Vishnu on Garuda, Kalinga mardhana etc. I do agree with you on the Ramanuja Mandapa - which was a shaivite shrine - which was vandalised and attempted to be converted.

rgds
vj

ஆகஸ்ட் 23rd, 2011 at 8:14

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி