Quantcast

நண்பர் திரு சக்திஸ் அவர்களுடன் தற்செயலாக சிங்கை அருங்காட்சியகம் சென்ற போது பார்த்த ஒரு அற்புத சோழ சிலையை இன்று உங்களுடன் பகிர்கின்றேன். கருங்கல்லில் சிலை செதுக்குவது என்பது கலைஞனின் கலைக்கு ஒரு சவால், அதுவும் கடினாமான கல்லில் அரங்கனின் கருணை முகத்தை வடிக்கவேண்டும் என்றால், இரும்பு உளி கொண்டு செதில் செதிலாக கல்லை செதுக்கி அவனது அழகு கன்னங்களை வெளிக்கொணர வேண்டும், அலங்காரப்ரியனின் அங்கங்களை அணிகலன்களால் மெருகூட்ட வேண்டும். சிறு பிழைக்கும் இடம் இல்லாத இந்த திறனே அவனது படைப்புகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் அழியாப் புகழுடன் இருக்கச் செய்கிறது.

IMG00014-20090818-1431
vishnu stone acm sin

இந்த சிலை, சற்று சிதைந்துள்ளது - எவரோ வேண்டும் என்றே சிதைத்துள்ளனர். மூக்கறுப்பு . சாதாரணமாக இதற்குப் பிறகு இவை ஆலயங்களில் வழிபாட்டிற்கு வைக்கப்பட மாட்டா. மனிதனின் தேடலில் இறைவனைக் காண பல பாதைகள், பலமுறை இந்த வெவ்வேறு பாதைகள் சந்திக்கும் பொது சிதறும் மனித உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு. பாவம் இந்த மோதலில் மனிதனே மடியும் பொது சிலை என்ன செய்யும்.

எனினும் சிதைந்த இந்த வடிவிலும் நாம் பார்க்க நிறைய்ய இருக்கிறது. லியோநார்டோ டாவின்சி சொன்னாராம் - மூன்று விதமான மனிதர் உள்ளனர். சிலர் காண்போர். மற்றவர் இதை பார் என்று சொன்னால் காண்போர். சிலர் காணாதோர்!

vishnu

இந்த சிற்பத்தில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது ? முழுவதுமாக உள்ளே செல்லாமல் ( அதற்கு சிதையாது இருக்கும் ஒரு சிலையை எடுத்து பிறகு பார்ப்போம் )

முதலில் இடையில் அவரது இடுப்பில் உள்ள சிங்க முக பட்டை

lion belt buckle

சரி சரி, முக்கியமான இடத்திற்கு வருவோம். முன்னரே வெண்கல சிலைகளில் பார்த்த ஸ்ரீவத்சம். இதோ இங்கே முக்கோண வடிவில்

chola vishnu stone
srivatsam

மிகவும் கடினமான பனி. அதுவும் இப்படி மார்பில் இருந்து வெளியே புடைத்து நிற்கும்படி செதுக்குவது மிக கடினம்.

closeup of srivatsam

இதை இன்னும் ஆராய வேண்டும். உலோக சிலையில் உள்ள சித்தரிப்பு மற்றும் கற்சிலை - வெவ்வேறு காலங்களில் எப்படி ஸ்ரீவத்சம் வடிக்கப்பட்டுள்ளது என்பதை இன்னும் ஆழமாக பார்க்கவேண்டும்

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, செப்டம்பர் 22nd, 2009 அன்று 16:38 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 2 மறுமொழிகள்

  1  

யார் பார்கிறார்களோ இல்லையோ, இந்தச் சிலைகளை நகை ஆபரணங்கள் செய்வோரும், இன்றைய பேஷன் தலைமுறையினரும் நன்றாகப் பார்க்க வேண்டும் :-)

சிங்க முக பெல்ட் - அழாகான வடிவமைப்பு
ஆபரணங்கள் - வடிவமைப்பிற்கு கணினி வரைஞர்கள் எல்லாம் தேவையில்லை, பல சிலைகளைப் பார்த்தாலே போதும் :-)

இப்படியாவது சிற்பங்களை பாதுகாக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா?!?

ஒரு சிறு காட்சி:
மல்லைக்கு சென்ற காதல் ஜோடி ஒன்று, குன்றுகளுக்கு நடுவில் மரங்களுக்கிடையே ஒதுங்கப் பார்த்தது. அப்பொழுது,
காதலன்: அன்பே வா இங்கு சற்று உட்கார்ந்து பேசுவோம்
காதலி: கண்ணா, நீ உண்மையாகவே என்னை காதலிக்கிறாயா?
லன்: அதிலென்ன சந்தேகம் உனக்கு, நீ கடிக்க முடியாத கட்டி கரும்பல்லவோ (??? பொய் சொல்ல காசா வேணும் - மனதிற்குள்)
லி: அப்படியானால் என்னை மனம் செய்துகொள்வாயா?
லன்: (இது என்னடா வம்பா போச்சுது, சரி கொஞ்ச நாளைக்கு சமாளிப்போம்) உன்னையன்றி வேறு யாரை மணப்பேன் அன்பே.
லி: சரி அப்படியென்றால் வா அங்கிருக்கும் சிலைகளில் உள்ள ஆபரணங்களை காட்டுகிறேன் உங்களுக்கு, அதே போல் எனக்கும் நீங்கள் செய்து தர வேண்டும் சரியா?
லன்: (ஆஹா! ஆரம்பத்திலயே வச்சிட்டாளே ஆப்பு) எஸ்கேப்….
லி: ????!!!!!????

செப்டம்பர் 22nd, 2009 at 18:00
  2  

அருமை சதீஷ். எனினும் இது சோழ சிற்பம். பல்லவ சிற்பங்களில் அணிகலன்களுக்கு அவ்வளவு இடம் இல்லை - அதுவும் காதில் ஒரு பக்கம் பனை ஓலை தான். அதனால் நீங்கள் பயம் இல்லாமல் மல்லைக்கு உங்கள் “அவர்களை” தள்ளிகிட்டு மன்னிக்கவும் அழைதுப்போகலாம்.

செப்டம்பர் 23rd, 2009 at 11:57

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி