Quantcast


நண்பர்களே, எங்கள் இடுகைகளை தொடர்ந்து படித்து பின்னூட்டம் இடுவதற்கு எங்கள் நன்றி. ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்பிகிறோம், இந்த பதிவுகள் ஆய்வுக்க் கட்டுரைகள் அல்ல, எங்கள் சிற்பத் தேடலில் எதிர்கொள்ளும் புதிர்களையும் அதற்கான ( எங்கள் அறிவுக்கு எட்டும் ) விடைகளையும் எளிய முறையில் உங்களுடன் பகிர்கின்றோம். நாங்கள் சொல்வது தான் சரி என்பதற்காக அல்ல, நீங்களும் எங்களை போல தேட ஆர்வம் கொள்ளவே. பிழைகள் ஏதேனும் இருந்தால் வெளிப்படையாக எங்களுக்கு எழுதுங்கள்.

என்னடா, பலமான அஸ்திவாரம் இந்த பதிவுக்கு என்று அஞ்சவேண்டாம். பதிவு அப்படி.

பல்லவ சோமஸ்கந்தர் வடிவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த தொடரின் முதற் பதிவு இது. இதை நாங்கள் திரு கிப்ட் அவர்களது ஆராய்ச்சியின் அடிப்படையில் படைக்கிறோம். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_somaskanda.htm

இந்த தொடரின் நோக்கம் கேள்விகள் எழுப்புவது, அவற்றிற்கு எளிய தர்க்கரீதி முறையில் விடை தேடுவது. இன்னும் பயமுறுத்தாமல் தொடரின் முதல் பதிவுக்கு செல்வோம். பல்லவ சோமஸ்கந்தர்

இந்த தொடரின் வாதம் - பரிணாம வளர்ச்சி. அதாவது ஒரு சிற்பம் எப்படி காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி கொண்டு மாறுகிறது என்பதை விளக்கும் முறை. அது சரி, சோமஸ்கந்தர் சிற்பம் இன்றைக்கு எப்படி உள்ளது? இதோ அவற்றின் தற்காலத்து முழுமை பெற்ற சிலை வடிவம்

somaskanda_ex06
ex06b

சிற்பத்தின் அழகை ரசிக்க அவற்றின் ஒற்றிஎடுத்த கொட்டோவியம்

modern somaskanda front
modern somaskanda reverse

சரி, இது இன்றைய நிலை. இந்த வடிவத்தின் ஆதி, மிகவும் தொன்மை வாய்ந்த, இன்றைக்கும் இருக்கும் வடிவம் உள்ளதா. ஆம், இருக்கிறது. மல்லை தர்மராஜா ரதம், மேல் தலத்தில் இருக்கும் புடைப்பு சிற்பம்

Somaskanda dharamaraja ratha
somaskanda dharmaraja ratha

முதல் பதிவு என்பதால், ஆராய்ச்சிக்கு ஒன்றும் இல்லை. சிலை மற்றும் சிற்பத்தின் அழகை முதலில் ரசிப்போம். பின்னர் பல இடங்களுக்கு சென்று வரும் பதிவுகளில் எப்படி இந்த வடிவம் மாறுகிறது என்பதை பார்ப்போம்.

படங்களுக்கு நன்றி:

www.Varalaaru.com மற்றும் www.exoticindiaart.com

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், செப்டம்பர் 24th, 2009 அன்று 14:42 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 7 மறுமொழிகள்

  1  

Very good start

All the best sir…

செப்டம்பர் 24th, 2009 at 15:22
Narasimhan Srinivasan
  2  

Beautiful article VJ. But I got confused on seeing the first two bronzes of Somaskanda… They look to be distinctly chola, although looking at the Dharmaraja panel… the Cholas definitely modeled their creations both in stone and metal on the Pallavas… I think Pallava bronzes or metals are pretty rare aren’t they?

Especially Siva with the deer prancing out of his karas is a distinctly Chola creation…. am I wrong somewhere… do lemme know.

செப்டம்பர் 24th, 2009 at 15:33
  3  

hi cheenu,

what you see above is not a chola bronze but a current day sale piece modeled on chola style. we will see how the pallava form evolved in the coming posts

cheers
vj

செப்டம்பர் 24th, 2009 at 15:36
  4  

oh my my…. ha ha ha

செப்டம்பர் 24th, 2009 at 15:46
  5  

Well I should have said: ‘distinctly chola in execution - or may be stylistically chola creation’.

செப்டம்பர் 24th, 2009 at 15:48
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
  6  

சிற்பக் கலைக்குள் அழைத்துச் செல்கிறீர்கள். கற்சிலைகளையும் வெண்கலச் சிலைகளையும் பார்த்து, கூர்ந்து கவனித்து, நுணுகி ஆய்ந்து, ஒப்புநோக்கி, விவரித்து எம்போன்றோருக்கு அறிவூட்டுகிறீர்கள். தொடருங்கள்.

செப்டம்பர் 24th, 2009 at 17:33
  7  

புதிரை விடுவிக்கக் காத்திருக்கேன். அற்புதமான உழைப்பு, வழக்கம்போல்.

செப்டம்பர் 25th, 2009 at 12:50

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி