Quantcast

நாம் முன்னர், ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டபத்தின் அற்புதத் தூண்களில் உள்ள குதிரை வீரர் சிலைகளை பார்த்திருந்தோம், அதை தொடர்ந்து இன்று மீண்டும் ஒரு அற்புத குதிரை வீரன்.

பரிமேல் அழகர்கள் ஆதி காலத்தில் இருந்தே வீரர்கள், ஓவியர்கள் மற்றும் சிற்பிகளை ஈர்ப்பதுண்டு. குதிரை சவாரி என்பது வீரத்தின் இருப்பிடமாய் இருக்க, சீறும் குதிரை சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் பல இடங்களில் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான். நாலு கால் பாய்ச்சலில் பறக்கும் குதிரை, அதுவும் ஒவ்வொரு சதையிலும், நரம்பிலும் இருந்து எழும் வேகம், அதன் மேல் அமர்ந்திருக்கும் வீரன் அதனுடன் ஒன்றாய் கலந்து, காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் அனுபவம் - பார்க்கும் கோழையின் ரத்தத்தைக் கூட மாற்றி அவனை வீரனாக்கும் ( இன்றைய இளைஞர்கள் இந்த உணர்வை மோட்டார் சைக்கிளில் பறக்கும் போது சற்று அனுபவிக்கலாம் ) - அந்த உணர்வு ஒரு சுதந்திரம். அதே போல எதிரில் இருக்கும் பெரும்படையை கண்டு அஞ்சாமல், வேல் ஏந்தி செல்லும் குதிரை படையை கண்டு அவர்களே அஞ்சி ஓடும் கதை பலவற்றை நாம் கேட்டுள்ளோம். பல வீடுகளில் வாண்டுகள் தூங்கும் முன்னர் கேட்கும் கதைகளில் குளம்பொலிகள் மிகுதியாக வரும். அதில் வரும் குதிரை வீரர்கள் - அது மாவீரன் அலெக்ஸாண்டரின் குதிரை போசிபல்ஸ் அல்லது பிரிதிவ் ராஜ் சௌஹனின் செடக் அல்லது நாம் தமிழ் வீரர்களான வாள் வில் ஓரியின் ஓரி, தேசிங்கு ராஜனின் பஞ்சகல்யாணி, இப்படி அந்த அற்புத குதிரைகளின் டக், டக், டக் எனும் குளம்பொலி சப்தம், பல மழலைகளை தூக்கத்திலும் அதன் பின்னர் கனவுகளிலும் ஆட்கொண்டன.

இன்று நாம், அதே போல ஒரு அற்புத குதிரை வீரனை பார்க்கப்போகிறோம். கல்லில். அதுவும் குதிரையைப் பற்றிய ஒரு அற்புதம் நடந்த மண்ணில். ( அதை மற்றொரு பதிவில் பார்ப்போம் ) - ஓவியர் திரு ஜீவா அவர்களின் உதவியுடன் இன்று ஆவுடையார் கோயில் திருப்பெருந்துறை செல்கிறோம்

ஒரு அற்புத ஓவியர் (www.jeevartistjeeva.blogspot.com) அவரது ஓவியத்தையும் சிற்பத்தின் படங்களையும் நம்முடன் பகிர்கிறார்.

horse
the horse

இந்த கால அட்டவணையில் ( 14th C முதல் - நாயக்கர் காலம் / விஜயநகர மன்னர்கள் காலம்) இந்த மாதிரி அற்புத சிற்பங்கள் நிறைந்த மண்டபங்களைக் காணலாம். பலர் பலமுறை இந்த ஆலயங்களுக்கு சென்றும் இந்த அற்புத படைப்புகளை ஒரு நிமிடம் நின்று கூட பார்ப்பதில்லை.

சரி, இந்த சிற்பத்தின் அழகை பார்ப்போம். குதிரை, குதிரை வீரன், அணிகலன், ஆபரணம் என்று இதனை நுணுக்கங்களை எப்படித்தான் கல்லில் செதுக்கினார்களோ.

avudayar koil horserider 1
avudayar koil - detail of stirrup and riding pants
avudayar koil - detail of the harness
detailing 1
detailing 2 - a double knot
looks like two iron rings anchor the reins
the designs
the detailing

குதிரை வீரனின் ஆயுதங்கள், அவன் கையில் பிடித்திருக்கும் ஈட்டி என்று ஒரு சின்ன குறிப்பை கூட விடாமல் ஒரே கல்லில் செதுக்கிய வேலைப்பாடு அருமை.

from the other side
other weapons
the lance
the saddle with sword

சிலை மட்டும் ஒரே கல்லில் வடிக்கவில்லை, இவை அனைத்துமே அந்த ஒரு தூணின் பாகம்.

one piece of stone

இது மனித வெளிப்பாடா ??

படங்களுக்கு நன்றி திரு கந்தசுவாமி

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2nd, 2009 அன்று 12:19 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 11 மறுமொழிகள்

  1  

//Chetak of Prithiv Raj Chauhan or steeds of tamil folklore - Ori of Valvil Ori, Panchakalyani of Raja Desingu - the tok tok tok tok would have been the lullaby to many being heard long into their sleep in their dreams//

ஆஹா, நீங்களே சொல்லிட்டீங்க// Truly, mind blowing.//
அப்படினு, இதுக்கு மேலே என்ன சொல்றது??? குதிரையின் டாக், டாக் காதிலே கேட்கும் வண்ணம் உங்கள் எழுத்தும் அமைந்துவிட்டது. வாழ்த்துகள்.

அக்டோபர் 2nd, 2009 at 12:45
V. Dhivakar
  2  

vijay!
வழக்கப்படி அருமை. நாயக்கர் காலம் சிற்பிகளுக்கு மறு வாழ்வு கொடுத்த காலம். அந்த நன்றி மறவாமல் மிக நேர்த்தியாக சிற்பங்களை வடித்தவர்கள். குதிரை வீரனை நம் கண் முன்னே அப்படியே நிறுத்திவிட்டார்கள்..

திவாகர்

அக்டோபர் 2nd, 2009 at 13:22
Rajeswari
  3  

Its Amazing!!!!!!!!!!

அக்டோபர் 2nd, 2009 at 20:26
  4  

Truly Mindblowing

அக்டோபர் 3rd, 2009 at 10:30
Manii
  5  

extraa ordinary (ordinary is not a right term to describe this). to know that every thing is done out of a single rock is amazing…. horse’s teeth looks so visible and distinguishing… next time my eyes will attract all the horses in the temples i visit

அக்டோபர் 3rd, 2009 at 13:39
Kathie B.
  6  

You’re a poet, just don’t know it. . .

Kathie

அக்டோபர் 3rd, 2009 at 22:06
rhoda alex
  7  

oh this reminds so much of the terracotta horses of ayyanar temples in Tamilnadu. Here is a pic i clicked in a village called Urupetti in Puddukottai district. http://i83.servimg.com/u/f83/13/03/66/32/img_2411.jpg
Though they dont tell so many stories like the sculptures at Avudayar temple do…they are also beauties in ordinary clay!!

அக்டோபர் 9th, 2009 at 21:21
  8  

yes, these terracotta ones and their deities are not in the lime light - but still revered in villages. guess its to do with strengths of the believers.

அக்டோபர் 10th, 2009 at 8:14
Kathie B.
  9  

Does anyone know the names of the Ayyanar groves near Narttamalai, Kodumbalur or
Thirugokarnam? I’d appreciate it so much.
Have lots of photos of all three.

அக்டோபர் 19th, 2009 at 21:44
Brahmanyan
  10  

Avudayarkoil is different in all aspects to that of other Temples of Hindu Pantheon. This temple is a beautiful work of art. The horses have significant part in this Temple, since Saint Manickkavasagar spent all the money, that was meant for purchase of horses, on construction of this Temple. I have written in detail about this Temple in my Blog http://brahmanyan.blogspot.com/2008/11/avudayarkoil-temple-with-difference.html
Regards,
Brahmanyan

நவம்பர் 15th, 2009 at 11:03
  11  

Dear Brahmanyan

Many thanks for sharing yours. The entire story is captured in stone here

http://www.poetryinstone.in/lang/en/2009/10/12/horses-turn-to-jackals.html

rgds
vj

நவம்பர் 16th, 2009 at 11:52

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி