Quantcast

இன்றைக்கு மீண்டும் தாராசுரம் - பெரியபுராணக் கதை பார்க்கப்போகிறோம். - மூர்த்தி நாயனார் புராணம். நன்றி திரு அர்விந்த் ( படங்கள்) அவர்கள் மற்றும் விக்கி ( உரை )

பாண்டி நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே பிறந்தவர் மூர்த்தியார். அவர் திருஆலவாயில் உறையும் சொக்கலிங்கப் பெருமான் திருமேனிக்குத் தினமும் மெய்ப்பூச்சுக்குத் சந்தனக்காப்பு அரைத்துக் கொடுக்கும் திருப்பணியை வழுவாமற் செய்து வந்தார்.

அந்நாளில் வடுகக் கர்நாடக அரசன் ஒருவன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் வேறு மதத்தை சார்ந்தவன் என்பதால் சைவ வழிபாடுகளுக்கு பல தடங்கல்களை கொடுத்தான். அவ்வாறு திருப்பணி செய்யும் அடியவர்களுக்கு பல கொடுமைகள் செய்தான்.

தன் திருப்பணியை தொடர்ந்து செய்யும் மூர்த்தியாரின் பணி தடங்கல் உண்டாக்க, அக்கொடியோன் அவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு செய்தான்.

அன்று பகல் முழுவதும் சந்தனக்கட்டை தேடியும் பெறாது வருந்தி மனம்தளர்ந்து இறைவரது திருக்கோயிலுக்கு வந்தார்.

அப்போது

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=12&Song_idField=1215&padhi=72&startLimit=20&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

நட்டம்புரி வார்அணி நற்றிரு
மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை
முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து
முழங்கை தேய்த்தார்
கட்டும்புறந் தோல்நரம் பென்பு
கரைந்து தேய.

`அருட் கூத்தியற்றும் பெருமான் அணிதற்குரிய திருமேனிப் பூச்சாகிய சந்தனக் காப்பு அணியும் தொண்டிற்கு, இன்று எனக்குத் தடை நேர்ந்திடினும், கல்லில் தேய்ப்பதற்கு உரிய என் கை தடையின்றி உள்ளது` என்று நினைந்து, வட்டமாகத் திகழ்ந்திருக்கும் சந்தனக் கல்லில் தம் முழங்கையைப் போர்த்த தோல், நரம்பு, எலும்பு எல்லாம் உராய்ந்து கரைந்து தேயுமாறு தேய்த்தார்.

இப்போது சிற்ப்பத்தை பார்ப்போம்.

murthi nayanar - ground his elbow when he couldnt find sandal wood

என்ன நேர்த்தியாக இரு முட்டியையும் கல்லில் வைத்து தேய்க்கும் போதும், முகத்தில் எந்த வித வலியும் தெரியாமல், அமைதியான ஆனந்த உருவை செதுக்கியுள்ள சிற்பியன் வேலை அருமை.

பின்னர் என்ன நடந்தது

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=12&Song_idField=1215&padhi=72&startLimit=21&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

கல்லின்புறந் தேய்த்த முழங்கை
கலுழ்ந்து சோரி
செல்லும்பரப் பெங்கணும் என்பு
திறந்து மூளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர்
தம்பி ரானார்
அல்லின்கண் எழுந்த துவந்தருள்
செய்த வாக்கு.

சந்தனக் கல்லின்மேல் வைத்துத் தேய்த்த அவர்தம் முழங்கை குருதி பெருகத், தேய்த்துச் செல்லும் இடம் எங்கும் எலும்பு நொறுங்கி அதனுள் இருந்த (மூளையில் இருந்து வரும்) நரம்பும் வெளிப்படக் கண்ட பெருமான், பொறுத்திலர். அப்பெருமானின் திருவருளால், அவ்விரவின்கண் எழுந்தது வான் வழியாக வருவ தொரு வாக்கு,

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=12&Song_idField=1215&padhi=72&startLimit=22&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அன்பின்துணி வால்இது செய்திடல்
ஐய உன்பால்
வன்புன்கண் விளைத்தவன் கொண்டமண்
எல்லாங் கொண்டு
முன்பின்னல் புகுந்தன முற்றவும்
நீத்துக் காத்துப்
பின்புன்பணி செய்துநம் பேருல
கெய்து கென்ன.

`ஐயனே! அன்பின் துணிவால் இதனைச் செய்யற்க! உனக்குக் கொடிய துன்பத்தைச் செய்வித்த அக்கொடி யோன் வலிந்து கொண்ட நாடு முழுவதையும் நீயே கொண்டு, முன்பு அவனால் இந்நாட்டில் புகுந்த இன்னல் யாவற்றையும் நீக்கி, உயிர்களைச் செப்பமுறக் காத்து, இதுவரை மேற்கொண்டிருந்த பணியையும் செய்து, பின் நமது பேருலகை அடைந்திடுவாய்,` என்று அருள.

இதன் பிறகு…இந்த தெய்வ வாக்கு நிறைவேறியதா ? எப்படி நிகழ்ந்தது ??

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, அக்டோபர் 19th, 2009 அன்று 11:42 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 5 மறுமொழிகள்

  1  

இறைவன் கொடுத்த என்பு தோல் போர்த்திய உடம்பு
அதை உணர்ந்தார் மூர்த்தியார் அவனுக்கே அர்ப்பணித்தார்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் - மாணிக்க வாசகர்

சிற்பத்திற்க்காகவே தன்னை அர்ப்பணித்தார் சிற்பியார்
அடியார் வாழ்கையை அற்புதமாக சித்தரித்தார்

சிற்பங்களுக்காகவே வலைத்தளத்தை உருவாக்கினார் விஜய்யார்
கூடிய விரைவில் பெரியபுராணம் முழுவதையும் சிற்பத்தில் காட்டிவிடுவார் :-)

அக்டோபர் 19th, 2009 at 12:24
Vidya
  2  

I do hope Satheesh’s wish would come true. Vijay, you have really got me going from page to page like an adict.would like to know the rest of this particular story though!

ஏப்ரல் 19th, 2010 at 19:01
  3  

sure vidya, will definitely continue this. been working on a few unfinished threads….

rgds
vj

ஏப்ரல் 20th, 2010 at 11:42
  4  

தெய்வ வாக்கு எவ்வாறு நிறைவேறியது என அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளோம். இதன் தொடர்ச்சியை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறோம்.

நன்றி
வர்தினி

டிசம்பர் 16th, 2010 at 20:20
k g venkata rao
  5  

the king dies next day since he was childless ministers decide to choose the king as per existing custome they give a garland to the royal elep hant &decide to accept anybody whom the elephant as their king the elephant garlands murthy nayanr he accepts the king dom wearing rudhratsha rules kingdom &attains mukthi

பெப்ரவரி 24th, 2011 at 12:30

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி