Quantcast

அரசர்கள் போர் புரிவது என்பதே சர்ச்சைக்குரிய விஷயம். அதிலும் ஒரு நாட்டை வென்று அங்கிருந்து பல பொக்கிஷங்களை சூறையாடி வருவது என்பது இன்னும் பிரச்சினைக்குரியது. எனினும் நம் வரலாற்றில் இதை பல முறை பார்த்திருக்கிறோம். வாதாபி வெற்றியின் போது நரஸிம்ஹ பல்லவரின் படைத் தளபதி பரஞ்சோதி கொண்டு வந்த வாதாபி கணபதி, ஸ்ரீவிஜயத்தை வென்று ராஜேந்திர சோழன் கொண்டு வந்த விஜய தோரணம், இதே வரிசையில் இன்று நாம் பார்க்கும் போர் பரிசு (தாரசுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு) தற்சமயம் தஞ்சை கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சாளுக்ய வாயிற் காப்போன். (படங்களுக்கு நன்றி சதீஷ் மற்றும் ஸ்ரீராம் )

tanjore art gallery door guardian

அருமையான வேலைப்பாடு கொண்ட சிற்பம். எனினும் இதை ஏன் சோழன் வெற்றிப் பரிசாக கொண்டு வர வேண்டும். அதை எப்படி எப்பொழுது அதன் பீடத்திலேயே செதுக்கியும் வைத்தான்!

the famous inscription

இராஜேந்திர சோழனின் மைந்தன் இராஜாதிராஜன் மேலைச் சாளுக்கியர் தலைநகரான கல்யாணியை வென்றான். அப்பொழுது அங்கிருந்து ஒரு சாளுக்கிய துவாரபாலகர் சிலையை கொண்டுவந்தான். அதன் அடியில் “உடையார் விஜயராஜேந்திர சோழர் கல்யாணபுரம் எரித்துக் கொண்டு வந்த துவாரபாலகர்” என்று எழுதியுள்ளது.

சரி, அருமையான சாளுக்ய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பத்தை முதலில் பார்ப்போம்.

chalukya door guardian
rich ornamentation and drapery
the left hands
the right hands

வெறும் கதை பேசிக்கொண்டு நிற்காமல், சுவாரசியமான தகவல்களுக்கு வருவோம். சிற்பத்தின் அடிப்பாகத்தில் செதுக்கப்பட்டிருக்கும் சில உருவங்களை கவனிக்கவும்!

a monitor lizard
interesting features

மேலே இருப்பது உடும்பு, வாயிற் காப்போனின் காலுக்கு அடியில் இருப்பது என்ன சுண்டெலியா? அதை அடுத்து ( இடது புறத்தில்) வால் மாதிரி இருக்கிறதே - அது என்ன? வலப் பக்கம் இருக்கும் மிருகம் என்ன வகை?

கீழுள்ள படங்களை ஊன்றிக் கவனிக்கவும்.

இந்த படங்களுக்கு நன்றி
http://picasaweb.google.com/gildubs/IndeDuSud2008#

a cat toying with a rat

ஆஹா! ஒரு சுண்டெலியை பிடித்து விளையாடும் பூனை. அதற்கு எதிரில்??

a snake swallowing a rat

அடடே…! இங்கே பாம்பு ஒன்று எலியை விழுங்குவதைப் போலல்லவா வடிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் நமக்கு வேறு ஒரு வாயிற்காப்போன் சிலை நினைவுக்கு வருகிறதல்லவா?
தஞ்சை பெரிய கோயில் வாயிற்காப்போன்

ஆம், அது தஞ்சை பெரிய கோயில் வாயிற்காப்போன்தான், நீங்களே பாருங்கள்.

tanjore big temple
tanjore big temple door guardian
the lion, snake, elephant and lizard

இன்னும் அருகில் சென்று பார்த்தால்!

elepant eaten by snake n crocodile

இராஜராஜசோழன், அப்பர் பெருமானின் பாட்டிற்கிணங்க பெரிய கோயில் விமானத்தை தக்ஷின மேரு என்று கைலாயத்தை ஒப்பிடும் நோக்கத்துடன் பிரம்மாண்டமான சிங்கம், அதை ஒட்டி யானையையே விழுங்கும் பாம்பு, முதலை அல்லது இராட்சத பல்லி ஆகியவற்றை அற்புதமாக வடித்து வைத்தான்.

இந்த வடிவத்தோடு சாளுக்ய சிற்பத்தை பொருத்திப் பார்த்தால் சாளுக்கியன் ஏதோ நையாண்டிக்காக அந்தச் சிலையை வடித்தது போலல்லவா உள்ளது! மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடல்லவா! ஒரு வேளை இதனால் தான் சோழன் இந்த வாயிற்காப்போனை சூரையாடி வந்தானோ?

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, டிசம்பர் 2nd, 2009 அன்று 15:45 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 9 மறுமொழிகள்

  1  

Must say the kings played a great game of the cat and the mouse..enjoyed this post thoroughly

டிசம்பர் 2nd, 2009 at 16:03
Manii
  2  

one statue, so many stories (kalaikul kathai)

fascinating !!! glad to know our ancestors are great grandfathers of speilberg !!!

டிசம்பர் 2nd, 2009 at 16:26
  3  

அருமையான கற்பனைதான், எதுக்காக எடுத்து வந்தான் என்று தெரியாட்டியும் இப்படியும் இருக்கலாமோனு யூகிக்க வைக்கும் பதிவு. சிற்பத்தின் நளினமும், எழிலும் சொக்க வைக்கிறது.

டிசம்பர் 3rd, 2009 at 13:04
Kathie B.
  4  

That’s a brilliant hypothesis. Very convincing.
Don’t know how I missed photographing that exc. Calukya figure when there, oh well. . .
Thanks too for reminding me where the similar animals are on Than. gopuram: under that left guardian’s feet.

டிசம்பர் 3rd, 2009 at 15:30
Kathie B.
  5  

’scuse me, correction: ‘proper right’ guardian.
Do you have a photo of the Ganapati you mention?

டிசம்பர் 3rd, 2009 at 15:49
  6  

hi kathie . yes ` right’

The Ganapthy ( vaatapi) is controversial - as to where it is now.

http://www.visvacomplex.com/Ganesa_%20Worship_%20In_Tamilnadu.html

Incidentally there is another Chaluyka Ganapathy that was brought back by RJC…

vj

டிசம்பர் 3rd, 2009 at 15:52
Srinivasan V
  7  

Fantastic post.
Great Blog.
Salutes to your efforts on these blog posts.
Very interesting & inspiring.
God Bless you.
Anbudan,
Srinivasan.
Perth, Australia.

மே 13th, 2010 at 10:27
  8  

thanks for ur nice words mr srinivasan.

rgds
vj

மே 14th, 2010 at 12:24
  9  

dear sadhasivan

K Balu sir has been traveling last couple of weeks. am sure he will be able to respond this week. Its a fantastic book and a must read.

Please let me know if you are still not able to get it, will try to assist

rgds
vj

ஜூலை 5th, 2010 at 10:20

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி